இடுகைகள்

ரத்தம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பலரின் பிரச்னைகளை தீர்த்து வலிமையாக்கும் மர்ம புத்தக கடைக்காரர்!

படம்
 ஐயம் நாட் எ டிமான் காட் லேக்கி மாங்கா காமிக்ஸ் ஹரிமாங்கா இந்த கதையில், நாயகன் பூமியில் இருந்து மற்றொரு உலகிற்கு வந்தவன். அவனுக்கு ஆதரவாக இங்கி என்ற கருப்பு நிற சக்தி ஆதரவாக உள்ளது. ஆஸ் மார்க்கெட் என்ற நிறுவனம் நடத்தும் புத்தக கடையில் பொறுப்பாளராக இருக்கிறான். அவனைப் பொறுத்தவரையில் அக்கடையில் உள்ள புத்தகங்கள் அனைத்தும் சாதாரணமானவை. போட்டித்தேர்வு, இலக்கிய நூல்கள், கட்டுரைகள் என்றுதான் இருக்கின்றன. ஆனால், யாராவது பிரச்னை என்று வரும்போது அவர்களின் பிரச்னைகளுக்கு ஏற்றபடி நூல்களும் மாறுகின்றன. அதை, புத்தகடையில் உள்ள பொறுப்பாளரான நாயகன் அறிவதில்லை.  அவர் முதலில் அதை அறியாமல் இருப்பது சரி. ஆனால், கதை நெடுக அவர் எங்கேயும் தனது நூல்களை வாங்கிப்படித்தவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்கள் எப்படிப்பட்ட அதிகாரவெறி கொண்ட மக்கள் என உணருவதேயில்லை. அந்த இடத்தில்தான் கதை தொய்வடைகிறது. நாயகனைப் பொறுத்தவரை அவன் ஒரு சிறந்த விற்பனையாளன். அதேசமயம், அவன் நூல்களை விற்க செய்யும் முயற்சியாக, யாரேனும் மழைக்கு ஒதுங்கினால்கூட அவர்களுக்கு தலை துவட்ட துண்டு, தேநீரை வழங்குகிறான். அதுவும் கூட க்ரீன் டீ. முதல்முற...

அரிய ரத்தவகை எது?

படம்
   அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஒருவரின் தலைமுடியை வைத்து என்னென்ன விஷயங்களைக் கண்டுபிடிக்க முடியும்? ஒருவரின் பாலினம், வயது. என்ன மருந்துகளை சாப்பிட்டார் என்பதை கண்டுபிடிக்கலாம். பிள்ளைகளை அறிய டிஎன்ஏ பரிசோதனையும் செய்யலாம். இதயத்தின் வேலை என்ன? ஒரு நிமிடத்திற்கு எழுபத்தைந்து முறை துடிக்கிறது. ஒரு துடிப்பிற்கு 71 கிராம் ரத்தத்தை பல்வேறு உறுப்புகளுக்கு அனுப்புகிறது. இந்த வகையில் நாளுக்கு 9,450 லிட்டர் ரத்தத்தை உடலெங்கும் அனுப்புகிறது. இதயம் சிறியதாக இருந்தால், அதன் துடிப்பு அதிகமாக இருக்கும். பெண்களுக்கு நிமிடத்திற்கு ஆறு முதல் எட்டு துடிப்புகளாக உள்ளது. இது ஆண்களின் இதயத்துடிப்பை விட அதிகம். பிறந்த குழந்தைக்கு ஒரு நிமிடத்திற்கு 130 முறை இதயம் துடிக்கிறது. தூங்கும்போது இதயம் நின்றுவிடுகிறதா? இதயம் துடிக்கும் வேகம் மட்டுப்படுகிறது. அதனால் இதயம் வேலை செய்யவில்லையா என வதந்திகளை சிலர் பரப்புகிறார்கள். அது உ்ணமையல்ல. இதயம் எப்போதும் துடிப்பதை நிறுத்துவதில்லை. ஒருவரின் ரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு இருப்பது உண்மையா? ஒரு லிட்டரில் 19-50 மில்லிமீட்டர் அளவு கார்பன் டை ஆக்சைடு ...

மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா?

  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி விலங்குகளால் நிறங்களை இனம்பிரித்து அறிய முடியுமா? ஊர்வன, பறவைகளுக்கு நிறங்களை இனப்பிரித்து அறியும் திறன் உண்டு. ஆனால் பெரும்பாலான பாலூட்டிகளுக்கு நிறங்களை அறியும் திறன் இல்லை. மனிதகுரங்கு, குரங்கு ஆகியவை நிறங்களை அறியக்கூடியவை. நாய்கள், நீலம், பழுப்பு ஆகியவற்றின் அடர்த்தியை அறிந்துகொள்ளும். பூனை, பச்சை மற்றும் நீல நிறத்தை அறிகின்றன. அனைத்து விலங்குகளுக்கும் ரத்தம் சிவப்பாக இருக்குமா? முதுகெலும்பு கொண்ட விலங்குகளுக்கு பெரும்பாலும் ரத்தம் சிவப்பாக இருக்கும். பிராண வாயுவில் ஆக்சிஜனை அடிப்படையாக கொண்டு ரத்த நிறம் அமைகிறது. ஹீமோகுளோபின் அணுவில் இரும்பு உள்ளது. இதுவே சிவப்பு நிறத்திற்கு காரணம். ஹெமோசயானின் இருந்தால் ரத்தம் நீலமாகவும், குளோரோகுரோனின், ஹெமெரித்ரின் இருந்தால் பச்சை நிறமாகவும் இருக்கும். மனிதர்களுக்கு மட்டுமே குறட்டை விடும் பழக்கம் உள்ளதா? நாய், பூனை, பசு, காளை, ஆடு, யானை, ஒட்டகம், சிங்கம், சிறுத்தை, புலி, கொரில்லா, சிம்பன்சி, குதிரை, வரிக்குதிரை என பல்வேறு விலங்களுக்கு குறட்டை விடும் பழக்கம் உள்ளது. ஜெல்லி மீன்களில் மனிதர்களைக் கொல்லு...

மருந்து = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை

படம்
           3 விஷம் = நஞ்சு ஓமியோபதி மருத்துவமுறை ஓமியோபதி மருந்துகளை மருத்துவர் பரிந்துரைக்கும் முன்னர், நோயாளிகளிடம் நிறைய பேசவேண்டும். சிலர் தங்களின் செயல்பாடுகளைக் கூறுவார்கள். சிலர் கூற மாட்டார்கள்.ஒருவரின் செயல்பாடுகள், குணங்கள் தெரிந்தால் ஓமியோபதியில் மருந்துகளைக் கொடுப்பது எளிது. தொடக்கத்தில் மருத்துவ அட்டவணை உதவியது. இன்று கணினியில் மென்பொருட்களை பயன்படுத்தி மருந்துகளை வழங்குகிறார்கள். நவீன காலத்தில் மருந்துகள் கூடிவிட்டன. ஓமியோபதியை பயிலும் மாணவர்களும், அதை பயிற்சி செய்பவர்களும் கூட தொடர்ச்சியாக பயின்றுகொண்டே இருக்கவேண்டிய சூழ்நிலை. அதுதான் நோயாளிகளுக்கு நல்லதும் கூட. அரசு மருத்துவமனைகளுக்கு வட இந்தியா, தென்னிந்தியாவில் ஆந்திரா, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து ஓமியோபதி மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. குறிப்பாக கேரளத்தில் அரசு கூட்டுறவு ஓமியோபதி நிறுவனத்திடம் இருந்து மருந்துகளை தமிழ்நாடு அரசின் டாம்ப்கால் நிறுவனம் வாங்கி வருகிறது. ஓமியோபதி மருந்துகள் எந்தளவு தூய்மையாக உள்ளனவோ, அந்தளவு வீரியம் அதிகமாக இருக்கும். தனியார் மருந்துகடைகளில் ஓமியோபதி ...

திருமணமாகாத இளம் பெண்களின் ரத்தத்தைக் குடித்து இதயத்தைத் தின்னும் கொடூர பிசாசு!

படம்
      வா அருகில் வா கோட்டயம் புஷ்பநாத் திகில் நாவல் கோட்டயம் புஷ்பநாத் எழுதும் நாவலில் என்னென்ன எதிர்பார்ப்போம். இயக்குநர் சுந்தர்சி போல கிளுகிளுப்பாக திகில் கதைகளை எழுதுவார். இதிலும் பெண்களின் பெண்களின் நைட் கவுன் பட்டன்கள் தெறிக்கின்றன. அதைவிட முக்கியம், நாயகி லூசி இறுதியாக கர்த்தரை சரணடைந்து தனது பாவத்தை ஏற்று மடைமாறுகிறாள். அதனால் அவள் உயிர் பிழைக்கிறாள். ஜானி, லூஸி இருவருக்கும் பெற்றோர் பார்த்து வைத்து மணம் செய்கிறார்கள். முதலிரவிலேயே மணமகன் லூசியை தொடாமல் மதுபானத்தை தொட்டு ரசித்துக் குடிக்கிறான். சிகரெட் புகைக்கிறான். இதிலேயே அவனுக்கு உடலுறவில் பெரிய ஈடுபாடு இல்லையோ என்று தோன்றுகிறது. அங்கு வந்து பரிசில், ஒரு கடிதம் இருக்கிறது. அதில் அவர்கள் தேனிலவை தனது பங்களாவில் கொண்டாடலாம் என பெர்னார்ட் என்பவர் அழைப்பு விடுத்திருக்கிறார். அவர் யாரென்று கூட விசாரிக்காமல் இருவரும் தேனிலவுக்கு அந்த மர்ம பங்களாவுக்கு செல்கிறார்கள். அங்கு அவர்களுக்கு நேரும் திகில் அனுபவங்கள்தான் கதையின் முக்கியப் பகுதி. லூசிக்கு அந்த பங்களா, அதன் வினோதமான இயல்பு எல்லாமே பயம் தருகிறது. ஆனால் கணவன் மது...

மூக்கில் அடிக்கடி ரத்தம் வந்தால் என்னாகும்?

      அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி மூக்கில் ரத்தம் வருவதற்கு என்ன காரணம்? மனநல பிரச்னைகள், மூக்கில் ஏற்படும் காயங்கள், நோய்த்தொற்று, அதிக ரத்த அழுத்தம், கல்லீரல் வீக்கம், ரத்தசோகை, மரபணு நோய்கள் ஒருவரின் மூக்கில் இருந்து அடிக்கடி ரத்தம் சிந்துவதற்கு காரணம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மாதவிலக்கு சார்ந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு மூக்கில் ரத்தம் வெளிப்படுகிறது. இப்படி வெளியாகும் ரத்தத்தில் சிவப்பு நிறம் மாறுபாடு கொண்டிருந்தால், மருத்துவமனையை அணுகுவது நல்லது. ரத்தப்போக்கை நிறுத்த, குளிர்ச்சியான நீரில் துணியை நனைத்து மூக்கில் ஒற்றி எடுக்கலாம். ரத்தம் வெளியேறுகிறதே என்று பயந்து தலையை பின்னால் சாய்த்தால் மூக்கில் வரும் ரத்தம் தொண்டைக்கு சென்று வாந்தி வர வாய்ப்புள்ளது. கவனம். அடிக்கடி மூக்கில் ரத்தம் வருபவர்களுக்கு ஃபெர்ரம் மெட்டாலிகம், பாஸ்பரஸ், ட்யூபர்குலினம் ஆகிய ஹோமியோபதி மருந்துகளைக் கொடுக்கலாம். பல்வலிக்கான காரணம் என்ன? பற்கள் நோயுற்றுவிட்டன என்பதே இதன் அர்த்தம். உணவுப்பொருட்கள் பற்களில் சிக்கியிருந்தால் பற்கள் சொத்தையாகத் தொடங்கும். ஈறுகள் வீங்கி பாதிக்கப்படும். பற்களி...

பாய்சன் ஐவி தாவரம் ஏற்படுத்தும் ஒவ்வாமை பாதிப்புகள்!

படம்
        அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி சல்பைட்டுகளால் ஏற்படும் ஒவ்வாமை பாதிப்பு என்ன? உலர் பழங்கள், புதிதாக பறிக்கப்பட்ட காய்கறிகள், ஒயின் வகைகள் ஆகியவற்றில் சல்பைட்டுகள் சேர்க்கப்படுகின்றன. சல்பைட்டுகள், பொருட்கள் கெட்டுப்போகாமல் காக்கின்றன. நுண்ணுயிரிகளை அழிக்கின்றன. ஒவ்வாமை உள்ளவர்களுக்கு சல்பைட்டுகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சல்பைட்டுகள், உடலுக்குள் செல்லும்போது மூச்சு திணறல் ஏற்படும். சுயநினைவை இழந்து கீழே வீழ்வார்கள். அனபைலாடிக் ஷாக் பாதிப்பு ஏற்படும். உடனே மருத்துவ உதவிகளை செய்யவேண்டும். மாரடைப்பை மருத்துவத்தில் எப்படி குறிப்பிடுகிறார்கள்? மையோகார்டியல் இன்ஃபார்க்சன். இதய தசைகளுக்கு ரத்தம் செல்லாமல் தடுக்கப்படும்போது, அந்த செல்கள் இறந்துபோகின்றன. இதனால் உண்டாவதே மாரடைப்பு. அமெரிக்காவில், ஒருமுறை மாரடைப்பு வந்துவிட்டால் நோயாளிகளில் 33 சதவீதம் பேர் அடுத்த இருபது நாட்களில் மரணித்து விடுகிறார்கள். உடனே இறந்துபோகிறவர்களின் எண்ணிக்கையும் இப்போது அதிகரித்து வருகிறது. உடலை குறிப்பிட்ட இடைவேளையில் சோதித்துக்கொள்வது நல்லது. மாரடைப்பு அபாயத்தை முன்னரே கண்டறிந்தால் சிகிச்சை ...

தடய அறிவியல் விசாரணை செய்ய போதுமான பணியாளர்கள், கருவிகள் உள்ளனவா? - தென்னிந்தியாவில் ஓர் அலசல்

படம்
              தடய அறிவியல் பரிசோதனை இதைப்பற்றி அறிய நீங்கள் கொரியா, ஜப்பான், சீன சீரியல்களைப் பார்த்திருந்தால் கூட போதுமானது. மலையாள மொழியில் கூட நிறைய திரைப்படங்கள் தடய அறிவியலை மையப்படுத்தி வந்திருக்கின்றன. பார்க்கவில்லை என்றாலும் கூட குற்றமில்லை. கொலை வழக்கில் கிடைத்துள்ள ஆதாரங்களை அறிவியல் முறைப்படி சோதிப்பதே தடய அறிவியல் பரிசோதனை அல்லது விசாரணை என்று கூறலாம். ஓடிடி தளங்களில் ஏராளமான படங்கள் தடய அறிவியல் சார்ந்து வெளிவந்துள்ளன. அதைப் பார்த்தால் ஓரளவுக்கு விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம். பென்ஸ் அல்லது போர்ச் காரை ஒருவர் வேகமாக ஓட்டிச்சென்று சாலையில் செல்லும் மக்கள் மீது ஏற்றிக்கொல்கிறார். மக்கள் இறப்பது, அவர்களுக்கு நீதி கிடைக்கிறதா இல்லையா என்பதல்ல விஷயம். அது, ஒருவர் வசதியானவரா, ஏழையா என்பதைப் பொறுத்து தீர்மானிக்கப்படும். தடய அறிவியலில் பார்க்கவேண்டியது ஓட்டுநரின் நிலையை... வாகன விபத்து குற்றவழக்காக பதிவானபிறகு, வாகனம் ஒட்டியவர் என்ன நிலையில் இருந்தார், மது அருந்தியிருந்தாரா, இல்லையா என ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை எடுத்து சோதிப்பார்கள். கைரேகை, டிஎன்...

சிறைக்கைதி பழிக்குபழி வாங்கி எதிரிகளை துண்டு துண்டாக வெட்டி எறியும் கதை!

  வூ சாங்  சீன திரைப்படம்  ஐக்யூயி ஆப் நாயகன் வூ சாங் ராணுவத்தில் இருந்து வீட்டுக்கு வருகிறார். அண்ணன் இறந்துபோய் ஊதுபத்தி ஏற்றிவைத்திருக்கிறது. அண்ணி கள்ளக்காதலனுடன் சேர்ந்து அண்ணனைக் கொன்றுவிட்டாள் என உண்மை தெரிகிறது. அண்ணியின் தலையை வெட்டிய கொழுந்தன், கள்ளக்காதலனை தேடி விலைமாதுவின் இல்லம் செல்கிறான். சண்டையிட்டு கொன்று இருவரின் தலைகளையும் எடுத்து அண்ணனின் அஞ்சலி செலுத்தும் இடத்தில் போட்டுவிட்டு காவல்துறையில் சரணடைகிறான்.  சிறைக்கு செல்பவனை, ஜெயிலர் மூலம் ஓட்டல் நடத்துபவர் சந்தித்து அவனது உதவியைக்கேட்கிறார். அதாவது, அவரது தம்பி நடத்தும் ஓட்டலை ரவுடி ஒருவன் பிடித்துக்கொள்கிறான். அவனை கொல்ல வேண்டும். இல்லையா அடித்து உதைக்கவேண்டும். சிறையில் உள்ளவனுக்கு ஓட்டல்காரர் ஐந்து நாட்கள் இறைச்சியும் மதுவும் கொடுத்து நன்றாக பார்த்துக்கொள்கிறார். நாயகன், சாப்பிட்ட சோறுக்கு நியாயம் செய்ய ரவுடியை சந்திக்க செல்கிறான். ரவுடியின் மனைவியை தூக்கி பீப்பாய் தண்ணீரில் தலைகுப்புற வீசுகிறான். ரவுடியை  அடித்து உதைத்து ஓட்டலை மீட்கிறான். என்னா அடி... மது வைத்துள்ள பானைகள் எல்லாம் சிதறுகி...

தெரிஞ்சுக்கோ - மனித உடல்

படம்
  படம் - ஜாக்சன் டேவிட் தெரிஞ்சுக்கோ – மனித உடல் மனித உடலிலுள்ள எலும்புகள் அதிகமுள்ள இரண்டு பகுதி கைகளும், கால்களும் ஆகும். கால்களில் 26, கைகளில் 27 எலும்புகள் உள்ளன. உடலிலுள்ள ரத்த நாளங்களை   விரித்தால் ஒரு லட்சம் கி.மீ. தூரம் வரும். தாடையிலுள்ள தசையான மசெட்டர், உடலில் மிக வலிமையான தசையாகும். இதன் கடிக்கும் வேகம் 91 கி.கிக்கும் அதிகம். ஒருநாளைக்கு, 1.5 லிட்டர் ஹைட்ரோகுளோரிக் அமிலம் வயிற்றில் சுரக்கிறது. இரண்டு நுரையீரல்களிலும் 300 மில்லியன் காற்றுப் புரைகள் உள்ளன. இந்த காற்று புரைகளுக்கு அல்வெயோலி என்று பெயர்.   மனிதர்களின் மூக்கால் இருபதாயிரம் வாசனைகளை வேறுபடுத்தி அறியலாம். கண்களிலுள்ள ரெட்டினாவில் 130 ஒளி உணர்வு செல்கள் உள்ளன. இதனால்தான் மனிதர்களால் வண்ணங்களை எளிதாக காண முடிகிறது. மனிதர்கள் தங்களது வாழ்நாளில் கண்களை தோராயமாக 415 மில்லியன் முறை சிமிட்டுகிறார்கள். இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை நாக்கிலுள்ள பழைய சுவைமொட்டுகள் நீக்கப்பட்டு, புதியவை வளருகின்றன. குழந்தைகளுக்கு நாக்கிலுள்ள சுவை மொட்டுகளின எண்ணிக்கை பத்தாயிரம், ஆனால் பெரியவர்களுக்கு ஆறாயிரம் ம...

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தீயசக்தி பேரரசன் பழிவாங்க மீண்டும் உயிர்த்தெழுந்தால்... மேஜிக் எம்பரர்

படம்
  மேஜிக் எம்பரர் சீனா மங்கா காமிக்ஸ் 350 அத்தியாயங்கள் தொன்மைக் கால தீயசக்தி பேரரசன், அவனது வளர்ப்பு மகனால் சதி செய்யப்பட்டு வீழ்த்தப்படுகிறான். அவனது இறப்புக்கு காரணம், ஒரு மந்திர நூல். அதையும் தன்னோடு எடுத்துக்கொண்டு உடலை எரித்துக்கொண்டு இறக்கிறான். இதனால் அவனது ஆன்மா, மறுபிறப்பு எடுக்கிறது. ஆன்மா, பொருத்தமான உடலை தேடுகிறது. அப்போதைக்கு காட்டில் குற்றுயிராக கிடக்கும் லுவோ குடும்ப பணியாளன் ஜூவோ ஃபேன் உடலில் நுழைகிறது. அந்த நேரத்தில் லுவோ குடும்பத்தை இன்னொரு பகையாளி குடும்பத்தினர். காட்டில் வைத்து வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனர். தீயசக்தி பேரரசன் , தனது சக்தியெல்லாம் இழந்தாலும் மந்திரசக்தி முறைகளை நினைவில் வைத்திருக்கிறான். அதைக் கொண்டு குற்றுயிராக கிடப்பவனைக் கொன்று அவன் ரத்தத்தை தனது உடல் ஆற்றலுக்குப் பயன்படுத்துகிறான். அந்த சக்தியை வைத்து ஆபத்தில் உள்ள லுவோ குடும்பத்தை (மிஸ் லுவோ, மிஸ்டர் லுவோ அக்கா, தம்பி) என இருவரையும் காக்கிறான். அச்சமூகத்தில்,லுவோ குழு, மூன்றாவது தரத்தில் உள்ள குடும்பம். அக்கா, தம்பி, விசுவாச வேலைக்காரன் பாங் ஆகியோர்தான் லுவோ குடும்பம். ஒன்றுமே இல்...

பழிக்குப்பழி வாங்கத் துடிக்கும் மாபிஃயா குழுக்களின் அதிகார, ரத்தவெறி! - காப்பா - ஷாஜி கைலாஷ்

படம்
காப்பா - ஷாஜி கைலாஷ்   காப்பா இயக்கம் ஷாஜி கைலாஷ் பிரிதிவிராஜ், அபர்ணா, அன்னா பென், ஆசிஃப் அலி திருவனந்தபுரத்தில் வாழும் கொட்டா மது, பினு என இரு குழுக்களுக்கு இடையிலான சண்டையும், வாக்குவாதங்களும்தான் படம். மாஃபியா குழுக்களுக்கு இடையிலான சண்டை, அதில் பறிபோகும் உயிர்கள், வன்மம் ஆகியவற்றை நிதானமாக விவரிக்கிற படம். படத்தை ஆசிஃப் அலிதான் பெரும்பாலான காட்சிகளில் நகர்த்துகிறார். அவர் தனது மனைவி பினுவை, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கூட்டி வந்து வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அவரின் வீட்டிற்கு முன் போலீஸ்காரர் ஒருவர் வந்து காத்து நிற்கிறார். அவர் ஆனந்த் (ஆசிஃப் அலி), பினு (அன்னா பென்) ஆகியோரைப் பற்றி விசாரிக்கிறார். அப்போது பினுவின் பெயரின் பின்னே உள்ள திரிவிக்ரமன் என்ற பின்னொட்டு அவரை திடுக்கிடச் செய்கிறது. அவர் ஆனந்தை தனியாக அழைத்து விஷயத்தைச் சொல்கிறார். அதற்காக அவனிடம் 50 ஆயிரம் ரூபாய் காசும் வாங்கிக்கொள்கிறார். ஆனந்தைப் பொறுத்தவரை அவன் பினுவை மணந்துகொண்டதால், அவளை எப்படியேனும் பழிக்குப்பழி வன்மத்தில் இருந்து காப்பாற்ற நினைக்கிறான்.. ஆனால் அவனே எதிர்பார்க்காதபடி விவகாரத்தில் மாட்டிக்...

கழுத்தைக் கடித்து ரத்தம் உறிஞ்சினால் பேரின்பம்! - மனித வடிவில் சுற்றிய காட்டேரிகள்

படம்
    அசுரகுலம் ரத்த சாட்சி 1.0 காட்டேரி இந்தோனேஷியாவைச் சேர்ந்தவர் அஹ்மத் சுராத்ஜி. இவர் அந்த நாட்டில் மாந்த்ரீகம் படித்த ஆள். இவரை காவல்துறை கைது செய்தபோது நாற்பத்திரெண்டு கொலைகளை செய்திருந்தார். கரும்புக்காட்டில் இருபதுக்கும் அதிகமான மண்டையோடுகளை காவல்துறை கண்டெடுத்து பீதியானது. இன்னும் முப்பது கொலைகளை செய்த ஆர்வமாக இருந்தவரை கைதும், சிறையும் கட்டுப்படுத்திவிட்டது பரிதாபம்தான்.   எப்படி ப்ரோ கொலை செஞ்சீங்க என குற்றவரலாற்றை காவல்துணை நிமிண்டி   கேட்க, அதற்குத்தானே அஹ்மத் காத்திருந்தார். முதலில் பெண்களை பிடித்து கழுத்தை நெரித்துக் கொல்வேன். பிறகு அவர்களின் வாயில் உள்ள எச்சிலைக் குடிப்பேன் என திகில் ஊட்டியிருக்கிறார். இப்படி எச்சிலைக் குடிப்பதன் மூலம் இறந்தவர்களின் ஆன்மாவைக் கட்டுப்படுத்த முடியும் என நினைத்திருக்கிறார். காவல்துறை தன்னை பிடித்துவிட்டது. சாகப்போகிறோம் என ஒருவர் தெரிந்துகொண்டால் எப்படி இருப்பார். மனதளவில் நொறுங்கியவராகத்தானே, ஆனால் ஜெர்மனியைச் சேர்ந்த ஃபிரிட்ஸ் ஹார்மன், எப்படி கொலை செய்தேன் என்பது மகிழ் திருமேனி பட கொலை போல துல்லியமாக சொன்னார். ...

கொலை செய்து ரத்தம் குடித்தால்தான் திருப்தி!

படம்
  பீட்டர் வில்லியம் சல்கிளிப் என்பவர், இங்கிலாந்தில் ஜாக் தி ரிப்பர் என்ற கதையை படித்தோம் அல்லவா? அதை முறையைக் கையாண்டவர். ஆனால் இன்னும் கொஞ்சம் ஸ்பீடு ஏத்து மாமா என டிஎஸ்பி இசையில் கூறுவதைப் போல குரூரத்தை இரண்டு ஸ்பூன் சேர்த்தார். பீட்டர், ஜாக்கைப் போலவே காவல்துறையினருடன் தனது கொலைகளைப் பற்றி பேசியவர்தான். ஆனால் காவல்துறை தீவிரமாக செயல்பட்டு அவரைப் பிடிக்கும்போது பதினைந்து பேர்களின் உயிர் பறிபோனது. பிழைத்தவர்களும் ஏன் பிழைத்தோம் என்ற அளவுக்கு உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்டிருந்தன. முதலில் விலைமாதுக்களை தேடிப்பிடித்து குத்திக்கொல்ல ஆரம்பித்தார். குத்துவது என்றால் சாதாரணமாக அடிவயிற்றில் ஓங்கி குத்திக்கொல்வதோடு நிற்கவில்லை. கண்கள், கழுத்து, மார்பு, வயிறு, பெண் குறி என பதினான்கு முறை குத்திக்கொல்வது பீட்டரின் பாணி. இதனால் ஒருவர் உயிர்பிழைப்பது கடினம். அப்படி உயிர் பிழைத்து வாழ்ந்தால் அவரை பார்ப்பது நமக்கு கஷ்டமாக இருக்கும். அந்தளவு உடல் உறுப்புகளை உருக்குலைத்துவிடுவார் பீட்டர். விலைமாதுக்கள், வேலை செய்யும் பெண்கள், கல்லூரி மாணவர்கள் என கொலைக்கு தேவையான பொருட்களை மாற்றிக்கொண்டார். ஏ...

சிரஞ்சீவி பேக் டூ பேக் திரைப்படங்கள் - இந்திரா, சூடாலனி உந்தி, ரிக்‌ஷாவோடு

படம்
            சிரஞ்சீவி படங்கள் பேக் டூ பேக் இந்திரா இயக்கம் பி கோபால் கதை சின்னி கிருஷ்ணா வசனம் பாருச்சி பிரதர்ஸ் பட்ஜெட் - 10 கோடி வசூல் 40 கோடி மூன்று நந்தி விருதுகளைப் பெற்ற படம் 2002ஆம் ஆண்டு காசியில் சங்கர் வாழ்ந்து வருகிறார். டாக்சி ஓட்டுவதுதான் இவருடைய தொழில். இவருக்கென தெலுங்கு பேசும் சில மனிதர்கள் உள்ளனர். டாக்சி ஓட்டுவது, படகு ஒன்றை காசிக்கு வருபவர்களுக்கென இயக்கி வருகிறார். படகை ஓட்ட ஆதரவற்ற ஒருவரை நியமித்திருக்கிறார். டாக்சியை நேர்மையாக ஓட்டி கிடைக்கும் பணத்தில் தான் தனது மாமன் மகள், மருமகன் ஆகியோரை பராமரித்து வருகிறார். மருமகளை கர்நாடக சங்கீதம் கற்பித்து பாடகியாக்கவேண்டுமென்ற கனவு சங்கருக்கு இருக்கிறது. ஆனால் மாமன் மகளுக்கோ பாட்டைக் கேட்டாலே தூங்கும் திறமைதான் இருக்கிறது. சாதாரணமாக பார்த்தாலே தெரியும். பெரிய வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் போல இருக்கும் சங்கர், வாரணாசியில் என்ன செய்கிறார் என சந்தேகம் தோன்றும் சந்தேகம் சரிதான். சங்கர் தன் மாமன் மகள் பாடும் போட்டியில் அவர் தடுமாற இவர் மேடையேறி பாடுகிறார். அப்போது அவரைப் பார்த்து காதல் கொள்கிறார் ...