குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் கேலி சித்திரவதைக்கு உள்ளாவது ஏன்?


 அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

குழந்தைகள் கேலி சித்திரவதையில் ஈடுபடுவது எதற்காக?

உளவியல் ரீதியாக சில குழந்தைகள் எதிர்பார்த்த அங்கீகாரம், அன்பு கிடைத்திருக்காது. கோபம், ஆக்ரோஷன், வன்முறை மூலம் தங்களுக்கான புகழை, பெருமையை அடைய முயல்கிறார்கள் இதன்பொருட்டே கேலி சித்திரவதையை தொடங்குகிறார்கள். பள்ளிகளில் மாணவிகளில் சிலரும் இதுபோல கேலி சித்திரவதையை செய்து புகழ்பெற முயல்வதுண்டு. அதெல்லாமே வெட்டிப்பெருமைதான். மாணவர்களில் பத்து முதல் இருபது சதவீதம் பேர் இப்படி பிறரை கேலி சித்திரவதை செய்பவர்களாக இருக்கிறார்கள். இப்படி செய்வதை ஏற்க கூடாது. முறையாக புகார் அளித்து பாதிக்கப்படுபவர்களை காக்க முயலவேண்டும். இதன் வழியாக கேலி சித்திரவதை குறையும். 

குறிப்பிட்ட மாணவர்கள் மட்டும் கேலி சித்திரவதைக்கு உள்ளாவது ஏன்?

சில பெற்றோர்கள் குழந்தையை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் செல்லம் கொடுத்து வளர்ப்பார்கள். இப்படி வளர்பவர்களுக்கு சுய நம்பிக்கை, துணிச்சல், தைரியம் இருக்காது. தன்னம்பிக்கை குறைவாக, கூச்ச சுபாவிகளாக இருப்பார்கள். இப்படியானோரை பள்ளியில் கேலி சித்திரவதை குழு அடையாளம் கண்டு அடித்து துன்புறுத்தி பணம் பிடுங்கும். தனக்கு நேரும் அநீதிக்கு எதிராக அவர்கள் போராட முனையவேண்டும். அவர்களை அவர்களேதான் காத்துக்கொள்ள வேண்டும். 

இளையோர் வினோதமாக முடி, உடை அலங்காரம் செய்து கொள்வது எதற்காக?

வினோதமாக உடையணிபவர்களின் பெற்றோர், எப்படி உடையணியவேண்டும் என சொல்லிக்கொடுக்காமல் இல்லை. அப்புறம் ஏன் பாடகர் பால் டப்பா போல உடையணிய வேண்டும் என நினைக்கலாம். இதெல்லாமே ஒருவர் தனது சுய அடையாளத்தை தேடும் போராட்டம். இப்படி இளைஞர்கள் தங்களுக்கென தேடிய அடையாளத்தை பேஷன் உலகமே தனக்குள் எடுத்துக்கொண்டு உடைகளில் மாறுதல்களை செய்ய தொடங்கிய கதைகள் வரலாற்றில் உண்டு. கண்களில் லென்ஸ் அணிவது, காது, உதடு, மூக்கு, தொப்புள் ஆகிய இடங்களில் வளையம் அணிவது எல்லாமே புரட்சிகரமான பிம்பம். தலைமுடியை பூந்தொட்டி வடிவத்தில் ஆக்கிக்கொள்வது, வண்டியில் சைலன்சரை கழற்றிவிட்டு ஓட்டுவது, நெடுஞ்சாலையில் திடீரென வாகன பந்தயத்தை தொடங்குவது என நிறைய விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். 

 சமூக கடிகாரம் என்றால் என்ன?

உளவியலாளர் பெர்னிஸ் நியூகார்டன் என்பவர், சமூக கடிகாரம் என்ற கருத்தை உருவாக்கினார். ஒருவர் வளர்ந்து கல்வியை நிறைவு செய்வது, வேலை பெறுவது, திருமணம் செய்வது, குழந்தைகளை பெறுவது. குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட இலக்குகளை அடைவது என புரிந்துகொள்ளலாம். கலாசாரம் சார்ந்து சமூக கடிகாரம் மாறுபடலாம். வயது சார்ந்து குறிப்பிட்ட இலக்குகளை எட்டாமல் பின்தங்குபவர்கள் தன்னம்பிக்கை இழப்பார்கள், சுற்றியுள்ள சமூகத்தால் பல விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும். சமூக கடிகாரங்கள் சில சமயங்களில் எதிர்பார்த்தபடி வேலை செய்யாமலும் போகும். 2007ஆம் ஆண்டு, அமெரிக்காவில் 30-35 வயதான திருமணமாகதவர்களின் எண்ணிக்கை 28 சதவீதத்திற்கும் அதிகம்.

கல்லூரியில் பட்டம் பெறும் மேடை, திடீரென நாடகமேடையாக மாறுவது ஏன்?

கல்லூரியில் நான்காண்டு படித்தவர்கள் பட்டம் பெற்றவுடன் நடைமுறையை எதிர்கொள்ளப்போகிறார்கள். டிராகனாக இருந்தவர்கள், கோழிகுஞ்சாக நசுங்கப்போகிறார்கள். எனவே, பொறுப்பு, வேலை, சம்பளம், குடும்பம் என பலவும் பீதியூட்டுவதால் பட்டமேடையில் கரைந்தழுகிறார்கள். சன்டிவி சீரியலை விட மோசமாக நாடகம் அரங்கேறுகிறது. இதுதொடர்பாக இரு ஆங்கில திரைப்படங்களை நீங்கள் பார்க்கலாம். இலக்கின்றி சுற்றித் திரிந்த நாட்கள் இனி கிடையாது. கையூனிக் கரணம் போடத்தெரியலையே என்று புலம்பினாலும் ஒத்துக்கொள்ள தயாராகயிருந்தும் கையாலாகதவன் என்றென்னை ஒருநாளும் சொன்னதில்லை என்ற யூமா வாசுகியின் கவிதை நினைவுக்கு வருகிறது. 

கிளர்க்ஸ் என்ற திரைப்படம், ரியாலிட்டி பைட்ஸ் என்ற திரைப்படம் இரண்டுமே பட்டதாரிகளின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிற ஆங்கில திரைப்படங்கள். இவை மக்களிடையே பிரபலமானவையும் கூட.







   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!