குளிர்பதனப்பெட்டி கண்டுபிடிப்பு, ஹைட்ரஜன் பிணைப்பில்லாத நீர், மேட்ரிக்ஸ் உலகம், உடலின் மிகப்பெரும் மூலக்கூறு - மிஸ்டர் ரோனி
1930ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த கண்டுபிடிப்பாளர், குறிப்பிட்ட சாதனம் ஒன்றைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றார். அந்த சாதனத்தின் பெயர் என்ன? குளிர்பதனப்பெட்டி (தமிழாக்க நன்றி- மனோபாலா நாயுடு). இதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லியோ ஸில்லார்ட் என இருவரும் சேர்ந்து கண்டுபிடித்தனர். இப்பெட்டி, தெர்மோடைனமிக்ஸ் விதிகளின்படி இயங்குகிறது. 1920ஆம் ஆண்டு குளிர்பதனப்பெட்டியின் சீல் உடைந்து நச்சு வாயு வெளியாகி, ஒரு குடும்பமே இறந்துபோனது. அந்த காலத்தில், அதில் நச்சுவாயுவின் பயன்பாடு பரவலாக இருந்தது. குளிர்பதனப்பெட்டியில் வெப்பம் பெறப்பட்டு, மூடிய குளிர்ந்த இடத்தில் செலுத்தப்பட்டு குளிர் உருவாக்கப்படுகிறது. விபத்து ஏற்பட்ட காரணத்தால், ஆல்பர்ட், குளிர்பதனப்பெட்டியில் நகரக்கூடிய பாகமே இருக்கக்கூடாது. குளிர்ச்சி ஏற்படும் பொருள் தொடர்ச்சியான அழுத்தத்தில் இருக்கவேண்டும் என நினைத்தார். அவர் உருவாக்கிய வடிவமைப்பு சற்று சிக்கலானது. பரவலாக கவனம் பெறவில்லை. ஆனாலும் கூட வெப்பத்தால் இயங்கும் பல்வேறு சாதனங்கள் ஆல்பர்டின் ஆய்வால் பயன்பெற்றன. 2 வினோதமான கணினி உலகை அட...