சீனஞானி கன்பூசியஸ் நமக்கு கூறும் நல்லற நெறிகள்!
நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் கன்பூசியஸ் கலைமணி என்வி சாந்தி நிலையம் சீன ஞானி கன்பூசியஸின் அறநெறி, ஆட்சி நிர்வாகம் சார்ந்த கருத்துகளை பெரும்பான்மையாக கொண்டு எழுதப்பட்டுள்ள நூல் இது. நூல் முழுக்கவே தனிநபராக, அல்லது அமைப்பாக, அரசாக எப்படி இயங்க வேண்டும், என்னென்ன நெறிகளை பின்பற்றவேண்டும் என்பதை கன்பூசியஸ் உறுதியான வார்த்தைகளில் கூறியிருக்கிறார். இதை தமிழில் எழுதியுள்ள எழுத்தாளர் கலைமணி என் வி பாராட்டத்தகுந்தவர். சிறப்பாக கருத்துகளை தமிழில் எழுதியுள்ளார். சீனாவில் இன்றும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் என்பது இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, உலகமெங்கும் நிறுவப்பட்டு சீனமொழி, கலாசாரத்தை பிரசாரம் செய்து வருகிறது. அந்த வகையில் சீனா, தனது நாட்டைச் சேர்ந்த ஞானியை வாழும் காலத்தில் கண்டுகொள்ளாமல் அலைகழித்தாலும், பின்னாளில் அடையாளம் கண்டு கௌரவித்துள்ளது. அந்த வகையில் மகிழ்ச்சி. கன்பூசியஸ் அரசு அதிகாரியின் பிள்ளையாக பிறந்தவர். அவர் பிறந்த சமூகம், ஆணாதிக்க தன்மை கொண்டது. அதாவது, வீட்டுக்கு தலைவர் ஆண். பெண்கள் எத்தனை பேர் இருந்தாலும் திறமை பெற்றிருந்தாலும் அவர்களை யாரும் பொருட்படுத...