இடுகைகள்

கவர்ச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கவர்ச்சியும் ஈர்ப்பும் கொண்ட பெண் இணையை எப்படி விவரிப்பது?

 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஆண், பெண் இருவருக்குமான காதல், பெற்றோர் பிள்ளைகள் மேல் கொண்டுள்ள பாசம் என இரண்டும் வேறுபட்டதா? பெற்றோர், பிள்ளைகள் மீது கொண்டுள்ள பாசம் என்பது ஆண், பெண் இருவருக்கும் உள்ள காதலை விட முந்தையது. மனிதர்களை விட விலங்குகள், தங்கள் குட்டிகளை வளர்ப்பதில் அதிக தீவிரம் கொண்டவை. அதில் இடையூறை விரும்புவதில்லை. ஏற்பதில்லை. அந்தவகையில், இரு பாலினத்தவரின் காதலை, பெற்றோராக பிள்ளை மீது காட்டும் பாச உறவோடு ஒப்புமைபடுத்த முடியாது. இரண்டுமே செயல்பாடு, அணுகுமுறை இரண்டிலுமே வேறுபட்டது.  ஆண், பெண் என இருபாலினத்தவருக்கான காதல் பரிணாம வளர்ச்சிக்கு உதவுகிறதா? காதலிப்பவர்கள் , அந்த காதலை உறவைக் காத்துக்கொள்ள முயல்வார்கள். பிள்ளைகள் பிறப்பது, அவர்களை வளர்ப்பது, அன்பை வெளிக்காட்டுவது ஆகியவை நடைபெறுகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களுக்கு பெற்றோரின் அன்பு, பாதுகாப்பு, பொருளாதார பலம் ஆகியவை கிடைக்கிறது. அதை வைத்து அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ளலாம். தாய், தந்தையினரின் அன்பு, நேசம் பிள்ளைகளுக்கு மனரீதியாகவும் மாற்றத்தை உருவாக்குகிறது.  காதலில் வீழ்வது என்பது ...

பூச்சிமருந்து கண்டுபிடிக்கும் பேராசிரியர் நகரத்தில் சக்திவாய்ந்தவர்களை நண்பனுக்காக பலியெடுக்கும் கதை!

படம்
 ஆயுதம் தெலுங்கு ராஜசேகர், குர்லின் சோப்ரா, சங்கீதா பேராசிரியர் சித்தார்த்தன், தனது ஆருயிர் நண்பனைக் கொன்ற மூன்று அதிகார பலம் பெற்றவர்களை நேரம் குறித்து சவால்விட்டு கொல்கிறான். கொல்வதில் எப்போதும் போல பெரிய சுவாரசியம் ஏதுமில்லை. ஆனால், என்ன காரணத்திற்காக சித்தார்த்தனின் நண்பன் இறந்தான் என்பதே ஒரே சுவாரசியம். டாக்டர் ராஜசேகரின் படம். படம் முழுக்க அவரின் ஆதிக்கம்தான். குர்லின் சோப்ராவுக்கு பக்கத்து ஊர் தலைவரின் மகள் வேடம். நடிப்பிற்கு வாய்ப்பில்லை. காட்சிகளில் கவர்ச்சி காட்டி பாடல்களை பார்க்கும்படி செய்கிறார். சொந்த மாமன் மகள் சங்கீதாவுக்கும் இதே வேலைதான். அடிக்கடி திகைப்புக்கு உள்ளாக்கும்படி கவர்ச்சிப் பாடல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. வந்தே மாதரம் ஶ்ரீனிவாஸி்ன் இசை கேட்கும்படி இருக்கிறது. படத்தில் சித்தார்த்தன் பாத்திரம், விவசாய மருந்துப்பொருள் கண்டுபிடிப்பாளர். படத்தின் தொடக்க காட்சியில், தொழிலதிபரின் வீட்டில் அவரது மகனுக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது. அவர்கள் கொடூரமானவர்கள் என்பதைக் காட்ட வேலைக்கார சிறுமியை வல்லுறவு செய்கிறார்கள். அதுவும் மூன்றுபேர். எதற்கு இதுமாதிரியான ...

தாயை மீட்பதை விட்டுவிட்டு கவர்ச்சிப் பெண்கள் பக்கம் மடைமாறும் நாயகன்!

படம்
    வென்ஜென்ஸ் ஆஃப் ஹெவன்லி டீமன் மங்காகோ.காம் 70 க்கும் கூடுதலாக அத்தியாயங்கள் மு குடும்பத்தைச் சேர்ந்தவன் நாயகன் மு. இவனுக்கு தற்காப்புக்கலை கற்றுக்கொள்ள ரத்தம் ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறி அடித்து உதைத்து தற்காப்புக்கலை கற்கும் உடல் பாகங்களை சிதைத்து அனுப்புகிறார்கள். இவனது சகோதரன்தான் அதை செய்கிறான். குற்றுயிராக கிடப்பவனை வயதான மாஸ்டர் ஒருவர் எடுத்து உயிரைக் காப்பாற்றி, சில பயிற்சிகளை சொல்லிக் கொடுக்கிறார். அப்போதுதான் நாயகனுக்கு ஹெவன்லி டீமன் இனக்குழுவின் ரத்தம் தனக்குள் ஓடுகிறது என தெரியவருகிறது. அவனது குடும்பம் அவனை வெளியே தள்ளிவிட்டது. அவனது அம்மா, அப்பாவின் வீட்டில் சிறைவைக்கப்பட்டிருக்கிறாள். நாயகனுக்கு அம்மாவை மீட்பதுதான் முக்கியம். அவனால் அம்மாவை மீட்க முடிந்ததா, இடையில் சந்தித்த திருடர்கள், ஆகாய நகர தூதர்கள், வெட்டிப்பெருமை பேசும் பணக்கார வாரிசுகள் என நிறையப் பேர்களை நாயகன் மு எதிர்கொண்டு சண்டை போடுகிறான். மங்காகோ.காமில் காமிக்ஸ் படங்களை குறிப்பிட்ட முறையில் வெட்டி ஒட்டி பதிவிடுகிறார்கள். அது அனைத்து காமிக்ஸ் கதைகளுக்கும் பொருத்தமாக இல்லை. சிலசமயங்களில் படங்கள் த...

நண்பர்களை வம்புக்கு இழுத்தால் சினம் கொள்வான் மதகஜராஜா!

படம்
      நண்பர்களை வம்புக்கு இழுத்தால் சினம் கொள்வான் மதகஜராஜா! இயக்கம் சுந்தர் சி இசை விஜய் ஆண்டனி 2025ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம். தலைப்பில் சொன்னது போல, பள்ளி வாத்தியார் ஒருவரின் மகள் கல்யாணத்திற்கு நான்கு நண்பர்கள் வருகிறார்கள். அந்த கல்யாணத்திலேயே மணப்பெண்ணுக்கு பெரிய விருப்பமில்லை. அவள் தனது அப்பாவின் வழி மாமனைக் காதலிக்கிறாள். ஆனால்,திருமணமோ, அம்மாவின் வழி மாமனோடு நடக்க ஏற்பாடு ஆகிறது.அதாவது பகையாக உள்ள இரு குடும்பங்களை திருமணம் இணைக்கிறது. ஆனால், இதில் நம் நாயகன் உள்ளே புகுந்து கல்யாணத்தை காதல் கல்யாணமாக்கி பிரச்னையை சரி செய்கிறார். அடிதடி, பன்ச் வசனங்கள் இன்னபிற அனைத்தும் உண்டு. அனைத்தையும் தாண்டி காமெடி வருவதுதான் படத்தைக் காப்பாற்றுகிறது. படத்தில் அஞ்சலி, வரலட்சுமி என இரு நாயகிகள். இருவருமே கவர்ச்சி நடனம், மார்பகம் தெரிய குனிந்து யோகா செய்வது, இடுப்பைத் தொட்டவுடன் காதல் வருவது, கிணற்றில் நாயகனுடன் ஒன்றாக த்ரீசம்மாக குளிப்பது, கிராமத்து வாய்க்காலில் கிளுகிளு ஆடையில் குளிப்பது என  என்னென்னமோ செய்கிறார்கள். படத்தின் கடைசியில் சதா வேறு பாடல் ஒன்றுக்கு வந்த...

அத்தை மகளை மணம் செய்ய கேபிள் டிவி கம்பெனியைத் தொடங்கும் நாயகனின் கனவு!

படம்
                காஞ்சன மாலா கேபிள் டிவி நெட்வொர்க் ஶ்ரீகாந்த், லட்சுமி ராய்,தேஜ், சுனில், கிருஷ்ண பகவான் வசதியான பணக்கார குடும்பம். பல்லாண்டுகளுக்கு முன்னர், அவர்களின் ஒரே பெண் பிள்ளை காணாமல் தொலைந்து போய்விடுகிறாள். அவள் பெயர்தான் காஞ்சன மாலா. அந்தப்பெண்ணை நேசிக்கும் தாய் மாமன், அவளது பெயரில் கேபிள் டிவி சர்வீஸ் கொடுப்பதைத் தொடங்கி ரூபர்ட் முர்டோக் லெவலுக்கு வளர நினைக்கிறான். இந்த நிலையில் காணாமல் போன அத்தைப் பெண் திரும்ப கிராமத்திற்கு வருகிறாள். நாயகனுக்கும் அவளுக்கும் காதல் தீ பற்றியதா, தொழில் வளர்ந்ததா என்பதே கதை. முழுக்க கிராமத்தில் எடுத்திருக்கிறார்கள். படத்தில் நாயகனும், அவனது குழுவும், கிராமத்தினரும் மட்டுமே படத்திற்கு பொருத்தமாக தெரிகிறார்கள். மற்றவர்கள் அனைவருமே குறிப்பாக நாயகி, அவளது தோழி, அவர்களது ஆடைகள், இறுதியாக வரும் மோசடி வில்லன் என அனைவருமே செயற்கையாக தெரிகிறார்கள். படத்தில் வில்லன் கிருஷ்ண பகவான். அவரது பாத்திரம் பொம்பளை சோக்கு பேர்வழி. இதனாலோ என்னமோ, அவரது ஒன்லைன் கவுன்டர்களில் உள்ள சுவாரசியம் பாத்திரத்தின் தன்மையில் இல்லை. டிவி...

ராயலசீமா காரப்பொடியை லெக்பீஸில் தடவி சாப்பிட்டால்... அல்லரே அல்லரி - வேணு, நரேஷ், பார்வதி மெல்டன், மல்லிகா கபூர்

படம்
  அல்லரே அல்லரி  வேணு தொட்டம்பள்ளி, அல்லரி நரேஷ், மல்லிகா கபூர், பார்வதி ஷெல்டன் வேணு சிறுவயதில் இருக்கும்போது அவரது அத்தை. தனது கணவரைக் கொன்ற இருவரைக் கொன்றுவிட்டு சிறைக்கு செல்கிறார். கொலை செய்யவேண்டிய ஆட்களில் ஒருவர் மட்டுமே மிச்சமிருக்கிறார். அவரை தனது தம்பி மகனை வைத்து கொன்றுவிட்டு, அதற்கு பிரதியுபகாரமாக தனது மகளை திருமணம் செய்து கொடுப்பது அவரது திட்டம். அது நிறைவேறியதா இல்லையா என்பதே கதை.  இப்படி கேட்டாலே நிறைவேறாது என்பதுதான் விஷயம். அதேதான். வேணு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக இருக்கிறார். அங்கு வரும் இளம்பெண் வயிற்றில் கருவோடு இருக்கிறாள். தற்கொலைக்கு முயன்றவளை அரும்பாடுபட்டு காப்பாற்றுகிறார். அவளது கர்ப்பத்திற்கு காரணம் யார் என தெரிந்துகொண்டு அவனைக் கூட்டிவந்து கல்யாணம் செய்து வைக்கிறார். இவரது தலையீட்டால் இன்னொரு பெண்ணின் திருமணம் நின்றுபோகிறது. அந்த பெண் தன் கல்யாணம் நின்றதால் செலவு செய்த ஏழு லட்ச ரூபாயைக் கேட்கிறார். நாயகன் மாதசம்பளம் வாங்கும் மருத்துவர் என்பதால், தான் கல்யாணம் செய்து வைத்த ஆட்களிடமே போய் காசு கேட்கிறார். ஆனால் அவர்களோ காசு தர முடியாது எ...

சாக்சியின் கவர்ச்சி தாராளத்தில் களைகட்டும் யுவராஜூ!

படம்
  யுவராஜூ   மகேஷ்பாபு பால் வடியும் முகத்துடன் பிளேபாயாக நடித்துள்ள படம். படத்தை யாருக்காக பார்ப்பது என்றால், தயங்கவே வேண்டாம். சாக்சி சிவானந்தின் கவர்ச்சிக்காக பார்க்கலாம். மூன்று பாடல்கள் அவருக்கென இருக்கிறது. ஒரு பாடல் சிம்ரனுக்காக. இன்னொரு பாடல் நாயகனின் அறிமுகம். மனதை திருடிவிட்டாய் படத்தில் பிரபுதேவா, கௌசல்யாவின் அறைக்கு குடிபோதையில் சென்று தூங்கும் பெண்ணை   கசகசா செய்வாரில்லையா அதே போல்தான் படத்தில் ட்விஸ்ட் உள்ளது. இதில் அந்த சமாச்சாரத்தில் ஆண் குழந்தையைப் பெற்று வளர்த்தே வருகிறார் சிம்ரன். இந்த உண்மையை தெரிந்துகொண்டு மகேஷ்பாபு தனது கல்யாணத்தை நிறுத்தி, சிம்ரனோடு சேர்கிறார். ஆனால், அதற்குள் சாக்சியோடு மழை நடனம் ஆடி, நிச்சயதார்த்தத்தின் போது முதுகு, இடுப்பு, உதடு என முத்தம் கொடுத்து பலவித இளமைக் குறும்புகளை செய்துவிடுகிறார். அதற்குப்பிறகுதான் உண்மை தெரிகிறது. யாருக்கு? முதலில் மகேஷூக்கு பிறகு சாக்சிக்கு. அப்படியும் கூட சிம்ரனுக்கு ரத்தவாந்தி ஏற்பாடு செய்திருக்கிறார். இயக்குநர். ஆனாலும் கூட இறுதியில் சாக்சிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மகேஷோடு வாழத்தான். வேறு எத...

மேக்ஸிம் டாப் 100 பெண்கள் - சில பெண்களைப் பார்ப்போம். ...

படம்
  மேக்ஸிம் டாப் 100 பெண்கள் மேக்ஸிம் நூறு பெண்களை பட்டியலிட்டு அவர்கள் திரைப்படம், மாடலிங் துறையில் சாதித்தவர்கள் என கூறியுள்ளது. அனைத்து பெண்களிலும் உள்ள ஒற்றுமை, அவர்களின் கட்டழகு என வெளிப்படையாகவே இதழ் கூறிவிட்டதால். புகைப்படத்தில் காட்டும் தெறமையை மட்டும் பாருங்கள். அவர்கள் பற்றிய சிறு அறிமுகத்தை நாங்கள் எழுதுகிறோம். மார்கட் ராபி மார்கட் ராபி சூசைட் ஸ்குவாட் படத்தில் வந்த வேடிக்கையான ஹார்லி குயின்தான், மார்கட்டின் சிறந்த வெகுஜன அடையாளம். கடந்த ஆண்டு பாபிலோன் படத்தில் நெல்லி லாராய் பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு விருது கிடைக்கவில்லை. ஆனாலும் என்ன நடிப்பு, வசீகரம் என இரண்டிலும் சளைத்தவர் கிடையாது ராபி. நடிப்பென்றால் அவர் நடித்த மார்டின் ஸ்கார்சியின் தி வோல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் படத்தைப் பார்க்கலாம். தற்போது பார்பி படத்தில் ரியான் கோஸ்லிங் ஜோடியாக நடித்திருக்கிறார். சமரா வேவிங் சமரா வேவிங் மேட்ரிக்ஸ் படத்தில் நடித்த ஹியூகோ வேவிங்கின் உறவினர்.உறவெல்லாம் தாண்டி சினிமா என்று வரும்போது தீவிரமாக இயங்கும் ஆள்.   ரெடி ஆர் நாட் என்ற திரில்லர் படத்தில் நடித்து பார...

உடைகளை விற்க செக்ஸ் கூட ஒரு மகத்தான கருவி- கால்வின் கிளைன் உருவாக்கிய விளம்பரங்கள்

படம்
  மார்க் வால்பெர்க் - கேட் மோஸ் விளம்பரம் புகைப்படக்காரர் ஹெர்ப் ரிட்ஸ் விளம்பர இயக்குநர் மடோனா பேட்ஜர்  அமெரிக்காவில் வணிக ரீதியாகவும் கலாசா ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை பிறர் ஏற்றுக் கொள்வது கடினம். அந்தளவு செக்ஸ் சம்பந்தமான விஷயங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் தாராள இயல்பில் வேகமாக முன்னேறி வருகின்றனர். துணிக்கடைகளில் ஆண், பெண் என மொழு மொழு பொம்மைகளை வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். சிலர் அதை வெறியுடன் வேட்கையுடன் பார்த்துக்கொண்டே கடைகளை கடப்பார்கள். அப்படியான வசீகரத்துடன் பார்க்க படு கச்சிதமான உடல் அமைப்புடன் ஆண், பெண் பொம்மைகள் செய்யப்பட்டிருக்கும். உண்மையில் இதைப் பார்ப்பவர்களுக்கு மனதில் என்ன தோன்றும் என நினைத்து பார்த்திருக்கிறீர்களா? சிக்ஸ்பேக் உடல் கொண்ட ஆண், ஆணைப் போன்ற உடல் கொண்ட பெண் என இருவரும் வரும் ஆடை விளம்பரங்கள் தொடக்கத்தில் இருந்தே இளைஞர்களை கவர்ந்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய ஆண், பெண் மாடல்களை வைத்து எடுக்கும் விளம்பரங்கள் பிரபலம்.   தொண்ணூறுகளில் விளம்பர ஏஜென்சி வைத்து நடத்திய மடோனா பேட்ஜர், புகைப்படக்காரர் ஹெர்ப் ரிட்ஸ...