இடுகைகள்

தமிழ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உரையாடல் - தோல் - அறிவியல் அறிவோம்

கோமாளிமேடை மொழி - உரையாடுவோம்! ஒருவரோடு உரையாடுவது என்பது பேச முடிந்தால்தான் சாத்தியம் என்பது கிடையாது. அப்படி நினைப்பவர்கள், பேச இயலாதவர்களிடம் மாற்றுத் திறனாளிகளிடம் உரையாட முடியாமல் தடுமாறுவார்கள். ஒருவர் பேசாதபோதும், அவரது முகபாவனைகளைப் புரிந்துகொண்டால் போதும். சொல்ல விரும்புவதை அறியலாம். அதற்கேற்ப அவரிடம் பேசலாம். உடல்மொழியும் அப்படித்தான். முகம் சொல்வது, கை,கால்கள் செயல்பாடு ஆகியவற்றைப் புரிந்துகொண்டாலே அங்கு உரையாடல் தொடங்கிவிடுகிறது. பிறந்த குழந்தைகள் நேரடியாக பேசுவதில்லை. ஆனால், அவர்களால் பேச முடியும். அழுது, தேவை என்னவென்று தெரிவிக்க முடியும். முக பாவனைகளைப் பிறருக்கு காட்ட முடியும்.மனிதர்களுக்கு முதிர்ச்சி அதிகம் என்பதால், குழந்தைக்கு பிறந்த சில ஆண்டுகளுக்கு பெற்றோரின் பராமரிப்பு, அக்கறை, அன்பு தேவைப்படுகிறது. குழந்தை தனக்கு ஏதாவது தேவை என்றால் அழுகிறது. காது கேளாத மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பிறருடன் ஏன் உலகத்துடன் கூட உரையாடுகிறார்கள். இதற்கென தனி பள்ளிகள் இயங்கி வருகின்றன. கைவிரல்கள் மூலம் வார்த்தைகளைக் கற்று அதை பயன்படுத்தி உரையாடுகிறார்கள். சைகை மொழியைக் கற்றவர்கள...

தமிழ் மென்பொருட்கள்!

 தமிழ் மென்பொருட்களை ஒரே இடத்தில் பயன்படுத்த வேண்டுமா? கீழே உள்ள வலைதளத்தை அணுகலாம். https://tamilpesu.in/ta/kural/

பிரிவாற்றாமை பாடல்களில் பெருகி ஓடும் இயற்கை அழகு- அகநானூறு- நித்திலக்கோவை - நூறு பாடல்கள்

      அகநானூறு - நித்திலக்கோவை நூறு பாடல்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார் மதுரை இலக்கியத் திட்டம் அகநானூறு பாடல்களில் மூன்று பகுதிகள் உள்ளன. அதில், நித்திலக்கோவை என்பது இறுதிப்பகுதி. இதில் மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. இப்பாடல்கள் அனைத்துமே தலைவன் பிரிவைப் பற்றி தலைவி பிரிவாற்றாமையோடு பேசுவதை அடிப்படையாக கொண்டுள்ளது. தலைவி பாடலைப் பாடுகிறாள். அல்லது தோழி தலைவனால் தலைவி நோயுற்று வாடுவதைக் குறிப்பிடுகிறாள். தொன்மையான அழகிய தமிழ் சொற்களை வாசிக்கவேண்டுமெனில் அகநானூறு நமக்கு உறுதியாக உதவும். ஏராளமான அழகிய தமிழ்சொற்களை புலவர்கள் பயன்படுத்தியுள்ளனர். நக்கீரர், பரணர், இளவெயினியார், கபிலர் என பல்வேறு புலவர்கள் பாடல்களை இயற்றியுள்ளனர். இவர்கள், சேரன், சோழன், பாண்டியன் என மூவேந்தர்களையும் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர். இதிலுள்ள பாடல்கள் அனைத்தும் பிரிவாற்றாமை பாடல்கள்தான். அத்தனையிலும் இயற்கை அழகு, வாழுமிடங்களின் செழுமை ஆகியவற்றைப் பாடிய பிறகு காதலை உரைக்கிறார்கள். பாடல்களில் காடுகளில் வாழும் பல்வேறு விலங்குகள் உருவகமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையில் எப்படி அனைத்து உயிரினங்களுக்கும் இ...

வடஇந்திய பிரதமரைக் காக்க உயிரை தியாகம் செய்ய முனையும் கமாண்டோ படை தலைவர்!

படம்
             அசோகா தமிழ் பிரேம்,அனுஶ்ரீ, ரகுவரன், ஆனந்தராஜ் படத்தை தெலுங்கில் எடுத்து தமிழில் டப் செய்திருப்பார்களோ என சந்தேகத்தை உருவாக்குகிறது. பிரதமரை காரில் அழைத்துச் செல்லும்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. அதில், அவர் சுடப்படுகிறார். பாதுகாப்பு அதிகாரி அசோகா, அவரை தனியார் மருத்துவமனைக்கு கூட்டிச்சென்று பாதுகாக்கிறார். பிரதமரை கொல்ல இரு கூலி கொலைகாரர்கள் மருத்துவமனைக்கு வருகிறார்கள். நாயகன் அசோகா, பிரதமரை பாதுகாத்து எதிரிகளை அழித்தாரா என்பதே கதை. ஆங்கில திரைப்படங்களை மனதில் கொண்டு உருவாக்கியிருக்கிற படம். நோக்கமே ஒரு நல்ல படத்தை உருவாக்கிவிட முடியாது என்பதற்கு இப்படமும் சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ்நாட்டில் பிரதமர் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் காவல்துறையிலுள்ள ஐஜி, சதித்திட்டத்தில் தொடர்புள்ளவராக இருக்கிறார். அதனால், கமாண்டோ படையினர் மட்டுமே பிரதமரை பாதுகாக்கும் பணியைச் செய்கிறார்கள். காவல்துறையினர், தரைதளத்தில் மட்டுமே நின்று பணியாற்றுகிறார்கள். அசோகா, தமிழ்நாடு காவல்துறையை நம்புவதில்லை. சரிதான் அதற்கான காரணங்களும் இருக்...

எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களுக்கு எழுதிய கடிதங்கள்!

    1 மதிப்பிற்குரிய எழுத்தாளர் கே செல்வேந்திரன் அவர்களுக்கு வணக்கம். நகுமோ லேய் பயலே என்ற உங்களது நூலை வாசித்தேன். கட்டுரைகளில் உள்ள நகைச்சுவை சிறப்பாக உள்ளது. நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், பார்த்தமுகம், தூஸ்ரா ஆகிய கட்டுரைகள் எனக்கு பிடித்திருந்தது.இலக்கியக் கட்டுரைகளில் மாசனமுத்து எழுதிய பொன்மொழிகள் கட்டுரை சிறப்பாக இருந்தது. நன்றி!    2   மதிப்பிற்குரிய எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களுக்கு, வணக்கம். அண்மையில் தங்களுடைய உறைப்புளி என்ற கட்டுரை நூலைப் படித்தேன். ஸ்டார்ட்அப் தொழில் தோல்வி, பழந்தின்னி வௌவால், எழுத்தாளர் க.சீ சிவக்குமாருடனான எழுத்தாளருடனான உறவு, நூல் வாசிப்பு பயன் என பலதரப்பட்ட வாசிப்புக்கு ஊக்கமளிக்கும், உற்சாகத்தோடு வாசிக்கும்படியான அம்சங்கள் நூலில் இருந்தன. நாளிதழை விநியோகம் செய்பவர்கள் பற்றிய கட்டுரை, குறிப்பிட்ட சம்பவத்தை விவரித்தாலும், ஒரு சிறுகதை போன்ற வடிவத்தைக் கொண்டிருந்தது. அதில், ஆங்கில நூலொன்றையும் பரிந்துரை செய்திருந்தீர்கள். வாசிப்பை ஊக்குவிக்கும் முயற்சி. இறுதிக்கட்டுரை, கல்லூரியில் ஆற்றிய உரை. நூல்களை வாசிக்கும், விரும்புகி...

பாரதி அழகுத்தமிழ் எழுத்துருக்கள்! - இலவசமாக பயன்படுத்தலாம்

படம்
        தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சித்துறை வலைத்தளத்தில் பாரதி அழகுத்தமிழ் எழுத்துருக்கள் இலவசமாக கிடைக்கின்றன. அவற்றை தரவிறக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். தனிப்பட்ட பயன்பாடு, தொழில்பயன்பாடு என ஏதாகிலும் இருந்தால் சரிதான். பெரிதாக கட்டுப்பாடுகள் கிடையாது. மொத்தம் 800 எழுத்துருக்கள் உள்ளன. பாரதி புத்தகாலயம், ஃப்ரீதமிழ்பான்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி. இவர்களது உழைப்பின் வழியாக இணையம் வழியாக தமிழ் எழுத்துருக்கள் நீண்டகாலம் நிலைத்திருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. எழுத்துருக்களை புதிதாக பயன்படுத்த விரும்புபவர்கள் தமிழ் இணையக்கல்விக்கழகம் அல்லது தமிழ் வளர்ச்சித்துறை வலைத்தளத்தில் எழுத்துருக்களை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 

எழுநா - இலங்கையின் சிறந்த ஆய்விதழ்களில் ஒன்று

படம்
        எழுநா இதழில், இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் உள்ள மக்கள் இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது அவசியம் என விளக்கி கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். https://substack.com/profile/5467650-ar/note/c-83204192

புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டம் !

படம்
      கல்வி அறிவு இல்லாத தொழிலாளர்களுக்கு தன்னம்பிக்கை தரும் புதிய இந்தியா கல்வியறிவுத் திட்டம் பாரதம், பாரதீய என்று கூறுவது காவி இயக்கம், கட்சிகளை நினைவுபடுத்துகிறது. எனவே கல்வியறிவுத்திட்டம், புதிய இந்தியா என்ற பெயரில் கட்டுரையில் பயன்படுத்தப்புகிறது. தமிழ்நாட்டில் படிக்க வாய்ப்பு வசதி இல்லாமல் வேலை செய்யுமாறு பணிக்கப்பட்டவர்கள், பலர் இன்றும் பேருந்து பார்த்து ஏறவும், எண்களைப் பார்த்து படிக்கவும் சிரமப்படுகின்றனர். சிறுவயதில் அவர்கள் பள்ளிக்கு செல்லும்போது, அதைத் தடுக்க உறவினர்கள் அல்லது குடும்பத்தினர் முயற்சி செய்து வெற்றி கண்டிருப்பார்கள். அதன் விளைவாக, அவர்களின் கல்வியறிவு அஸ்தமனமாகி இருக்கும். பிற்காலத்தில், கையெழுத்து கூட போட முடியாமல், கால மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறி வருவார்கள். இதற்கு ஒன்றிய அரசு, மாநில அரசு இணைந்து நிதியுதவி அளித்து கல்வியறிவுத் திட்டம் ஒன்றை நடத்துகிறது. அந்த வகையில் கற்றல் மையங்கள் முப்பதாயிரத்திற்கும் மேலாக தமிழ்நாட்டில் உள்ளன. இதன் வழியாக சேலம் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டத்திலுள்ள நாற்பது வயதுக்கும் மேற்பட்ட மக்கள் பய...

வெற்றியே நிச்சயம் மண் மீது சத்தியம் - இலவச மின்னூல் வெளியீடு

           நூலை இன்டர்நெட் ஆர்ச்சீவில் தரவிறக்கிக் கொள்ளலாம்.       https://archive.org/details/20241212_20241212_0234  பொறுப்புத் துறப்பு கோமாளிமேடை குழு, நூலை இன்டர்நெட் ஆர்ச்சீவில் மட்டுமே பதிவிட்டுள்ளது. மற்றபடி நூலை தரவிறக்கி தமிழை வாழ வைக்க வேறு வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள், குறுஞ்செய்தி பகிர்வு தளங்களில் பகிர்வதற்கு அவரவரே பொறுப்பு. அத்தகைய செயல்பாடுகளுக்கு கோமாளிமேடை பொறுப்பாகாது. குறிப்பாக, தலித் அரசு அதிகாரிகள் நூலை வாசிக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சைக்கோ தந்தையால் நினைவுகள் அழிக்கப்பட்ட மகனின் அவல வாழ்க்கை!

படம்
          சைக்கோ தந்தையால் நினைவுகள் அழிக்கப்பட்ட மகனின் அவல வாழ்க்கை! அரிது அரிது இயக்குநர் மதிவாணன் இசை தமன் இந்த படத்தின் இயக்குநர், ஒரு பெரிய இயக்குநரின் உதவியாளராக வேலை செய்தவர். அந்த பெரிய இயக்குநர் போலியான சமூக கருத்துகளை அவரது சாதிக்கு ஏற்றபடி கூறுபவர். தமிழர்களின் கருப்பு நிறத்தை அவமதிப்பவர். மூன்று சதவீத உயர்சாதியை போற்றுபவர்.அவரிடமிருந்து வந்தேன் என விளம்பரம் வேறு. இந்த படத்தின் வீடியோக்கு கீழே உள்ள குறிப்புகளில் இயக்குநர் பற்றி அப்படியே பதிவாகியுள்ளது. படத்தில் ஒரு நரம்பியல் மருத்துவர் இருக்கிறார். கடற்கரையில் வாக்கிங் வந்தவருக்கு அங்குள்ள இரைச்சலான சூழ்நிலை பிடிக்கவில்லை. அங்கேயே அவரை மடக்கி பிடித்த மனித உரிமைக்குழு  போலீஸ் போல விசாரணைக்கு இழுத்து செல்கிறது. எதற்கு? அவரது மகன் பேச முடியாமல் நடைபிணம் போல மாறிவிட்டார். எதற்கு அப்படி மாறினார், அதில் அப்பாவான மருத்துவரின் பங்கு என்னவென கேட்கிறார்கள். கதை உடனே மருத்துவரின் நினைவுகளில் ஓடுகிறது. படத்தைப் பார்க்கும் நமக்கு பெரும்பாலான கதை, வசனமாகவே ஒலிக்குறிப்பாகவே கூறப்படுகிறது. காட்சியாக பெரிய மாற்ற...

முன்கோபம் கொண்ட நீதியைக் காக்கும் இளைஞன் ராபின்ஹூட்டாக மாறி அநீதியை எதிர்க்கும் கதை!

படம்
  தர்மா  விஜயகாந்த், ப்ரீத்தா விஜயகுமார், தலைவாசல் விஜய், ஜெய்சங்கர் பணக்காரர்களைக் கொள்ளையடித்து அவர்களின் பணத்தை சேரி மக்களுக்கு பிரித்து கொடுக்கும் ராபின்ஹூட் கதை. அடிப்படைக் கதை இதுதான். இதை விரிவாக கூறவில்லை. குடும்ப பாசம், குடும்ப உறுப்பினர்களுக்கான முரண்பாடு, சண்டை என காட்டிவிட்டு படம் நகர்ந்துவிடுகிறது.  தர்மா, சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் சூப்பர்வைசராக வேலை செய்கிறார். வேலை பார்ட்டைம்தான். முக்கியமான வேலை சேரி மக்களுக்கு உதவி செய்வது. அங்கு காவல்நிலையத்தில் வல்லுறவு செய்த பெண்ணுக்காக இன்ஸ்பெக்டரை சுட்டுக்கொல்கிறார். இப்படித்தான் தர்மா நீதிமன்றம் செயல்படுகிறது. ஏழை மக்கள் தர்மாவை ஆதரிக்கிறார்கள். முஸ்லீம் பெண்மணி தர்மாவிற்காக பேசுகிறார். அவர் கண்பார்வையற்றவர். அவரின் பேத்தி, தர்மாவை ஒருதலையாக காதலிக்கிறாள். இவருக்கான காதல் காட்சி சற்று 18 பிளஸாக இருக்கும். அதனாலென்ன பார்த்து மகிழுங்கள். காதலை புரட்சிக்கலைஞர், கேப்டன் மறுத்துவிடுவார். ஆனால் அதைக் காரணமாக வைத்து இரண்டு, மூன்று பாடல்கள் வந்துவிடுகின்றன. கேப்டன் படம் என்றால் லியாகத் அலிகானின் பொறி பறக்கும் வசனங்களும், ...

பணமும், அறிவுக்கூர்மையும் ஒரே இடத்தில் இருந்தால்.... - காதல்கவிதை (விஷ்வா)

படம்
  விஷ்வா (காதல் கவிதை) பிரசாந்த் தமிழ் இயக்குநர் – அகத்தியன் படத்தின் தொடக்க காட்சியில் விஷ்வா என்பவர், பெட்டிக்கடையில் வந்து நின்று தண்ணீர் கேட்பார்.   காசு கொடுத்து வாட்டர் பாக்கெட் கேட்க மாட்டார். இலவசமாக டம்ளரில் நீர் கேட்பார். ‘காசு கொடுத்தாத்தான் தண்ணீர் ’ என கடைக்காரர் சொல்லுவார். அதாவது, பாக்கெட்டில் கொடுப்பேன் என்கிறார். ஆனால், விஷ்வா தனது சட்டை பாக்கெட்டை காட்டி ‘’பாக்கெட்டில் ஊற்றினால் கீழே கொட்டிடுமே, டம்ளரில் கொடுங்க’’ என கேட்பார். தான் கிராமத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லும்போதுதான் நமக்கே பீதியாகும். இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என…. முதல் காட்சி தொடங்கி விஷ்வாவின் பாத்திரம் சற்று ரிவர்ஸாகவே பேசிக்கொண்டிருக்கும். விஷ்வா, அப்போதுதான் ஜில்லெட் க்ரீம் போட்டு அதே கம்பெனி ரேஷரில் ஷேவ் செய்துவிட்டு வந்த மாதிரியான பளபளப்பில் இருப்பார். சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்டிக் கடைக்கு வரும் சார்லி, சைக்கிளுக்கு ட்ரைவர் வேணும் என விஷ்வாவைக் (பிரசாந்தைக்) கூட்டிக்கொண்டு போவார். பிறகு பீச்சுக்கு செல்வார்கள். அங்கு ஏதோ ஒரு கடையைப் பார்த்துக்கொள்வதாக பேசிக்கொண்டு இருப...

நீரிழிவுக்கான மருந்தைக் கண்டுபிடிக்க போராடும் விஞ்ஞானி! லெஜண்ட் - சரவணன் அருள், ஊர்வசி, கீத்திகா திவாரி

படம்
  கோமானே பாடல் - கீத்திகா திவாரி சரவணன் அருள்- தி லெஜண்ட் The லெஜண்ட் சரவணன், கீத்திகா திவாரி, ஊர்வசி ராய்ட்டலா மற்றும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் இசை – ஹாரிஸ் ஜெயராஜ் இயக்கம் – ஜேடி –ஜெர்ரி   உலகளவில் புகழ்பெற்ற அறிவியல் விஞ்ஞானி, சரவணன். இந்தியாவைச் சேர்ந்தவர். இவர் தனது பால்ய நண்பனின் இறப்பால், பிறப்பிலேயே தொடங்கும் நீரிழிவு நோயைக் குணமாக முயல்கிறார். இந்த ஆராய்ச்சியால் உலகளவில் உள்ள மருத்துவ மாஃபியாக்கள் எரிச்சலாக, சரவணின் கருவுற்ற மனைவி கொல்லப்படுகிறார். இதனால் உடைந்துபோன சரவணன் சோகத்திலிருந்து மீண்டு தனது எதிரிகளை கண்டுபிடித்தாரா, நீரிழிவு நோயை குணமாக்கும் மருந்தை உருவாக்கி உலகுக்கு அளித்தாரா என்பதே கதை. நீரிழிவு நோயின் வகைகள், அதில் பாதிக்கப்படும் நோயாளிகள் என கதையை அமைத்து, அதில் மருந்து கண்டுபிடிப்பது, தனது ஆராய்ச்சியை மக்களின் நலனுக்கு அர்ப்பணிப்பது என்ற சமூக கருத்தை சிறப்பாகவே சொல்லியிருக்கிறார்கள். அறிவியல் ஆராய்ச்சி செய்து அதை ராயல்டி – ஆதாய உரிமைப்பணம் வாங்காமல் ஒரு நாட்டின் அரசுக்கு ஒப்படைப்பதைத்தான் சரவணன் படம் நெடுக சொல்கிறாரா என தெளிவாக புரிந்...

மாணவர்களுக்கு கல்வெட்டுகளைப் படிக்க கற்றுக்கொடுக்கும் ஆங்கில ஆசிரியர்!

படம்
  ராமநாதபுரத்திலுள்ள அரசுப்பள்ளி ஆசிரியர், ராஜகுரு. ஆங்கில பாடத்தை மாணவர்களுக்கு படிப்பித்து வருகிறார். அதோடு நிற்கவில்லை என்பதால்தான் இந்த கட்டுரை எழுதப்படுவதன் காரணமே… கொஞ்சம் எக்ஸ்ட்ரா விஷயங்களை செய்தார். என்ன செய்தார்? கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துகளை படிப்பதில், ராஜகுரு அதிக ஆர்வம் காட்டுகிற ஆள். இதை பிறருக்கும் சொல்லித் தந்து வருகிறார். ஹெரிடேஜ் கிளப்பில் செயலாளராக இருப்பவர், ராமனாதபுரம் தொல்பொருள் ஆராய்ச்சி பவுண்டேஷனின்   தலைவராகவும் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறார். இந்த பவுண்டேஷன், சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. திருப்புல்லானியில் உள்ள அரசு பள்ளியில் கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கி பதிமூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தமிழர்களின் கட்டுமானம், அவர்களின் மொழி, ஆகியவற்றை காக்கும் நோக்கத்தில்   கிளப் பேரார்வம் காண்பித்து வருகிறது. தொல்பொருள் சான்றுகளைப் பற்றி அறிவதற்கு ஆர்வம் காட்டும் மாணவர்களை ராஜகுரு, தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பல்வேறு விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறார். இதன்மூலம், ஆண்டுக்கு 25 மாணவர்கள் பயன் பெறுகிறார்கள். அத...

இந்து, தமிழ் ஆகிய கலாசாரங்களின் அழகிய பக்கங்களைக் காட்டுகிறேன் - சுந்தர் வி, தனிக்குரல் கலைஞர்

படம்
  சுந்தர் வி தனிக்குரல் கலைஞர் சுந்தர் வி கனடாவின் டொரண்டோ, லண்டன் என அலைந்து திரிந்து மக்களை தனது ஜோக்குகளால் மகிழ்வித்து வருபவர். வி.சுந்தர். சென்னையில் வந்து நிகழ்ச்சிகள் செய்யும்போது அவர் தவறாமல் பார்வையாளர்களிடம் கேட்கும் கேள்வி, என் தமிழ் விளங்குதா என்பதான். தொண்ணூறுகள், இரண்டாயிரத்தின் பாடல்களை அடிப்படையாக கொண்ட நகைச்சுவையை தனிக்குரல் நிகழ்ச்சியின் மையமாக கொண்டுள்ளார். இவர் பால்புதுமையினராவார். கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று வந்துள்ளார் வி.சுந்தர். மும்பை, பெங்களூரு ஆகிய பெரு நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அவரிடம் பேசினோம். இந்தியாவில் உங்களுடைய தனிக்குரல் நிகழ்ச்சி எப்படி செல்கிறது? நான் வேறுவகையான சூழல்களில் வளர்ந்து வந்தவன்.. ஆனால் தமிழ் இனக்குழுக்களுக்கு இடையில் உள்ள ஒற்றுமைகளை நான் நிகழ்ச்சியில் குறிப்பிடுகிறேன். அந்த ஒற்றுமைகள்தான் எங்களை ஒன்றாக இணைக்கிறது. இதனால்தான் கனடாவில் இருந்து வந்து பால்புதுமையினர்களை ஒன்றாக இணைத்துப் பார்த்து கருத்துகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் நிகழ்ச்சி செய்வது, அதற்கு வரும் எதிர்வினை...

பிறரது வாழ்க்கை அனுபவங்களின் வழியே துக்கத்தை மறக்கும் அகவயமானவனின் கதை! நித்தம் ஒரு வானம் -ரா கார்த்திக்

படம்
  நித்தம் ஒரு வானம் நித்தம் ஒரு வானம்  நித்தம் ஒரு வானம் இயக்கம் – ரா கார்த்திக் பாடல் – கோபி சுந்தர் பின்னணி தரண் குமார் பாடல்கள் கிருத்திகா நெல்சன் படத்தில் பாடல்கள் தனியாக தனியிசை ஆல்பம் போல இருக்கிறது. அதனால் அதை தனியாக நிதானமாக பாடல் வரிகளை அசைபோட்டு கேட்கலாம். அகவயமான இளைஞர் வாழ்க்கை, திருமணம் நின்றுபோனதால் எப்படி பிரச்னைகளுக்குள்ளாகிறது. அதை அவன் எப்படி எதிர்கொண்டு மீள்கிறான் என்பதே கதை. ஓசிடி உள்ள அதிகம் பேசாத ஆள். அவனுக்கும் காதல் வருகிறது. அவனை மணக்க பெண் சம்மதிக்கிறாள். ஆனால் அவளது காதல் மீண்டும் மனதிற்குள் வரும்போது என்னாகிறது? அர்ஜூனை விட்டு கல்யாணப் பெண் தனது முன்னாள் காதலனைத் தேடி செல்கிறாள். இந்த நேரத்தில் அர்ஜூன் கிடைத்த கல்யாண வாழ்க்கையும் கைவிட்டு போகிறது என நொந்துபோகிறான். அந்த மன அழுத்த த்திலிருந்து தப்ப உறவினரான மருத்துவரின் உதவியை நாடுகிறான். அவர் அவனுக்கு இரண்டு ஜோடியின் கதைகளைக் கொடுக்கிறார். அந்த கதைகளை படிக்கிறான். அதில் இறுதிப்பக்கங்கள் இல்லை. அதைத் தேடி மேற்குவங்கம், இமாச்சல் பிரதேசம் என இரு மாநிலங்களுக்கு பயணிக்கிறான். உண்மையை அவன் க...

பெண்களை விபச்சாரத்திற்கு விற்கும் தந்திர இளைஞர் கூட்டத்தை தேடும் போலீஸ்காரர்! 100 - சாம் ஆண்டன்

படம்
  அதர்வா, ஹன்சிகா - 100 படத்தில் -இயக்கம் சாம் ஆண்டன் இயக்குநர் சாம் ஆண்டனின் 100 படத்தில் அதர்வா 100 இயக்கம் சாம் ஆண்டன் அதர்வா, ஹன்சிகா, ராதாரவி, ஆடுகளம் நரேன், யோகிபாபு களத்தில் வேலை செய்ய நினைக்கும் நாயகனை கட்டுப்பாட்டு அறையில் உட்கார வைத்தால் என்னாகும் என்பதுதான் கதை.   காவல்துறையில் வேலை பார்க்க நினைக்கும் நாயகனுக்கு கிடைக்கும் வேலை என்னமோ கட்டுப்பாட்டு அறையில் அழைப்புகளை எடுத்து பேசுவதுதான். அந்த அழைப்புகளை வைத்து அவர் களத்தில் ரகசியமாக இறங்கி பெண்களை விபச்சாரத்தில் இறக்கும் இளைஞர் கூட்டத்தை பிடித்து, குற்றவாளியை கொல்கிறார். படம் தொடக்கம் முதலே ஆட்கள் காணாமல் போய் பிறகு கொலை செய்யப்பட்டு அந்த வழக்கு முடிந்ததாக காவல்நிலையத்தில் முடித்துவைக்கப்படும் காட்சியோடு தொடங்குகிறது. இயக்குநர் சாம் ஆண்டன், படத்தில் பெண்களை கடத்தி அதை காதல் போல நாடகமாடி அவர்களை விபச்சாரத்தில் தள்ளுவதை விரிவாக விளக்கியிருக்கிறார். இந்த கதையில் கட்டுப்பாட்டு அறை, அதன் முக்கியத்துவத்தைப் பேசியிருக்கிறார்கள். அதுதானே படத்தின் தலைப்பு. படத்தில் வரும் காதலை வெட்டி எடுத்துவிட்டால் எந்த சேதாரமும...

வைரம் திருடிய சிறுமியைக் காக்க ஒன்று கூடும் பெண்கள் படை - ஹார்லி குயின் பேர்ட்ஸ் ஆப் பிரே - மார்கட் ராபி

படம்
  ஹார்லி குயின் – பேர்ட்ஸ் ஆப் பிரே தயாரிப்பு – நடிப்பு – மார்கட் ராபி தமிழ் டப் – ரசிகர்களின் டப்பிங்   இன்று குறிப்பிட்ட காமிக்ஸ் பாத்திரம் ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அதில் நடித்து புகழும் கிடைத்தால், பிறகு அந்த நடிகர் தானே தயாரிப்பாளராக அதே பாத்திரத்தை மேம்படுத்தி நடிக்கத் தொடங்கிவிடுகிறார். இதுதான் இப்போதைய ஆங்கிலப் படங்களின் டிரெண்ட். மார்வெல்லில் ரியான் ரெனால்ட்ஸ் அப்படித்தான் நடித்து வருகிறார். ஹார்லி குயின் படத்தில் மார்கட் ராபி தானே தயாரித்து கதாநாயகியாக இந்த படத்தில் நடித்துள்ளார். கதையில் பெரிய திருப்பம் என்று ஏதும் கிடையாது. படத்தில் ஹார்லியை முட்டாள் கோமாளியான ஜோக்கர், தன் வீட்டிலிருந்து வெளியேற்றி விடுகிறான். இதனால் மனமுடைந்து போன ஹார்ட்லி, டாக் என்பவரின் வீட்டில் அமைதியாக மறைந்து வாழ்கிறாள். மேலும் ஜோக்கரின் மீதுள்ள காதலை மறக்க முடியாமல் தவிக்கிறாள். அதேசமயம், பார், பப் என சென்று அங்கிருப்பவர்களை எப்போதும் போல வம்புக்கு இழுக்கிறாள். இப்படியிருக்கும்   வாழ்வில்தான் சிறு திருட்டுகளை செய்யும் சிறுமி ஒருத்தி வருகிறாள். இவள் எதேச்சையாக பிக்பாக்கெட் ...