இடுகைகள்

நோபல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோபல் பரிசும் - இந்தியாவின் பெருமைமிக்க அறிவியல் கட்டமைப்பும்....!

படம்
            நோபல் பரிசும் - இந்தியாவின் பெருமைமிக்க அறிவியல் கட்டமைப்பும்....! நோபல் பரிசை இந்தியா ஐந்துமுறை பெற்றுள்ளது. மீதிமுறை எல்லாம் இந்திய வம்சாவளி என தலைப்பு எழுதி இந்திய கைக்கூலி ஊடகங்கள் பெருமைப்பட்டுக்கொண்டன. மற்றபடி கல்வி ஆராய்ச்சிகளுக்கே பெரிய அளவு வரிவிதிப்பு விதிக்கப்பட்டு வருகிற நிலையில் நோபல் பரிசு என்ன, ஆராய்ச்சி செய்பவனுக்கு மரியாதையே சமூகத்தில் இருக்காது. அறிவியலாளர்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டிய இடத்தில் மத தலைவர்கள், சாதி தலைவர்கள், பார்ப்பன பூசாரி, பண்டாரங்கள் அமர வைக்கப்பட்டு வருகிறார்கள். இப்படியான மத அடிப்படைவாத சிக்கல்கள் இருந்தாலும் டாப் 10 நோபல் பரிசு பட்டியலில் இந்தியா வந்துவிடும் என சிலர் பகல் கனவு கண்டு வருகிறார்கள். இப்போதைக்கு நோபல் பரிசு பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்வீடன், ரஷ்யா, ஜப்பான், கனடா, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. ஆதிவாசி, பழங்குடி மக்களுக்கான மேம்பாட்டு நிதியை பசுமாட்டு மடங்கள் கட்ட மாநில அரசுகள் செலவழித்து வருகின்றன. இந்த நிலையில், மனிதர்கள் அழிந்து மாடுகள் மட்டுமே வா...

முகத்தில் ஏற்படும் வாதம், டைபாய்டை பரப்பிய சமையல்கார பெண்மணி - மிஸ்டர் ரோனி

படம்
        அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி டைபாய்ட் மேரி என்று அழைக்கப்படுபவர் யார்? அமெரிக்காவில் வாழ்ந்த சமையல்காரர் மேரி மலோன், டைபாய்ட் மேரி என அழைக்கப்பட்டார். இவர் உடலில் டைபாய்ட் ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் இருந்தன. அந்த நோயால் அவர் பெரியளவு பாதிக்கப்படவில்லை. ஆனால், அவர் சமையல் செய்த இடங்களில் நிறையப்பேர் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 51பேர் டைபாய்ட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில் மூன்றுபேர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்கள். எனவே, அரசு மேரியை 1907-1910, 1914-1938 ஆண்டுகளில் நார்த் பிரதர் தீவில் அடைத்து வைத்திருந்தது. நியூயார்க் சுகாதாரத்துறை, இனி சமையல் பணிகளில் ஈடுபடக்கூடாது என எச்சரித்து விடுதலை செய்தது. ஆனால், மேரிக்கு சமையல் வேலை மட்டுமே தெரியும் என்பதால் அதே வேலையை பிடிவாதமாக செய்தார். அவர் உடலில் இருந்த நுண்ணுயிரிகள் பலருக்கும் பரவி டைபாய்ட் நோயாளிகள் அதிகமானார்கள். எனவே, அரசு சுகாதாரத்துறை மேரியை பிடித்து நார்த் பிரதர் தீவில் அவர் வாதம் வந்து சாகும்வரை 1938ஆம் ஆண்டு வரை சிறையில் அடைத்து வைத்தது. குடல்புண் உருவாக காரணம் என்ன? மன...

கலங்கரை விளக்கத்திற்கு ஒளியேற்றியவருக்கு இயற்பியல் நோபல் பரிசு!

படம்
    கலங்கரை விளக்கத்திற்கு ஒளியேற்றியவருக்கு இயற்பியல் நோபல் பரிசு! விருது என்பது எதற்கு கொடுக்கப்படுகிறது? செய்யும் பணியில் பிரம்மிக்கத்தக்க வகையில் சாதனை செய்த காரணத்திற்காக... ஆனால், காட்சி ஊடகங்கள் விருது என்பதை தாம்பூலப்பை போல மாற்றிவிட்டன. இதனால் ஊரில் ஏராளமான பாப்புலிச பைத்தியங்கள், பேன்சி ஸ்டோரில் மரம், பிளாஸ்டிக் என எதில் செய்த விருதுகளையும், பதக்கங்களையும் வாங்கி வீதியில் போவோர் வருவோருக்கெல்லாம் பிடிங்க சார் முதல்ல என்று வீடியோ எடுத்து யூட்யூபில் போட்டு வருகிறார்கள். நோபல் அகாடமியும் முதலில் அப்படித்தான் இருந்தது. அதற்கு ஒரு உதாரணம்தான். ஸ்வீடன் நாட்டு பொறியாளர் நீல்ஸ் குஸ்டாஃப் டாலன். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எத்திலீனை விளக்குக்கு பயன்படுத்தி வந்தனர். அப்போது எரிபொருளை குறைக்கும் விதமாக பொறியாளர் டாலன் ஒரு முறையைப் பயன்படுத்தினார். 1907ஆம் ஆண்டு கருப்பு, வெள்ளை உலோகங்களைக் கொண்டு சோலார் வால்வ் ஒன்றை அமைத்தார். இதற்காக அவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதில் இன்னொரு நகைச்சுவை என்னவென்றால், பரிசு வழங்கப்பட்டபோது மின்சாரம் சாதாரண விளக்குகளை மடைமாற்றத் தொட...

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் வன்முறையை உலகிற்கு சொன்ன பெண்! - நாடியா முராத்

படம்
  நாடியா முராத்  நாடியா முராத் எழுதிய நூல் நாடியா முராத் மனித உரிமை செயல்பாட்டாளர்  யாசிடி என்ற இனக்குழுவைச் சேர்ந்தவர். நாடியா. இவரது இனக்குழு சிரியா, இராக், ஈரான் ஆகிய நாடுகளில் வசிக்கிறார்கள். 1995 ஆம் ஆண்டு கோச்சோ, ஈராக்கில் பிறந்தவர் இவர்.  விவசாயத்தை நம்பி வாழ்ந்த குடும்பம் நாடியாவினுடையது. இவர் தனது கிராமத்தில் வாழ்ந்து வந்தபோது, ஐஎஸ் தீவிரவாதிகள் இவர்களது கிராமத்தை தாக்கி அழித்தனர். 600 ஆண்களை கொன்றனர். ஐ.நா தீவிரவாதிகள் அமைப்பு என ஐஎஸ்ஐஎஸ்ஸை அறிவித்துள்ளது. யாசிடி என்ற இனக்குழுவைச் சேர்ந்த நிறைய பெண்களை தீவிரவாதிகள் பிடித்து சென்று செக்ஸ் அடிமைகளாக வைத்து சித்திரவதை செய்தனர். ஒருநாள் இருநாளல்ல மூன்று மாதங்கள் அந்த நரகத்தை நாடியா பிறருடன் சேர்ந்து அனுபவித்தார்.  ஒருநாள் அவரை பிடித்து அடைத்து வைத்திருந்த அறை திறந்து கிடக்க, அங்கிருந்து தப்பினார். அகதிகள் முகாம் உள்ள இடத்திற்கு அவர் சென்றார். அங்குள்ள குடும்பம் ஒன்று, நாடியாவிற்கு உதவிகளை செய்தனர். பின்னாளில் அவர் ஜெர்மனிக்கு செல்ல அங்கேயே உதவிகள் கிடைத்தது.  யாசிடி இனக்குழு பெண்களின் பாதிப்பிற்கு நாட...

பகோடா விற்பது பொருளாதாரத்தை முன்னேற்றாது - அபிஜித் பானர்ஜி

படம்
newzz நேர்காணல் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ சீனா அனைத்து துறைகளிலும் முன்னேறி உள்ளது. குறிப்பாக வறுமை ஒழிப்பு விஷயங்களில். இதனை எப்படி பார்க்கிறீர்கள். சீனா பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே உற்பத்தி துறை சார்ந்து பணிபுரியத் தொடங்கிவிட்டது. இந்தியா நிலம், சேவைத்துறை சார்ந்த விற்பனையை சாதனையாக பார்க்கிறது. இந்தியாவின் போக்கு, இயல்பாகவே வேலைவாய்ப்புகளை குறைக்கிறது. ஆனால் சீனர்கள் தீவிரமாக உற்பத்தி துறை சார்ந்து உழைத்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் உலக மக்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு தரமுடிகிறது. இந்தியாவின் வறுமை ஒழிப்பு திட்டங்களை எப்படி பார்க்கிறீர்கள். அதில் உங்கள் கருத்தென்ன? இந்தியாவில் மிக குறைந்த பகுதி மக்களே வறுமையில் உள்ளனர். அனைவரும் அல்ல. மகாத்மா காந்தி கிராம வேலைவாய்ப்புத் திட்டம் போன்றவை அரசு ரீதியான கொள்கைத் திட்டங்களாக உள்ளன. இவையும் பயன் அளிக்கின்றன. ஆனால் எந்த நோக்குமின்றி ஜன்தன் யோஜனா போன்ற திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. என்ன பிரயோஜனம் என்று எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். இதனை மதிப்பிட்டு குற...

இந்தியர்களுக்கு வர்க்க மனப்பான்மை அதிகம்! - அபிஜித் - எஸ்தர் டஃப்லோ

படம்
நேர்காணல் அபிஜித் பானர்ஜி - எஸ்தர் டஃப்லோ நோபல் பரிசு பெற்றிருக்கிறீர்கள். எதிர்காலத்தில் உங்களது ஆராய்ச்சி இதனால் சிறப்பு பெறுமா? எங்களது திட்டமே ஆர்சிடி முறையை அனைவரும் செய்யவேண்டும் என்பதுதான். நாங்கள் இந்த விருது பெற்றுள்ளதின் மூலம் எங்கள் குழுவில் உள்ள இளம் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் பெரும் ஊக்கம் பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் இது சிறந்த விஷயங்களைச் செய்யும் என நம்புகிறோம். இந்திய அரசு உங்களை அழைத்தால் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? நாங்கள் கட்சி சார்ந்து எங்கள் ஆய்வுகளை செய்வதில்லை. நாங்கள் குஜராத் மாநில அரசு, மேற்கு வங்க அரசு ஆகியோருடனும் ஆய்வுகளைச்செய்து வருகிறோம். மத்திய அரசின் ஆதரவு என்று நாங்கள் தனியாக எதையும் கேட்கவில்லை. மாநிலங்களில் ஆய்வு செய்வதற்கான விஷயம் ஏதேனும் ஈர்த்தால் நாங்கள் ஆய்வுகளைச் செய்கிறோம். இதில் அரசுகளிடம் நாங்கள் வேண்டுவது ஆர்வத்தையும் நிறைய பொறுமையை மட்டுமே. எஸ்தர் - எங்களுடைய வறுமை ஒழிப்பு செயல்பாட்டு மையத்தின் ஊழியர்கள் பிரமாதமாக வேலை பார்த்து வருகிறார்கள். எங்களுக்கு கிடைத்த பரிசு அவர்களுக்கும் ஊக்கம் தருவதோடு அவர்களின் ப...