இந்து மதத்தை முற்றாக அழித்தால்தான் தீண்டாமை ஒழியும்!
இந்து மதத்தை முற்றாக அழித்தால்தான் தீண்டாமை ஒழியும்!
தீண்டத்தகாதவர்களை ஆளும் வர்க்கம், அரசு, இடதுசாரிகள் தொடர்ச்சியாக கீழே இழுத்து தள்ளி வருகிறார்கள். இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால், சாதிமுறை அப்படியேதான் உள்ளது. சாதிமுறை தொடரும்போது அதைப் பின்பற்றி தீண்டாமையும் அப்படியே அழியாமல் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆளும் வர்க்கம், இதை அறிந்தும் அதை அழிக்காமல் அப்படியே வளரவிட்டுவருகிறது. சாதிமுறை அழிவது என்றால் இந்துமதம் அழிவது என்றே அர்த்தமாகிறது. ஒரு இந்து, இந்தியாவைக் காக்க இந்துமதத்தை அழிக்க முன்வருவாரா?
தீண்டாமையை அப்படியே வளரவிடுவதால், ஆளும் வர்க்கத்திற்கு நிறைய சமூக பொருளாதார பயன்கள் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமாக தீண்டத்தகாத மக்களின் வாக்குகளைப் பெற முடிகிறது. வட்டியில்லாத கடன்களை வழங்குவதைப் போல வாக்கு வங்கியாக மக்கள் இருக்கிறார்கள்.
தீண்டத்தகாதவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் வறுமையில், பலவீனமானவர்களாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டவர்களாக, ஒருங்கிணைக்கப்படாதவர்களாக உள்ளனர். சாதி, துணைசாதி பிரிவுகள் என பலவும் அவர்களை பிரிவினை செய்து வைத்துள்ளன. அவர்களுக்கு சமூக அந்தஸ்து, அரசியல் செல்வாக்கு, பொருளாதார பலம் கிடையாது. கல்வி அறிவு இல்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். படைபலம், பணபலம், மனபலம் என மூன்று வகை பலம் உள்ளது. பொருளாதார ரீதியாக அவர்களுக்கு பெரிய பலமில்லை. மனபலம் என்று பார்த்தாலும் சொல்ல ஏதுமில்லை. தினசரி வாழ்க்கையில் திட்டமிட்டு இழிவுபடுத்தப்படும் மக்களுக்கு மனபலம் எங்கேயிருந்து கிடைக்கும்?
படைபலம் கொண்டிருந்தாலும் அதிலும் சாதி, துணை சாதி, மொழி, என நிறைய பிரிவினைகள் உள்ளன. அரசியல் கட்சிகள் வாக்குக்காக அவர்களை பிரித்து வருகின்றன. இப்படி மோசமான நிலையில் இருந்துகொண்டு அவர்கள் எப்படி இதயமில்லாத இந்து சமூகத்தை எதிர்த்து போராட முடியும்?
முன்னமே கூறியபடி தீண்டாமையை கடைபிடிப்பதால் இந்துக்களுக்கு பெரியளவு நன்மை கிடைத்து வருகிறது. அதன் வழியாக நிறைய பலன்களை அனுபவித்து வருகிறார்கள். இந்துமதத்தை அழிக்காமல் தீண்டாமையை அழிக்க முடியாது. எளிதாக சாதிக்க முடியாத இப்பணிக்கு தீண்டத்தகாதவர்கள் தயாராக இருக்கிறார்களா? இல்லை. இந்துமதத்தை அழிக்க முயன்றால் பேரிடரை சந்திக்கவேண்டியிருக்கும் என அவர்கள் நினைக்கிறார்கள். இந்துமதம் எனும் கேஸ் சேம்பரில் அடைக்கப்பட்டு மூச்சு திணறி கொல்லப்படுவோம் என பயப்படுகிறார்கள். தீண்டத்தகாதவர்கள் தங்களை இந்து மதத்திற்குள் ஈடுபடுத்தி வருகிறார்கள். அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் ஆங்கிலேயர்களைப் போல மாறி வாழ்வது போல விதி, தலையெழுத்து என பல்வேறு சடங்குகளை நம்பத்தொடங்கி இந்துமதத்துடன் இணைந்து வருகிறார்கள். அதாவது அடிமைகள், தங்களது அடிமைத்தனத்தை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் அதற்கு எதிராக குரல் எழுப்பவுமில்லை, அதை எதிர்த்து போராடவுமில்லை.
மூலம்
தலித் தி பிளாக் அன்டச்சபிள்ஸ் ஆப் இந்தியா

கருத்துகள்
கருத்துரையிடுக