இடுகைகள்

சுதந்திரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோக்கத்திற்கும் செயலுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது - இந்திராகாந்தி உரை

படம்
முப்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர், நாடு சுதந்திரம் பெற்ற நாளில் ஆயிரக்கணக்கானோர் சுதந்திரநாள் வாக்குறுதியை ஆன்ம பூர்வமாக கூறினர். அந்த வரலாற்று நிகழ்வின்போது பல்லாயிரம் பேர்களில் ஒன்றாக என்னுடைய குரலும் ஒலித்தது. 1947ஆம் ஆண்டு, எடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு விட்டது. ஜனநாயகம், மதச்சார்பற்ற புதிய வளர்ச்சி பெறும் சக்தி உருவானதை உலகம் அறிந்துகொண்டது. சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது. பொருளாதார வளர்ச்சியை திட்டமிட்டு, நாட்டு மக்களின் எதிர்காலத்தை பாதுகாத்து முதலடியை எடுத்து வைத்தோம். இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது. அமைதியோடு பல்வேறு நாடுகளுக்கு இடையில் நட்புணர்வை பிரசாரம் செய்து ஒத்திசைவை உருவாக்கும் விதமாக இந்தியா செயல்பட்டு வந்துள்ளது. திரு. லால்...

நாய்கள் அடிமை அல்ல சக உயிர் என உரக்கச்சொல்லும் கட்டுரைகள் - பின்தொடரும் பிரம்மம்

 பின்தொடரும் பிரம்மம் ஜெயமோகன் விஷ்ணுபுரம் பதிப்பகம் இதிலுள்ள கட்டுரைகள் அனைத்துமே நாய்களுக்கும் எழுத்தாளர் ஜெயமோகனுக்குமான தொடர்பை, அன்பை பகிர்பவை. இந்த கட்டுரைகள் வழியாக அவர் வளர்த்த நாய்கள், அவற்றை அவர் பெற்றது, அதன் வழியாக கிடைத்த அனுபவங்களை நாம் அறிய முடிகிறது. இதில் நவீன் என்ற அவரது நண்பரது நாய் பற்றிய கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.  நாய்களை வளர்ப்பது பற்றிய அன்பையும் அக்கறையையும் நூல் வழியாக பெற முடியும். பல்வேறு கட்டுரைகளிலும் நாயை எப்படி வளர்ப்பது, பழக்க வழக்கங்களை மாற்றுவது, கனிவோடு நடத்துவது ஆகியவற்றைப் பற்றி ஜெயமோகன் குறிப்பிடுகிறார். நாயை துன்புறுத்துபவர்களை அக இருள் வன்முறையாளர் என கூறுகிறார். நாயின் பழக்கவழக்கங்களை அடித்து திருத்த முடியாது என சில சம்பவங்கள் வழியாக விளக்குகிறார். அவர் தனது வீட்டில் டாபர்மேன், லாப்ரடார் என இரு இன நாய்களை வளர்க்கிறார். பின்னாளில் பயணிக்கும் பிரச்னைகள் எழவே நாய் வளர்ப்பதை கைவிடுகிறார்.  நாய் வளர்ப்பது, பசுவை வளர்த்து பால் பெறுவது போன்றதல்ல. அது ஆத்மாவின் தேவைக்கானது என கூறுகிறார். கறுத்தம்மா என்ற காட்டில் வாழும் வேட்டையாடி உண்ணும...

அனார்சிசம் பற்றி மேலும் அதிகமாக வாசிக்க தெரிந்துகொள்ள விரும்புபவர்களுக்கு...

படம்
     

அதிகாரத்தை, பலவந்தத்தை அழிப்பதன் மூலம் உருவாக்கும் மாற்றங்கள்!

படம்
    ரஷ்யாவில் புரட்சி நடைபெற்றது. மக்களின் ஆதரவில் வெற்றி பெற்றது. ஆனால் இந்த புரட்சி என்பது மக்களுக்கு பெரிய நியாயத்தை செய்துவிடாது. ரஷ்ய நிலத்தில் ஏராளாமான புரட்சிகள் நடந்தன. ஆனால் அவை எப்படி தோற்றுப்போயின என்று அறிந்தால் ஆச்சரியமாக இருக்கும். மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய கட்சிகள். அதற்கு பிறகு மக்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் அதிகாரத்தை ருசிப்பதில் தங்களுக்குள் அடித்துக்கொண்டன. இதனால் அவர்கள் பெற்ற வெற்றியை எதிரிகளுக்கு தாரை வார்த்தனர். ஒரு நாட்டிற்கு அடிப்படையானது உணவு. மக்களின் ஆதரவோடு வென்றவர், திடீரென சர்வாதிகார பாதையைத் தேர்ந்தெடுத்து இயங்கினால் எதிர்பார்த்த பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சியைப் பெற முடியாது. வெற்று சட்டங்கள் தொழில்துறையை இயங்க வைக்காது. உள்நாட்டு உற்பத்தி அதிகம் என்ற கூவல்கள், பசியோடு காயும் மக்களுக்கு வயிறார சோறு இட்டுவிடாது. அதற்கு சிந்தனை, செயல்திட்டம் என இரண்டும் தேவை. அரசின் வானொலி, நாளிதழ் விளம்பரங்கள், அறைகூவல்கள், கைக்கூலி ஊடகங்கள் சேர்ந்து உழைத்தாலும் கூட நாட்டை முன்னேற்ற ஆக்கப்பூர்வ செயல்திட்டம் தேவை, மக்களைப் பற்றி புரிந்துகொள்ள...

அறிவால் பகை வெல்வோம் - பாயும் பொருளாதாரம்

படம்
      பாயும் பொருளாதாரம் 7 அறிவால் பகை வெல்வோம் கையில் நிறைய ஆயுதங்களை வைத்திருப்பவர்கள், அதை எங்காவது பயன்படுத்திப் பார்க்க முயல்வார்கள். அதை தவிர்க்கமுடியது. மனித குண இயல்பே அப்படித்தான். இந்த வகையில் அமெரிக்கா, தனது பொருளாதார வளர்ச்சிக்கு பலிகடாவாக மாற்ற கனடாவை, கிரீன்லாந்தை நிர்பந்தித்து வருகிறது. பெரிய பொருளாதாரத்திற்கு அதிகளவு இயற்கை வளங்கள் தேவை. அதை அடைய பிற நாடுகளை விலைக்கு வாங்கி, நேரடியாக அல்லது மறைமுகமாக காலனியாக்கினால் மட்டுமே பெறமுடியும். பெரிய அரசு, சிறிய அரசு என இரண்டுக்குமே சேவை வரி செயல்பாடு என அனைத்திலும் வேறுபாடுகள் உண்டு. அரசு இயங்குவதில் கருத்தியல் முக்கியத்துவம் பெறுகின்றன. வலதுசாரிகள், அரசு தனிப்பட்ட வணிகம், தொழிலதிபர்கள், தொழில்கள் எதிலும் அரசு தலையிடாது பார்த்துக்கொள்கிறார்கள். மக்களை உயிரோடு பாதுகாப்பது மட்டுமே அரசின் கடமை. என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுவதல்ல. தொழிலதிபர்களுக்கு குறைந்தளவு வரியே அரசு விதிக்கும். இதெல்லாம் வலது கருத்தியல். இதில் மதம் சேர்ந்தால் புல்டோசர்கள் பிரதமர் கட்டித்தந்த வீட்டைக்கூட இடிக்கும். ஊழல்கள், கொலை, கொள்ளை மன்...

ஆசியாவில் வலிமையான தொழிலதிபர் பெண்கள் - பார்ச்சூன் ஆசியா 2024

படம்
             powerful womens asia fortune asia 2024(not included india) siyun chen bristol myers squibb பிரிஸ்டல் நிறுவனத்தின் துணைத்தலைவர், பொது மேலாளராக இருக்கிறார் சென். இவர். 2011ஆம் ஆண்டு தான்சானியாவில் உள்ள கிளிமாஞ்சாரோவில் உள்ள மலைத்தொடரில் கணவருடன் மலையேற்றம் செய்ய முடிவெடுத்தார்.  அந்த செயல்பாடு இலக்கு, அதன் முக்கியத்துவம், கூட்டாளிகள் மீது வைக்கும் நம்பிக்கை, நெகிழ்வுத்தன்மை பற்றி புரியவைத்ததாக கூறுகிறார். அமெரிக்க நிறுவனமான பிரிஸ்டலின் ஆசிய வணிகம், சீனா ஆகியவற்றை சியுன் கவனித்து வருகிறார். இந்த பணிக்கு முன்னர் ஜிஎஸ்கே, நோவர்டிஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். sung suk suh cosmax தலைவர், துணை நிறுவனர் சங்கின் கணவர் கியுங்தான் காஸ்மேக்ஸ் நிறுவனத்தை 1992ஆம் ஆண்டு உருவாக்கினார். இந்த நிறுவனம் பெண்களுக்கான அழகுசாதனப் பொருட்களை தயாரித்து விற்று வருகிறது. காஸ்மேக்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா, சீனா, தென்கொரியா, தென்கிழக்கு ஆசியா ஆகிய நாடுகளில் தொழிற்சாலைகள் உண்டு. கடந்த ஆண்டு நிறுவனம், 1.3 பில்லியன் டாலர்களை லாபம் பார்த்துள்ளது. கலீஜா...

உணர்வு ரீதியாக பிறருக்கு அடிமையாக இருப்பது சுதந்திரத்தை தொலைத்துவிடும்!

      பிறரின் மகிழ்ச்சிக்குப் பொறுப்பேற்றுக்கொள்ளாதீர்கள்! லின்சிஸ்தான் என்ற நாட்டில் சமூக வலைதளத்திற்கு புதிய விதி நடைமுறைக்கு வந்தது. நீங்கள் பதிவிடும் கருத்தால் யாராவது ஒருவருக்கு மனம் புண்பட்டால் அபராதம், சிறைதண்டனை உண்டு என அரசு கூறியது. உண்மையில் நமது கருத்து அனைவருக்கும் மகிழ்ச்சியை தர முடியுமா, அதற்கு வாய்ப்புள்ளதா? நிச்சயம் இல்லை. முன்னமே கூறியபடி தண்டனையை கூறி, ஒருவரை மிரட்டி வழிக்கு கொண்டு வருவதில் இதுபோன்ற அறிவிப்புகள் வரும். நீங்கள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர். அதிலேயே, நீங்கள் எடுக்கும் முடிவுகள், கூறும் கருத்துகளுக்கு பலரும் ஆமோதிப்பை வெளிப்படுத்த மாட்டார்கள். எதிர்ப்பார்கள். அப்படி சொல்லக்கூடாது. பேசக்கூடாது என்பார்கள். இந்த லட்சணத்தில் காழ்ப்பும் வெறுப்பும் கொண்ட சமூக வலைத்தளத்தில் பதிவிடும் கருத்துகளுக்கு பூமாலை மட்டுமே கிடைக்குமா என்ன? மாட்டுச்சாணியைக்கூட அள்ளி வீசுவார்கள். அப்படியானால் என்ன செய்வது? விதிக்குட்பட்டு அரசின் விளம்பரம், பிரசார திரைப்படங்கள், அரசு ஆதரவு ஆட்கள் மட்டுமே சமூக வலைத்தளத்தில் இயங்க முடியும் என்பதே விதிகள் மூலம் அரசு மறைமுகமாக கூ...

தேசநலனை லட்சியமாக கொண்ட பத்திரிகையாளர் ஏ என் சிவராமன்!

படம்
        ஏ என் சிவராமனின் பத்திரிகை உலகம் பொன் தனசேகரன் விலை ரூ.30 உலக தமிழாராய்ச்சி நிறுவனம் தினமணி நாளிதழில் நாற்பது ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர் பத்திரிகையாளர் ஏ என் சிவராமன். தனது எண்பத்து மூன்று வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது நாளிதழ் செயல்பாடுகளை நூல் கவனம் குவித்துப் பேசுகிறது. நூல் வழியாக ஏ என் சிவராமன் தமிழுக்கென செய்த முக்கியமான செயல்பாடுகள், மொழியாக்கம், எழுதிய கட்டுரைகள், என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்தினார் என்பதைப் பற்றி பத்திரிகையாளர்கள் அறிந்துகொள்ள முடியும். ஏ என் சிவராமன், டிஎஸ் சொக்கலிங்கம் என்ற தனது உறவினர் மூலம் பத்திரிகைத்துறைக்கு வந்தார். காந்தியின் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்க கல்லூரி படிப்பை கைவிட்டுவிடுகிறார். கல்லூரி படிப்பை கைவிட்டாலும் பல்வேறு நூல்களை வாசிப்பதை கைவிடவில்லை. அதனால்தான் தினமணி நாளிதழில் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்த முடிந்திருக்கிறது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்திருக்கிறார். வெறுமனே அறைக்குள் இருந்தபடியே கட்டுரைகளை எழுதவில்லை. ஆசிரியராக இருந்தாலும் பல்வேறு அயல்நாடுகளுக்கு பயணித்து ...

கருப்பினத்தவருக்கான புரட்சிப்பாடலை பாடியவர் - ஆந்த்ரா டே

படம்
  ஆந்த்ரா டே  andra day சூப்பர் பௌல் போடியத்தில் கருப்பினத்தவரின் தேசியகீதத்தை பாடவேண்டும் என்பதுதான் டேவின் கனவு. ஏற்கெனவே பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பாடி புகழும், பெயரும் பெற்றவர், எதற்கு சூப்பர் பௌல் போடியத்தை முக்கியமாக நினைக்கவேண்டும்? 2015ஆம் ஆண்டு, டே ரைஸ் அப் என்ற பாடலைப் பாடி உலக மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த பாடல், இப்போதும் கருப்பினத்தவரின் போராட்டங்களில் ஒலித்து வருகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் வெர்சஸ் பில்லி ஹாலிடே என்ற படத்தில் நடித்தார். அதை இயக்கியவர், லீ டேனியல்ஸ். அதில் சிறப்பாக நடித்ததற்காக ஆஸ்கர், கோல்டன் குளோப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டார். பாடல்களுக்கு கிராமி விருது பெற்றார். தி டெலிவரன்ஸ், எக்ஸிபிட்டிங் ஃபார்கிவ்னஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவை விரைவில் வெளிவரவிருக்கின்றன.  ரசிகர்கள் ரைஸ் அப் என்ற புரட்சி பாடலைப் போலவே அடுத்தடுத்த பாடல் இருக்கவேண்டுமென நினைக்கின்றனர். ஆனால் டே சற்று வேறுவிதமாக யோசிக்கிறார். அப்படி ரசிகர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வது தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. நான் எனது பாடலை சுதந்திரமாக இருக்கவிரும்புகிறேன் என்றார...

சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70! - அடுத்த சீன அதிபர் யார்?

படம்
  ஷி ஜின்பிங், சீன அதிபர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு வயது 70 சீன அதிபர் ஷி ஜின்பிங், மூன்றாவது முறையாக அதிபராக பொறுப்பேற்று ஆட்சியை நடத்திவருகிறார். இது அவருக்கு மூன்றாவது ஐந்தாண்டு. மார்ச 2023இல் ஆட்சியை தக்கவைத்துள்ளவர், வாழ்நாள் முழுக்க அதிகாரத்தில் இருப்பதற்கு ஏற்றபடி கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள தனது ஆதரவாளர்களை தனது அணியில் திரட்டியுள்ளார். தனக்கு எதிராக உள்ளவர்களை முற்றாக விலக்கியுள்ளார் என அசோசியேட் பிரஸ் தனது செய்தியில் கூறியுள்ளது. கடந்த ஜூன் பதினைந்தாம் தேதி அதிபர் ஷி ஜின்பிங் எழுபது வயதை எட்டினார். அமெரிக்கா, இங்கிலாந்து என பல்வேறு நாடுகளுடன பகை ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பொருளாதாரம் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. அந்த நேரத்தில் அழுத்தத்தை சமாளித்து அதிகாரத்திலும் இருக்கிறார் ஷி ஜின்பிங். ஷி ஜின்பிங்கிற்கு எழுபது வயதாகிவிட்டது. அடுத்த அதிபராக யார் வருவார் என்ற கோணத்தில் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையாளர்   சுன் ஹான் வாங் பார்டி ஆஃப் ஒன் என்ற நூலை எழுதியிருக்கிறார். அதில் அடுத்து அதிபராக வருபவரின் சாத்தியங்களை அலசியிருக்கிறார். உண்மையில், சீனாவில் அட...

கண்டுபிடிப்புகளில் ஆய்வுகளில் இந்தியர்கள் பின்தங்குவதற்கான காரணங்கள் - சேட்டன் பகத்

படம்
  சாம் ஆல்ட்மேன், துணை நிறுவனர் ஓப்பன் ஏஐ இந்தியர்கள் தமக்குத்தாமே பெருமை பட்டுக்கொள்ளக்கூடியவர்கள். ஆனால். இந்த மனப்பான்மை நம்மில் பெரும்பாலானோர்க்கு பாதகத்தையே அதை நாம் தொடக்கத்திலேயே அறிவதில்லை. அண்மையில் ஓப்பன் ஏஐ நிறுவனத்தின் துணை நிறுவனர் சாம் ஆல்ட்மேன், இந்தியாவுக்கு வந்தார். அவரிடம் இந்திய ஸ்டார்ட்அப்கள் பத்து மில்லியன் டாலர் செலவில் சாட் ஜிபிடியைப் போல ஏஐ மாடலை உருவாக்க முடியுமா என்று கேள்வி கேட்கப்பட்டது. ‘’பத்து மில்லியன் டாலர் செலவில் அப்படி மாடலை இந்தியா உருவாக்க முடியாது. இன்றளவும் அப்படி உருவாக்கிவிடவில்லை. அப்படி உருவாக்கினால் கூட அது சாட் ஜிபிடியோடு போட்டியிடமுடியாது’’ என்று கூறினார். உடனே அவருக்கு சவால் விட்டு ட்விட்டர், லிங்க்டு இன் தளங்களில் பதிவுகள் இடப்பட்டன. ‘’சாமின் சவாலை ஏற்றுக்கொண்டோம்’’.’’ செய்துமுடிப்போம்’’ என பகிரங்க சவால்கள் விடப்பட்டன. பிறகு, நிலவரம் கலவரமாவதை உணர்ந்த சாம், பத்து மில்லியன் டாலர்கள் என்ற செலவில் சாட் ஜிபிடி உருவாக்க முடியாது என்ற கருத்தில் தான் பேசியதாக கூறினார். இந்தியாவில் பொருளாதார முன்னேற்றத்திற்காக சேவைத்துறையில் புகழ்பெற்ற நிறு...

மனப்பூர்வமாகத் தேடினால் சுதந்திரத்தைப் பெறலாம்! - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
  ஜே கிருஷ்ணமூர்த்தி எப்படி தேர்ந்தெடுப்பது -2 உங்கள் வாழ்க்கை என்பது தேர்வுகளாக அமைந்துள்ளது. உங்களின் தேர்வு மகிழ்ச்சியையும், திருப்தியையும் தருவதால் அதை நீங்கள் விரும்புகிறீர்கள்.  இந்த தேர்வு, உங்களுக்குப் பிடித்திருக்கிறது. அடுத்த நாள் இந்த தேர்வு உங்களுக்கு பிடிக்காமல் போய்விடலாம். எனவே, நீங்கள் தேர்ந்தெடுத்த விஷயங்களை உடனே கைவிட்டுவிட்டு வேறு விஷயங்களுக்கு நகர்ந்துவிடலாம். ஆகவே,  உங்களது தேர்வு என்பது உணர்வுநிலையைச் சேர்ந்தது. நீங்கள் அதை சுயநினைவு சார்ந்தும் இருநிலைப்பாடுகள் சார்ந்தே எடுக்கிறீர்கள். ஆனால் எடுக்கும் தேர்வு நிலைப்பாடு, எதிர்மறையாக அமைகிறது. எதிர்மறையாகச் செல்லும் தேர்வுகள் பற்றி நீங்கள் கவனமுடன் இருந்தால்,  உண்மை எதுவென அடையாளம் கண்டுகொள்ளலாம். உண்மையை அடையாளம் காண்பதற்கான ஆர்வம், வேட்கை இல்லை என்பதால் உணர்வு நிலை சார்ந்து எதிர்மறையான தேர்வுகளே கிடைக்கின்றன. இந்த நிலையில் மனம் முழுக்க எதிர்மறை தேர்வுகளிலிருந்து எளிதாக விடுதலையாவதில்லை. இச்சூழலில், விழிப்புணர்வாக, செழிப்பான நிலையில் மனம் இருக்காது. ஒருவரின் எதிர்மறைத் தேர்வுகளில் சுதந்திரம் இருப...

காந்தியின் ராமன் - புதிய மின்னூல் வெளியீடு

படம்
  காந்தி காந்தி பிறந்து 150 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. வாழும்போதும், மறைந்த பிறகும் கூட அவரளவுக்கு சர்ச்சையான மனிதர் இந்தியாவில் குறைவுதான். ஆன்மிக குருக்களை மறந்துவிடுங்கள். வாழ்க்கை, த த்துவம், பொருளாதாரம், தொழில், இயற்கைச் சூழல் என பல்வேறு தளங்களிலும் காந்தியின் செல்வாக்கு இன்றும் உள்ளது.  இதற்கு முக்கியமான காரணம், காந்தி என்ற மனிதரின் மூலமாக ஒருவர் பெறும் ஊக்கம் பல்வேறு செயல்களாக மாறியுள்ளது. இதற்கு நிறைய இயக்கங்களை அடையாளமாக கூறலாம்.  காந்தியை எப்படி புரிந்துகொள்வது என்பது இன்று நமக்கிருக்கும் சிக்கல். ஏனெனில் காலந்தோறும் காந்தியை எப்படி பார்ப்பது, கொள்கைகளை புரிந்துகொள்வது பற்றி நூல்கள் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. காந்தியின் ராமன் நூல், பல்வேறு ஆங்கில நாளிதழ்களில் வெளியான கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு. நூலில் எழுத்தாளர் ராமச்சந்திர குஹாவின் நேர்காணலும் உள்ளது. இவர் தனது நூலில் வரலாற்றில் காந்தியின் இடத்தை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார். காந்தியின் போராட்டம் எப்படிப்பட்டது, தென்னாப்பிரிக்காவில் அவரின் போராட்டம், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு எப்படி உதவியது என்ப...

சமூகம் என்பது என்ன?

படம்
  அகம் புறம் ஜே கிருஷ்ணமூர்த்தி கேள்வி பதில்கள் கே. சமூகம் என்பது என்ன? ப. சமூகம் , குடும்பம் என்றால் என்ன என்று பார்ப்போம். இதை நாம் படிப்படியாக கண்டுபிடிக்க முயல்வோம். எப்படி சமூகம் உருவாக்கப்பட்டது, குடும்பம் என்றால் என்ன இதுதான் எனது குடும்பம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.   இந்த அமைப்பில் அப்பா, அம்மா, அண்ணன், தங்கை ஆகியோர் உள்ளனர். இவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், உடை, நகைகள் என தனியாக உள்ளன. இதைப்போலவே பிறரும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர். குடும்பம் என்பது ஒருவரின் பாதுகாப்பான வாழ்க்கைக்கானது. அப்பா, மகனைப் பாதுகாப்பார். அவரின் சொத்துக்களும் அப்படித்தான் குடும்பத்தினரால் பாதுகாக்கப்படும்.   இப்படித்தான் குடும்ப அமைப்பு செயல்படுகிறது. உங்களது குடும்பத்தைப் போலவே தான் பிறரது குடும்பமும் உள்ளது. ஒரு குடும்பத்திற்குள் இன்னொரு வெளி நபர் வரக்கூடாது என்பதற்காக சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதில் அதிக உறுப்பினர்கள் கொண்ட குடும்பம், அதிக சொத்து, அதிக வாகனங்கள்,   உடைகளை என வாழ்கின்றனர். இவர்கள் பிற குடும்பங்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைப் பெறுகின்றனர்...

பிரிவினை காயங்களை ஆற்ற முயன்ற காந்தி!

படம்
  காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியாகிரகத்தின் இந்திய முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார் . ஆனால் வெளிநாட்டில் பெற்ற வெற்றபோல உடனே இங்கு வெற்றி கிடைக்கவில்லை . 1930 ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராடியபோது மக்கள் ஆங்கிலேயர்களை அடித்து வன்முறையை உருவாக்கிய சம்பவங்கள் நடந்தன . இயக்கத்தைத் தொடங்கிவிட்டோம் எனவே , அப்படியே நடத்தி சுதந்திரத்தைப் பெறுவோம் என காந்தி நினைக்கவில்லை . போராட்ட அமைப்பைத் தொடங்கி திடீரென இடையில் போராட்டத்தை நிறுத்துவது தனக்கு அவமானம் என காந்தி நினைக்கவில்லை . தான் நினைத்த வடிவில் போராட்டம் நடைபெறவேண்டும் என பிடிவாதமாக இருந்தார் . இதன் விளைவாக சிலமுறை தான் தான் நடத்த்திட்டமிட்ட போராட்டங்களை நோக்கம் நிறைவேறும் முன்னரே நிறுத்தியிருக்கிறார் . பிறரைப் புரிந்துகொண்டு மக்களின் நலன்களை முன்னிறுத்த காந்தி முயன்றார் . அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் . தோல்வியும் அடைந்திருக்கிறார் . நீதிமன்றத்தில் வாதிட முடியாமல் தனது சக வழக்குரைஞர்களிடம் வழக்காடுவதற்கு கோரியவர்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி பேசினார் . அவர்கள...