சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா?




 சிங்க பலத்திற்கு வெறும் பேரீச்சம்பழ கொட்டை மட்டுமே போதுமா?

அண்மையில் சிங்கவலிமையை மனிதர்களுக்கு கடத்தும் பேரீச்சை பழ பிராண்டு ஒன்றை வாங்கினேன். கால்கிலோ பாக்கெட் 105 ரூபாய். ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற ரீதியில் கடையில் இருந்து தள்ளிவிடப்பட்டுக் கொண்டு இருந்தது. விவகாரம் என்னவென்றால், உண்மையில் அந்த பேரீச்சம்பழம் தரமானதா இல்லையா என்பதுதான். பாக்கெட் பளபளவென அழகாக உருவாக்கி இருந்தனர். விஷயம் வீக்காக இருந்தால் பப்ளிசிட்டி பீக்காக இருக்கும் என்ற தத்துவப்படியே பழ பிராண்டு இருந்தது. 

தேயிலை, காபித்தூளுக்கு கொடுப்பது போல ஜிப்லாக் பாக்கெட்டை தயாரித்து இருந்தார்கள். ஆனால், ஈராக்கில் இருந்து பெறப்படும் பேரீச்சம்பழம் பக்குவப்படுத்தப்பட்டு பாக்கெட்டில் அடைக்கப்டுகிறது. அது எந்தளவுக்கு சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு புத்துணர்ச்சியை தரும்? பழம்தான் புதிதாக இருக்குமா என்ன? அதற்கு எதற்காக ஜிப்லாக் பாக்கெட். வெட்டி விளம்பரம்தான். முக்கியமாக பழத்தை கழுவி சாப்பிடுங்கள் என பான் இ்ந்தியா லெவலில் பன்மொழி முன்னறிப்பு வேறு. ஆனால், தண்ணீரில் கழுவினால் பேரீச்சையில் கொட்டை மட்டுமே மிஞ்சியது. அந்தளவு சேதாரம். பல பழங்கள் நசுங்கி கிடந்தன. இந்த லட்சணத்தில் சிங்க பலத்தை நாம் எப்படி பெறுவது? கொடுத்த காசுக்கு கொட்டைதான் மிச்சமா என விரக்தி தோன்றியது. 

ஜிப்லாக் என்பதெல்லாம் சும்மானாச்சிக்கும் பொருளை விற்க சொல்லும் வெட்டி விளம்பரம்தான். அது புதிதான ஐடியாவும் கிடையாது. ஏற்கெனவே பாக்கெட்டுக்குள் உள்ள பேரீச்சை சுத்தமின்றி அழுக்காக பிசுபிசுப்பாக இருந்தது. கூடவே, காம்புகள்,  இலைகள் சுரண்டு கிடந்தது. கழுவி சாப்பிடவேண்டும் என்ற பன்மொழிகளில் அச்சிட்டார்களே அதற்கான நியாயத்தை செய்திருக்கிறார்கள். இப்படி அசுத்தமாக விற்றுவிட்ட பேரீச்சம்பழத்திற்கு பெரிய விற்பனை பலம். அதன் பாக்கெட் மட்டும்தான். இந்த நிறுவனம் பேரீச்சையில் இன்னும் பல்வேறு பொருட்களை வேறு தயாரிக்கிறார்கள். அதன் தரம் எப்படி இருக்குமோ தெரியவில்லை. எல்லாமே மனிதர்கள் செய்கின்ற சதி. வேறென்ன?

பொதுவாக நிறுவனங்களுக்கு பயன்படுத்திவிட்டு, பொருள் எப்படி இருக்கிறது என மின்னஞ்சல் அனுப்பி தகவல் தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த நிறுவனத்திற்கும் என்னுடைய அனுபவத்தை அனுப்பினேன். நிறுவனம் திருச்சியில்தான் காரியாலயத்தை கொண்டுள்ளது. ஆனால், இப்பதிவை எழுதும் வரையில் எந்த பதிலும் வரவில்லை. நான் அப்படித்தான் பேரீச்சையை அசுத்தமாக விற்பேன். வாங்கினால் வாங்கு இல்லாட்டி அமைதியாக இரு என்பதை தவிர கள்ள மௌனத்திற்கு வேறு  என்ன பொருள் இருக்க முடியும்.  சிலர் பொருட்களை விற்கும்போது சாதுரியமாக வாடிக்கையாளர் மின்னஞ்சல் அனுப்பி கருத்து கூறுவதற்கான முகவரியையே பிரசுரிக்காமல் விடுகிறார்கள். பதிலே கூறப்போவதில்லை அப்புறம் எதற்கு மின்னஞ்சல் முகவரியை அச்சிடவேண்டும் என நினைக்கிறார்கள். அராஜவாதிகள்தான். ஆனால் இவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. நோக்கத்தை டீகோட் செய்துவிட முடிகிறது. 

இன்றைக்கு பெருநிறுவனங்கள் புதுமாதிரியான உத்தியை கையாள்கின்றன. அதாவது நேர்மறையாக பாராட்டினால் உடனே அதற்கு பதில் அளிப்பது, குறைகளை சொன்னால் நவ துவாரங்களையும் பொத்திக்கொண்டு பதில் அளிக்காமல் இருப்பது. எப்படி இப்படி வெட்கமின்றி காசு சம்பாதிக்கிறார்களோ தெரியவில்லை. செய்யும் தொழிலில் நேர்மை இல்லை. வாங்கும் மக்கள் பற்றி அணுவளவும் கவலை இல்லை. யாரைத்தான் இவர்கள் கவனம் கொள்கிறார்களோ தெரியவில்லை. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!