இடுகைகள்

சீனா ஒயிட் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சைக்கோடிராமா, டிஹெச்சி, சீனா ஒயிட் ஆபத்து

படம்
      தாலமைடு மருந்தால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன? அறுபதுகளில் தாலமைடு, குமட்டலைக் கட்டுப்படுத்தும் மருந்து என விளம்பரம் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்தது, இதை சாப்பிட்ட கர்ப்பிணிகளுக்கு குழந்தைகள் கை, கால்களின்றி ஊனமாக பிறந்தன. சில குழந்தைகளுக்கோ கண் பார்வை, செவித்திறன் பாதிப்பு, இதயத்தில் சிக்கல்கள், குடல் பிரச்னைகள் ஆகிய சிக்கல்கள் இருந்தன. எனவே, புகார்கள் குவிய அமெரிக்க அரசு தாலமைடு மருந்து விற்பனையை நிறுத்தியது. விதிகளை கடுமையாக்கியது. டிசைனர் ட்ரக்ஸ் என்றால் என்ன? பெனடைல், மெப்ரிடைன் ஆகிய போதை மருந்துகளை ஒத்த போதைப்பொருட்களின் தயாரிப்பை டிசைனர் ட்ரக்ஸ் என்று கூறுகிறார்கள். பெனடைலின் வேதிப்பொருளைக் கொண்டதுதான் சீனா வொயிட். மார்பினை விட மூன்றாயிரம் மடங்கு அதிக திறன் கொண்டது. குறைந்தளவு பயன்படுத்தி வந்தாலே ஒருவருக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இத்தகையை போதைப்பொருட்களின் அதீத பயன்பாடு சார்ந்த மரணங்கள் அனேகம் உண்டு. டெட்ராஹைட்ரோகன்னபைனால் வேதிப்பொருள், எத்தனை நாட்கள் ஒருவரின் உடலில் இருக்கும்? கஞ்சாவின்  அடிப்படை மூல வேதிப்பொருள் டிஹெச்...