தோற்றுப்போன உளவுத்துறை ஆபரேஷனுக்கு காரணமான துரோகியை கண்டுபிடிக்க உதவும் குடியிருப்புவாசி அமைப்பு!
மை சீக்ரெட் டெரியஸ் கே டிராமா 16 எபிசோடுகள் எம்பிசி டிவி தேசதுரோகி என்ற குற்றம்சாட்டப்பட்ட என்ஐஎஸ் ஏஜெண்ட், தோற்றுப்போன தனது ஆபரேஷன் பற்றி துப்பறிந்து துரோகியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை. தொடரின் நாயகன் டெரியஸ். அவனை உளவுத்துறை ஏஜென்ட் என பில்டப் செய்கிறார்கள். ஆனால், அவனை விட எதிரி பலசாலி. டெரியஸ் எத்தனை முறை தாக்கப்பட்டார், துப்பாக்கியால் சுடப்பட்டார் என்று கைவிரல்களை விரல் விட்டு எண்ணவேண்டும். அத்தனை முறை நாயகன் அடிபடுகிறார். பரிதாபம். தொடர் முழுக்க என்ஐஎஸ் அமைப்பை விட கிங் அடுக்குமாடி குடியிருப்புவாசிகளின் வாட்ஸ்அப் குரூப் சிறப்பாக இயங்குகிறது. நாயகி இரண்டு குழந்தைகளின் தாய். அதேநேரம் அவளுக்கு டெரியஸ் மீதும், டெரியசுக்கு அவள் மீதும் காதல் வருகிறது. அதுபோன்ற காட்சிகள் நன்றாக உள்ளன. கணவர் இறந்தபிறகு இரு குழந்தைகளை வளர்க்க நாயகி ஆரின் படும்பாட்டை நன்றாக காட்டியிருக்கிறார்கள். சில நேரம் ஆரின் பாத்திரம் நடிப்பது மிகை நடிப்பாக மாறுகிறது. அனிமேஷன் பாத்திரத்தின் நடிப்பை பின்பற்றுகிறாரோ.... நாயகனைப் பொறுத்தவரை அதிக உணர்ச்சிகளை கொட்டி நடிப்பவரல்ல. டெரியஸ் பாத்திரமே சிந்...