விவாகரத்திற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன?
அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி
குடும்பம் என்றால் என்ன?
பிறப்பு, தத்து எடுப்பது, திருமணம் ஆகிய உறவுகள் காரணமாக நீண்ட காலமாக ஒன்றாக வாழ்ந்து வரும் நபர்கள், அவர்களி்ன் உறவை குடும்பம் என்று அழைக்கலாம். சட்ட அங்கீகாரம் இல்லாமலும் மனிதர்கள் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். இவர்களையும் குடும்பம் எனலாம். மாற்றுப்பாலினத்தவர்களை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
அமெரிக்காவில் குடும்ப அமைப்பு எப்படி மாறிவருகிறது?
இப்போதும் திருமணம் செய்துகொண்டு வாழ்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஒற்றைப் பெற்றோர் அதிகரித்து வருகிறார்கள். இன்னொருபுறம், திருமணம் செய்யாமலேயே வாழ்பவர்களும் இருக்கிறார்கள். தனிமனித சுதந்திரத்தை அதிகம் எதிர்பார்க்கும் சமூகம், அமெரிக்காவுடையது. எனவே, இங்கு திருமணம் செய்வதும், அதேபோல இணக்கம் இல்லாதபோது விவாகரத்து பெறுவதும் இயல்பானது. கிழக்கு நாடுகளில் நிலைமை வேறுபட்டுள்ளது.
குடும்ப அமைப்பு குழந்தைகளை எப்படி பாதிக்கிறது?
ஒற்றைப் பெற்றோர் வளர்க்கும் குழந்தைகள், பொதுவாக இருவர் வளர்க்கும் பிள்ளைகளை விட அதிகமாக நெருக்கடிகளை எதிர்கொள்கிறார். வறுமை, குறைந்த கல்வி, எளிதாக குற்றம் செய்யத் தூண்டும் சூழல், ஆதரவில்லாத சூழல் என கூறிக்கொண்டே செல்லலாம். திறந்தவெளி சமூகத்தில் மாற்றுப்பாலினத்தவர் இருப்பும் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. அப்பா, அம்மா, பிள்ளை என மூவர்தான் குடும்பம். அதற்கு அதிகமாக குடும்பம் இருக்காது. குடும்ப உறுப்பினர்களும் இருக்க மாட்டார்கள். பெண்களை ஒதுக்கி ஆண்களை மட்டுமே வாரிசாக கருதுவது ஆசிய நாடுகளில் இயல்பானது.தொழில்மய உலகில் பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். இதெல்லாம் குழந்தைகளுக்கு அளவில்லாத அழுத்தங்களை ஏற்படுத்துகிறது.
குடும்பத்திற்கான எல்லைகள் என்றால் என்ன?
குடும்பத்திற்கான எல்லைகள் என்பதை சால்வடோர் மினுசின் என்ற உளவியலாளர் உருவாக்கினார். அதாவது பெற்றோரின் பாலுறவு அல்லது குடும்பத்தின் நிதிநிலைமை பற்றி குழந்தைகளுக்கு தெரியவேண்டியதில்லை. அதோடு குடும்பத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் உள்ள செல்வாக்கு, தகவல், முடிவெடுக்கும் திறன் ஆகியவற்றை வரையறுக்க வேண்டும் என கூறினார்.
விவாகரத்து எப்படி சமூகத்தை மாற்றியுள்ளது?
விவாகரத்து என்பதை பெண்களின் அமைப்பு தொடங்கிவைத்தது என்றாலும் அதற்கான காரணங்கள் ஏற்கெனவே ஆண்களின் மேலாதிக்கம் கொண்ட உறவில் இருந்தன என்பது உண்மை. அமெரிக்காவில் 2004ஆம் ஆண்டுப்படி, நாற்பது வயதான 25 சதவீத ஆண்களும், அதே வயது கொண்ட 30 சதவீத பெண்களும் விவாகரத்து பெறுவது அதிகரித்து வருகிறது. ஒப்பீட்டளவில் முந்தைய காலத்தை விட குறைவு என்றாலும் கூட விவாகரத்து பெறுவது நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. பெண்கள் வேலைக்குச் செல்வது, பொருளாதார பங்களிப்பு, பாலுறவு சார்ந்த பார்வை மாற்றம் ஆகியவை காரணமாக விவாகரத்து என்பது இயல்பானதாக பார்க்கப்படுகிறது.
விவாகரத்திற்கான முக்கிய காரணங்கள் என்னென்ன?
ஆண், பெண் ஆகியோரின் வயது முக்கியப் பங்காற்றுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இருபது வயதுக்குள் திருமணம்செய்பவர்கள் விரைவில் துணையை விவாகரத்து செய்து விடுகிறார்கள். தோராயாக முப்பது அல்லது அதைத் தாண்டி திருமணம் செய்பவர்களின் உறவு நீடிக்கிறது. திருமணத்திற்கு முன்னரே குழந்தை பிறந்து இக்கட்டால் திருமணம் செய்தாலும் அந்த உறவுக்கு ஆயுள் இல்லை. திருமணத்திற்கு பிறகு குழந்தை பிறப்பது, உறவை சமரசம் செய்து தொடர்வதற்கான வாய்ப்பை தருகிறதோ என்னவோ...தொலைதூர உறவு, பொருளாதார நிலையற்ற தன்மை, பெரிய குடும்ப நச்சுத்தன்மை, நம்பிக்கையூட்டும் உறவுகள், முன்மாதிரிகள் இன்மை ஆகியவையும் விவகாரத்திற்கு தூண்டுகின்றன.

கருத்துகள்
கருத்துரையிடுக