இடுகைகள்

ராஜசேகர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி!

படம்
  எதிரிகளை அழிக்க தனது குடும்பத்தை நண்பர்களை இழந்து தன்னையே தியாகம் செய்யும் அதிகாரி! மகான்காளி ராஜசேகர், மாதுரிமா இயக்கம் கார்த்திகேயன் இசை சின்னா என்கவுன்டர் சிறப்பு அதிகாரியான மகான்காளி, நாயக், இரு மாஃபியா தலைவர்களுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தனது குடும்பத்தை இழக்கிறார். பிறகு தனது குழுவை பலி கொடுக்கிறார். இறுதியாக தன்னையே தியாகம் செய்து எதிரிகளை அழித்தொழிக்கிறார். மேற்சொன்ன அம்சங்கள்தான் படத்தில் காட்டப்படுபவை. ராஜசேகரின் படங்கள் பெரும்பாலும் காவல்துறையின் வன்முறையை நியாயப்படுத்துபவை. நீதிமன்றத்திற்கு நியாயம் பெறும் சமயத்தில் சூது நிகழ்ந்துவிடும். பிறகு என்ன மீண்டும் துப்பாக்கியை தூக்கி நியாயத்தை நிலைநாட்டுவார். இவரது மகான்காளி என்ற இந்தப்படம் பார்த்து முடித்தபிறகு, மனதில் ஒரு அமைதியின்மை, விரக்தி பரவுகிறது. ஒருவகையில் காட்சி ரீதியாக சொல்ல நினைத்த விஷயங்களை கூறிவிட்டார் எனலாம். படத்தின் திரைக்கதையில் நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதாவும் பங்களித்திருக்கிறார். படத்தில் மாதுரிமாவின் பங்கு பாடல்களுக்கு மட்டும்தான். அவரை எப்படி பயன்படுத்துவது தெரியாமல், மானபங்கம் செய்யும் காட்சிகளில் ...

முஸ்லீம்களை தீவிரவாதிகளாக்கும் அமைச்சர், காவல்துறை உயரதிகாரி, தீவிரவாதி ஆகியோரைக் கொன்றால் வாய்மை வென்றுவிடும்!

படம்
 சத்யமேவ ஜெயதே தெலுங்கு ராஜசேகர், சிவாஜி, சஞ்சனா, ஷெரில் பின்டோ இசை சின்னா இயக்கம் ஜீவிதா அரசு மருத்துவர் இக்பால் அன்சாரி என்பவர், தீவிரவாதி என குற்றம்சாட்டப்படுகிறார். அவரை குறிப்பிட்ட இடத்திலுள்ள நீதிமன்றத்திற்கு கூட்டிச்செல்ல வேண்டும். அதற்கு நாயகன் உட்பட சில அதிகாரிகளை தேர்ந்தெடுத்து குழுவை தயாரிக்கிறார்கள். அக்குழு, இக்பாலை நீதிமன்றத்தில் சமர்பித்ததா இல்லையா என்பதே கதை. மீண்டும் என்கவுண்டர் அதிகாரியாக ராஜசேகர் நடித்திருக்கிறார். இம்முறை படத்தில் சிவாஜிக்கு இடம் கொடுத்திருக்கிறார்கள். அவரும் ஷெரில் பின்டோவுக்கும் பாடல் காட்சிகள், கிளு கிளு காட்சிகள், காமெடி ஆகியவை உண்டு. குழுவிலுள்ளவர்களின் குடு்ம்பங்களை காட்டும்போதே, இவர்களை கொத்துக்கறியாக்கப் போகிறார்கள் என்று தெரிந்துவிடுகிறது. அதேதான் அதேதான். படத்தில் பாஸ்டர்ட் என்ற கெட்ட வார்த்தையை மட்டும் நாயகன் எத்தனை முறை சொல்லியிருப்பார்  என்று எண்ண முடியாது. அத்தனை முறை விரக்தி அடைகிறார். கையாலாகாத்தனம், இயலாமையில் அலறிக்கொண்டே இருக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கென இருக்கும் ஒரே ஆன்மா சிவாஜி மட்டுமே. காதல் என்ற பெயரில் மகாலட்சுமி...

கொலையைக் கண்டுபிடிக்கும் தில் போலீஸ் - கல்கி படம் எப்படி?

படம்
கல்கி  2019 - தெலுங்கு இயக்கம் ஒளிப்பதிவு இசை கொல்லாப்பூர் என்ற ஊரில் நடைபெறும் கொலை வழக்குதான் கதை. அங்கு நரசப்பா என்பவரும் அவரது தம்பியும்தான் கோலோச்சுகிறார்கள். ஊரில் அவர்களை மீறி யாரும தொழில் செய்ய முடியாது. இந்த நேரத்தில் நரசப்பாவின் தம்பி ஊரிலுள்ள கோவில் மரத்தில் கட்டி வைக்கப்பட்டு எரிக்கப்படுகிறார். கூடவே அவரின் நண்பர்களும் இதில் பலியாகிறார்கள். யார் இந்த கொலையை செய்தது என்பதுதான் கதை.   886 × 1024 கருடவேகாவுக்குப் பிறகு டாக்டர் ராஜசேகரின் படம். நாயகனுக்கான பில்டப்புகள் இருந்தாலும் அதைவிட அசத்துவது கதைதான். இதில் அம்சமாக பொருந்துகிறார் டாக்டர் ராஜசேகர். முதலில் என்ன இவர் சும்மா ஊர் சுற்றுகிறார், கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்டுக்கொண்டிருக்கிறார் என்ற அனைவருக்கும் தோன்றும். ஆனால் அதற்குப்பிறகுதான் ஏராளமான ட்விஸ்டுகள் உள்ளன. ஆஹா படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் பிரமாதமாக பொருந்தியுள்ளன. அசோக்பாபு என்ற கதாபாத்திரம் வில்லனாக மாறுவது சூப்பர் ட்விஸ்ட். அதிலும் இறுதி பதினைந்து நிமிடம் அனைத்து முடிச்சுகளையும் சரசரவென அவிழ்க்கிறது. பின்னணி இசை, ஒளிப்பதி...