இடுகைகள்

உச்சம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்கள் சுய இன்பம் செய்வதை, உறவில் உச்சம் அடைவதை மைய நீரோட்ட திரைப்படங்கள் காட்ட மறுக்கின்றன!

படம்
    தர்சனா ஶ்ரீதர் மினி விஸ்கான்சின் பல்கலைக்கழக துணை பேராசிரியர் மென் ஆபாச படங்களை ஆராய்ச்சி செய்ய எப்படி எண்ணம் வந்தது? எம்பில் படிக்கும்போது, இளைஞர்கள் எப்படி பாலியல் கல்வியை புரிந்துகொள்கிறார்கள் என்று அறிய நினைத்தேன். இதைப்பற்றி சிலரிடம் பேசியபோது, அவர்கள் மென் ஆபாச படங்களைப் பார்த்து கற்றுக்கொண்டதாக கூறினர். சென்னையிலுள்ள கோடம்பாக்கத்தில் மென் ஆபாசப்படங்களை தயாரிக்கிறார்கள் என்று தகவல் கிடைத்தது. ஐந்து மாதங்கள் காத்திருந்தபோது, அத்துறை சார்ந்த ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அப்படங்களின் வளர்ச்சி, வீழ்ச்சி பற்றி கூறுங்கள். தொண்ணூறு தொடங்கி இரண்டாயிரம் வரையிலான காலகட்டத்தில் மைய நீரோட்ட திரைப்படங்கள் பெரிய இயக்குநர்கள் இயக்கினாலும் வெற்றி பெறவில்லை. படுதோல்வியை தழுவின. அப்போது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இணைந்து குறைந்த பட்ஜெட்டில் மென் ஆபாச படங்களை எடுக்கத் தொடங்கினர். இந்த படங்களில் கதை ஒரே மாதிரிதான் இருக்கும். மொத்தம் பதினைந்து பெண்கள் இப்படங்களில் நடித்தனர். இதில் புகழ்பெற்றவர் நடிகை ஷகீலா. இவருக்கு படத்திற்கான சம்பளம் என்று பேசாமல், தினசரி சம்பளம் பேசப்பட்டது. ஒரு...

கழுத்தை நெரித்தபடியே உடலுறவு கொள்வது பாலியல் வன்முறை - சில பெண்களின் அனுபவங்கள்...

படம்
  தற்போது, இணையம் பெரும் சக்தியுடன் இயங்கி வருகிறது. இதன் வழியாக மக்கள் ஆபாச படங்கள் பார்ப்பது சகஜமாகிவிட்டது. உண்மையாக ஒரு பெண்ணுடன் நேரடியாக உடலுறவு என்ற நிலையை சாதிக்கும் முன்னரே, ஆண் கற்பனையில் பலநூறுமணி நேரம்,   உடலுறவு கொண்டுவிடுகிறார். இந்த அதீத நிலையை ஆபாச படங்கள் ஆதரிக்கின்றன. ஊக்கம் கொடுக்கின்றன.   ஆபாச படங்கள் பெரும்பாலும் ஆண்களுக்கான கண்ணோட்டத்தில் உருவாக்கப்படுகின்றன. இதனால், அதில் ஆண்களின் முகம் காட்டப்படாவிட்டாலும் யாரும் பெரிதாக கவலைப்படுவது கிடையாது. ஆனால் பெண்ணின் முகம் நிச்சயம் தேவை. இப்படங்களில் பெண் ஏறத்தாழ ஒரு பொருள் போலவே கையாளப்படுகிறாள். பலமணிநேரங்கள், இப்படி ஆபாச படங்களைப் பார்க்கும் ஆண்கள் நிஜவாழ்க்கையில் ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்போது அவர்கள் செயல்கள் பாலியல் வன்முறை கொண்டதாக மாறிவிடுகிறது. அதாவது, கழுத்தை நெரித்தல், முகத்தில் எச்சில் துப்புதல், கைகளை துணி கயிறால் கட்டுவது என சில செயல்களை வேட்கையுடன் செய்கிறார்கள். உண்மையில் இதை பெண்கள் விரும்புகிறார்களா என்பதைப் பார்ப்போம். சாரா, 42 விளம்பரப்படத்துறை அண்மையில், சில ஆண்டுகளாக அறிம...

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!

படம்
  செக்ஸ் பிரச்னை பெண்களுக்கும் உண்டு! எம்எக்ஸ் பிளேயரில் இந்தி வெப் சீரிஸ் ஒன்று வெளியானது. அதில் விந்து முந்தும் பிரச்னை கொண்ட இளைஞன் ஒருவன் இருப்பான். அவனுடன் உறவு கொண்ட பெண்தோழி,அவனை ஒடைஞ்ச குழாய் என கிண்டல் செய்வாள். இணையத்தில் அவளின் உடலுறவு பற்றிய கிண்டல் பதிவு பகிரப்பட்டு விந்து முந்துதல் பிரச்னை கொண்ட இளைஞனே, அதைப் பார்த்து பதறுவான். இந்த தொடரில் இளைஞனின் பிரச்னையை   காமெடியாக சொல்ல முயன்றாலும், இரண்டு விஷயங்களை நீங்கள் கவனிக்கலாம். உண்மையில் அது தீவிரமான பிரச்னை. உயிரியல் ரீதியாக ஆணும், பெண்ணும் இணைந்திருக்க உடலுறவு முக்கியமான காரணம். உடலுறவு கொண்ட பெண் எந்த மனநிலையில் ஒடைஞ்ச குழாய் என்று இளைஞனை பலரும் பார்க்கும் இணையத்தில் பதிவிட்டு திட்டியிருப்பாள்? உண்மையில், பரஸ்பர ஒத்துழைப்புடன் ஈடுபட்ட உடலுறவில் அவளுக்கு மகிழ்ச்சி கிடைக்கவில்லை. ‘’ஆணுக்கு உச்சம் எட்டும் நேரம் 5.5 நிமிடங்கள் என்றால் பெண்ணுக்கு 17 நிமிடங்கள் தேவையாக உள்ளது’’ என யூட்யூப்பில் ஆபாசப்பட நடிகர்   ஜானி சின்ஸ் கூறியிருக்கிறார். வெப் சீரிஸில் கூட ஆணை விந்து முந்துதலுக்கு கிண்டல் செய்பவர்கள்,அந்...

செக்ஸ் இன்பம் பாலூட்டிகளில் பெண்களுக்கு மட்டும்தானா?

படம்
SF ஏன்?எதற்கு? எப்படி? மிஸ்டர் ரோனி மனித இனத்தில் பெண்களுக்கு மட்டும் செக்ஸ் இன்பம் உண்டா? பெண் உயிரிகளுக்கு கிளிட்டோரிஸ் உண்டு. ஆனால் விலங்கினத்தில் உடலுறவு என்பது மிகுந்த வன்முறையானது. பெண்களுக்கு ஏற்படும் உடலுறவு இன்பம் என்பது நாம் ஆய்வு செய்து கண்டறிந்தது. நாம் பிற விலங்குகளில் இதனை குறைந்த அளவே ஆய்வுகள் செய்திருக்கிறோம்.  பாம்புகள், முதலைகள் போன்றவற்றின் செக்ஸ் முறைகள் வேறுவகையானது. பாலூட்டிகளில் பெரும்பாலான விலங்களின் கருமுட்டையில் விந்தணுக்களை சேர்க்கும் பணியை ஆண்கள் செய்கின்றன. ஆனால் இது மகிழ்ச்சியூட்டும் செயலா என்பது குறித்த ஆராய்ச்சிகள் குறைவு.  செக்ஸில் தசரதனாக, கிருஷ்ணனாக சாதிப்பவை ஆஸ்திரேலியாவில் உள்ள ஆன்டெக்னியஸ் ஸ்டூவர்டி. எலி சைசில் உள்ள இவை வயிற்றில் பை கொண்ட பாலூட்டி இனம். ஆண்டு முழுவதும் இருவாரங்களுக்கு ஒருமுறை குஷியாக செக்ஸூக்கு சூட்டிகையாக ரெடியாகி விடும் காதல் மன்னன் இது.  நன்றி: சயின்ஸ் ஃபோகஸ்