இடுகைகள்

காடு அழிவு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யானைகள் கணக்கெடுப்பு - தள்ளிப்போகும் காரணம்!

படம்
               2022-23ஆம் ஆண்டுக்கான யானைகளின் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அடுத்த ஆண்டு வெளியிடப்படக்கூடும். இப்போது, ஊடகங்களில் அரசின் அறிக்கையில் உள்ள தகவல்கள் மெல்ல வெளியே வந்துள்ளன. அதுவும் சூழலுக்கோ, நமக்கோ நல்ல செய்தியை சொல்வதாக இல்லை. கிழக்கு, மத்திய, தென் பகுதி இந்தியாவில் யானைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. மேற்குவங்கம் - தெற்கு 84 %, ஜார்க்கண்ட் 64%, ஒடிஷா 54%, கேரளம் 51% என யானைகளின் எண்ணிக்கை சரிந்துள்ளது. வளர்ச்சி திட்டங்கள், சுரங்கம் தோண்டுவது, கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவையே யானைகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வர காரணம். யானைகளின் எண்ணிக்கையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுத்து வருகின்றனர். தொண்ணூறுகளில் இருந்து இந்த செயல்பாடு நிற்காமல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. புதிய கணக்கிடும் முறையாக டிஎன்ஏ ஆவணப்படுத்துதல் பயன்படுகிறது. இந்த முறையில் கணக்கீடு மட்டுமே செய்யப்படுகிறது. வேறு எந்த ஆலோசனைகளும் கூறப்படுவதில்லை. 2002ஆம் ஆண்டு வரை நேரடியாக யானைகளைப் பார்த்து கணக்கீடு செய்...