மனநல குறைபாடுகளுக்கும், கிரியேட்டிவிட்டுக்கும் என்ன தொடர்பு?
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
வான்காவுக்கு என்ன வகையான உளவியல் குறைபாடு?
டச்சு ஓவியர் வின்சென்ட் வான்கா பற்றி அறிந்திருப்பீர்கள். வாழும்போது பெரிதாக வரைந்த ஓவியங்கள் விற்கப்படவில்லை. வறுமையில் வாழ்ந்தவர் , தன்னைத்தானே கொன்றுகொள்ள முயன்று 37 வயதில் வெற்றியடைந்தார். அவரது மனநிலை என்ன, பிரச்னை என்ன என்பதை ஆய்வாளர்கள் அவர் எழுதிய கடிதங்கள் வழியாக புரிந்துகொள்ள முயல்கிறார்கள்.
வான்கா, அப்சின்த் என்ற ஆல்கஹால் பானத்தை அருந்தி வந்தார். இதனால் மனநிலையில் திடீரென்ற உற்சாகம், ஆர்வம் ஏற்பட்டுவந்தது. அவருக்கு வலிப்பு, பைபோலார் டிஸார்டர் குறைபாடு இருக்கலாம் என உளவியலாளர்கள் கருதுகிறார்கள். வான்காவின் சகோதரிக்கு ஸிசொபெரெனியா குறைபாடு இருந்தது. அவர் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக வைக்கப்பட்ட வரலாறும் உள்ளது.
மனநல குறைபாடுகளுக்கும், கிரியேட்டிவிட்டுக்கும் என்ன தொடர்பு?
புதுமைத்திறன் கொண்ட மனிதர்களுக்கு மனநல குறைபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதை வைத்து தொடர்பை உளவியலாளர்கள் உருவாக்கி பார்க்கிறார்கள். பொதுவாக எழுத்தாளர்களுக்கு மனநிலை சட்டென மாறுவது, மன அழுத்தம் கொள்வது, பைபோலார் டிசார்டரில் மாட்டி இறுதியாக தற்கொலை செய்துகொள்வது நடக்கிறது. நாவலாசிரியர்களான வர்ஜினாய வுல்ப், எர்னஸ்ட் ஹெமிங்வே ஆகியோர் இறுதியாக தற்கொலை செய்துகொண்டனர். கவிஞர்களான அன்னா செக்ஸ்டன், சில்வியா பிளாத்தும் தற்கொலையை தேர்ந்தெடுத்தனர். உச்ச எழுச்சி கொண்ட மனநிலையில் எழுத்தாளர்கள், தங்கள் சிறந்த படைப்புகளை எழுதுகிறார்கள். இப்படியான மனநிலை ஹைப்போமேனியா என்று அழைக்கப்படுகிறது. அதுவே மனநல குறைபாடுதான். பைபோலார் குறைபாடு கொண்டவர்கள் அந்த நிலையிலும் சிறந்த எழுத்தாற்றல் கொண்டவர்களாக செயல்பட்டு உள்ளனர்.
ஓசிடி என்றால் என்ன?
திரைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். ஓசிடி உள்ளவர்கள் பொருட்களை குறிப்பிட்ட வரிசையில் ஒழுங்குபடுத்துவார்கள். அதை கலைப்பது அவர்களை பதற்றத்திற்கு உள்ளாக்கும். வீட்டை பூட்டினால் அதை சோதித்துக்கொண்டே இருப்பார்கள். குளித்தால் அதை நீண்ட நேரம் செய்வார்கள். உண்மையற்ற, அதீத பயம், கலப்பட பயம், அறத்திற்கு புறம்பான செயலை செய்கிறோமோ என்ற பதற்றம் ஓசிடி உள்ளவர்களுக்கு இருக்கும். அவர்கள் மனதில் ஒன்றை நம்புவார்கள். அதை உண்மையோ பொய்யோ என ஆராயாமல் அப்படியே கடைபிடிப்பார்கள். ஒன்றின் மீது எல்லையில்லாத பற்று கொண்டு செயலை திரும்ப திரும்ப செய்துகொண்டே இருப்பார்கள். செயலுக்கு எந்த அர்த்தமும் இருக்காது. அதை பிறர் சொன்னால் கேட்க மாட்டார்கள்.
மனநல குறைபாடுகளுக்கு என்ன காரணம்?
மருத்துவ ஆராய்ச்சிப்படி, ஒருவரி்ன் சிறுவயது அமைதியானதாக, அன்பானதாக அமைந்தால் அவர் மனநல பிரச்னைகளில் எளிதாக சிக்க மாட்டார். எப்படி இருந்தாலும் அலுவலகம், வேலை என செல்லும்போது மனச்சிதைவு கொண்டவர்களை சந்திக்க நேரிடும். அப்போதெல்லாம் கவனமாக அங்கிருந்து விலகிவிடுவது உடலுக்கும், மனதுக்கும் நல்லது. பொறுத்துக்கொள்ள முடியாத சூழல்களில் மன அழுத்தம், மனச்சோர்வு ஏற்படும். அதுவே தொடரும்போது குறைபாடாக மாறும். தொடர்புடையவர் அறிய முடியாது. அறிகுறிகளை பிறர் அறிந்துகொள்ளலாம்.
நன்றி
டக்டக்கோ உலாவி

கருத்துகள்
கருத்துரையிடுக