இடுகைகள்

விளம்பரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரா பிரஸ் நூல்கள் - அமேசான் வலைத்தளம் மற்றும் கோமாளிமேடை

  ஆரா பிரஸ் நூல்கள்  - அமேசான் வலைத்தளம் 1.ஜனநாயக இந்தியா தமிழில் நேருவின் உரைகள் ச.அன்பரசு-வின்சென்ட் காபோ 2. நெ.1 சமூக தொழில் அதிபர் சமூகத்தை மேம்படுத்தும்  தொழில்களை தொடங்குவது பற்றிய நூல் அன்பரசு சண்முகம் 3. நட்பதிகாரம் புனைவு கடிதங்கள் அரசு கார்த்திக் - கா சி வின்சென்ட் 4. பூக்களின் மத்தியில் ஒரு கோப்பை திராட்சை ரசம் ஹூவாய் (சீனா) தொலைத்தொடர்பு நிறுவனத்தின் வரலாறு அன்பரசு சண்முகம் 5. அசுரகுலம் -1(6 தொடர்வரிசை நூல்) கொலைகாரர்களின் கதை அசுரகுலம் 2 குற்றங்களின் முன்கதை அசுரகுலம் 3 ரத்தசாட்சி அசுரகுலம் 4 மனமெனும் இருட்குகை அசுரகுலம் 5 ரகசிய நரகம் அசுரகுலம் 6 உயிர்வேட்டை வின்சென்ட் காபோ  6. மயிலாப்பூர் டைம்ஸ்  அனுபவக் கட்டுரைகள்  லாய்ட்டர் லூன் 7. உதயமாகும் பேரரசன் ஆனந்த் மகிந்திராவின் வெற்றிக்கதை அன்பரசு சண்முகம் 8. நீரெல்லாம் கங்கை கடிதங்கள்  அன்பரசு 9. பன் பட்டர் ஜாம் 1,2 அரசியல் பகடி  விக்டர் காமெஸி - ரோனி அஜித் - ஆசாத்  10. ஒவ்வாமை ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வு நூல் அரசு கார்த்திக் 11. டியர் ரிப்போர்டர் பத்திரிகையாளர்களுக்கான வழிகாட்டி நூ...

ஒரு துறையில் வெற்றி பெற்றவர்களை மக்கள் நம்புவது ஏன்?

படம்
  psychology  mr roni ஜான் வெய்ன் கேசி, ஜெப்ரி டாமர் ஆகிய தொடர் கொலைகாரர்களின் உளவியல் என்ன? குற்றச்சம்பவங்கள் பத்திரிகையில் சிறப்பாக விற்பதால், அதை பிரசுரித்து விற்க நாளிதழ்கள், டிவிகள் போட்டி போடுகின்றன. அந்த வகையில் பிரபலமானவர்கள்தான் மேலேயுள்ள இரு தொடர் கொலைகாரர்களும். கேசி எழுபதுகளில் பிரபலமானவர். டாமர் தொண்ணூறுகளில் பேசப்பட்ட ஆள். கேசி, பாலியல் ரீதியான முப்பது ஆண்களை தாக்கி கொன்றார். அவர் குழந்தை போல ஓவியங்களை வரைந்து கொண்டிருந்தார். அவரின் ஆளுமையில் இரண்டு பக்கங்கள் இருந்தன. ஒன்று குழந்தை போல ஓவியங்களை வரைந்துகொண்டிருப்பது. இரண்டாவது, கொடூரமான கொலைகாரர். டாமர் ஒரு குடிநோயாளி. உளவியல் ரீதியாக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தார். இளம் வயதில் பாலியல் ரீதியான பாதிக்கப்பட்டிருந்தார். டாமர், கேசி ஆகியோர் இருவருமே சிறையில் இருக்கும்போது இறந்துவிட்டனர்.  கெல்லி மைக்கேல் வழக்கு பற்றி தெரியுமா? சிறுவர்களை பாலியல் ரீதியாக சுரண்டிய நர்சரி பள்ளி ஆசிரியர். எண்பது, தொண்ணூறுகளில் கெல்லி பற்றிய விவகாரம் வெளியே வந்தது. அவர் வேலை செய்ய பள்ளியில் 115 புகார்கள், பாலியல் சுரண்டல் தொடர்பாக வ...

விளம்பரம் - ஆரா பிரஸ் நூல்கள்

படம்
 

பாயும் பொருளாதாரம் - செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும்

படம்
      பாயும் பொருளாதாரம் செயலின் நோக்கமும் கிடைக்கும் பரிசும் பெற்ற தோல்வியை எதிர்கொள்ள முடியாமல் சமாளிப்பதை இந்தியாவில் அனைவருமே செய்பவர்கள்தான். இந்திய அணி கோப்பையைத் தவறவிட்டால், மற்ற நாட்டு ஊடகங்கள் போல உதவாக்கரை பயல்கள் என எழுத முடியாது. எனவே, இதயங்களை இந்திய அணி வென்றது என எழுதி ஆறுதல் தேடுவது வழக்கம். அணியில் உள்ளவர்களுக்கு இதனால் எந்த நன்மையும் கிடையாது. அவர்கள் அப்படியே குறைகள் குறையாமல் ஆடுவார்கள். ஒரு ரன்னுக்கு ஓடி வரும்போது கூட ஈகோ பார்த்து இளம் வீரனை அவுட் ஆக்கி கௌரவம் பார்ப்பது இப்படித்தான் உருவாகிறது. அதாவது குணநலன். ஆட்டோவில் ஒரு நகைப்பை கிடைக்கிறது. அதை ஓட்டுநர் வைத்துக்கொள்ள நினைக்கிறார் இதனால் அவருக்கு, வாங்கிய கடனைத் தீர்க்க முடியும், ஆனால், பொருளை தொலைத்தவர் வழக்கு பதிந்தால் காவல்துறையில் மாட்டிக்கொள்ள நேரும், அதேநேரம் பிறர் பொருளை திருடியதால் குற்றவுணர்ச்சி இருக்கும். அடுத்து, அதை உரியவர்களிடம் ஒப்படைப்பது. இந்த வகையில் ஒருவருக்கு நல்ல செயலை செய்தோம் என்ற ஆறுதல் கிடைக்கும். அதற்காக அவர் செய்கிறார் என்றே வைத்துக்கொள்ளலாம். பொருளை இழந்தவருக்கு அப்பொருள...

பற்பசையைத் தேர்ந்தெடுத்து வாங்குவது எப்படி? - மிஸ்டர் ரோனி - அறிவியல் பேச்சு

படம்
                அறிவியல் பேச்சு மிஸ்டர் ரோனி பற்பசைகளில் மூலிகை, உப்பு, கிராம்பு, கரி என பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறார்கள். எதை வாங்குவது? வேப்பிலை, புதினா, கிராம்பு ஆகிய சுவை கொண்ட பற்பசைகள் சுவை சற்று மாறுபட்டதாக இருக்கும். எனவே,அதற்காகவே அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம். ஆனால், இவற்றால் பற்களுக்கு பெரிய நன்மை இல்லை. அப்படி இருப்பதற்கான அறிவியல் ஆதாரங்களும் இல்லை. புதிதாக வரும் சில நிறுவனங்கள் பிரியாணி செய்யத் தேவைப்படும் மசாலாக்களை வைத்தே பற்பசை தயாரித்து ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு பின் சென்று ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி செய்யச் சொல்கிறார்கள். அவையெல்லாம் உண்மை கிடையாது. பற்பசையின் சுவை சற்று மாறுபட்டதாக இருக்கும். அவ்வளவுதான். ஒரே பற்பசை என சலிப்பு தந்தால், இப்படியான மூலிகை, உப்பு, கரி என டிரெண்டிங் கொண்ட பற்பசைகளை வாங்கி பயன்படுத்தலாம். மற்றபடி பற்பசையில் ஃப்ளூரைடு அவசியம். இந்த வேதிப்பொருள் பற்சிதைவிலிருந்து பற்களைக் காக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு பெருநிறுவனங்கள், சுதேசி நிறுவனங்கள் இரண்டுமே ஏராளமான பொருட்களை ...

சப்லைமினல் அட்வர்டைசிங் என்றால் என்ன?

படம்
              சப்லைமினல் அட்வர்டைசிங் என்றால் என்ன? மிஸ்டர் ரோனி ஒரு திரைப்படத்தில் அல்லது கே டிராமாவில் குளிர்பானம், ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனைக் காட்டி விளம்பரம் செய்வது அதிகரித்து வருகிறது இப்படி காட்டினால் அதை மக்கள் பின்பற்றுவார்கள் என நிறுவனத்தினர் நம்புகிறார்கள். இதை ஜேம்ஸ் விகாரி என்பவர், திரைப்படத்தின் வழியாக சோதித்து பார்த்தார். அதற்காக இவர் கொக்ககோலாவையும், சோளப்பொரியையும் கையில் எடுத்தார். படத்தில் மிகச்சில நொடிகளே வரும்படி கோலாவைக் காட்டினார். இதன்மூலம், கோலாவின் விற்பனையும், சோளப்பொரியும் விற்றுத் தீர்ந்தது. கோலா 18.1 சதவீதமும், சோளப்பொரி 57.5 சதவீதமும் விற்பனை கூடியதாக விகாரி தகவல் கூறினார். வெளிநாடுகளில் குளிர்பானம், சோளப்பொரி ஆகியவை சேர்த்தே காம்போவில் டிக்கெட்டோடு வாங்குவது விதியாக உள்ளது. இதை மனதில் கொள்ளுங்கள். இந்தியாவில் பிவிஆர் நிறுவனம், தற்போது திரையரங்கில் விற்கும் சோளப்பொரிகளை தனியாக கடைபோட்டு விற்க தொடங்கியுள்ளது. நொறுக்குத்தீனிக்கான வேட்கை மக்களிடையே அந்தளவு பெருகியுள்ளது. திரையரங்கில் தீனிகளை தின்பது என்பதே தனி சந்தையாக மாறி வர...

விளம்பரங்களை கண்டு ஏமாறாதீர்- எடை குறைப்பு எனும் பெரும் வணிகம்

படம்
  உடல் எடை குறைப்பு உடல் எடையைக் குறைப்பதற்கு மக்கள் இன்னதான் செய்வது என்றில்லாமல் மாத்திரை, அறுவை சிகிச்சை மூலம் குடலை சுருக்குவது, உடற்பயிற்சி என ஏராளமான முயற்சிகளை செய்துவருகிறார்கள். ஆனாலும், உடல் எடை பற்றிய அதீத அக்கறை தீரவே இல்லை. ஜிம்கள் பலவும் உடல் எடையை விரைவில் குறைக்கலாம் என்று சொல்லித்தான் மாதசந்தா சேகரித்து வருகிறார்கள். உடல் எடை அதிகரித்ததில், வரலாறு, தொழில்நுட்ப முன்னேற்றம், நாகரிகம் என பல்வேறு விவகாரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஒல்லியாக ஒருவர் இருக்க முயல்வது புதிதானதல்ல. கிரேக்க கடவுள்கள், விக்டோரியா கால மனிதர்களை கட்டான உடல் வடிவத்திற்கு உதாரணமாக கூறுவார்கள். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலகட்டம் கையில் கிடைத்த உணவுப்பொருட்களை மக்கள் சாப்பிடத் தொடங்கினர். அப்படியான நெருக்கடியான காலகட்டத்திற்குப் பிறகுதான், உடல் பருமன் பிரச்னை அதிகரிக்கத் தொடங்கியது. அந்த நேரம் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் பல்வேறு இடங்களில் விற்கப்படத் தொடங்கின. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என பல்வேறு இடங்களில் ஸ்னாக்ஸ், குளிர்பானங்களைக் காசு போட்டுப் பெறும் விற்பனை இயந்திரங்கள் வ...

யாவரும் ஏமாளி - புதிய மின்னூல் வெளியீடு - அமேஸான் வலைத்தளம்

படம்
  ஒரு வாரத்தில் எத்தனை முறை உங்கள் பர்சைத் திறக்கிறீர்கள் என யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? எதனால் ஒரு பொருளை தேர்ந்தெடுக்கிறீர்கள், எதனால் ஒரு பொருளை வாங்கவேண்டுமென தோன்றுகிறது ஆகிய கேள்விகளுக்கு பின்னால் உள்ள உளவியல் விஷயங்களை நூல் பேசுகிறது. எப்படி பெருநிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள் மக்களின் உளவியலைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பொருட்களை தயாரித்து விளம்பரப்படுத்தி விற்கிறார்கள். மக்களை பெருமளவு செலவு செய்ய வைக்க என்னென்ன உத்திகளை கையாள்கிறார்கள் என்பதை யாவரும் ஏமாளி நூல் வெளிப்படுத்துகிறது.  நூலை கீழுள்ள முகவரியில் தரவிறக்கி வாசிக்கலாம். நன்றி! https://www.amazon.com/dp/B0C3CBVYNP

ஜாம், ஊறுகாய், கெட்ச்அப் தயாரிப்புகள் தூய்மையானவைதானா? - தூயவை போன்ற வேடமே விற்பனையை அதிகரிக்கும்

படம்
  ஒரு பொருள் சுத்தமாக கைபடாமல் இருக்கிறது என்பதை எப்படி தெரிந்துகொள்வீர்கள்? அந்த பொருளின் மேல் அலுமினிய பாயில், ஒட்டப்பட்டிருக்கும். அதாவது, தயாரிக்கும் இடத்தில் கூட கைபடவில்லை. இலையின் மீதுள்ள பனித்துளி போல பரிசுத்தமானது. அம்மாவின் அன்பைப் போன்றது என்றெல்லாம் விளம்பரப்படுத்துவார்கள். இப்படித்தான் ஊறுகாய், பீநட் பட்டர், ஜாம் ஏன் இப்போது டீத்தூளுக்குக் கூட மணம் வெளியே கசியாமல் இருக்க அலுமினிய பாயில் சீல் ஒன்றை ஒட்டுகிறார்கள். இப்படி சீல் செய்யப்பட்டிருந்தால் வாங்குங்கள். சீல் கிழிந்திருந்தால் வாங்காதீர்கள் என்றெல்லாம் பொருளின் மீது எழுதியிருப்பார்கள். ஆனால் அதை கண்டுபிடிப்பது எளிதான சங்கதி கிடையாது. எதற்கு இந்த முயற்சி? இதெல்லாம் ஓசிடி வந்தவர்களாக சுத்தம் பற்றி கவலைப்படும் ஒரு பிரிவினரகளுக்காகத்தான். இவர்கள் நல்ல வேலையில் இருப்பார்கள். நறுவிசமாக உடுத்துவார்கள்.   இவர்களிடம் நிறைந்து வழியும் பணத்தை பிடுங்கவே இத்தனை மெனக்கெட்டு பொருட்களுக்கு சீல் குத்துகிறார்கள். இதெல்லாம் மனதளவில் ஒரு பொருள் சுத்தமாக இருக்கிறது. கைபடாதபொருள் என நிரூபித்துக் காட்டுவதற்குத்தான். மற்றபடி, அந்த...

ஒரு பொருளை புதியது போல காட்டி உண்ண, பருகத் தூண்டுவது எப்படி? - ஒளி, ஒலி காட்டும் மாயாஜாலம்

படம்
  போனைப் பயன்படுத்துவது, அதில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்ப்பது எல்லாம் மிகவும் சகஜமான ஒன்று. இன்று நண்பர்களை விட ஆண்ட்ராய்ட் அல்லது ஆப்பிள் போன் மிகச்சிறந்த மோசடி செய்யாத நண்பனாக உடன் இருக்கிறது. போனில், கால்குலேட்டர், டார்ச் பல்வேறு ஆப்களை பயன்படுத்துவதோடு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தவும் நிறைய சமாச்சாரங்கள் உண்டு. அமேஸானின் கிண்டில் ஆப் இருந்தால் அதன் மூலமே நிறைய மின்நூல்களை வாசிக்கலாம். ஓடிடிக்கு பணம் கட்டியிருந்தால் போனில் படம் பார்க்கலாம். டேட்டா இருந்தால் தேவையான வீடியோக்களை தரவிறக்கி கொள்ளலாம். ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி கற்றுக்கொண்டே இருக்க போன் உதவுகிறது. நண்பருக்காக காத்திருக்கும் நேரத்தில் கூட நேரத்தை வீணடிக்க வேண்டியதில்லை. அந்தளவு தொழில்நுட்பம் நெகிழ்வாக மாறிவிட்டது. அதேசமயம், அதைப் பயன்படுத்தும் மனிதர்கள் இறுக்கமாக மாறிவிட்டார்கள். சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு சென்று உலாவுவது, பொருட்களை வாங்குவது, பிராண்ட் பொருட்களை கண் வைத்து வாங்குவது, வாங்கிக்கொண்டே இருப்பதை அடிமைத்தனம் என்று கூறலாம். ஆங்கிலத்தில் கண்ணியமாக ‘அடிக்‌ஷன்’ என்று சொல்கிறார்கள். பொதுவாக, தன்னை...

உடைகளை விற்க செக்ஸ் கூட ஒரு மகத்தான கருவி- கால்வின் கிளைன் உருவாக்கிய விளம்பரங்கள்

படம்
  மார்க் வால்பெர்க் - கேட் மோஸ் விளம்பரம் புகைப்படக்காரர் ஹெர்ப் ரிட்ஸ் விளம்பர இயக்குநர் மடோனா பேட்ஜர்  அமெரிக்காவில் வணிக ரீதியாகவும் கலாசா ரீதியாகவும் ஏற்படும் மாற்றங்களை பிறர் ஏற்றுக் கொள்வது கடினம். அந்தளவு செக்ஸ் சம்பந்தமான விஷயங்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் தாராள இயல்பில் வேகமாக முன்னேறி வருகின்றனர். துணிக்கடைகளில் ஆண், பெண் என மொழு மொழு பொம்மைகளை வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். சிலர் அதை வெறியுடன் வேட்கையுடன் பார்த்துக்கொண்டே கடைகளை கடப்பார்கள். அப்படியான வசீகரத்துடன் பார்க்க படு கச்சிதமான உடல் அமைப்புடன் ஆண், பெண் பொம்மைகள் செய்யப்பட்டிருக்கும். உண்மையில் இதைப் பார்ப்பவர்களுக்கு மனதில் என்ன தோன்றும் என நினைத்து பார்த்திருக்கிறீர்களா? சிக்ஸ்பேக் உடல் கொண்ட ஆண், ஆணைப் போன்ற உடல் கொண்ட பெண் என இருவரும் வரும் ஆடை விளம்பரங்கள் தொடக்கத்தில் இருந்தே இளைஞர்களை கவர்ந்துள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இத்தகைய ஆண், பெண் மாடல்களை வைத்து எடுக்கும் விளம்பரங்கள் பிரபலம்.   தொண்ணூறுகளில் விளம்பர ஏஜென்சி வைத்து நடத்திய மடோனா பேட்ஜர், புகைப்படக்காரர் ஹெர்ப் ரிட்ஸ...