இடுகைகள்

அரிஸ்டாட்டில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விலங்கியலின் தந்தை யார்?

 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி ஹைட்ரோபோனிக்ஸ் என்றால் என்ன? மண்ணில் செடிகள் நடப்படுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் ஹைட்ரோபோனிக்ஸ் முறையில் செடிகள், மண் இல்லாமல் வளர்க்கப்படுகின்றன. பொட்டாசியம், சல்பர், மெக்னீசியம். நைட்ரஜன் ஆகிய வேதிப்பொருட்களை திரவ வடிவில் செடிக்கு வழங்குகிறார்கள். நவீன ஹைட்ரோபோனிக் முறையை உருவாக்கியவர், ஜூலியஸ் வான் சாக்ச்ஸ். இவர் தாவரங்களின் ஊட்டச்சத்து பற்றி ஆய்வுகள் செய்து வந்தவர். விதைகளை எத்தனை ஆண்டுகள் கெடாமல் காக்க முடியும்? காற்று படாத பெட்டியில் விதைகளை பாதுகாப்பாக வைத்திருந்தால் அவற்றைக் காக்கலாம். பெரும்பாலும் காய்கறி விதைகளை ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை பத்திரப்படுத்தலாம். இகிபெனா என்றால் என்ன? பாறைகளில் கற்களில் பூக்களை செதுக்கும் கலை, இதை தொடக்கத்தில் வீரர்கள், புகழ்பெற்ற குடும்பத்தினர் பழகினர். ஆனால், இன்று காலப்போக்கில் ஆண்கள் மட்டுமே செய்து வந்த கலையை பெண்களும் செய்து வருகிறார்கள். பூக்களை அலங்காரம் செய்வது என்பதுதான் இகிபெனாவின் மூலம். ஒத்திசைவு, அழகு, சமநிலை என்பதை அடிப்படை சூத்திரமாக கொண்டது. 1400 ஆண்டுகளாக இக்கலை ஜப்பானில் புகழ்பெற்ற...

வன்முறையைத் தூண்டுகிறதா இசை?

படம்
பிபிசி மெட்டல் மியூசிக் வன்முறையைத் தூண்டுகிறதா? பொதுவாக ஹெவி மெட்டல் எனும் இசைவகை, வன்முறை கொண்டதாக பலரும் பார்க்கிறார்கள். டாட்டூ குத்தியபடி கிடாரின் கம்பிகள் அறுந்துவிழும் வேகத்தில் இசைக்கும் இசையை பலரும் கேட்டு கெட்ட ஆட்டம் போடுவது உலக வழக்கம். அப்போது அத்தனை பேரின் மனநிலையும் வன்முறையை நோக்கித்தான் குவிகிறதா? என்று ஆராய்ந்தபோது கிடைத்த முடிவுகள் அப்படி அல்ல என்று கூறிவிட்டன. பார்க்கும் படம், சாப்பிடும் உணவு ஆகியவற்றை வைத்து ஒருவரின் கேரக்டரை வரையும் பழக்கம் இந்தியாவில் மட்டும் அல்ல. உலகம் முழுக்கவே உண்டு. இசை கேட்பதும் அதில் ஒன்றுதான். வன்முறையான தீமில் இசை கேட்பது, மனதில் வன்முறையை ஏற்படுத்தும் என்பது தவறு மேக்குவார் பல்கலைக்கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. வறுமை, உறவு, போதைப் பொருட்கள் பயன்பாடு, தனிமை உணர்ச்சி ஆகியவையும் இதனோடு தொடர்பு படுத்தப்படுகின்றன. அரிஸ்டாட்டில் இதுபற்றி, ஒருவர் நீண்டநாட்கள் குறிப்பிட்ட வகையிலான இசையைக் கேட்பது அவரின் ஆளுமையை வெளிப்படுத்துவதோடு,  உள்மன ஆசைகளையும் கூறுகிறது என்கிறார். ஆனால் இந்த கருத்துகளையும் தாண்டி மெட்டல் இசை கேட்...