இடுகைகள்

அமிதவ் கோஷ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இயற்கை பேரிடர்களிலிருந்து இந்திய அரசு எந்த பாடங்களையும் கற்கவில்லை! - அமிதவ் கோஷ்

படம்
            அமிதவ் கோஷ், எழுத்தாளர் காலநிலை மாற்றம் பற்றிய அக்கறைக்காக எராஸ்மஸ் பரிசை நடப்பு ஆண்டில் பெற்றிருக்கிறார். வயநாடு நிலச்சரிவு விவகாரத்தில் நாம் கற்கவேண்டியது என்ன? வயநாடு மட்டுமல்ல இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இதுபோல பேரிடர் சம்பவங்கள் நடக்கலாம். சாலைகள் அமைப்பது, காடுகளை அழிப்பது, மணல் குவாரி, கல் குவாரி, முறையற்ற கட்டுமானங்கள் என இதில் நிறைய ஆதாரப் பிரச்னைகள் உள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு, மேக உடைப்பு பிரச்னைகள் அதிகம் நேரும். டெல்லியில் ஏற்பட்ட அதீத வெள்ளத்தால் மூன்று மாணவர்கள் இறந்துபோனதை நாம் மறந்துவிடக்கூடாது.அந்த மாணவர்கள் பயிற்சி மையத்தின் கீழ்த்தளத்தில் வெள்ளநீரில் சிக்கி இறந்துபோனார்கள். புதிதாக கட்டப்பட்ட நாடாளுமன்றத்திலும் வெள்ளம் புகுந்துவிட்டது. இதற்கு காரணம், நாம் சூழலைப் பற்றி கவலைப்படாமல் கட்டிடங்களை வடிவமைத்து வருவதுதான். இதெல்லாம் நாட்டில் என்னென்ன எப்படிப்பட்ட வி்ஷயங்கள் நடந்து வருகின்றன என்பதைக் குறியீடாக காட்டும் சமாச்சாரங்கள்தான். கோவாவைப் போலவே பிற மாநிலங்களுக்கும் அச்சுறுத்தல் உருவாகி வருகிறதா? 2011ஆம் ஆண்...

மேற்குலக நாடுகள் தம் நுகர்வைக் குறைத்துக்கொள்ளவேண்டும்! - அமிதவ் கோஷ், எழுத்தாளர்

படம்
  அமிதவ் கோஷ் எழுத்தாளர் தி லிவ்விங் மவுன்டைன் என்ற புதிய நாவலை எழுதியுள்ளார். இதில், மேற்குலத்தனமாக ஆக்ரோஷ வணிக திட்டங்களால் எப்படி பழங்குடி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை விவரித்துள்ளார். அவரிடம் பேசினோம்.  மனிதர்களால் ஏற்படும் இயற்கை மீதான பாதிப்புகளை எப்படி பார்க்கிறீர்கள்? ஆந்த்ரோபோசீன் என்ற வார்த்தைக்கு அர்த்தம், இன்று பெரிதுபடுத்தப்பட்டுள்ளது. மனிதர்களால் இயற்கைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் என்பது நேரடியான அர்த்தம். ஆனால் இதனை பெருமளவில் உருவாக்குபவர்கள், மேற்குலக நாடுகள்தான். ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பு அனைவரையும் பாதிக்கிறது.  மேற்குலகில் தொழில்துறையினர் உருவாக்கிய மாடல் அங்கு வெற்றிகரமாக செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அதேமாடல் இந்தியாவில் செயல்பட வாய்ப்புள்ளதா? சிறுபான்மையான சமூகத்தில் வேண்டுமானால் மேற்குலக மாடல் வெற்றிகரமாக செயல்படலாம். ஆனால் காந்தி தொழில்மயமாதலின் ஆபத்தை உணர்ந்திருந்தார். 1928ஆம் ஆண்டில் இதைப்பற்றி தனது கருத்தை எழுதியிருந்தார். மேற்குலக நாடுகளைப் பற்றி நாமும் தொழில்மயமானால் உலகம் முழுக்க வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடத்தியது போலவே சூழல் மாறும் எ...