இடுகைகள்

டைம் 2025 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் செல்வாக்கு பெற்றவர்கள் 2025 - உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதித்த மருத்துவர்

  டைம் செல்வாக்கு பெற்றவர்கள் 2025 லியாங்க் வென்ஃபெங் டீப் சீக் ஏஐ நிறுவன இயக்குநர் எல்லோரும் சாட்ஜிபிடி, கூகுள் ஜெமினி, பர்பிளக்சிட்டி என பேசிக்கொண்டிருக்கும்போது இணையத்திற்கு வந்த ஏஐ நிறுவனம். டீப்சிக் அமெரிக்க செயற்கை நுண்ணறிவு மாடல்களை விட குறைவானசெலவில் உருவாக்கப்பட்டது. இன்று ஆப்பிளின் ஆப்களில் அதிகம் தரவிறக்கம் செய்யப்படும் ஆப்களில் ஒன்றாக முதலிடத்தில் உள்ளது. சாட்ஜிபிடி போல பயன்படுத்த கட்டணம் ஏதும் கிடையாது. இலவசம். லியாங்க்கிற்கு நாற்பது வயதாகிறது. சீனாவின் குவாங்டாங் மாகாணத்திலுள்ள சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த டெக் ஆளுமை. ஸெஜியாங்க் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்தவர். சீனாவின் நம்பிக்கைக்குரிய ஏஐயாக நம்பப்படுவது, டீப் சீக்தான். நாங்கள் இப்போதைக்கு லாபம் சம்பாதிக்க ஆசைப்படவில்லை என சொல்லி ஆட்டத்தை தொடங்கியுள்ளார். சீனா முன்னேறிவிடுமோ என்ற பயத்தில் அமெரிக்கா கணினி, செயற்கை நுண்ணறிவு சிப்களை வாங்குவதற்கான தடைகளை விதித்துள்ளது. இப்படியான பாதகமான சூழ்நிலையிலும் கூட டீப் சீக் போன்ற சிறந்த ஏஐ ஒன்றை சீனா உருவாக்கி சாதித்துள்ளது. டீப் சீக் வெளியாகி வரவேற்பு பெற்றவுடனே...

பெண்களின் கருக்கலைப்பு உரிமைக்காக போராடும் பெண்மணி! - டைம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள்

படம்
    டைம் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் ஸ்கை பெர்ரிமன் skye perryman அரசை நீதிமன்றத்திற்கு இழுத்தவர் அமெரிக்காவில் ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்துவிட்டார். அரசு, பல்வேறு நிதி நல்கைகளை நிறுத்திவருகிறது. ஸ்கை, மாணவர்களுக்கு அரசு வழங்கும் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு கோரி சட்டப்போராட்டம் நடத்திவருகிறார். இதற்காக டெமோகிரசி ஃபார்வர்ட் என்ற தொண்டூழிய அமைப்பை நடத்தி வருகிறார். நிச்சயம் அவர் செய்கிற பணி சவாலானது. ஒரு நாட்டின் அதிபரே ஜனநாயத்திற்கு, தாராள தன்மைக்கு எதிராக இருப்பார் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஆனால், அந்த நாட்டு மக்களே அவரை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது நகைமுரண். மக்கள் அழுத்தம் கொடுத்து தங்களுக்கு தேவையான சேவைகளை பெற முடியும் என நிரூபிக்க ஸ்கை பெர்ரிமன் போராடுகிறார். நாம் ஆபத்தான நிலையில்லாத உலகில் வாழ்ந்து வருகிறோம் என்பது உண்மை. அதனால், எப்போதையும் விட மக்களுக்காக போராடும் போராளிகள் அதிகம் தேவைப்படுகிறார்கள். நேரடியான தெளிவான செயல்பாடுகளுக்கு ஸ்கை பெர்ரிமன் போன்ற ஒருவர் தேவைப்படுகிறார். கெல்லி ராபின்சன் சாண்ட்ரா டயஸ் sandra diaz இயற்கை பன்மைத்துவ போராளி ஒர...

டைம் - செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் - இஸ்மானே எலோஃபி, பேராசிரியர் ரிச்சர்ட் தாம்சன்

படம்
    டைம் - செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் இஸ்மானே எலோஃபி உலகமெங்கும் மக்கள் உணவு தட்டுப்பாட்டால் தடுமாறி வரும்போது, சிஜிஐஏஆர் அமைப்பின் வழியாக உழைத்து புதிய வழிகளை தேடியவர் இஸ்மானே. வறுமையைக் குறைக்க, உணவுப் பாதுகாப்பை அதிகரிக்க, ஊட்டச்சத்துக்களை கூட்ட முயன்றார். இவரின் வழிகாட்டுதலில் அந்த அமைப்பு மூலம் வளமிழந்த மண்ணை மீட்பது, ஆரோக்கியமான முறையில் பயிர்களை வளர்ப்பது ஆகிய பணிகள் சிறப்பு அடைந்தன. இஸ்மானே, முன்னர் ஐ.நாவின் உணவு பாதுகாப்பு அமைப்பில் பணியாற்றியவர் என்பதால், அவருக்கு புதிய பணிவாய்ப்பில் இருந்த சவால்கள் தெரியும், எனவே, அவற்றைத் தீர்க்கும் பல்வேறு சிந்தனைகளைக் கொண்டிருந்தார். உலகம் முழுக்க உணவு விநியோகம் என்பது நம்பகத்தன்மையோடும், இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்திலும் அமைந்துள்ளது.  இதன் விளைவாக, எதிர்காலத்தில் எந்த குழந்தையும் பட்டினியோடு இருக்காது எனும் நம்பிக்கை உருவாகிறது. -பில்கேட்ஸ் ismahne elouafi ----------------------------------------------- richard thompson ரிச்சர்ட் தாம்சன் கடல் உயிரியலாளரான ரிச்சர்ட், 1993ஆம் ஆண்டு கடல் அலைகளில் சிறிய பிளாஸ்டிக்...