இடுகைகள்

ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காந்தியை எளிமையாக அறிந்துகொள்ள உதவும் ஆங்கில நூல் - காந்தி எ ஷார்ட் இன்ட்ரொடக்‌ஷன் - ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ்

படம்
  காந்தி ஒரு சுருக்கமான அறிமுகம் ஆக்ஸ்ஃபோர்ட் பிரஸ்  நூல் மொத்தம் 152 பக்கங்களைக் கொண்டது. இதில் காந்தியைப் பற்றி நாம் என்னென்ன தேவையோ  அவற்றை சுருக்கமாக அறிந்துகொள்ள முடியும். காந்தி நிறைய எழுதியிருக்கிறார். அவரைப் பற்றி வெறும் 150 பக்கங்களிலேயே அறிய முடியுமா என்ற அவநம்பிக்கையோடு படித்தாலும் இறுதியில் நாம் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம் என்பதே உண்மை.  நூலில் காந்தியன் அகிம்சை, சத்தியாகிரகம், அவரின் ஆன்மிக அனுபவம், நிர்வாண சோதனை, அரசுக்கு எதிரான போராட்டம், நேர்மை என நிறைய விஷயங்களைப் பற்றி பேசியிருக்கிறார்கள். அனைத்தும் சுருக்கமாக என்றாலும் சில இடங்களைப் படித்துப் புரிந்துகொள்வது சற்று கடினம்தான். அந்தளவு அவரின் கொள்கைகளை ஆங்கிலத்தில் சுருக்கியிருக்கிறார்கள்.  காந்தி ஒரு சுருக்கமாக அறிமுகம் என்பது தலைப்பிற்கு ஏற்றபடி காந்தியின் அடிப்படைகளை எளிமையாக தெரிந்துகொள்ள உதவுகிறது. ஆனால் இதில் அவரின் ஆன்மிக அனுபவங்கள் பற்றிய பகுதி சற்று புரிந்துகொள்ள கடினமானவை. அதுதவிர மற்ற விஷயங்கள் சிறப்பாக எழுதப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளன.  கோமாளிமேடை டீம்  image pintere...