இடுகைகள்

சக்கரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையா? உடான்ஸா? - கெட்ச் அப்பை மருந்தாக பயன்படுத்தலாமா?

படம்
கெட்ச்அப்பை மருந்தாக பயன்படுத்தலாம்! உண்மையல்ல. தொடக்கத்தில் மேற்கு நாடுகளில் இப்படி பயன்படுத்தினார்கள். 1830களில் உடலில் ஏற்பட்ட மஞ்சள் காமாலை, அஜீரணம், வயிற்றுப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாக பயன்படுத்தினர். தக்காளி கெட்ச்அப்பை இப்படி மருந்தாக நோயாளிகளுக்கு பரிந்துரைத்த மருத்துவரின் பெயர், ஜான் குக் பென்னட். இதை பலரும் காப்பியடித்து  சர்வரோக நிவாரணி தக்காளி கெட்ச்அப்தான்  என்று சொல்லி விற்றனர். பின்னாளில், கெட்ச்அப் நோய் தீர்ப்பது இல்லை என்ற உண்மை தெரிய வந்தது. இதன் விளைவாக,  1850இல் கெட்ச்அப் மருந்து விற்பனை என்பதே முற்றாக நின்றுபோனது.  உலகின் பழமையான சக்கரத்தின் வயது 5 ஆயிரம் ஆண்டுகள்! உண்மை. ஸ்லோவேனியாவில் உள்ள  லுப்லியானா (Ljubljana) நகர் அருகே பழமையான சக்கரம் கண்டறியப்பட்டது. தற்போது இச்சக்கரம், அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதன் வயது 5,100 முதல் 5,350 வரை இருக்கலாம் என்று கார்பன் வயது கணிப்பு முறையில் ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.  உலக நாடுகளில் சூடானில் அதிகளவு பிரமிடுகள் உள்ளன!  உண்மை. தற்போது வரை அங்கு 255 பிரமிடுகள் கண்டறியப்பட்...