இடுகைகள்

பங்கு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதானி குழுமம் பங்கு மோசடி செய்து வளர செபி தலைவர் சிந்திய வியர்வை!

படம்
            செபியின் தலைவர் மாதபி, அதானி குழுமத்தின் வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க முடியாததற்கு, வினோத் அதானியின் நிறுவனங்களில் அவர் செய்திருந்த பங்கு முதலீடும் முக்கிய காரணம் என ஹிண்டென்பர்க் கருதுகிறது. இன்றைய தேதிவரை செபி அமைப்பு, அதானி குழுமம், அதன் பங்குதாரர்கள், இந்தியா இன்போலைன் ஆகியோர் மீது எந்த சட்டப்பூர்வ நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதில் இஎம் ரீசர்ஜென்ட் பண்ட், எமர்ஜிங் இந்தியா போகஸ் பண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்தியா இன்போலைன் நிறுவனம் இப்போது பெயர் மாறி 360 ஒன் என செயல்பட்டு வருகிறது. இதோடு தொடர்புடைய நிறுவனங்களைத்தான் மேலே குறிப்பிட்டுள்ளோம். இந்தியா இன்போலைனின் ஆண்டு அறிக்கைப்படி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு எண்ணிக்கை, விலை அதானி குழும நிறுவனங்களால் போலியாக ஊதி பெருக்கப்பட்டதற்கான தடயங்கள் உள்ளன. ஃபினான்சியல் டைம்ஸ் இதழ் செய்த விசாரணையில், அதானி  வணிக நிறுவனங்களை, முன்னே நிறுத்திவைத்துவிட்டு, மறைமுகமாக இந்திய சட்டவிதிகளை மீறி பங்குவிலைகளில் முறைகேடு செய்துள்ளார் என தெரிய வ...

பங்குச்சந்தை மோசடியின் வலைப்பின்னல் - அதானி குழும மோசடியில் செபிக்கு உள்ள கூட்டுப்பங்கு

படம்
            பதினெட்டு மாதங்களுக்கு முன்னர் ஹிண்டென்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமத்தின் பங்குச்சந்தை மோசடிகளைப் பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில், மொரிஷியஸ் நாட்டில் உள்ள போலி நிறுவனங்களைப் பற்றி கூறப்பட்டிருந்தது. இந்திய அரசின் பங்குச்சந்தை அமைப்பான செபி ஆச்சரியமூட்டும் விதமாக, அதானி குழும மோசடி பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. விசாரணையையும் முறையாக நடத்தவில்லை. கார்ப்பரேட் நிறுவன வரலாற்றில் மிகப்பெரும் மோசடியான அதில், மொரிஷியஸ் நாட்டில் பரிமாறிய பங்குகள், அரசிடம் தெரிவிக்கப்படாத முதலீடுகள், பங்கு முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள் இருந்தன. அதற்குப்பிறகு, அந்த விசாரணையை எங்களோடு சேர்ந்து நாற்பது தனியார் ஊடக நிறுவனங்கள் புலனாய்வு செய்து விரிவாக்கின. இந்திய அமைப்பான செபி, அதானி குழுமம் செய்த முறைகேட்டை பெரிதாக லட்சியம் செய்யவில்லை. அதற்குப் பதிலாக செபி நிறுவனம், 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஹிண்டென்பர்க் நிறுவனத்திற்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதில், 106 பக்க புலனாய்வு அறிக்கையில் எந்த தகவல் பிழையும் உள்ளதாக கூறவில்லை. பதிலாக, கொடுத்துள்ள விவரங்கள் இன்னு...

வறுமையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கிய தொழிலதிபர்!

படம்
 ரமோன் ஆங்க் அதிபர், இயக்குநர், மிகுல் கார்ப் வயது 69 பிலிப்பைன்ஸ்  Ramon ang miguel corp சுயம்பாக முளைத்தெழுந்த தொழிலதிபர். மணிலாவில் ஏழை குழந்தைகளுக்கு பள்ளி கட்டுவதற்காக ஒன்பது மில்லியன் டாலர்களை தானமாக வழங்கியுள்ளார். மதுபானம், உணவு, வங்கி, ஆற்றல், மின்சாரம், சாலை பராமரிப்பு நிறுவனங்களை ரமோன் நடத்தி வருகிறார். நாட்டின் வலிமையை, வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் பிலிப்பைன்ஸ் மக்களின் கல்வி, திறன் அதிகரிக்கவேண்டும். வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மட்டுமல்ல வயது வந்தோருக்கும் கூட நல்ல பணி கிடைக்கவேண்டும். அல்லது அவர்கள் சுயமாக தொழில் தொடங்கி முன்னேற வேண்டும். அதற்கான திறன்களை வழங்க முயல்கிறோம் என்று தான் வளர்ந்த டோன்டோ மாவட்டத்தில் பள்ளி வளாகம் ஒன்றைத் தொடங்கி வைத்து பேசினார்.  ரமோன், சான் மிகுல் பவுண்டேஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் வழியாக பள்ளிகளைக் கட்டுவது, கோவிட் 19 நிவாரண நிதி, நகர ஆறுகளை தூய்மைப்படுத்துவது, கல்விக்கான உதவித்தொகை, மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது. ஆர்எஸ்ஏ பவுண்டேஷன் என்ற தன்னார்வ தொண்டு அமைப்பிற்கும் கல்வி சார்ந்து நிதி நல்கையை கொடுக்கிறது.  -ஜ...

எலன் மஸ்க் எப்படி சிந்திக்கிறார் என்பதை கண்டுபிடிப்போம் வாங்க!

படம்
  எலன் மஸ்க் எந்தெந்த சமூக வலைத்தள கணக்குகளை தொடர்கிறார்?   சுனக், மேக்ரான், மோடி, வான் டெர் லியான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்க அரசு, இங்கிலாந்து அரச குடும்பம் ஆகிய கணக்குகளை பின்தொடர்கிறார். இதன் அர்த்தம், அவர் அவற்றை பின்தொடர்கிறார் அவ்வளவுதான். இங்கு வெளியிடப்படும் அனைத்து கருத்துகளை ரீட்விட் செய்கிறார் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். நானும் இருக்கிறேன் என்று கூறுகிறார். மற்றபடி இந்த கணக்குகளை அவர் எப்போதாவது எட்டிப்பார்க்கிறாரா என்று கூட தெரியாது. பிபிசி செய்திகளை பின்தொடர்கிறார். அதேசமயம் இதுவரை தனது ட்விட்களில் அதை எந்த கண்டனமும் செய்ததில்லை என்பதையும் நினைவுகூர்கிறேன். டெஸ்லா கார்கள் விற்பனை, பங்கு விலை உயர்வு பற்றிய சந்தோஷமான கருத்துகளை எலன் கவனிக்கிறார். அவற்றை பகிர்கிறார். அவரைப் பொறுத்தவரை நாய்களுக்கு பிஸ்கெட் போடுவதை அதன் உரிமையாளர் எப்படியான மனநிலையில் செய்வாரோ அதேபோன்றதுதான் இதுவும் என கூறலாம். பாலியல் கல்வியை அரசியல்மயப்படுத்துவது, ரஷ்யா – உக்ரைன் போர் பற்றிய கருத்துகள், கோவிட் தடுப்பூசி பற்றிய கருத்துகள் ஆகியவற்றை பற்றிய விஷயங்களை எலன் மஸ்க் தனது ட்விட்டர் க...

பேராசை பூதம் 2 - ஹிண்டன்பர்க் அறிக்கையின் தமிழாக்கம் - மின்னூல் வெளியீடு

படம்
  இன்று இந்தியாவில் மத்திய அரசு எடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளை  பலம் வாய்ந்த தொழில் நிறுவனங்களே முடிவு செய்கின்றன. அரசின் கொள்கை மாற்றங்களை பெருநிறுவனங்கள் முடிவு செய்து அறிவிக்கச்செய்து பயன் பெறுகின்றன. நாட்டின் பிரதமர் தொழில்நிறுவனங்களோடு நெருக்கமாக இருப்பது, அணுக்க முதலாளித்துவம் என்று கூறப்படுகிறது. இப்படி இருப்பதால் அவருக்கும் அவர் சார்ந்த கட்சிக்கும் நன்மை உண்டு. வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் இருக்காது. தொழிலதிபரின் வாராக்கடன்களுக்கு, வரிச்சுமையை சுமக்க வேண்டியது மக்கள்தான்.  அதானி குழுமம், பல்லாண்டுகளாக திட்டமிட்டு செய்த மோசடிகளை பேராசை பூதம் 3 நூல் விவரிக்கிறது. இதைப் படிக்கும்போது இப்படியெல்லாம் யோசித்து நிதி மோசடிகளை செய்ய முடியுமா என பிரமித்து அதிர்ச்சியடைவீர்கள்.  அந்தளவு நேர்த்தியாக திட்டமிட்டு இந்தியாவை மட்டுமல்ல வரி கட்டும் அத்தனை குடிமக்களையும் ஏமாற்றியுள்ளது அதானி குழுமம். மோசடிக்கு கௌதம் அதானியின் மொத்த உறுப்பினர்களுமே காய்களாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றனர்.   பங்குச்சந்தை நிதியை மடைமாற்றி தனது இஷ்டம்போல நிறுவனத்தின் மதிப்பை மாற்றி...

18. கௌதம் அதானி பதிலளிக்க வேண்டிய கேள்விகள் - மோசடி மன்னன் அதானி - இறுதிப்பகுதி

படம்
  26.2021ஆம் ஆண்டு, குழுமத்தின் நிதித்துறை தலைவராக ராபிசிங் பொறுப்பு வகித்தார். அப்போது குழுமத்தின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக சர்ச்சை எழுந்தது. 2021ஆம் ஆண்டு, ஜூன் 16 அன்று,என்டிடிவியில் கொடுத்த நேர்காணலில் ராபி சிங், “மொரிஷியஸில் உள்ள நிதி நிறுவனங்கள் அதானி குழுமத்தில் புதிதாக நிதியை முதலீடு செய்யவில்லை. தங்களின் பிற அதானி நிறுவன பங்குகளை விலக்கிக்கொண்டனர்” என்று கூறினார். ஹிண்டன்பர்க்கின் ஆய்வாளர்கள் கூற்றுப்படி, அப்போது நிதி நிறுவனங்கள் அதானி க்ரீனில் புதிய முதலீடுகளைச் செய்தனர். அந்த சமயத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை விதிப்படி, தங்கள் பங்கு அளவை குறைத்துக்கொள்ள நினைத்தார்கள். இந்த செயல்பாட்டிற்கு, அதானி குழுமம் என்ன பதில் தரப்போகிறது? 27.1999-2005 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதானி குழும முதலீட்டாளர்கள், தனிநபர்கள், எழுபதிற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக செபி குற்றம்சாட்டி அவர்களை விசாரித்தது. இதுபற்றி கௌதம் அதானியின் கருத்து என்ன? 28. அதானி எக்ஸ்போர்ட்ஸ் (தற்போது, அதானி என்டர்பிரைசஸ்) நிறுவனத்தின் பங்குகளை அதானி குழும முதலீ...