இடுகைகள்

கலவரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியவரலாறு - காந்திக்கு பிறகான காலகட்டம்

இந்த நூலை காங்.கின் வீழ்ச்சி பற்றிய வரலாறு அல்லது பார்ப்பன பாசிச கட்சியின் வரலாறு என்றும் கூறலாம். இனப்படுகொலை என தில்லி சீக்கியர்கள் படுகொலை -ராஜிவ் காந்தி மற்றும் முஸ்லீம் படுகொலை - நடப்பு பாசிச இயக்க இந்திய ஆட்சித்தலைவர் என துணிச்சலாக எழுதி உள்ளார். அடிப்படையில் இந்திராகாந்தி பற்றிய சம்பவங்களே அதிகம். வட இந்தியாவையே முழுக்க மையப்படுத்தி உள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பாளர் சாரதி சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.

வருத்தமோ குற்ற உணர்ச்சியோ கொள்ளாத இந்துஸ்தானத்தின் புதிய விதிகள்!

படம்
  இந்தியா, இந்துஸ்தானாக மாறத் தொடங்கிவிட்டது. இனி என்னென்ன விஷயங்களை நாம் நாளிதழ்களில் பார்ப்போம். அல்லது பார்க்க கட்டாயப்படுத்தப்படுவோம் என்பதைப் பற்றிய கற்பனை இது. அதேசமயம் சில விஷயங்கள் நடந்துகொண்டும் இருக்கலாம்.  வானொலிகளில் ஆன்மிக பாடல்கள் முழுக்க இந்து கடவுள்களைப் பற்றியதாகவே இருக்கும். சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கான பாடல்கள் ஒலிபரப்பப்படாது. மக்களிடம் வரிகளை வாங்கித்தானே அரசு ஒலிபரப்பு நிறுவனம் இயங்குகிறது என்று கூறினால், நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டியவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்.  அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் அனைவரும் வெளிநாட்டு பொருட்களைப் பயன்படுத்தலாம். ஆனால், தேசத்தை முன்னேற்ற விரும்புவது மக்களின் தோளில்தான் உள்ளது. எனவே, அதிக விலை கொண்ட தரமற்ற உள்நாட்டு பொருட்களை மட்டுமேதான் வாங்கவேண்டும். பிடிக்கிறதோ இல்லையோ இனிமேல் அப்படித்தான். இதை சரிபார்க்க உறுதிப்படுத்த மதவாத கட்சியின் துணை அமைப்புகள் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குள் வருவார்கள். சோதனையிடுவார்கள்.  கூடுதலாக குளிர்பதனப்பெட்டி சோதனை தனி. சமையல் அறையில், இந்...

பேரிடர் காலத்தில் உயிர்பிழைக்க தங்குமிடத்தை உருவாக்கிக்கொள்ளுங்கள்!- ஆலோசனைகள்

படம்
  இயற்கை பேரிடர்களால் அல்லது இனவெறி, நிறவெறி, மதவாதிகள் செய்யும் கொடூர தாக்குதலால் சொத்துக்கள் அழிந்துவிட்டதா? வீடு புல்டோசரால் இடித்து தள்ளப்பட்டுவிட்டதா, சிறுபான்மையினர் என்பதால் காவல்துறை அடித்து துன்புறுத்துகிறதா, தேசதுரோக வழக்கு போடப்படுகிறதா இவை அனைத்துமே பேரிடர்கள்தான். அரசு உருவாக்குகிற பேரிடர்கள். இயற்கை பேரிடர்களை விட அரசு உருவாக்கும் பேரிடர்களை சமாளிப்பது கடினம். ஆபத்து வரும் நேரத்தில் முன்னே உதவி பெற்றவர்கள் உங்களை மறந்துவிடுவார்கள். எதிர்க்கட்சிகளும் ஆதரவளிக்காது. சுற்றியுள்ளவர்களும் சால்ஜாப்பு சொல்வார்கள். இப்படியான நிலையும் பேரிடர்தான். இந்த சூழ்நிலையில் நீங்களும் உங்கள் குடும்பமும் தெருவில் நிற்காதபடி செல்ல பாதுகாப்பான்ன இடம் அவசியம். அதை குடும்பத்தினர் தவிர வேறு யாரும் அறிந்திருக்காமல் இருந்தால் நன்று. அனைத்து நாடுகளிலும் அவசர கால எச்சரிக்கை முறைகள் உண்டு. மூடநம்பிக்கை கொண்ட மாட்டை வழிபடும் இந்தியா போன்ற மதவாத நாட்டை விட்டுவிடுவோம். எப்போதும் போல அமெரிக்காவை கையில் எடுத்துக்கொள்வோம். அங்கு அவசரநிலையை நூறு நிமிடங்களில் அறிந்து மக்களுக்கு அதிபர் அறிவித்துவிட முடிய...

கலவரம் போர் என இரண்டிலும் தப்பி பிழைப்பது எப்படி?

படம்
எப்போதுமே ஆபத்து நேரும் என விழிப்புணர்வோடு இருங்கள் என ஹூவாய் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் நிறுவனர் ரென் கூறியுள்ளார். அப்படியான விழிப்புணர்வு சாதி, மதத்தால் உடைந்து நொறுக்கிப்போயுள்ள பெயரளவு ஜனநாயகம் கொண்ட இந்தியாவுக்கும் பொருந்தும். இங்கு எப்போது எந்த மேல்சாதிக்காரன், பழங்குடிகளை, தாழ்த்தப்பட்டவர்களை, தலித்துகளை தீ வைத்து எரிப்பான், அந்த இன பெண்களை வல்லுறவு செய்து கொன்று மரத்தில் தூக்கிக்கட்டுவான் என்று தெரியாது. பாதிக்கப்பட்டவர்களே குற்றவாளிகளாக்கி தண்டனை வழங்குவது இந்திய காவல்துறையின் தனிச்சிறப்பு. இப்படியான பண்பட்ட தேசத்தில் நீங்கள் விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே உங்களைக் காத்துக்கொள்ள முடியும். கூடவே சொத்துகள், குடும்பம் ஆகியவையும் அழியாமல் காக்கலாம். வாட்ஸ்அப் வழியாக மதவாத அரசு சுயமாகவே தனித்தனி குழுக்களை வைத்து போலிச்செய்திகளை பரப்பி வருகிறது. எனவே, இதைக்குறித்து அறிந்து கொண்டு கலவரத்தில் சிக்காமல், வீடு, தொழிற்சாலை, கடை எரிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இந்தியாவில் இயற்கை பேரிடர்களை, மதவாதிகள் உருவாக்கும் பேரிடர்களே அதிகம். எனவே, விழிப்போடு மீதமுள்ள நேர்மையான ஊடகங...

பிழைத்திருப்போம் நெருக்கடியான நேரத்தில் தப்பித்துச்செல்வது எப்படி? - போக்குவரத்து

படம்
  பிழைத்திருப்போம் நெருக்கடியான நேரத்தில் தப்பித்துச்செல்வது எப்படி? - போக்குவரத்து இந்திய பேரரசரின் மதக்கலவர ஆட்சியில் வாய்ப்பு கிடைத்தால் தப்பி ஓடிவிடு என்பதே முக்கியமான சுலோகம். அவர் சொல்ல மறந்துவிட்டார். இருந்தாலும் மக்கள் தாமாகவே புரிந்துகொண்டுவிட்டார்கள். சட்டவிரோதமாக குளிரில் உறைந்து செத்தாலும் தாய் நாட்டில் வாழமுடியாது என மக்களுக்கு தெரிந்துவிட்டது. அதுவும் பேரரசரின் பூர்விக ஆட்களே ஆள விட்டுவிடுடா சாமி என தப்பி ஓடிவருகிறார்கள். ஓகே கெட் டு தி பிசினஸ். தப்பி ஓடுவது சரி. அதை எப்படி திட்டமிடுவது? திட்டமிட்டாலும் கூட ஒருமுறை சாலைக்கு வந்துவிட்டால் அப்புறம் நடப்பது எல்லாம் நம் கையில் இருக்காது. அப்படியே வரும் சூழ்நிலைகளை சந்தித்து பயணிக்க வேண்டியதுதான். இருந்தாலும் சில முன்னெச்சரிக்கைகளைப் பார்ப்போம். பேரிடர், மதக்கலவரம், போர் என எது வந்தாலும் சரி, டிவி சேனல்களைப் பார்த்து தேசப்பற்று எனும் உச்சத்தை அடைவதை கட்டுப்படுத்தினால்தான் உயிர்பிழைப்பது சாத்தியம். தப்பிச்செல்லும் சாத்தியம் கொண்ட சாலைகளை அடையாளம் கண்டு அதிகம் பயன்படுத்தாத சாலைகளை தேர்வு செய்து தப்பிக்க முயலவேண்டும். எப்போது...

பேரிடர் காலத்தை எதிர்கொள்ள எப்படி தயாராவது? பொருட்கள், ஆலோசனைகள்

படம்
  பிழைத்திருப்போம் பேரிடர் காலங்களில் உயிர் தப்பிப் பிழைப்பது எப்படி? வடக்கு நாட்டில் தென்னாட்டில் உள்ளவர்கள் பற்றி தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. அதனால் யாருக்கென்ன நஷ்டம்? என வாழ்கிறார்கள். தென்னாட்டினர். வடநாட்டினர் பற்றி தெரிந்ததால் அவர்களின் மோசடிகளை அறிந்து பத்திரமாக வாழ்கிறார்கள். ஆக, தகவல்களை முடிந்தளவு சேகரித்து வைத்துக்கொள்வது நன்மைதான். அது வளர்ச்சிக்கு உதவும், குறிப்பாக ஆபத்துக்காலங்களில் தட்பவெப்பநிலை தகவல், வானிலை தகவல், ஏன் கல்லூரிகள் நடத்தும் சமுதாய வானொலி கூட பயன் தரும்தான். சில நாடுகளில் வானிலைக்கென தனி வானொலி அலைவரிசையே இயங்குகிறது. அந்தளவு இந்தியா வளரவில்லை என்பதால், உள்ளூர் அளவில் சமூக வலைதளத்தில் பகிரும் தகவல்களை பார்த்து எச்சரிக்கையாக இருக்கலாம். பேரிடர், மதக்கலவரம், மதவாதிகள் ஏற்படுத்தும் வன்முறை, கொள்ளை ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும் தகவல்கள் உதவும். உலகத்தைப் பற்றி அறிவது சிறப்பு. அப்படி இல்லையென்றால் உங்கள் ஏரியா பற்றியேனும் அறிவது நல்லது. அப்போதுதான் திடீரென லாக்டௌன் என்று அரச தகராறு செய்தால் முன்னமே பாதிப்பிலிருந்து நம்மையும் குடும்பத்தினர...

கலவரச்சூழலில் தற்காப்பை உறுதிசெய்துகொள்வோம்!

படம்
  பாதுகாப்பு மனநிலை தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் அதை தடுக்க சில பலவீனமான அரசுகளால் முடியாது. பதிலுக்கு அரசை கேள்வி கேட்கும் சமூக செயல்பாட்டாளர்களை பிடித்து வழக்கு போட்டு சிறையில் அடைப்பார்கள். அவர்களின் விமர்சனங்களில் உண்மை இருப்பதுதான் காரணம். இது பாதுகாப்பான மனநிலை அல்ல. பேரிடர் காலங்களில் ஆயுதங்களை, வெடிமருந்துகளை வாங்கி குவித்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என நினைக்காதீர்கள். அது பிழை. மூளையைப் பயன்படுத்தி யோசிக்கவேண்டும். எப்படி அந்த சூழ்நிலையில் எதிர்வினையாற்றுவது என திட்டங்களை வகுக்க வேண்டும். பாதுகாப்பு மனநிலை கருத்தை அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஜான் போய்டு உருவாக்கினார். வயிறு சொல்லும் அறிவுரை சண்டை போடுவதா, ஓடிவிடுவதா என்பதை உங்கள் புத்தி கூறும். தேவை கூர்மையான திறன் கொண்ட காது. சில நேரங்களில் நாம் அன்புக்குரியவர்களை பாதுகாக்கும் நெருக்கடியில் சிக்குவோம். ஒருவரோடு சண்டை போட்டுக்கொண்டே இன்னொருவரை பாதுகாப்பது எளிதான செயல் அல்ல. தாக்குவது, தப்பி ஓடுவது என இரண்டில் எதையும் நீங்கள் செய்யலாம். விபத்து, தாக்குதல் காலங்களில் மக்கள் பெரும்பாலும் திகைத்து என்ன செய்வதென தெரிய...

அறிவால் பகை வெல்வோம் - பாயும் பொருளாதாரம்

படம்
      பாயும் பொருளாதாரம் 7 அறிவால் பகை வெல்வோம் கையில் நிறைய ஆயுதங்களை வைத்திருப்பவர்கள், அதை எங்காவது பயன்படுத்திப் பார்க்க முயல்வார்கள். அதை தவிர்க்கமுடியது. மனித குண இயல்பே அப்படித்தான். இந்த வகையில் அமெரிக்கா, தனது பொருளாதார வளர்ச்சிக்கு பலிகடாவாக மாற்ற கனடாவை, கிரீன்லாந்தை நிர்பந்தித்து வருகிறது. பெரிய பொருளாதாரத்திற்கு அதிகளவு இயற்கை வளங்கள் தேவை. அதை அடைய பிற நாடுகளை விலைக்கு வாங்கி, நேரடியாக அல்லது மறைமுகமாக காலனியாக்கினால் மட்டுமே பெறமுடியும். பெரிய அரசு, சிறிய அரசு என இரண்டுக்குமே சேவை வரி செயல்பாடு என அனைத்திலும் வேறுபாடுகள் உண்டு. அரசு இயங்குவதில் கருத்தியல் முக்கியத்துவம் பெறுகின்றன. வலதுசாரிகள், அரசு தனிப்பட்ட வணிகம், தொழிலதிபர்கள், தொழில்கள் எதிலும் அரசு தலையிடாது பார்த்துக்கொள்கிறார்கள். மக்களை உயிரோடு பாதுகாப்பது மட்டுமே அரசின் கடமை. என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் கூறுவதல்ல. தொழிலதிபர்களுக்கு குறைந்தளவு வரியே அரசு விதிக்கும். இதெல்லாம் வலது கருத்தியல். இதில் மதம் சேர்ந்தால் புல்டோசர்கள் பிரதமர் கட்டித்தந்த வீட்டைக்கூட இடிக்கும். ஊழல்கள், கொலை, கொள்ளை மன்...

2025ஆம் ஆண்டில் என்ன எதிர்பார்க்கலாம்?

படம்
  புதிய எதிர்பார்ப்புகள் 2024ஆம் ஆண்டு பற்றிய விஷயங்களை பூந்தி, டெய்லிகரன் ஆகியோர் இணைப்பிதழை இலவசமாக கொடுத்து புரிய வைத்துவிடுவார்கள். இனி அதை தனியாக எழுதி நேரத்தை வீணடிக்க வேண்டாம். எதிர்வரும் ஆண்டுக்கான விஷயங்களைப் பார்ப்போம். விமானநிலையம் மக்கள் இந்தியாவில் இருந்து தப்பிச் செல்லவா என்று தெரியவில்லை. பிரமாண்ட விமானநிலையங்கள் நொய்டா, நவி மும்பையில் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன. இவற்றை ஆட்சித்தலைவரின் அபிமான நண்பர் இயக்குவாரா இல்லையா என விரைவில் செய்திகள் சொல்லும். கூட்டுறவு இந்தியா குவாட் அமைப்பில் உள்ளது. அமெரிக்க அதிபராக குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப் பதவியேற்கவிருக்கிறார். சீனாவின் டிக்டாக்கை தடைவிதிக்க வேண்டாம் என கூறியுள்ளார். வணிகத்தைப் பொறுத்தவரை அதிகவரி ஏற்றுவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டார். சீனாவுக்கு எதிராக அமெரிக்கா என்ன வித நடவடிக்கை எடுத்தாலும் இந்தியா அதற்கு மகிழ்ச்சியுறும்.பின்னே நாம் முன்னேறமுடியவில்லை அடுத்தவர்கள் முன்னேறினால் மட்டும் பார்த்துக்கொண்டு சும்மா இருப்போமா என்ன? இந்த வகையில் இந்தியா ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளோடு இணைந்துகொண்டு இயங்கும். மின...

சீனாவின் காலனி நாடாக மாறும் இந்தியா!

படம்
                    வணிகத்தின் நடைமுறையில் கவர்ச்சிகர வாசகங்களுக்கு இடமில்லை!   உலகமயம், தாராளமயம் என கொள்கைகள் மாறிவிட்டன. இந்தக்காலத்தில் தேர்தலில் வெற்றிபெறுவதற்காக பல பொய்யான சுலோகன்களை ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் அவை நடைமுறையில் பெரிய பயன்களைத் தருவதில்லை. தற்சார்பு என்பதும் அதில் ஒன்று. வெற்று பேச்சுகள், நாட்டை ஆபத்தில் தள்ளும் என்பதை கிடைக்கும் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தியாவிற்கு எல்லை ரீதியாக நிறைய பிரச்னைகள் உண்டு. பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக எல்லையில் தொல்லை தரும் நாடாக சீனா உள்ளது. எல்லை விவகாரம் தனி, வணிக விவகாரம் தனி என சீன அரசு கூறி செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முக்கிய வணிக கூட்டாளிகள் அமெரிக்கா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம், சௌதி அரேபியா, ரஷ்யா நடப்பு ஆண்டில் வணிக அளவு அமெரிக்கா - 118. 4 பில்லியன் டாலர்கள் சீனா - 119.3 பில்லியன் டாலர்கள் அமீரகம் - 84 பில்லியன் டாலர்கள் சௌதி அரேபியா - 66 பில்லியன் டாலர்கள் ரஷ்யா - 43 பில்லியன் டாலர்கள் இந்தியா, 2020ஆம் ஆண்டு தொடங்கி சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை கு...

சொத்துக்களை எரி, சிறையில் அடை, வணிகத்தை தடு - இந்து தேசியவாதத்தின் பரிசோதனைக்கூடமான உத்தர்கண்ட் மாநிலம்!

படம்
  அதீத இந்து தேசியவாதத்தின் பரிசோதனைக்கூடம்! இந்தியாவிலுள்ள உத்தர்கண்ட் மாநிலம் கடவுளின் நிலம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. பல நூறு கடவுள்கள் இருக்கிறார்கள் எந்த கடவுளுக்கு சொந்தமான நிலம் என்றால், இந்துக்கடவுள்களுக்கான நிலம் என பல நூற்றாண்டுகளாக கூறி வருகிறார்கள். இந்த மாநிலத்தில் ஆயிரக்கணக்கான இந்து கோவில்களும், புனிதப்பயணம் செய்வதற்கான இடங்களும் உள்ளன.  கடந்த பத்தாண்டுகளாக வலதுசாரி மத அடிப்படைவாதிகள், உத்தர்கண்ட் மாநிலத்தை அதீத தேசியவாதத்தை அரசியல் சக்தியாக பயன்படுத்தி வருகிறார்கள். அங்குள்ள முஸ்லீம் சிறுபான்மையினரை பகிரங்கமாக மிரட்டியும், இனப்படுகொலை செய்வோம் என சூளுரைக்கவும் தொடங்கியுள்ளனர். கடந்த ஏப்ரல் பத்தொன்பதாம் தேதி முதல் மக்களவைத் தேர்தல் தொடங்கி நடந்து வருகிறது. மூன்றாவது முறையும் வெறுப்பு, பிரிவினை கருத்துகள், முஸ்லீம்களை அடிப்போம், துரத்துவோம், 400 இடங்கள் வென்றால் அரசியலமைப்பை மாற்றுவோம், மசூதியை இடிப்போம் என ஆக்கப்பூர்வமான பல்வேறு வாக்குறுதிகளை பாரதீயன்கள் வெளிப்படையாக அளித்து வருகிறார்கள்.  கல்வி அறிவு இல்லாத மூடநம்பிக்கையில் ஊறிய, தனது வாழ்க்கையை முன்னே...

ஒரே உலகம் ஒரே பாரதீயன் - அனுபவக்கதை - 1

படம்
அன்று நல்ல நாளா என்று பழனிசாமிக்கு தெரியவில்லை. ஆனால், அன்றுதான் ஈரோட்டுக்கு செல்ல வேண்டியிருந்தது. ஒருநாள் முன்னதாகத்தான் 420 சரணுக்கு போன் செய்திருந்தான். முதலில் ஏர்செல் அலுவலகம் திறந்திருந்தவன். அரிசிக்கடைக்காரரின் ஊனமான பெண்ணை நோட்டம் விட்டு திரிந்தான். பிறகு என்னவானதோ, தொலைக்காட்சி சேனல் ஒன்றின் நிருபராகி கலெக்டர் ஆபீஸ் உள்ளே பணியாற்றிய பெண்ணை கல்யாணம் செய்துகொண்டான். எப்பட்ரா கல்யாணமெல்லாம்? அது அப்படித்தான் லவ்வாயிடுச்சு. கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நீ எதுவும் பண்ணுலியா? நான் பண்றதுக்கு கையில் காசும் இல்ல. வேலையும் இல்ல. நான் ஈரோட்டுக்கு வர்றேன். நோக்கியா போன்ல பிரச்னை. அங்க கஸ்டமர் சர்வீஸ் சென்டர் எங்கிருக்கு? உனக்குத் தெரியுமான்னு கேட்கத்தான் போன் பண்ணேன். பெருந்துறை ரோட்டுல ஒண்ணு இருக்கு. நோக்கியா போனுங்கறேயே என்ன போனு பட்டன் போனா? பட்டன் போனா… ஆண்ட்ராய்ட்தான். டச் போனு. அங்க வந்துட்டு வேல முடிஞ்சா உன்ன பாக்க வரலாமா? நா ரொம்ப பிஸி. இருந்தாலும் உன்ன பாக்க முடியுமான்னு தெரில. நீ பன்னீர் செல்வம் பார்க்குக்கு வந்துட்டு கூப்பிடு. பார்ப்போம். சரண் சாதாரண ஆள் கிடையாது. பல ஆட்களையும்...

இந்துத்துவா எனும் கருத்தியலை குறுகிய மனத்துடன் சுயநலனிற்கு பயன்படுத்துபவர்களைப் பற்றி விளக்கும் நூல்!

படம்
  நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர் கிழக்கு பதிப்பகம் 341 பக்கங்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் எழுதிய நூலை வலதுசாரி கருத்தியல் கொண்ட கிழக்கு பதிப்பகம் ஏன் வெளியிட்டுள்ளது என வாசகர்களுக்கு சந்தேகம் எழலாம். அதற்கான பதில் தலைப்பிலேயே உள்ளது.  இந்துமதம் எப்படிப்பட்டது, அதில் உள்ள தன்மைகள் என்ன, அதற்கு உழைத்த ஆதிசங்கரர்,ராமானுஜர் ஆகியோரின் பங்களிப்பு, சங்கரர் உருவாக்கிய மடங்கள், அதன் பணிகள், நிறுவன மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என முதல் பகுதி விளக்குகிறது. இதற்குப்பிறகு சசி தரூர் விளக்குவது இந்துத்துவா என்ற கொள்கையை உருவாக்கிய சாவர்க்கர், அதை மேம்படுத்திய கோல்வால்கர், ஹெட்கேவர் ஆகியோர் எப்படி அதை குறுகிய நோக்கத்தில் பார்த்து மக்களின் மத நம்பிக்கையை சுயநலனிற்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார்.  இங்குதான் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்பின் செயல்பாடு உள்ளே வருகிறது. கலாசார தேசியம் என்ற பெயரில் நிறுவன மதங்கள் போலவே இந்து மதத்தை எந்தெந்த வழிகளில் மாற்ற முயல்கிறார்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நூலை தொடக்கத்தி...

பால்புதுமையினரான மார்ஷா கொல்லப்பட்டதற்கு காரணம் என்ன?

படம்
  மார்ஷா பி ஜான்சன் கொல்லப்பட்டது ஏன்? 1992ஆம் ஆண்டு, ஜூலை ஆறாம்தேதி நாற்பத்து ஆறு வயதான மார்ஷா ஹட்சன் ஆற்றில் பிணமாக மிதந்தார். அப்போதுதான் பால்புதுமையினருக்கான நகர பேரணி நியூயார்க்கில் நடைபெற்று முடிந்திருந்தது. பால்புதுமையினரன மார்ஷாவின் இறப்பை காவல்துறை தற்கொலையாகவே கையாண்டது. ஒரு கும்பல், மார்ஷாவை அடிக்க துரத்திச் செல்வதை மக்கள் பார்த்து சாட்சி சொன்னபிறகே அவரின் தலையின் பின்புறம் அடிபட்டிருந்ததை போலீசார் கவனித்தனர். பிறகுதான் தற்கொலைக்கோண விசாரணை மாறி, கொலை என்ற ரீதியில் விசாரிக்கத் தொடங்கினர். ஆப்பிரிக்க அமெரிக்க பெண்மணியான மார்ஷா, பால்புதுமையினரின் உரிமைக்காக போராடியவர். ஸ்டோன்வால் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தோழி சில்வியா ரிவேராவுக்கு உதவியவர். சில்வியா 2002ஆம் ஆண்டு காலமானார். இவருடன் சேர்ந்து மார்ஷா ஸ்ட்ரீட் டிரான்ஸ்வெஸ்டைட் ரிவெல்யூஷனரிஸ்   - ஸ்டார் என்ற அமைப்பை   தொடங்கினார். இந்த அமைப்பு நியூயார்க் நகரில் வீடற்று தெருவில் திரியும் இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்கானது. 2021ஆம் ஆண்டு மார்ஷாவின் நேர்காணல் பே இட்   நோ மைண்ட் என்ற ஆவணப்படத்தில் இணைக்கப்பட்டு வெள...

பிரிவினை காயங்களை ஆற்ற முயன்ற காந்தி!

படம்
  காந்தி தென்னாப்பிரிக்காவில் நடத்திய சத்தியாகிரகத்தின் இந்திய முறையை இந்தியாவில் நடைமுறைப்படுத்தினார் . ஆனால் வெளிநாட்டில் பெற்ற வெற்றபோல உடனே இங்கு வெற்றி கிடைக்கவில்லை . 1930 ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தை எதிர்த்து போராடியபோது மக்கள் ஆங்கிலேயர்களை அடித்து வன்முறையை உருவாக்கிய சம்பவங்கள் நடந்தன . இயக்கத்தைத் தொடங்கிவிட்டோம் எனவே , அப்படியே நடத்தி சுதந்திரத்தைப் பெறுவோம் என காந்தி நினைக்கவில்லை . போராட்ட அமைப்பைத் தொடங்கி திடீரென இடையில் போராட்டத்தை நிறுத்துவது தனக்கு அவமானம் என காந்தி நினைக்கவில்லை . தான் நினைத்த வடிவில் போராட்டம் நடைபெறவேண்டும் என பிடிவாதமாக இருந்தார் . இதன் விளைவாக சிலமுறை தான் தான் நடத்த்திட்டமிட்ட போராட்டங்களை நோக்கம் நிறைவேறும் முன்னரே நிறுத்தியிருக்கிறார் . பிறரைப் புரிந்துகொண்டு மக்களின் நலன்களை முன்னிறுத்த காந்தி முயன்றார் . அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் . தோல்வியும் அடைந்திருக்கிறார் . நீதிமன்றத்தில் வாதிட முடியாமல் தனது சக வழக்குரைஞர்களிடம் வழக்காடுவதற்கு கோரியவர்தான் பின்னாளில் உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளர்களிடம் இந்திய சுதந்திரம் பற்றி பேசினார் . அவர்கள...