இடுகைகள்

இடம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிழைத்திருப்போம் - எங்கே செல்லும் இந்தப்பாதை?- தங்குவதற்கான இடம், அவசியமான பொருட்கள்

படம்
    இறுதிப்பகுதி     பிழைத்திருப்போம் எங்கே செல்லும் இந்தப்பாதை? பேரிடர், கலவரம், வதந்தி, பொய் வழக்கு என எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். நிம்மதியாக இருக்க தலைக்கு மேலே கூரை வேண்டும். அதாவது தங்குவதற்கு இடம்வேண்டும். அது பாதுகாப்பாக இருக்கவேண்டும். அதேசமயம் அதற்கான செலவும் குறைவாக இருக்கவேண்டும். இடங்களை முன்னமே கண்டுபிடித்து வைத்துக்கொள்ளுங்கள். தூரம் போகும் தூரம் குறிப்பிட்ட தொலைவில் இருக்கவேண்டும். வண்டியில் நீங்கள் போய்க்கொண்டே இருக்கமுடியாது அல்லவா? பெட்ரோலும் வண்டியில் குறைவாக இருக்கும்போது ஏதாவது ஒரு இடத்தை உறுதி செய்து அதை நோக்கி சென்றே தீரவேண்டும். அல்லாதபோது உங்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகிவிடும். பல்வேறு இடங்கள் ஒரு கெட்ட விஷயம் நடக்கும்போது, வீட்டின் கதவை மட்டும் திறக்காது, ஜன்னல்களையும் திறந்துகொண்டு வரும் என்பார்கள். மோசமான விஷயங்கள் நடைபெறும்போது, உடனே தப்பிக்க நான்கு திசைகளுக்கு நான்கு இடங்கள் என தயாரித்து வைத்துக்கொண்டால் உதவியாக இருக்கும். ஒரே இடத்தை மட்டுமே நம்பியிருக்க முடியாது. அது ஆபத்தும் கூட. தனிக்குரல் கலைஞரான குணால் கம்ரா, தனது பகடி...

கற்பதில் வேகம் காட்டும் தங்கமீன்!

படம்
  Gold fish - Pinterest சூழலை அறிவால் அறியும் தங்கமீன்! நீருக்குள் அலைந்து திரிந்து உணவு தேடும் மீன்களுக்கு,  சரியாக வழிதேடி அடையும் திறன் உண்டு. இதனை இஸ்ரேலில் உள்ள பென் குரியன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு அறையில் செய்த சோதனையில் மீன்கள் எப்படி கப்பல் அல்லது வேறு வகை வாகனங்கள் எதிரே வந்தால் விலகி பாதுகாத்துக்கொள்கிறது என அறிந்தனர். இதுபற்றிய ஆராய்ச்சி, பிஹேவியரல் பிரெய்ன் ரிசர்ச் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.  ஆறு தங்க மீன்களை வைத்து அதன் திசையறியும் திறனை சோதித்தனர். சக்கரங்கள் பொருத்திய சிறு வண்டியில் மீன்தொட்டியை வைத்தனர். மீன்தொட்டியின் நடுவில் கம்பியை வைத்து, அதில் கேமராவைப் பொருத்தினர். இதன்மூலம், தங்கமீனின் இயக்கத்தை பதிவு செய்தனர். 30 நிமிடங்களுக்கு சிறுவண்டியை இயக்கி மீன்கள்  குறிப்பிட்ட திசையில் நகர்கிறதா எனப் பார்த்தனர். தொட்டியில் ரோஸ் நிற அட்டையை வைத்து அதனை நோக்கி மீனை செல்ல தூண்டினர். முதலில் கிடைத்த வெற்றி சதவீதம் 2.5 தான். பிறகு, தங்கமீனின் வெற்றி வாய்ப்பு 17.5 சதவீதமாக உயர்ந்தது.  அறையில் இடங்களை மாற்றுவது, வெவ்வேறு நி...

அறையில் சுயாதீனச்சமையல் செய்தபோது - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! சுயாதீன சமையல் மயிலாப்பூரில் நீங்கள் கரண்டி பிடிக்காமலிருக்க நிறைய இதயங்கள் உதவும். ஜன்னல் கடை, பாரதி மெஸ், தேரடி பஜ்ஜிக்கடை, காளத்தி ரோஸ்மில்க், செந்தில்நாதன் மெஸ் என நிறைய உணவுக்கடைகளும், தின்பண்டக் கடைகளும் நிறைந்துள்ளன. எல்லாம் எதற்கு வாங்கித் தின்று இந்தியாவை வளர்த்தத்தான். டீ என்ற வார்த்தையை இங்கு கேட்க முடியாது. எங்கெங்கு காணினும் காபிதான். மகாத்மா காந்தி சிலையை ஒட்டி இப்போது கோத்தாஸ் காபிக்கடை வேறு தொடங்கியிருக்கிறார்கள். அம்பிகா சிறப்பங்காடியை ஒட்டி இயங்குவது லியோ காபி, முதலில் மோசமாக இருந்த காபி நேற்று குடித்தபோது இனித்தது. உபயம் யார் நமது தினகரன் குழும முன்னாள் தாயாதிகள்தான். வந்த நண்பர்களுக்கு  மயிலாப்பூரை கிரிவலம் கூட்டிச்சென்றேன். ஒருகட்டத்தில் நண்பர்,  தம்பி எங்களை எங்கே கூட்டிட்டிப்போற என்றார். ரைட் அதுதான் நான் விடைபெற்றுக்கொள்ளும் இடம் கூட. கபாலி காலில் விழுந்தா வாழ்க்கை நல்லா இருக்கும்ணே என்று சொல்லி கைகுலுக்கு ஜப்பானிய முறையில் இடுப்பு வளைத்து வணங்கி விடைப்பெற்றேன். ஜப்பானிய முறை வணக்கம் சிறப்பானதுதான். ஆனால் என்னவோ ...