இடுகைகள்

கார்பன் வரி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார்பன் வரியின் நோக்கம்!

      கார்பன் வரியின் நோக்கம் வளர்ந்த நாடுகள் பலவற்றிலும் கார்பன் வரி என்பது நடைமுறைக்கு வந்திருக்கும் அல்லது கொண்டு வரலாம் என யோசித்துக்கொண்டிருப்பார்கள். பிரான்ஸ் போன்ற நாட்டில் வரியை எதிர்த்து போராட்டங்களே வெடித்தன. உண்மையில் கார்பன் வரி எதற்காக, இதைக் கொண்டு வந்தால் கரிம எரிபொருட்கள் தயாரிப்பு குறைந்துவிடுமா, காலநிலை மாற்றம் பிரச்னை தராதா? அப்படியெல்லாம் கிடையாது. கார்பன் வரி என்பது, முற்றாக கரிம எரிபொருட்கள் உற்பத்தியை நிறுத்தப்படுவதை சற்று தள்ளிப்போட உதவுகிறது. கார்பன் வரியைக் கட்டுபவர்களால், அரசை முழுக்க எதிர்த்து தான் நினைத்தை செய்ய வைக்க முடியுமா என்று பதில் கூறுவது கடினம். கரிம எரிபொருட்களை முற்றாக ஒழிப்பது அரசுக்கு சாத்தியமா என்றால் சாத்தியம்தான். ஒரே உத்தரவில் அந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடலாம். ஆனால் பொதுவாக எந்த அரசும் அதுபோல செய்வதில்லை. பிரிட்டிஷ் பெட்ரோலியம், ஷெல், எக்செல் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் , தங்கள் தொழிற்சாலையை மூடுவது நடக்ககூடிய ஒன்றா என்ன? ஆனால், அவர்கள் கூட கார்பன் வரியை ஆதரிக்கிறார்கள். இப்போது சீனாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட கார்பன் வரி பற்ற...

பரிசும் தண்டனையும் - பாயும் பொருளாதாரம்

படம்
      6 பாயும் பொருளாதாரம் ஒரு தொழில்துறையில் போட்டிக்கு அதிக நிறுவனங்கள் இல்லாமல் இரண்டே இரண்டு நிறுவனங்கள் இருந்தால் அதை ஒலிகோபோலி என்று குறிப்பிடுகிறார்கள். இதில் ஒரு நிறுவனம் செய்யும் விலைகுறைப்பை இன்னொரு நிறுவனமும் எதிர்கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றியமைக்கவேண்டும். இல்லையெனில் வணிகத்தில் பாதிப்பு ஏற்படும். லாபமும், நஷ்டமும் இரு நிறுவனங்களின் செயல்பாட்டிலும் உள்ளது. ஒன்றையொன்றைச் சார்ந்தே வணிகத்தின் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. கட்டுமானம், தொலைத்தொடர்பு ஆகிய துறைசார்ந்த பெரிய நிறுவனங்கள் வெளிநாட்டின் நிறுவனங்களை எதிர்க்க தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவதுண்டு. இதை கார்டெல் என குறிப்பிடலாம். இப்படி தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு இயங்குவது, அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும். பல்வேறு நாடுகளிலும் இப்படியான வணிகப்போக்கு நடவடிக்கையை சட்டவிரோதம் என்று அறிவித்துள்ளனர். எலன் மஸ்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக தொலைத்தொடர்பு வசதியை இந்தியாவில் வழங்கப்போகிறார் என்றால் இந்திய மக்களுக்கு மகிழ்ச்சியான செய்திதான். ஆனால், ஆட்சித்தலைவருக்கு அணுக்கமான குஜராத் தொழிலதிப...

மனிதர்களும் இயற்கையில் ஒரு பகுதி என்பதை மறந்துவிடக்கூடாது

படம்
              மார்க் கார்னே Mark carney former central banker மார்க் கார்னே என்றால் என்ன ? இந்தப் பெயரைக் கேட்டதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது ? ஏதோ பெரிய வங்கியை நடத்துகிற அல்லது தலைவராக இருக்க வாயப்புள்ள ஒருவரைத்தானே ? உண்மைதான் . 2008 ஆம் ஆண்டில் கனடாவின் பேங்க் ஆப் கனடா வங்கிக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டார் . 2011-2018 காலகட்டத்தில் குளோபல் ஃபினான்சியல் ஸ்டேபிளிட்டி போர்டின் தலைவராக செயல்பட்டார் . 2013 ஆம் ஆண்டு பேங்க் ஆப் இங்கிலாந்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் . 1694 ஆம் ஆண்டு தொடங்கி பிரிட்டிஷ்கார ர்களை மட்டுமே ஆளுநராக நியமித்த மரபை உடைத்தவர் மார்க் கார்னி தான் . 2020 ஆம் ஆண்டு தனது பதவியை விட்டு விலகியவர் கனடாவில் உள்ள ப்ரூக்ஃபீல்டு அசெஸ்மென்ட் என்ற தனியார் நிறுவனத்தில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார் . வால்யூஸ் - பில்டிங் எ பெட்டர் வேர்ல்ட் ஃபார் ஆல் என்ற நூலை எழுதியுள்ளார் .    நீங்கள் எழுதியுள்ள நூலுக்கான அர்த்தம் என்ன? நான் பேங்க் ஆஃப் கனடாவில் வேலை செய்தபோது பொருளாதார சீர்குலைவு சூழ்நிலையைப் ப...

கார்பன் வரி கட்டுவது மக்களின் கடமை

படம்
கார்பன் வரி கட்டவேண்டிய நேரம் இதுவே. பிரான்சில் கார்பன் வரி காரணமாக நாடு திரண்டு போராடிய போராட்டங்களைப் பார்த்திருப்போம். உண்மையில் அது அவசியமா இல்லையா என்பது அவரவருக்கு கருத்து மாறுபடலாம். ஆனால் அந்த வரி தவிர்க்க முடியாது என்கிறார் கில்பெர்ட் மெல்காஃப். பசுமை பொருளாதாரம் என்பது பேச்சளவில் நன்றாக இருந்தாலும் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல என உறுதிப்பட பேசுகிறார் பொருளாதார வல்லுநர் கில்பர்ட் மெல்காஃப். பேயிங் ஃபார் பொல்யூசன்: வொய் எ கார்பன் டாக்ஸ் இஸ் குட் ஃபார் அமெரிக்கா என்ற நூலை அண்மையில் எழுதியுள்ளார். நீங்கள் இப்போது கரிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கார்பன் வரியை விதிக்காவிட்டால் பின்னாளில் பெரும் விலையை தரவேண்டி வரும் என எச்சரிக்கிறார் இவர். கார்பன் வரி கட்டுவதை எப்படி உங்கள் நூலில் நியாயப்படுத்துகிறீர்கள்? கரிம எரிபொருட்களை எரிப்பதால் வரும் கார்பன் டை ஆக்சைடு பசுமை இல்ல வாயுக்களை அதிகரிக்கும். மேலும் பருவநிலை மாறுபாடு ஏற்படும்போது, பசுமை இல்ல வாயுக்களின் பாதிப்பு மேலும் அதிகரிக்கும். மக்கள் தாங்கள் பயன்படுத்தும் வசதிகளுக்கேற்ப ஏற்படும் ப...