ஸ்கிம்டு பாலில் உள்ள சர்க்கரை அளவு, பூமியிலுள்ள தனிநபருக்கான நீரின் அளவு - அறிவியல் பேச்சு - மிஸ்டர் ரோனி
அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி ஆடை நீக்கிய பாலில் எத்தனை கிராம் சர்க்கரை இருக்கும்? ஆடை நீக்கிய பால், ஆரோக்கியமானது. இதில் கால்சியம் உள்ளது. இச்சத்து, உடலிலுள்ள எலும்பு, பற்களுக்கு நல்லது என கூறப்படுகிறது. கொழுப்பு குறைவு என்பதால், இதை டயட்டை கடைபிடிப்பவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதில் பலரும் மறந்துவிடுவது, சேர்க்கப்பட்டிருக்கும் பத்து கிராம் சர்க்கரை பற்றி.... ஒரு கிளாஸ் பாலில் பத்து கிராம் சர்க்கரை உள்ளது. பாலில் சேர்த்து உண்ணும் உணவுகள், பிரெட், சூப் ஆகியவற்றில் சர்க்கரை மறைவாக உள்ளது. இதையும் ஒருவர் கவனமாக பரிசீலித்து உணவுமுறைகளை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். ஸ்மூத்திஸ் என பழங்களில் செய்து விற்கப்படும் பானங்களில் சர்க்கரை அளவு அதிகம். எந்தளவு என்றால் கார்பன்டை ஆக்சைடு கரைக்கப்பட்ட கோலாக்களை விட அதிகம். பழங்களை அப்படியே சாப்பிடுவது நல்லது. அதை பழரசமாக மாற்றி பதப்படுத்தி குடிப்பதில் நார்ச்சத்து இருக்காது. ஆனால் சர்க்கரை அதிகம் இருக்கும். வாழைப்பழம், மாம்பழம், திராட்சை ஆகியவற்றில் சர்க்கரை அளவு அதிகம். எனவே, உடல் எடையைக் குறைக்க...