வாயை மூடு! - விமர்சனங்களை மௌனமாக்கும் ஊபா சட்டம்
வாயை மூடு! - விமர்சனங்களை மௌனமாக்கும் ஊபா சட்டம் அரச நீதி என்பது தனது அதிகாரத்தை எப்படியேனும் தக்கவைத்துக்கொள்ள முயல்வது. நீதி,நிர்வாகம் தாண்டி சுயதோல்விகளைப் பற்றி விமர்சிக்கும் எவரையும் சர்வாதிகாரி விட்டுவைப்பதில்லை. அந்த வகையில் பிரிட்டிஷ் அரசும் தனது காலத்தில் போராட்டக்காரர்களை தேசதுரோக சட்டத்தின்படி தண்டித்தது. தலைவர்கள் பலரை சிறையிலிட்டது. நேதாஜி வழியில் சென்றவர்களை தூக்கிலிட்டது. இப்படி நடைபெற்ற சம்பவங்கள் அனைத்துமே அதற்கென உருவாக்கி வைத்த சட்டங்களின்படிதான் நடந்தன. அதே சம்பவங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஜனநாயகத்தின்படி கேள்வி கேட்பவர்களின் குரலை நசுக்க கூலிப்படை தொடங்கி அரசின் புலனாய்வு அமைப்புகள் வரை பயன்படுத்துகிறார்கள். அப்படி அரச பயங்கரவாதத்தைப் முறைப்படுத்தும் சட்டங்களில் ஒன்று ஊபா. எழுத்தாளர் அருந்ததி ராய், அவரது நாவல் எழுத்துக்காக உலகளவில் புகழ்பெற்றவர். அவரது எழுத்துகள், பேச்சுகள் அனைத்துமே பல லட்சம் பேரால் வாசிக்கப்படுபவை. கேட்கப்படுபவை. பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் ஆற்றிய உரை ஒன்றுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அர...