மக்கள் அமைப்பாக திரண்டு கேள்வி கேட்க வேண்டும் - பாயும் பொருளாதாரம்
4 பாயும் பொருளாதாரம் கனிம வளங்களைப் பொறுத்தவரை அவற்றை ஒருமுறை விற்றுவிட்டால் பிறகு அதை பெற முடியாது. அவை தீர்ந்துவிடக்கூடிய வளங்கள். மேய்ச்சல் நிலம் உள்ளது என்றால் அங்கு செம்மறி ஆடுகளை ஓட்டிச்சென்று மேய்ப்பார்கள். பலரும் ஒருவரை பின்பற்றி ஒருவர் என மேய்ச்சல் தொழிலை செய்வார்கள். இதெல்லாமே லாபம் வருவதைப் பொறுத்துத்தான். லாபம் வந்தால் அந்த தொழில் இல்லையா வேறு தொழில். குறிப்பிட்ட கிராமத்தினரே மேய்ச்சல் நிலத்தை அடிப்படையாக கொண்டு வாழ்க்கை நடத்துகிறார்கள் என்றால் நிலைமை என்னாகும்? மேய்ச்சல் வெளி ஆதாரம் புல். அது விரைவில் தீர்ந்துபோகும். அப்போது ஆடுகளுக்கு உணவிற்கு என்ன செய்வது? மக்கள் குறிப்பிட்ட மரங்களை, வைப்பு நிதி திட்டங்களை கண்ணை மூடிக்கொண்டு அவர் செய்கிறார் இவர் செய்கிறார் என இறங்கி செய்தால் மோசம் போவது உறுதி. அனைவருமே ஒரே திசை நோக்கி சென்றால் இயற்கை வளங்களை பகிர்ந்தாலும் கூட வெற்றி வாய்ப்பு மங்கும். புதிய யோசனைகளில் தொழில்களை செய்யவேண்டும். பாருங்கள் இளம் ஸ்டார்ட்அப் மாணிக்கங்கள், தோசைகளில் புதுமை செய்கிறார்கள். வாசனைப் பொருட்களில் சமோசா போன்ற வாசனைகளை கொண்டு வருகிறா...