கலவரச்சூழலில் தற்காப்பை உறுதிசெய்துகொள்வோம்!

 



பாதுகாப்பு மனநிலை
தீவிரவாத தாக்குதல் நடந்தாலும் அதை தடுக்க சில பலவீனமான அரசுகளால் முடியாது. பதிலுக்கு அரசை கேள்வி கேட்கும் சமூக செயல்பாட்டாளர்களை பிடித்து வழக்கு போட்டு சிறையில் அடைப்பார்கள். அவர்களின் விமர்சனங்களில் உண்மை இருப்பதுதான் காரணம். இது பாதுகாப்பான மனநிலை அல்ல. பேரிடர் காலங்களில் ஆயுதங்களை, வெடிமருந்துகளை வாங்கி குவித்துவிட்டால் உயிர் பிழைத்துவிடலாம் என நினைக்காதீர்கள். அது பிழை. மூளையைப் பயன்படுத்தி யோசிக்கவேண்டும். எப்படி அந்த சூழ்நிலையில் எதிர்வினையாற்றுவது என திட்டங்களை வகுக்க வேண்டும்.

பாதுகாப்பு மனநிலை கருத்தை அமெரிக்க விமானப்படையைச் சேர்ந்த ஜான் போய்டு உருவாக்கினார்.

வயிறு சொல்லும் அறிவுரை

சண்டை போடுவதா, ஓடிவிடுவதா என்பதை உங்கள் புத்தி கூறும். தேவை கூர்மையான திறன் கொண்ட காது. சில நேரங்களில் நாம் அன்புக்குரியவர்களை பாதுகாக்கும் நெருக்கடியில் சிக்குவோம். ஒருவரோடு சண்டை போட்டுக்கொண்டே இன்னொருவரை பாதுகாப்பது எளிதான செயல் அல்ல. தாக்குவது, தப்பி ஓடுவது என இரண்டில் எதையும் நீங்கள் செய்யலாம். விபத்து, தாக்குதல் காலங்களில் மக்கள் பெரும்பாலும் திகைத்து என்ன செய்வதென தெரியாமல் நின்றுவிடுகிறார்கள். இதுகூட உடலில் அட்ரினலின் சுரப்பால்தான். நடைமுறை ரீதியில் சொன்னால் நடக்கும் பேரிடரை எதிர்கொள்ளும் மனநிலை மக்களுக்கு கிடையாது. அதை அவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

மதவாத ஆட்சியில் நீங்கள் உண்மையை மக்களுக்கு சொன்னால் கொல்லப்படுவீர்கள். அல்லது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உங்களை சிறையில் அடைப்பார்கள். எந்த விசாரணையும் நடக்காது. அப்படியே அழுகி சாக வேண்டியதுதான். உங்கள் குடும்பத்தின் மீது பாலியல் வல்லுறவு, அல்லது கொலை மிரட்டல், தேசதுரோகி பட்டம் என நிறைய தாக்குதல்களை நடத்துவார்கள். இதற்கென அரசியல் கட்சிகள் குண்டர்களை வைத்துள்ளன. எனவே, அனைத்துக்கும் தயாராக இருக்கவேண்டும்.

எதிராளி பலசாலியா, தப்பி ஓடுவதில் தப்பில்லை. உயிர் பிழைத்து வலிமையாகி பின்னொருநாளில் கூட சண்டை போடலாம். எதிரியின் உடல்மொழியை கவனித்து சண்டை போடவேண்டும். சிலர் ஆயுதங்களை பதுக்கி வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் கவனம் முக்கியம்.

2

மக்களோடு மக்களாக கலந்திருப்போம்.
ஆங்கிலத்தில் கிரே மேன் என்று கூறுவார்கள். பிறரால் கவனிக்கப்படாத மக்களோடு கலந்திருக்கும், அதேசமயம், சிக்கலான சூழலை தானே சமாளித்துக்கொண்டு மீண்டெழுபவர்களை அப்படி அழைக்கிறார்கள். தேவையில்லாத கவனம் பிறரை ஈர்த்தால், அவர்கள் உங்களை நோக்கி வருவார்கள். உறவை வளர்த்துக்கொள்ள முயல்வார்கள். அதெல்லாம் தேவையே இல்லாத ஆணி.

எந்த இடத்தில் இருந்தாலும் சூழலை நீங்கள் கவனித்துக்கொண்டால் நல்லது. சுற்றியிருப்பவர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்று பார்த்து வைத்துக்கொண்டால் உங்கள் பாதுகாப்புக்கு எவ்வித பாதகமுமில்லை.

தோளில் மாட்டும் பேக்குகளைக் கூட பார்த்து கவனமாக வாங்க வேண்டும், பேரிடர் காலங்களில் பலரும் தேவையான பொருட்களை அடுத்தவர்களிடமிருந்து பலவந்தமாக கூட பிடுங்கிக்கொள்ள முயல்வார்கள். எனவே, பிறரின் கவனத்தை கவராதபடி மென்மையான நிறத்தில் உடை உடுத்துங்கள். பேக்குகளை வாங்கிப் பயன்படுத்துங்கள். மக்களோடு மக்களாக இருக்கவேண்டும். வேறுபட்டு தனித்துவத்தை காட்ட நினைத்தால் உயிருக்கே ஆபத்தான சூழ்நிலை வரும்.

எந்த இடத்திலும் பிறரின் கவனத்தை ஈர்க்க கூடாது. மேலும் யாருடனும் கண்களைப் பார்த்து பேசாதீர்கள். ஒருவரின் கண்களைப் பார்த்து பேசுவது என்பது, நினைவுகளை உருவாக்கும். அவர்கள் உங்களை கவனிப்பார்கள். பேச முயல்வார்கள். அது பேரிடர் காலங்களில் தேவையில்லாத சிக்கல்.

அரசு அதிகாரிகளோடு பேசும்போது கண்ணியமும், நாகரிகமும் முக்கியம். தேவையில்லாமல் கோபமுற்று பேசினால்,அவர்கள் நமது பின்னணியை ஆராயத்  தொடங்குவார்கள். அது உங்களது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும்.

மக்களோடு மக்களாக பெரிதாக அடையாளம் தெரியாமல் கலந்திருப்பது ஒருவகையில் பாதுகாப்பைத் தரும். உங்கள் ஆடைகள் பிராண்டட் ஆக இருந்தாலும், வைத்திருக்க பேக்குகளை தனித்துவமாக அதிக காசு போட்டு வாங்கி வைத்திருந்தாலும் பேரிடர் காலங்களில் திருடர்கள் உங்களை நோக்கி வருவதற்கு வாய்ப்பாக அமையும். திருட்டு, கொள்ளையில் உங்கள் உயிரும் ஆபத்துக்கு உள்ளாகும். எனவே அடக்கம் அமரருள் உய்க்கும் என்ற வள்ளுவர் வாக்கை மறக்காதீர்.

கோமாளிமேடை குழு

படங்கள் - கூகுள் இமேஜஸ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

தனது செக்ஸ் பிரச்னையை வெளிப்படையாக பகிரத் தொடங்கியுள்ள இந்தியப் பெண்கள்!