உறக்கத்தில் நடக்கும் நோயால் நேரும் பின்விளைவுகள்! - பிளாக் - ஆதி சாய்குமார், தர்சனா பானிக்
பிளாக் ஆதி, தர்சனா பானிக் ஆதியின் அப்பா ரோந்துப் பணியின்போது கார் மோதி இறந்துபோகிறார். அவரது கான்ஸ்டபிள் வேலை கருணை அடிப்படையில் மகனுக்கு அதாவது நாயகனுக்கு வழங்கப்படுகிறது. அந்த வேலையைச் செய்ய அவருக்கு பெரிய இஷ்டமில்லை. ஆனாலும் அப்பாவின் ஆசை என்பதற்காக வேலையில் சேருகிறார். இரண்டாவது நாளே கொள்ளை, அதற்கடுத்த நாளில் கொலை என அவர் ரோந்து செல்லும் பகுதியில் நடக்கிறது. இறந்துபோனவர்கள் குறிப்பிட ரௌடி கேங்கைச் சேர்ந்தவர்கள். அந்த தரப்பும் கொன்றவர் யார் என தேடுகிறார்கள். காவல்துறையும் தேடுகிறது. உண்மையான கொலைகாரன் யார் என்பதே படத்தின் இறுதிக்காட்சி. படத்திற்கு அடுத்த பாகம் எடுக்க கூட இயக்குநர் தயாராக காட்சிகளை எடுத்து வைத்திருக்கிறார். நாயகனுக்கு தன் வேலையில் பெரிய ஆர்வமெல்லாம் இல்லை. ரோந்து செல்லும் பகுதியில் கொள்ளை, கொலை நடந்ததால் அவரது மேலதிகாரி என்ன வேலை பார்க்கிறாய் என திட்டுகிறார். இதனால் சங்கடம் கொள்பவர், கொலையாளியைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார். இந்த மெனக்கெடல் அடுத்தடுத்த காட்சிகளில் தொடரவில்லை. ஒரு காட்சியில் இப்படி, அடுத்த காட்சிய...