இடுகைகள்

ஜனநாயகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வறுமை ஒழிப்பு திட்டத்தில் அதிபர் ஷி ச்சின்பிங் சாதித்தது என்ன?

படம்
 ஷி ச்சின்பிங்கின் வறுமை ஒழிப்பு ஷி ச்சின்பிங் கிராமப்புற வறுமை ஒழிப்பை தனது பேச்சுகளில், கட்டுரைகளில் குறிப்பிட்டிருக்கிறார், ஆனால் நகர்ப்புற நிலைமைகளை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. நடுத்தர வருமானம் கொண்ட நாட்டின் தனிநபர் வருமானத்தை உயர்த்தவேண்டுமென கூறியவர் முன்னாள் அதிபர் டெங். பொருளாதார வளர்ச்சியின் வழியாக உலகளவிலான அந்தஸ்து, அங்கீகாரம் பெறுவதே நோக்கம்.  சீனாவில் தனிநபர் வருமானம் 2000ஆம் ஆண்டில் 500 தொடங்கி 4000 டாலர்கள் அளவில் பெருக வேண்டும் என்பது அவரது கனவு. இந்த வகையில் வறுமை நிலையில் இருந்து நாடு மேலெழுந்து நடுத்தர வருமானம் கொண்ட நாடாக மாறும் என்பது அவரது கனவு.  ஆனால், டெங் எதிர்பார்த்ததை விட நாடு வேகமாக முன்னேறி வளர்ந்தது. ஆனால் இங்கே ஒரு பிரச்னை எழுந்தது. தாராளவாத பொருளாதாரம் , சர்வாதிகார நாடு என முரண்பாடுகள் உருவாகியது. இரண்டுமே ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. டெங்கிற்கு அடுத்து அதிபரானவர்களான ஜியாங் ஜெமின், ஹூ ஜின்டாவோ ஆகியோரும் சீனர்களின் தனிநபர் வருமானம் அதிகரிக்க முயன்றார்கள். அதற்கான இலக்குகளை நிர்ணயித்தனர்.  ஷி சீனா வளம் நிறைந்த நாடாக மாறுவது கடந்து வறுமை ஒழ...

சர்வாதிகாரம் - அமைப்புகளை காப்பாற்றுதல்

படம்
    சர்வாதிகாரம் அமைப்புகளை காப்பாற்றுதல் அரசு அமைப்புகள் நாகரிகத்தை ஜனநாயகத்தை காப்பாற்ற உதவுகின்றன. அவற்றுக்கு மக்களின் உதவியும் தேவைப்படுகிறது. அமைப்புகளுக்காக அதனால் பயன்பெறும் மக்கள் ஆதரவாக நின்று பேச வேண்டும் போராடவேண்டும். அமைப்புகளுக்கு சுயமாக தன்னை பாதுகாத்துக்கொள்ளும் திறன் கிடையாது. அவை பாதுகாக்கப்படாதபோது ஒன்றன்பின் ஒன்றாக வீழ்வதைப் பார்ப்போம். இதற்கு எடுத்துக்காட்டாக நீதிமன்றம், நாளிதழ், சட்டங்கள், தொழிலாளர் சங்கங்களைக் கூறலாம். பெரும்பாலான சர்வாதிகார ஆட்சி என்பது மக்களால் வழங்கப்படுவதுதான். இத்தகைய நெருக்கடியான சூழலில் முன்னமே தங்களை அதிகாரத்திற்கு கீழ்ப்படிவதாக ஒப்புக்கொடுக்க கூடாது. 1933ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஹிட்லர் அரசை அமைத்துவிட்டார். அப்போது பிப்ரவரி மாதம் வெளியான யூதர்களின் நாளிதழில், ஹிட்லர் தனது பிரசாரத்தில் கூறிய யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாது என நம்புவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், சர்வாதிகாரி சொன்னதை செய்து முடித்தார். அந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக அனைத்து அரசு அமைப்புகளும் நாஜி கட்சியினரால், அதன் ஆதரவாளர்களால் கைப்பற்றப்பட்டது. நாட்டில் ...

சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட காற்று - புதிய மின்னூல் வெளியீடு

படம்
      சிறைக்கூடத்தில் அடைக்கப்பட்ட காற்று நூல், மக்கள் அதிகார கொள்கையை சுருக்கமாக விவரிக்கிறது. பொதுவாக, இக்கொள்கையை வெகுசன ஊடகங்கள் தவறாக இட்டுக்கட்டி சித்திரித்து வருகின்றன. உண்மையில் மக்கள் அதிகார தத்துவத்தின் நோக்கம் என்ன, அதன் செயல்பாடுகள் எப்படிப்பட்டவை என்பதைப் பற்றிய அடிப்படை புரிதலை இந்நூல் ஏற்படுத்திக் கொடுக்கும். https://www.amazon.com/dp/B0DYX41J5Q 

ஜனநாயகத்தை வளர்க்க, அரசு அமைப்புகள் சட்டத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவேண்டும்!

படம்
      நேர்காணல் பொருளாதார ஆய்வாளர் டாரன் ஆஸ்மொக்லு சில நாடுகள் தோற்றுப்போகையில் சில நாடுகள் வளம் பெறுவது எப்படி? அனைத்து நாடுகளும் வெற்றிபெறுவதற்கு தேவையான பொருளாதார, சமூக காரணங்கள் உள்ளன.இவற்றை ஒருங்கிணைக்க தேர்ந்தெடுக்கும் அமைப்புகள் திறன் பெற்றவையாக இருக்கவேண்டும். இந்த அமைப்புகள் அரசியல் ரீதியாக, சமூகரீதியாக, பொருளாத ரீதியாக சிறப்பானவையாக இருத்தல் அவசியம். வெற்றிபெற்ற நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் அனைத்து மக்களுக்கும் சரியான வாய்ப்புகளை உரிமைகளை சமத்துவமாக பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். அரசு அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வரும். இந்த அமைப்புகள் பலவீனமான மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களை பாதுகாக்கவும் முயலும். அதேசமயம் பெரு, பன்னாட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தும். கிளர்ச்சி, அதிகாரத்தை கேள்வி கேட்பது சில நாடுகளை வளப்படுத்தும் என பொருளாதார வரலாற்று அறிஞர் ஜோயல் மொக்யிர் கூறியிருக்கிறார். இக்கருத்தை ஏற்கிறீர்களா? ஒரு நாட்டின் வளர்ச்சியில் கிளர்ச்சி, அதிகாரத்தை கேள்வி கேட்பது முக்கியம் என்ற ஜோயலின் கருத்தை நான் ஏற்கிறேன். இந்த கிளர்ச்சிப் போராட்டம் என்பது சமந...

வாழு வாழவிடு எனும் அமைதி முயற்சிகளை சந்தேகப்படக்கூடாது

படம்
            அமைதிக்கு வாய்ப்பளிப்போம்!  பாகிஸ்தானில் முன்பிருந்த அரசுகள் அங்கிருந்து வரும் தாக்குதல்களை தடுக்க சிறிதளவே முயற்சிகளை எடுத்தன. காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் எந்த ஒரு நடைமுறைத் தீர்வையும் முன்வைக்கவில்லை. இன்றுவரையிலும் கூட வளைந்து கொடுக்காத தன்மையில் அமைதிப் பேச்சுவார்த்தை செல்கிறது. எதிர்தரப்பில் எந்த பதிலும் இல்லாத நிலையில் நாம் தொடர்ந்து அதனை முன்னெடுத்து வருகிறோம்.  பாகிஸ்தானுடன் விரோதம் வளர்க்க நம்மிடம் பல்வேறு காரணங்கள் இன்றும் உயிரோடு உள்ளன. இது கடினமானதாக இருந்தாலும், அமைதி அழைப்பு என்பது முக்கியமானதாக உள்ளது. ஆண்மையுடன் தொடர்புபடுத்தாத வரையில் வாழ்க்கையில் இது முக்கியமானதுதான். வன்மம் வளர்ப்பதைவிட இந்தியர்களுக்கு நல்ல வாழ்விற்கான உறுதி தருவது அமைதி என்பதால் அதனை தேர்ந்தெடுக்க முடியும்.  பாதுகாப்பு நிதியறிக்கையில் 40 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக இரு நாடுகளில் இந்தியா மூன்று மடங்கு அதிகமாக ஆண்டிற்கு ஆண்டு கூடுதலாக செலவழித்துவருகிறது. கோல்டன் குவாட்டிரிலேட்டரல் சாலை திட்டம் எனும் பெரிய திட்டத்தினை அரசு நிறைவு செய்துள்ள...

சூழல் போராட்டத்தில் ஜனநாயகம்!

படம்
            பாசிச அரசு ஆட்சி செய்யும்போது, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அதன் ஒரே பதில் வன்முறைதான். லத்தி, துப்பாக்கிகள், புல்டோசர்கள் அரசின் சார்பாக பதில் கூறும் தரப்பாக மாறுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களைக் கூட அவையும் அகிம்சை முறையில் நேரடி நடவடிக்கை என்ற ரீதியில் அமைந்தவை. உடனே முடக்கப்படுகின்றன. போராட்டக்காரர்கள் தேச துரோகச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, அவர்களின் செயல்பாடுகள் இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களோடு இணைக்கப்படும். இணைக்கும், சேர்க்கும் வேலைகளை கால்நக்கி ஊடகங்கள் சிறப்பாக செய்யும். அதைப்பற்றி பாசிச அரசு பெரிதாக கவலை கொள்ள வேண்டியதில்லை. தொண்ணூறுகளில் சூழலுக்காக போராடிய மக்களின் போராட்டம் வன்முறை இல்லாமல் இருந்தது. ஆனால் போராட்டக்காரர்கள், அனைத்து பொறுப்புகளையும் அரசியல்வாதிகளிடம், அரசிடம் ஒப்படைத்துவிடவில்லை. பிரச்னை என்றால் அவர்களே சென்று நேரடியாக போராடத் தொடங்கினார்கள். இதை அன்று மேற்கத்திய நாடுகளின் அரசுகளே எதிர்பார்க்கவில்லை. ஒருவித ஹிப்பித்தன்மை கொண்ட இளைஞர் கூட்டம் இது. தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள முடியும் என வாழ்ந்து வந்த...

அரசின் சர்வாதிகாரம், பயங்கரவாதத்தை தட்டிக்கேட்கும் ஹேக்டிவிஸ்டுகளின் வரலாறு!

படம்
  கோடிங் டெமாக்கிரசி மௌரின் வெப் எம்ஐடி பிரஸ் கட்டுரை நூல்  உலக நாடுகளில் உள்ள அரசு சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கணினி போராளிகளைப் பற்றிய நிறை, குறை, போராட்டங்கள், வளர்ச்சி, வீழ்ச்சி பற்றிப் பேசுகிற நூல் இது.  அடிப்படை மதவாத நாடுகள், மதவாத நாடாக மாறிவரும் இந்தியா போன்ற நாடுகள், ஒற்றைக் கட்சி சர்வாதிகாரத்தில் இயங்கும் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில், ஜனநாயகம் கிடையாது. அதை மரபான ஊடகங்கள், பத்திரிகைகள், தன்னார்வ அமைப்புகள் பேச முடியாது. அப்படி பேசினால் உடனே அந்த நபர்கள் காணாமல் போய்விடுவார்கள். சிறையில் விசாரணையின்றி காலவரையின்றி வைக்கப்படுவார்கள். விஷம் வைத்து அல்லது சித்திரவதை செய்து கொல்லப்படுவார்கள். இதுதான் சர்வாதிகார அரசில் உள்ளவர்களுக்கு நேரும் நிலைமை. ஆனால் இதெல்லாம் அடையாளம் தெரிந்து செயல்படும் ஆட்களுக்குத்தான்.  அதே சர்வாதிகார நாட்டில் இணையத்தில் இயங்கும் ஹேக்டிவிஸ்டுகள் உண்டு. இவர்கள் கணினி கோடிங்கைக் கற்றுக்கொண்டு அதை வைத்து அரசு செய்யும் குற்றங்களை உலகிற்கு கூறிக்கொண்டிருப்பார்கள். இவர்கள் குழுக்களாக அல்லது தனியாக இயங்கி வருவார்கள். இவர்களை பிடித்து சிறையில் அடை...

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் மக்களின் அனுபவம்தான் முக்கியம் - சாம் ஆல்ட்மேன்

படம்
  சாம் ஆல்ட்மேன், ஓப்பன் ஏஐயின் இயக்குநர். இவர் தலைமையிலான குழுதான் 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சாட்ஜிபிடி எனும் செயற்கை நுண்ணறிவு மாடலை வெளியிட்டது. ஓப்பன் ஏஐ தொடங்கி ஆறு ஆண்டுகள்தான் ஆகிறது. பணியாளர்கள் 500பேர். இவர்கள் செய்துள்ள பணி இணையத்தையே இன்று மாற்றிவிட்டது.  தமிழில் வரும் நாளிதழ்கள் கூட சாட்ஜிபிடி மாடலை தனது நிருபர்களுக்கு வழங்கி அதைப் பயன்படுத்தி கட்டுரைகளை எழுதுங்கள் என ஊக்கப்படுத்தி வருகின்றன. அந்தளவுக்கு ஜோக் முதல் பாட்டு, ரெஸ்யூம், பள்ளி மாணவனுக்கான கட்டுரை என அனைத்தையும் எழுதி வருகிறது சாட்ஜிபிடி. கேள்விகளை சரியாக கேட்க தெரிந்தால் உங்களுக்கு பதிலும் சிறப்பாக தெளிவாக துல்லியமாக கிடைக்கும்.  சாம் ஆல்ட்மனிடம் பேசினோம்.  சாட்ஜிபிடியை நீங்கள் எதற்கு பயன்படுத்துகிறீர்கள்? எனது மின்னஞ்சலில் உள்ள அறிமுகமில்லாதவர்கள் அனுப்பும் கடிதங்களை எடுத்து குறிப்புகளாக்கி பார்ப்பேன். முக்கியமானவர்களின் மின்னஞ்சலை தனியாக எடுத்து வைப்பேன். அடுத்து, சந்திக்கவிருக்கும் நபர்கள் பற்றிய தகவல்களை மொழிபெயர்த்து வைத்து படிப்பேன். பிறகு அதன் வழியே சந்திப்புக்கு தயாராவேன். இப்போதைக்க...

2024 - உலக நாடுகளில் தேர்தல் - ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் எது தொடரப்போகிறது?

படம்
 தேர்தலுக்குப் பிறகு மாறிப்போகும் உலகம் 2024ஆம் ஆண்டில் உலகமெங்கும் நிறைய நாடுகளில் தேர்தல் நடைபெறப்போகிறது. தேர்தல் மூலம்தான் பல நாடுகளில் ஜனநாயக செயல்பாடுகள் தொடருமா, அல்லது நின்றுபோகுமா என்று தெரிய வரும். சர்வாதிகாரத்தை தேர்தல் எப்படி தீர்மானிக்கும் என்பது சரியான கேள்வி. தேர்தல் என்பதைக் குறைந்தபட்ச கண்துடைப்பாகவேனும் நடத்தி முடிக்கவேண்டிய நெருக்கடி நிறைய நாடுகளுக்கு உள்ளது. இன்று நாடுகள் அனைத்தும் அரசியல், பொருளாதாரம், சமூகம் என பல்வேறு வகையில் ஒன்றோடொன்று இணைந்துள்ளது. தனியாக தற்சார்பாக இயங்குவது கடினம். அதேசமயம், கொள்கை, செயல்பாடு ரீதியாக யாரையும் நேரடியாக பகைத்துக்கொள்ளவும் முடியாது.  ஆனந்தவிகடன், பொதுநலன் கருதி என போலியாக விளம்பரம் வெளியிட்டு தேர்தலில் மக்களை வாக்களிக்க தூண்டுவதை அனைவரும் கண்டிருக்கலாம். இதெல்லாம் மக்களின் மனதில் போலியான நம்பிக்கையை விதைக்கும் செயல்பாடு. அனைத்து நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட கருத்தியல் செயல்பாடுகள் உண்டு. வலதுசாரி தாராளவாத, சர்வாதிகார அதிகார சக்திகள் எழுச்சிபெறும்போது, அதுவரையிலான ஜனநாயக அமைப்புகள் மெல்ல நம்பிக்கையிழக்கத் தொடங்குகின்றன...

ஜனநாயகம் என்பது நாட்டிற்கு நாடு மாறுபடக்கூடியது - வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

படம்
  ஜனநாயக வழியில் என்னை தூக்கி எறிய முடியாது - ஷேக் ஹசீனா என்னை அழிக்கவேண்டுமென்றால் கொல்லவேண்டும். மக்களுக்காக உயிர் துறக்கவும் தயார் என்று  கூறி தனது வழியில் நாட்டை ஆட்சிநடத்திக் கொண்டு செல்கிறார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா. 170 மில்லியன் மக்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதியாக, நாட்டின் பிரதமராக எழுபத்து நான்கு வயதிலும் உறுதியாக நிற்கிறார்.  மத்திய கிழக்கு நாடுகளை விட அதிக முஸ்லீம்கள் வாழும் நாடு. அரசியலமைப்பு நாட்டை மதச்சார்பற்ற நாடு என்று கூறுகிறது. ஆனால் ராணுவ ஆட்சி காலம், நாட்டை இஸ்லாமிய அடிப்படைவாத இருட்டுக்குள் கூட்டிச்சென்றது. இதெல்லாம் கடந்து 2009ஆம் ஆண்டு தொடங்கி நீண்டகாலமாக அங்கு ஆட்சி செய்வது ஹசீனாதான். எனது பெரும் பலமே மக்கள்தான். என்னுடன் மக்கள் நிற்பார்கள் என்று நம்புகிறேன் என கூறுபவர், இந்திய பிரதமர் இந்திராகாந்தி, இங்கிலாந்து பிரதமர் மார்க்கரேட் தாட்சர் ஆகியோர் செய்த தேர்தல் சாதனைகளை கடந்து நிற்கிறார்.  வங்கதேசத்தில் புகழ்பெற்ற வலிமை பெற்ற இரு கட்சிகள் உண்டு. ஒன்று, ஹசீனாவின் ஆவாமி கட்சி, அடுத்து வங்கதேச தேசியவாத கட்சி. அண்மையில் தேசியவாத கட்சி, வங...

தகவல்களை ஜனநாயகப்படுத்துகிறது ஏஐ - கூகுள் இயக்குநர் சுந்தர் பிச்சை

படம்
               சுந்தர் பிச்சை நேர்காணல் - பகுதி 2   என்விடியா நிறுவனத்தோடு சேர்ந்து ஏஐ சிப்களை தயாரித்து வருகிறீர்கள். இப்படி செய்வது ஒரே நிறுவனத்திற்கு அதிக அதிகாரத்தை தருவது போல இருக்கிறதே? நாங்கள் அந்த நிறுவனத்தோடு பத்தாண்டுகளுக்கு மேலாக தொழில் உறவைக் கொண்டிருக்கிறோம். ஆண்ட்ராய்ட் சார்ந்து ஒன்றாக வேலை செய்து வருகிறோம். ஏஐயைப் பொறுத்தவரை அவர்கள் நிறய கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறார்கள். எங்கள் க்ளவுட் வாடிக்கையாளர்கள் பலரும் என்விடியா வாடிக்கையாளர்கள்தான். செமிகண்டக்டர் துறை கடுமையான போட்டிகளைக் கொண்டது. இத்துறையில் முதலீடும் அதிகம் தேவை. நாங்கள் என்விடியா நிறுவனத்தோடு நல்ல உறவில் இருக்கிறோம். ஏஐ தொடர்பாக முறைப்படுத்தல் சட்டங்கள் வேண்டும் என கூறியிருக்கிறீர்கள். அந்த தொழில்நுட்பத்திற்கு பயன் அளிக்கும்படியான என்ன விஷயங்கள் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்? மருத்துவ காப்பீடை ஒருவர் பரிந்துரைக்கிறார், காபி ஷாப்பிற்கு செல்வதற்கான பரிந்துரை என வரும்போது பாகுபாடு இல்லாமல் ஏஐ இயங்க வேண்டும். சட்டங்கள் உருவாகும்போது ஏஐயின் செயல்பாட்டில் எந்த மாற்றமும...

தன்னியல்பாக நடைபெறும் மக்கள் போராட்டம் எந்த இடத்தில் தவறாக செல்கிறது? 2010-2020 மக்கள் போராட்டக்கதை!

படம்
                போராட்டத்தின் வீழ்ச்சி எங்கு தவறு நடைபெற்றது ? 2010 -2020 வரையிலான காலகட்டத்தில் ஏராளமான போராட்டங்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டு இளைஞர்கள் தெருவுக்கு வந்து போராடினார்கள் . இதில் எந்த தலைவர்களும் இல்லை . தன்னியல்பாக கோபம் கொண்ட இளைஞர்கள் , பெண்கள் பங்கேற்று போராட்டத்தை நடத்தினார்கள் . இப்படி போராட்டம் நடைபெறுவதற்கு அரசியல் வெற்றிடம் காரணம் என சிலர் கருத்து கூறுகிறார்கள் . ஆனால் அதற்கு எந்த அடிப்படையும் கிடையாது . எகிப்தில் ராணுவம் , பஹ்ரைனில் சவுதி அரேபியாவும் வளைகுடா கூட்டுறவு கௌன்சிலும் , துருக்கியில் எர்டோகன் , ஹாங்காங்கில் சீன அரசு , பிரேசில் நாட்டில் வலதுசாரி சக்திகள் என வெற்றிடம் நிரம்பப்பட்டது . எனவே இந்த எடுத்துக்காட்டுகளின் வழியாக வெற்றிடம் என்று கூறப்படும் இடத்தை நிரப்ப யாரோ ஒருவர் தயாராக இருப்பது உங்களுக்கு புரிந்திருக்கும் . பிரேசில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது இடதுசாரி ஆட்சி நடைபெற்று வந்தது . எம்பிஎல் என்ற இடதுசாரி குழு , பேருந்து விலை குறைப்பிற்கான போராட்டத்தை த...

தாய்லாந்தில் சீர்த்திருத்தங்களை செய்யத்துடிக்கும் இளம் அரசியல் தலைவர் - பிடா

படம்
    pita,move forward party       எங்களுக்கும் நேரம் வரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவ் ஃபார்வேர்ட் கட்சித்தலைவர் பிடா லிம்ஜாரோன்ராட் மேலேயுள்ள தலைப்பைத்தான் தனக்குத்தானே இப்படித்தான் சொல்லிக்கொண்டே பிரசாரம் செய்து வருகிறார் . பிடா செல்வாக்கான பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் . இவரது மாமா பாடுங் , முன்னாள் பிரதமர் தக்‌ஷினின் உதவியாளராக வேலை செய்தவர் . பிடா பாங்காக்கின் தம்மாசாட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் பிறகு மேற்படிப்பை அமெரிக்காவில் ஹார்வர்டில் படித்தார் . பிறகு நாடு திரும்பி குடும்பத்தொழிலான வேளாண்மை சார்ந்த தொழிலில் இயங்கி வந்தவர் , இப்போது அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார் . தாய்லாந்து நாட்டில் ஜனநாயகத்தன்மையை ஏற்படுத்தவேண்டும் . பொருளாதார சீர்திருத்தங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவேண்டும் என தீர்மானமாக பேசுபவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அரசால் பிடுங்கப்பட்டது . அரசு அவைக்குள் வராதபடி தடுக்கப்பட்டிருக்கிறார் . ஆனால் அவர் மக்களை , ஆதரவாளர்களை சந்திப்பை அரசு தடுக்கமுடியவில்லை . அரசியல் எதிரிகள் ...