திருமணமாகாமல் நூறு குழந்தைகளுக்கு தந்தையானவர்!
திருமணமாகாமல் நூறு குழந்தைகளுக்கு தந்தையானவர்! ஒன் இந்தியா, எஸ்எஸ் மியூசிக், பிகைண்ட்வுட்ஸ் யூட்யூப் தளங்கள் போல சல்லித்தனமாக தலைப்பு அமைந்துவிட்டது. அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். டெலிகிராமின் நிறுவனர், இயக்குநர் பாவெல் துரோவ், பிரான்சில் கைதாகி விடுவிக்கப்பட்டிருக்கிறார். டெலிகிராமில் பாலுறவு வீடியோக்கள் பகிரப்படுவது, தவறான சட்டவிரோதப் பயன்பாடு ஆகியவை கைதுக்கான காரணம் என கூறப்படுகிறது. உண்மையில் ஒரு ஆப்பை குறிப்பிட்ட நோக்கத்திற்காக ஒருவர் தொடங்குகிறார். ஆனால், அதன் பயன்பாடு நாளடைவில் கட்டற்றதாக கட்டுப்படுத்த முடியாததாக மாறுகிறது. இந்த செயல்பாடு, அதைப் பயன்படுத்தும் மக்களின் கைகளில் உள்ளது. இதற்காக எதற்காக ஆப் தொடங்கினாய், உன்னால்தான் நாட்டில் குற்றங்கள் அதிகரிக்கிறது என ஆப் உரிமையாளரை கைது செய்வது சின்னப்பிள்ளைத்தனமாக உள்ளது அல்லவா? அப்படி பார்த்தால் கோடிங் எழுதுகிறவர்கள் அனைவரும் தேசதுரோக குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்படுவார்கள். எதிர்காலத்தில் இதுவும் சாத்தியம்தான். 1984ஆம் ஆண்டு ரஷ்யாவில் பிறந்து, இத்தாலியில் வளர்ந்தவர் துரோவ். இன்றை...