இடுகைகள்

வான்கா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநல குறைபாடுகளுக்கும், கிரியேட்டிவிட்டுக்கும் என்ன தொடர்பு?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள்  மிஸ்டர் ரோனி வான்காவுக்கு என்ன வகையான உளவியல் குறைபாடு? டச்சு ஓவியர் வின்சென்ட் வான்கா பற்றி அறிந்திருப்பீர்கள். வாழும்போது பெரிதாக வரைந்த ஓவியங்கள் விற்கப்படவில்லை. வறுமையில் வாழ்ந்தவர் , தன்னைத்தானே கொன்றுகொள்ள முயன்று 37 வயதில் வெற்றியடைந்தார். அவரது மனநிலை என்ன, பிரச்னை என்ன என்பதை ஆய்வாளர்கள் அவர் எழுதிய கடிதங்கள் வழியாக புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.  வான்கா, அப்சின்த் என்ற ஆல்கஹால் பானத்தை அருந்தி வந்தார். இதனால் மனநிலையில் திடீரென்ற உற்சாகம், ஆர்வம் ஏற்பட்டுவந்தது. அவருக்கு வலிப்பு, பைபோலார் டிஸார்டர் குறைபாடு இருக்கலாம் என உளவியலாளர்கள் கருதுகிறார்கள். வான்காவின் சகோதரிக்கு ஸிசொபெரெனியா குறைபாடு இருந்தது. அவர் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக வைக்கப்பட்ட வரலாறும் உள்ளது.  மனநல குறைபாடுகளுக்கும், கிரியேட்டிவிட்டுக்கும் என்ன தொடர்பு? புதுமைத்திறன் கொண்ட மனிதர்களுக்கு மனநல குறைபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை வைத்து தொடர்பை உளவியலாளர்கள் உருவாக்கி பார்க்கிறார்கள். பொதுவாக எழுத்தாளர்களுக்கு மனநிலை சட்டென மாறுவது, மன அழுத்தம் கொள்வது, ...

வேதிப்பொருட்கள் பற்றிய சுவாரசிய தகவல்கள்!

படம்
வின்சென்ட் வான்கா வரைந்த சூரியகாந்தி தோட்ட ஓவியத்தைப் பார்த்திருப்பீர்கள். அது வரையப்பயன்படுத்தி பெயின்டை குடித்து தற்கொலை செய்துகொள்ள வான்கா நினைத்தார். அந்த பெயின்டில் குரோமியம் நச்சு இருந்தது. நாம் வீடுகளில் பயன்படுத்தும் இயற்கை எரிவாயு, வெப்பமயமாதலுக்கு காரணமாக உள்ளது. இதற்கு மாற்று ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதுதான். பலரும் குளிக்கும் நீச்சல் குளங்களில் நுண்ணுயிரிகள் ஏராளமாக வாழ வாய்ப்புள்ளது. அவற்றை அளிக்க குளோரினை தூள் வடிவில் பயன்படுத்துகிறார்கள். இதன்மூலம் பாக்டீரியாக்களை அழிக்கலாம். காட்மியம் நச்சுத்தன்மை கொண்டது. எனவே பல்வேறு பொருட்களைத் தயாரிப்பவர்கள் அதனை கைவிட்டு வருகின்றனர். ஆனால் சோலார் பேனல்களில் காட்மியத்தை முக்கியமான பகுதிப்பொருட்களாக சேர்க்கின்றனர். இதற்கு மாற்று கண்டறியப்படவில்லை.