இடுகைகள்

அரசியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்!

படம்
  பெருமை தேசப்பற்று ஒற்றுமை - அரசியலாகும் எழுத்துரு சீர்திருத்தங்கள்! ஒரு அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தால், அதற்கு முன்னே ஆட்சியில் இருந்தவர்கள் செய்த கட்டுமானப்பணிகளை சிதைப்பது, பெயரை மாற்றுவது, செயல்பாட்டில் உள்ளவற்றை அழிப்பது என நிறைய குதர்க்கங்களை காழ்ப்புணர்ச்சியால் செய்வார்கள். தமிழ்நாட்டில் சட்டமன்ற கட்டிடம் அப்படித்தான் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டது. அதன் பின்னே உள்ளது தனிமனிதர் ஒருவரின் அற்பமான ஆணவமும், காழ்ப்புணர்ச்சியும் மட்டுமே.   அந்த வகையில் அமெரிக்காவில் அரசு பயன்படுத்தும் எழுத்துரு மாற்றப்படுவதாக அரசு செயலர் மார்கோ ரூபியோ அறிவித்துள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர் பைடன் ஆட்சியில், 2023ஆம் ஆண்டு 'சன்ஸ் ஷெரிஃப் காலிப்ரி' என்ற எழுத்துரு அரசு ஆவணங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்த எழுத்துரு, பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்களுக்கும் உதவுவதாக இருந்தது. இப்போது, தொழிலதிபர் ட்ரம்ப் அதிபராகி, குடியரசுக் கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதால் வெள்ளையர்களுக்கு ஆதரவான இனவெறிப்போக்கு அதிகரித்துள்ளது. கருப்பினத்தவர்களின் வரலாற்றை மாற்றி பெர...

டாடா - தேசத்தை வளர்ந்த நிறுவனத்தின் கதை - ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன்

 மறுவாசிப்பு நூல்கள் டாடா - நிலையான செல்வம்  ஆங்கிலத்தில் ஆர்எம் லாலா தமிழில் பிஆர் மகாதேவன் கிழக்கு பதிப்பகம் மூல நூல் -கிரியேஷன்ஸ் ஆப் வெல்த் வணிக நூல் டாடா குழுமம், நூறாண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் இயங்கி வருகிறது. அதாவது அதன் குழுமத்தில் உள்ள பல நிறுவனங்கள் நூற்றாண்டுகளாக இந்தியாவில் தொழிலை நடத்தி வருகின்றன. பார்சி இனத்தவர்களே டாடா குழுமத்தின் இயக்குநர்கள், தலைவர்கள்.  365 பக்கங்களைக் கொண்ட இந்த நூலை ஒருவர் வாசிக்கும்போது முதல்முறையிலேயே டாடா குழுமத்தினர் எந்தளவு உயரிய கொள்கை கொண்டு உழைக்கிறார்கள், வணிகம் செய்கிறார்கள் என்ற எண்ணத்திற்கு ஆட்படுவார்கள். நூலை எழுதிய நூலாசிரியர் லாலாவின் நோக்கமும் கூட அதுதான். ஆனால், அவர் டாடா நிறுவனத்தில் வேலையைப் பெற்றுள்ளதும், இந்த நூலுக்கு ரத்தன் டாடா உரை எழுதிக் கொடுத்ததும் நூலை சற்று பின்னுக்கிழுப்பது போல தோன்றுகிறது. இதை நூலை வாசிப்பவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.   ஒரு பத்திரிகையாளராக லாலா நூலை எழுதி இருந்தால் அந்த நூலில் டாடா குழுமத்தில் உள்ள பிரச்னைகள், செயல்பாட்டில் உள்ள தவறுகள், அவர்கள் மீது மக்கள் கூறிய புகார்கள், ...

ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா?

படம்
  ஒருவரின் ஆளுமை தனிப்பட்டதா, நிறுவனத்தின் கருத்தியலுக்கு உட்பட்டதா? நீங்கள் அரிசி ஆலையில் வேலை செய்கிறீர்கள். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், ப்ளுஸ்கை ஆகிய சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருக்கிறீர்கள். அதில் உங்கள் மனதிற்கு பிடித்த படித்த பதிவுகளை போடுகிறீர்கள். பொதுவாக ஒருவர் தனக்கு பிடித்தாற்போன, மனசாட்சிப்படி சொல்லும் எழுதும் கருத்துகள் நிறையப்பேரை போய்ச்சேரும். பலருக்கும் பிடித்ததாக இருக்குமோ இல்லையோ, சிறு வட்டார ஆட்களேனும் அந்த எழுத்துக்களை படிக்க கூடுவார்கள். இதில் அரிசி ஆலை அதிபர் பெரிதாக தலையிட ஒன்றுமில்லை. வேலை நேரத்தில் போனை நோண்டினால் தவிர. ஆனால், அதுவே தனிநபர், சமூக வலைதளத்தில் பிராண்டு போல தனிப்பட்ட ஆளுமையை உருவாக்கிக் கொண்டுள்ளார். அவரை டிவி நிறுவனம் வேலைக்கு எடுக்கிறது. அப்போதும் அந்த தனிநபர் முன்னைப்போலவே சுதந்திரமாக சமூக ஊடகங்களில் கருத்துகளை பகிர முடியுமா? அதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே நடைமுறை உண்மை.  அண்மையில் வார இதழில் வேலை செய்யும் மூத்த நிருபர் ஒருவரிடம் பேசினேன். அவர் நிறைய இலக்கிய நூல்களைப் படிப்பவர். ஆனால், அதைப்பற்றி பேசுபவர்,இணையத்தில் எழுத ...

வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம்

படம்
  வாக்களிக்கும் வயது மாற்றம் - இங்கிலாந்தின் சீர்திருத்தம் இங்கிலாந்தில் வரும் 2029ஆம் ஆண்டு பொது தேர்தலில் பதினாறு வயதானவர்கள் வாக்களிக்க தகுதி பெறுவார்கள். வாக்களிக்க பதினாறு வயது என்பது ஏற்கெனவே பல நாடுகளில் உள்ள நடைமுறைதான். சில நாடுகள் அதை ஏற்கவில்லை. குறிப்பாக உலகிலுள்ள 85 சதவீத நாடுகளில் வாக்களிக்கும் வயது 18 ஆக உள்ளது. இங்கிலாந்தில் இதற்கு முன்னர் 1969ஆம் ஆண்டு, வாக்களிக்கும் வயதை 21 இலிருந்து 18 ஆக மாற்றினா். அதற்குப் பிறகு இப்போது தொழிலாளர் கட்சி அதிகாரத்தில் இருக்கும்போது அதன் சுலோகன் பிரகாரம் மாற்றம் வந்திருக்கிறது.  பிரேசில், அர்ஜென்டினா, நிகரகுவா, மால்டா, ஜெர்சி, ஆஸ்திரியா, கியூபா, ஈகுவடார் ஆகிய நாடுகளில் பதினாறு வயதி்ல வாக்களிக்கும் உரிமை உள்ளது. வாக்களிக்கும் வயதை குறைப்பது அரசியல் கட்சிகளுக்கு உதவும் என்பது சரி. ஆனால், வாக்களிப்பவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்பது ஆய்வுக்குரியது. பதினாறு வயது என்றால் இயக்குநர் சபாபதி எடுத்த திரைப்படம் நினைவுக்கு வருகிறது. அதைக் கடந்து பார்த்தால், இங்கிலாந்தின் துணை பிரதமர் வாதத்தை வலுப்படுத்த தான் அம்மாவானது பதினாறில்,வரி ...

சீனாவில் சாதித்த தொழில்நுட்ப நிறுவனங்களின் வெற்றிக்கதை!

 சீனா டிஸ்ட்ரப்டர்ஸ்  சீன டெக் நிறுவனங்களின் கதை கட்டுரை நூல் இந்த ஆங்கில நூல், மேற்குலகு கொண்டிருக்கும் சீனா மீதான மூடநம்பிக்கைகளுக்கு சவால் விடுகிறது. சீன பொருள் என்றால் மட்டமானது. நிறுவனம் என்றால் மோசடி செய்யக்கூடியது என வலுவான பிரசாரத்தை செய்துவருகிறார்கள். அதை உடைத்து வரும் முக்கியமான நிறுவனங்களான அலிபாபா, டென்சென்ட், ஹூவெய், ஷாவ்மி, ஹெங்கன், லெனோவோ, ஹெயர் ஆகிய நிறுவனங்களைப் பற்றி விரிவாக விளக்குகிறது.  வணிக நிறுவனங்களோடு நிறுத்திக்கொள்ளாமல், சீனாவில் உள்ள அரசியல், அதற்கு டெக் நிறுவனங்கள் செய்துகொள்ள வேண்டிய சமரசம் பற்றியும் பேசியுள்ள நூல் என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது. வணிக ரீதியான விஷயங்களோடு அரசியலும் பின்னிப்பிணைந்துள்ளது. அப்படியல்லாமல் சீனாவில் எந்த வணிக நிறுவனமும் வளர முடியாது. அந்த வகையில் அலிபாபா, ஹூவெய் ஆகிய நிறுவனங்கள் முன்னிலை பெறுகின்றன. அலிபாபா உள்நாட்டில் சிறப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஹூவெய் உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாட்டிலும் தனது செயல்திறனை நிரூபித்துள்ளது. அதைபற்றி விவரிக்கும் பகுதி சுவாரசியமாக உள்ளது. இன்று அந்த சீன நிறுவனத்திற்கு ஒரே...

சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி  சுயமோகிகள் எப்படி உருவாகிறார்கள்? அதிகாரம், புகழ், பணம் இதெல்லாம் ஒருவருக்கு திடீரென கிடைத்தால் எப்படியிருக்கும்? அதை அப்படியே தக்க வைத்துக்கொள்ள பல்வேறு தில்லுமுல்லுகளை செய்வார். இப்படித்தான் நார்சிசம் எனும் சுயமோகம் உருவாகிறது. சுயமோகிகளுக்கு கல்யாணம் என்றால் மாப்பிள்ளை, இழவு என்றால் பிணமாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஏனெனில் மேற்சொன்ன நிகழ்ச்சிகளில் அவர்கள்தானே மையப்பொருள். இதை சொல்லும்போது தீவிரவாத தாக்குதல் நடந்து மக்கள் செத்தபோது தேர்தல் பிரசாரம் செய்தவர், விமானவிபத்தில் 270 இறந்தபோது லோ ஆங்கிள் அழகிய புகைப்படம் எடுத்து பதிவிட்டவர் பற்றி ஏதேனும் நினைவு வருகிறதா, அது உறுதியாக தற்செயலானதே...  சுயமோகிகளுக்கு மனதில் கருணை கிடையாது.  அரசியல்வாதிகள் ஊழல்களில் சிக்குவது ஏன்? அதிகாரம், பணபலம், புகழ் கிடைக்கிறது. அதை நோக்கி பங்கு போட்டுக்கொள்ள அனுபவிக்க நிறைய ஆட்கள் வருகிறார்கள். பொதுவாக பலவீனமான ஒருவரை வலிமையான ஒருவர் பார்த்தால் அவரை கேலி சித்திரவதை செய்ய நினைப்பார். அந்த வகையில் பஞ்சத்திற்கு வழங்க வேண்டிய நிதியை அர...

கட்சி, நாட்டிற்காக தன்னை தியாகம் செய்துகொள்ளும் மக்களே தேவை - ஷி ச்சின்பிங்

படம்
  விசுவாசம் அனைத்துக்கும் மேலானது! தாய்நாடு என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சீன அதிபர் ஷி ச்சின்பிங், வெளிநாட்டில் வாழும் சீனர்களை உங்கள் தந்தை நாட்டிற்கு நன்றிக்கடனை திருப்பிச் செலுத்துங்கள் என்று பேசுகிறார். எதற்காக? உலகம் முழுக்க சீன மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள். அதற்கு உள்நாட்டு அரசியல் நிலைமை, வேலையின்மை, கல்வி, தொழில்வாய்ப்பு என பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இவர்களை ஷி, பொதுவுடைமைக் கட்சியின் கீழ் ஒருங்கிணைக்க நினைக்கிறார். அனைவருக்கும் தனிக்கனவுகள் உண்டு, ஆனால், அதிபர் காணச்சொல்வது சீனக்கனவை. அது அனைவருக்குமான கனவு என்பதாக கட்டமைக்கிறார்.  நாடு, கட்சி, அதிபர் ஷி ச்சின்பிங் என மூன்றையும் சீனாவிலுள்ள மக்கள் நேசிக்கவேண்டும். காதலிக்க வேண்டும். வாழ்க்கையை அப்படியே அர்ப்பணிக்க வேண்டும். அதன் பெயர்தான் விசுவாசம். கட்சியை மட்டுமே மையப்படுத்திய தேசப்பற்று. அப்படியல்லாது கேள்வி கேட்பவர்களை, கட்சி உறுப்பினர்கள் மீது ஊழல் பாலியல் புகார்களை சொல்பவர்களை ஷி மன்னிப்பதில்லை. பாலியல் புகார் சொன்ன டென்னிஸ் வீராங்கனை ஒருவர் காணாமல் போனார். திரும்ப வந்தபோது தனது ஓய்வை அறிவித்துவி...

முஸ்லீம்களை தீவிரவாதிகளாக்கும் அமைச்சர், காவல்துறை உயரதிகாரி, தீவிரவாதி ஆகியோரைக் கொன்றால் வாய்மை வென்றுவிடும்!

படம்
 சத்யமேவ ஜெயதே தெலுங்கு ராஜசேகர், சிவாஜி, சஞ்சனா, ஷெரில் பின்டோ இசை சின்னா இயக்கம் ஜீவிதா அரசு மருத்துவர் இக்பால் அன்சாரி என்பவர், தீவிரவாதி என குற்றம்சாட்டப்படுகிறார். அவரை குறிப்பிட்ட இடத்திலுள்ள நீதிமன்றத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும். அதற்கு நாயகன் உட்பட சில அதிகாரிகளை தேர்ந்தெடுத்து குழுவை தயாரிக்கிறார்கள். அக்குழு, இக்பாலை நீதிமன்றத்தில் சமர்பித்ததா இல்லையா என்பதே கதை. மீண்டும் என்கவுண்டர் அதிகாரியாக ராஜசேகர் நடித்திருக்கிறார். இம்முறை படத்தில் சிவாஜிக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவரும் ஷெரில் பின்டோவுக்கும் பாடல் காட்சிகள், கிளு கிளு காட்சிகள், காமெடி ஆகியவை உண்டு. குழுவிலுள்ளவர்களின் குடு்ம்பங்களை காட்டும்போதே, இவர்களை கொத்துக்கறியாக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிடுகிறது. அதேதான் அதேதான். படத்தில் பாஸ்டர்ட் என்ற கெட்ட வார்த்தையை மட்டும் நாயகன் எத்தனை முறை சொல்லியிருப்பார்  என்று எண்ண முடியாது. அத்தனை முறை விரக்தி அடைகிறார். கையாலாகாத்தனம், இயலாமையில் அலறிக்கொண்டே இருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கென இருக்கும் ஒரே ஆன்மா சிவாஜி மட்டுமே. காதல் என்ற பெயரில் மகாலட்சுமி...

வங்கதேச தீவிரவாதிகளின் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தப் போராடும் ஊழல் கறைபடிந்த போலீஸ் அதிகாரி

படம்
      டெரர் ஶ்ரீகாந்த்மேகா, நிகிதா, நாசர், பிருதிவிராஜ், கோட்டாசீனிவாசராவ் தெலுங்கு மற்றுமொரு தேசபக்தி படம். இதில் தீவிரவாதிகள் பாக்கிலிருந்து வரவில்லை வங்க தேசத்திலிருந்து வருகிறார்கள். இந்தப்படத்தை இப்போது வெளியிட்டால், வலதுசாரி மதவாத கட்சி ஆளும் ஆந்திரத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் கலவரம் செய்து களிக்கலாம். அந்தளவு வெறுப்பு விஷத்தை மதம் வழியாக கக்கியுள்ள படம். எல்லாமே முஸ்லீம் தீவிரவாதம் என்ற கிளிஷேதான். ஒரே டெம்பிளேட். ஒரே நடைமுறை. பதினைந்து நாட்களில் ஆந்திரத்தின் ஹைடெக் சிட்டியில் மாநில முதல்வர் கலந்துகொள்ளும் விழாவில் வெடிகுண்டு வெடிக்கப்போகிறது. அதை உள்துறை அமைச்சர் ஏற்பாடு செய்கிறார். இதை நாயகன் விஜய் அறிந்துகொள்கிறான். அவனால் முதல்வர், விழாவிற்கு வரும் மக்கள் உயிரைக் காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதே கதை. நாயகன் விஜய், தீவிரவாத தாக்குதல்களை கண்காணிக்கும் பிரிவில் மாற்றப்பட்டு வேலை செய்கிறான். இதற்கு முன்னர் நன்றாக வேலை செய்தவன். இடையில் அவனது மேலதிகாரி, சில அரசியல் தலைவர்கள் செய்த சூழ்ச்சி, சதியால் ஊழல் குற்றச்சாட்டில் மாட்டிக்கொள்கிறான். பணியில் சற்று தாழ்ந்த நிலை...

அரசியல் அழுக்குகளை அகற்ற தனிமனிதனாக நாயகன் செய்யும் கோணங்கித்தனமான வீரசாகசங்கள்!

படம்
      துச்சாசனா ஶ்ரீகாந்த், சஞ்சனா கல்ராணி இயக்கம் பொசனி கிருஷ்ண முரளி பொதுஜனம் என டைம்ஸ் ஆப் இந்தியாவில் வயசான மீசை வைத்த கோட்டு போட்ட உயர் நடுத்தரவர்க்க மனிதரை லக்‌ஷ்மண் வரைந்திருப்பார் அல்லவா? அதேபோல ஒரு பாத்திரம் உருவாகி வந்து, அரசியலை சீர்படுத்த த த்துபித்து கருத்துகளை கூறுவதுதான் படம். தலையில் தொப்பி, கருப்பு கோட், கருப்பு பேன்ட். இதுதான் நாயகனுடைய ஒரே உடை. நாயகன் பெயர் மகேஷ். இந்தப் பெயர் கூட படத்தில் இரண்டாவது மணிநேரத்தில் பார்வையாளர்களுக்கு தெரிய வருகிறது. முதல் காட்சியைப் பார்ப்போம். காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டரிடம் பேசுகிறார். அடுத்து, மருத்துவமனை சென்று கர்ப்பிணிகளை குழந்தைகளை கருக்கலைப்பு செய்யக்கூறுகிறார். அடுத்து அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று இறந்துபோன அரசியல் தலைவர்களுக்கு கடிதம் எழுதி அனுப்ப சொல்கிறார். இதனால் காவல்துறை அவரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகிறது. மனநல பிரச்னை என தீர்மானித்து நாயகனை மனநல மருத்துவமனைக்கு அனுப்புகிறார்கள். அங்கு நாயகன், மருத்துவர், செவிலியர்களை அடித்துப்போட்டுவிட்டு தப்பிக்கிறார். முதல்வரின் மகளைக் கடத்துகிறார். ...

மக்கள் அதிகார அமைப்புகளில் அரசியல் வன்முறைக்கான இடம்!

படம்
      அரசின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் மையப்பொருளில், அடக்குமுறையைப் பற்றி பேசிவிட்டோம். ஆனால் அதற்கு பதிலடியாக மக்கள் அதிகாரத்துவர்கள் என்ன செய்வார்கள் என்பதைப் பற்றி இன்னும் பேசவில்லை அல்லவா? அதைப்பற்றி இனி பேசுவோம். இந்தியாவில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது. சில ஆண்டுகளாகவே போராட்டம் நடக்கிறது. அதில், சில தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தும் போயிருக்கிறார்கள். போராட்டங்களை ஒடுக்க,போராட்டக்காரர்களை இழிவுபடுத்த அரசு பல்வேறு முயற்சிகளை செய்கிறது. காவல்துறையை ஏவி விவசாயிகளை அடித்து உதைக்கிறது. கண்ணீர் புகைகுண்டுகளை வீசுகிறது. சாலையில் வாகனங்கள் வராமல் இருக்க ஆணிகளை பதிக்கிறது. வேலைகளை அமைக்கிறது. இத்தனைக்கும் விவசாயிகள் போராட்டம், சீனாவில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டம் போன்ற கொரில்லா தாக்குதல் முறைகளைக் கொண்டதல்ல. அகிம்சை போராட்டத்திற்கு இத்தனை எதிர்ப்புகள், ஏளனங்கள், அடக்குமுறைகள். இப்படி அடிபட்டு, உதைபடும் விவசாயிகள் அனைவரும் பொறுமையாக இருப்பார்கள் என நம்ப முடியுமா? காவல்துறை நவீன ஆயுதங்களை வைத்திருக்கலாம். ரஷ்ய, அமெரிக்க, பிரான்ஸ் நாட்டு ஆயுதங்கள் அவர்களுக்க...

இலவச மின்னூல்கள் - ஃப்ரீதமிழ் இபுக்ஸ்

படம்
      இலவச மின்னூல்களை ஃப்ரீதமிழ் இபுக்ஸில் தேடி வாசிக்கலாம். கூடுதலாக, இன்டர்நெட் ஆர்ச்சீவிலும்,பிரதிலிபி தமிழிலும் சில நூல்கள் கிடைக்கின்றன.  வாய்ப்பிருப்பவர்கள் தரவிறக்கி வாசியுங்கள். நன்றி!

திட்டமிட்டு எதிரிகளை அழித்தொழித்து ரத்தக்களறியாடும் புரட்சித் தலைவன்!

படம்
  எதிரிகளை அழித்தொழிக்கும் புரட்சித் தலைவன்! ஹெவன்லி டீமன் நாட் லிவ் இன் நார்மல் லைஃப் சீன காமிக்ஸ் தொடர் 100+--- டிமிட்ரி குடும்பத்தின் மூத்தமகன் ரோமன். இவர் தற்கொலை செய்துகொள்ள அவரது உடலில் தொன்மை காலத்து தீயசக்தி இனக்குழுத் தலைவரின் ஆவி உள்ளே புக, நவீன காலத்தில் நடக்கும் அதிகார மேலாதிக்கம் உருவாகிறது. அதை பேசுகிற கதைதான் இது. டிமிட்ரி குடும்பம் சுரங்கத் தொழிலாளர்களாக இருந்து இரும்புத்தாதுவை தோண்டிஎடுத்து விற்று செல்வந்தர்களானவர்கள். அவர்களின் பின்புலத்தில் அரச குடும்பமோ, அல்லது வேறு சக்தி வாய்ந்த ஆட்களோ இல்லை. எனவே, அவர்களை வடகிழக்கு பகுதியில் செல்வந்தர்களாக மாறினாலும் கூட பிற குடும்பத்தினர் மதிப்பதில்லை. இதை ரோமன் கண்டுகொள்கிறான். வடக்கிழக்கிலுள்ள அத்தனை பேர்களையும் பலத்தைக் காட்டி மிரட்டி தனக்கு அடிபணியச் செய்கிறான். அதேநேரம், கைரோ நாடு நான்கு பிளவுபட்ட சக்திகளோடு போராடிக் கொண்டிருக்கிறது. இளைஞரான மன்னருக்கு முடிவெடுக்கக்கூட அதிகாரம் இல்லை. குரோனோ, அரிஸ்டோகிரேட், வல்கல்லா என மூன்று சக்திகளோடு சமரசம் செய்துதான் அரசரின் ஆட்சி நடக்கிறது. ரோமன் உடலுக்குள் தீயசக்தி இனக்குழுத் தலைவர...

நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும்

படம்
    நூல்களை நாட்டுடமையாக்குதலும் அதன் பின்னணியும் தமிழ்நாடு அரசு, பலநூறு எழுத்தாளர்களது நூல்களை நாட்டுடமையாக்கி, நூல்களுக்கு உரிய வாரிசுகளுக்கு குறிப்பிட்ட தொகையை வழங்குகிறது. இப்படி சட்டப்பூர்வமாக பெறப்பட்ட நூல்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் நூலகத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. அதை நூல் பதிப்பாளர்கள் பயன்படுத்தி நூல்களை அச்சிடலாம். விற்கலாம். வாரிசுகளுக்கு காப்புரிமை தொகையை தர அவசியமில்லை. இவ்வகையில் எழுத்தாளரது நூல்கள் மக்களுக்கு பரவலாக கிடைக்கும். நூல்களை நாட்டுடமையாக்கம் செய்வது நூலின் பரவலாக்கம் என்ற வகையில் சரி என்றாலும், காப்புரிமை தொகையை எழுத்தாளர்கள் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது என மாறுபட்ட விமர்சனக் கருத்துகளும் எழுந்து வருகிறது. அண்மையில் மறைந்த முன்னாள் முதல்வரான மு. கருணாநிதியின் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. அதற்கு உரிய தொகையை தமிழ்நாடு அரசு வழங்குவதற்கு முன்வந்தது. ஆனால், கருணாநிதியின் குடும்பத்தார் அதை மறுத்துவிட்டனர். ஏற்பது, மறுப்பது எழுத்தாளரது வாரிசுகளது சொந்த விருப்பம். உரிய தொகையை வழங்க முன்வருவது அரசின் கடமை. இந்த வகையில...

விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி!

படம்
        3 பாயும் பொருளாதாரம் விலை உயர்வெனும் பற்றியெரியும் காட்டில் பட்டாம்பூச்சி! பனிரெண்டு லட்சம் கோடி ரூபாயை இந்திய வங்கிகள் தொழிலதிபர்களுக்கு கொடுத்து அவற்றை வசூலிக்க முடியவில்லை. அணுக்க முதலாளித்துவ ஒன்றிய அரசு, எப்போதும்போல கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. விவசாயிகளின் கடன் தள்ளுபடி என்றால் அத்துறை சார்ந்த முன்னேற்றம் என்று பொருள் கொள்ளலாம். கொரோனா காலத்தில் கூட லாபம் சம்பாதித்த தொழிலதிபர்களுக்கு எதற்கு கடன் தள்ளுபடி? இப்படி அரசியல்வாதிகளின் உதவிகளைப் பெற்று வரி கட்டாமல் சம்பாதித்தாலும் கூட லஞ்சம் வழங்குவது, பங்கு விலையை அதீதமாக காட்டுவது என இந்திய தொழிலதிபர்கள் சர்க்கஸ் காட்டி வருகிறார்கள். சரி சந்தைக்கு செல்வோம். சந்தையில் மக்கள் பொருட்களை வேண்டும் என கோரவில்லை என்றாலும் கூட அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை வணிகர்கள் வாங்கி வைத்து விற்பார்கள். சந்தை அதன் இயல்பில் இயங்கி வரும் என பொருளாதார வல்லுநர் ஆடம் ஸ்மித் கூறியுள்ளார். இவர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர். காலம் பதினெட்டாம் நூற்றாண்டு. சந்தை இயங்குவது கண்ணுக்குத் தெரியாத கரம் மூலம் என...