பழங்குடி மக்களைக் காக்க திருடனாக மாறும் இளைஞன் - கொண்டவீட்டி தொங்கா - சிரஞ்சீவி, விஜயசாந்தி, ராதா
மாஸ் டயலாக் என நினைத்துக்கொள்ளலாம்.. இதுதான் ராஜாவின் மாஸ்க்.. சுபலேகா பாடல்... கொண்டவீட்டி தொங்கா இயக்கம் கோதண்டராமி ரெட்டி கதை வசனம் பாருச்சி சகோதரர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்த ராஜா என்பவர், மக்களின் நலனுக்காக நிலக்கிழார்களின் நலனுக்கு எதிராக திருடனாகிறார். திருடி ஏழை மக்களுக்கு உதவுகிறார். இதைக் கண்டுபிடிக்க காவல்துறை முயல்கிறது. கூடவே தாந்திரீக மந்திரவாதியும் முயல்கிறார். அப்போது சிறையில் இருந்து தண்டனை முடிந்து வரும் பழங்குடி பெண் அந்த ஊரில் உள்ள பணக்காரரைக் கொல்ல முயல்கிறார். யார் அவர், எதற்கு அவர் பணக்காரரைக் கொல்ல முயல்கிறார் என்பதே கதையின் முக்கியப் பகுதி. படத்திற்கு இளையராஜா இசை. அதுதான் படத்தின் முக்கியமான உயிரோட்டம். ஆங்கிலத்தில் ஜோரோ என்று படம் வருமே.. படத்தின் அடிப்படை கதை அதேதான். ஊழல், கனிமம் எடுக்கும் உள்ளூர் பணக்காரர்களை அடித்து உதைத்து பழங்குடிகளுக்கு உரிய கூலி, குடியிருக்கும் நிலம், வருமானம் ஆகியவற்றை கொண்டவீடி தொங்கா பெற்றுத் தருகிறார். இதை யார் செய்வது என அங்கேயுள்ள இன்ஸ்பெக்டருக்கு கூட தெரியாதாம். பழங்குடி மக்கள் அனைவரும் செ...