திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா?

 



அறிவியல் கேள்வி பதில்கள்
மிஸ்டர் ரோனி

திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா?

பெரும்பாலான திருமணங்களில் பாலுறவுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. திருமணம் செய்வதே வம்ச விருத்திக்குத்தானே? திருப்திகரமான பாலுறவு தம்பதிகளுக்கு நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது. ஆண், பெண் என இருவரும் உடல், சிந்தனை அளவில் வேறுபட்டவர்கள். பாலுறவில் ஏற்படும் திருப்தி, குறைகளை களைய உதவுகிறது. அனைத்து தம்பதிகளும் பாலுறவுக்கு முக்கியத்துவம் தருகிறார்களா என்றால் கிடையாது. வயது முதிர்ச்சி அடையும்போது, ஒருவரின் பாலுறவு ஆர்வம், வேகம், திறன் குறையும். பாலுறவு நல்ல முறையில் அமைந்தால் திருமண தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஒத்திசைந்து போக வாய்ப்புண்டு. சுகர் டாடிக்கள் காசு கொடுத்து கல்லூரி பெண்களை தடவி மகிழ்வது கூட பாலுறவின் இன்பத்தை கொஞ்சமேனும் தொட்டுப் பார்க்கலாமே என்றுதான். 

திருமண உறவில் பாலின பாத்திரங்கள் எப்படி செயல்படுகின்றன?

ஆண் மேலாதிக்க சமுதாயத்தில், ஆண்தான் குடும்பத்தலைவர். பெண், அவனுக்கு உதவி செய்யும் துணைப்பாத்திரம்தான். தமிழ் திரைப்படங்களில் வரும் கலையரசன், வாகை சந்திரசேகர் போல குடும்பத்திற்காக உயிரைக் கொடுத்து செத்துப்போகவேண்டும் என பெண்களை எதிர்பார்க்கிறார்கள். ஆண், குடும்பத்திற்காக வேலை செய்து சம்பாதிக்கவேண்டும். நோய் நொடி என்றால் அவன்தான் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பாதுகாத்து பராமரிக்க வேண்டும். 

பெண்ணுக்கான கடமை,வீட்டில் உள்ள வேலைகளை சம்பளம் பெறாமல் செய்யவேண்டும். பாலுறவு மகிழ்ச்சியை கணவனுக்கு வழங்கவேண்டும். பிள்ளைகளை பாதுகாத்து வளர்க்க வேண்டும். பாசிச மதங்கள் சில, பெண்களை சொத்தாக கருதுவதால், பெண்களுக்கு எந்த அதிகாரமும், பொருளாதார பலமும் இருக்கக்கூடாது. கருப்பை நிறைய குழந்தைகளை பெற்று தந்தால் போதும் என பிரசாரம் செய்துவருகின்றன. 

மேற்குலகில் ஆண்களும், பெண்களும் வேலைக்கு செல்கிறார்கள். எந்த ஆணும், திருமணம் செய்தால் வேலையை விட்டுவிடவேண்டும். குடு்ம்பத்தைப் பார்த்துக்கொண்டு காசு வேண்டுமென்றால் கையைக்கட்டி நின்று கேட்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பதில்லை. இந்தியா போன்ற மத அடிப்படைவாத நாடுகளில் பெண்கள் வேலைக்கு போனாலும் அவர்கள், ஆண்கள் செய்யும் வேலையை செய்தாலும் சம்பளத்தை குறைத்தே கொடுக்கிறார்கள். வீட்டு வேலைகளை செய்தாலும் அவர்களுக்கு அதற்குரிய மதிப்போ, பணமோ அளிப்பதில்லை. கூலியில்லாத வேலைக்காரி என்பதாக பெண்களின் நிலை உள்ளது. 

பாலின பாத்திரங்களின் வேறுபாடு என்ன மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது?

மேற்குலகில் பெண்களுக்கு உரிமைகளை அளிக்கும்படி பெண்கள் அமைப்புகள் போராடத் தொடங்கின. இதன் விளைவாக, நிறைய விவாகரத்துகள் நடந்தன. எண்பதுகளிலும் விவாகரத்துகளின் எண்ணிக்கை கூடியது. குறையவில்லை. பிறகு, பெண்கள், அலுவலக வேலைக்கு செல்லத் தொடங்கினர். தனித்துவமான அணுகுமுறை, மனப்பாங்கு மேலோங்கியது. இதன் காரணமாக, சமூகத்தில் சமத்துவமான பார்வை ஏற்படத் தொடங்கியது. 

திருமணத்தில் கலாசார வேறுபாடுகள் உள்ளதா?

இல்லாமல் எப்படி? சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் குழு கலாசார முறை உள்ளது. இங்கு ஒரு பெண்ணை மணப்பது சொத்து, பணம், பிள்ளைகளைப் பெறும் திறன், சமூக அழுத்தம் என காரணங்கள் உள்ளன. ஆனால், அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தனிமனித கலாசாரத்திற்கு அதிக மதிப்பளிக்கிறார்கள். இங்கு, ஒருவர் திருமணம் செய்ய எதிர் பாலினத்தவர் மீது காதல் உருவாகவேண்டும் என எதிர்பார்க்கிறார். ஆர்வம், ஈடுபாடு, பொறுப்புணர்வு சில காலம் வாழ்ந்தபிறகும் கரைந்துபோகாமல் இருந்தால் திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்கள் குழந்தைகளை குறைவாக பெற்றுக்கொள்கிறார்கள். திருமண உறவு பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துகொண்டு அவரவர் வாழ்க்கையை நிம்மதியாக வாழ்கிறார்கள். 


கர்ப்பிணிகள் உடல் ரீதியாக சந்திக்கும் பிரச்னைகள் என்னென்ன?

குழந்தை வயிற்றில் இருக்கும்போது சில பெண்களுக்கு நீரிழிவு பிரச்னை ஏற்படுகிறது. ஆள் ஒல்லியாக இருப்பார்கள். ஆனால் உடலில் நீரிழிவு நோய் உருவாகிவிடும். அடுத்து, உடல் மாறுதல். அதிக எடை கொண்டவர்களாக மாறுவார்கள். குழந்தை பெற்றபிறகு உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என இருந்தால் மட்டுமே அதிக எடையை, உடல் பருமனை குறைக்க முடியும். கர்ப்பிணியாக இருக்கும்போது தொடக்கத்தில் வாந்தி, குமட்டல், காலையில் எழுந்தால் நடமாடுவதே கடினமாக இருக்கும். பின்னர், குழந்தை வளரத் தொடங்கியபிறகு தூங்குவதற்கு சிரமமாக இருக்கும். நடமாட்டம் குறைந்துபோகும். குறிப்பிட மறந்துவிட்டேனே, மனநிலை மாறிக்கொண்டே இருக்கும். 






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!