இடுகைகள்

மேட்ரிக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குளிர்பதனப்பெட்டி கண்டுபிடிப்பு, ஹைட்ரஜன் பிணைப்பில்லாத நீர், மேட்ரிக்ஸ் உலகம், உடலின் மிகப்பெரும் மூலக்கூறு - மிஸ்டர் ரோனி

படம்
            1930ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர், குறிப்பிட்ட சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார். அந்த சாதனத்தின் பெயர் என்ன? குளிர்பதனப்பெட்டி (தமிழாக்க நன்றி- மனோபாலா நாயுடு). இதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லியோ ஸில்லார்ட் என இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தனர். இப்பெட்டி, தெர்மோடைனமிக்ஸ் விதிகளின்படி இயங்குகிறது. 1920ஆம் ஆண்டு குளிர்பதனப்பெட்டியின் சீல் உடைந்து நச்சு வாயு வெளியாகி, ஒரு குடும்பமே இறந்துபோனது. அந்த காலத்தில், அதில் நச்சுவாயுவின் பயன்பாடு பரவலாக இருந்தது.   குளிர்பதனப்பெட்டியில் வெப்பம் பெறப்பட்டு, மூடிய குளிர்ந்த இடத்தில் செலுத்தப்பட்டு குளிர் உருவாக்கப்படுகிறது. விபத்து ஏற்பட்ட காரணத்தால், ஆல்பர்ட், குளிர்பதனப்பெட்டியில் நகரக்கூடிய பாகமே இருக்கக்கூடாது. குளிர்ச்சி ஏற்படும் பொருள் தொடர்ச்சியான அழுத்தத்தில் இருக்கவேண்டும் என நினைத்தார்.  அவர் உருவாக்கிய வடிவமைப்பு சற்று சிக்கலானது. பரவலாக கவனம் பெறவில்லை. ஆனாலும் கூட வெப்பத்தால் இயங்கும் பல்வேறு சாதனங்கள் ஆல்பர்டின் ஆய்வால் பயன்பெற்றன. 2 வினோதமான கணினி உலகை அட...

சினிமாவில் சாதித்த மாற்றுப்பாலின பெண்கள்! - வாசோவ்ஸ்கிஸ்!

படம்
மாற்றுப் பாலின சாதனையாளர்கள் லில்லி - லானா வாசோவ்ஸ்கி 21 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற திரைப்பட பெண் இயக்குநர்கள். எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை  கொண்டவர்களாக இருந்தனர். தி மேட்ரிக்ஸ், வி ஃபார் வென்டெட்டா, க்ளவுட் அட்லஸ்,  சென்ஸ் எய்ட் என இவர்கள் உருவாக்கிய படைப்புகள் இவர்களை யார் என கேட்க வைத்தன. அமெரிக்காவில் பிறந்த இரு பெண்கள்தான் தி மேட்ரிக்ஸ் என்ற திரைப்பட இயக்குநர்கள் என்றால் நம்புவீர்களா? கிராபிக் நாவல், காமிக்ஸ் ஆகியவற்றிலிருந்து ஊக்கம் பெற்று படங்களை உருவாக்கினர்; உருவாக்கி வருகின்றனர். வாசோவ்ஸ்கி சகோதரிகள் என்ற  பெயரில் அழைக்கப்படுகின்றனர். மாற்றுப் பாலினத்தவராக தம்மை அழைத்துக் கொண்ட பெண்கள் இவர்கள். தற்போது நெட்பிளிக்சில் சென்ஸ் 8 என்ற தொடரை உருவாக்கி வருகின்றனர். இத்தொடர் மாற்றுப்பாலினத்தவர் சார்ந்த கதை. ஆங்கில கவிஞர் எழுத்தாளரான ரொனால்டு டோல்க்கியனின் தாக்கம் பெற்றவர்கள் இவர்கள். இவர்தான் ஹாபிட், லார்டு ஆப் தி ரிங்க்ஸ் ஆகிய கதைகளை எழுதியவர். நாங்கள் சினிமாவை புரிந்துகொள்ளக்கூடியதாக கணிக்க கூடியதாக உருவாக்குவதில்லை. அதன...