இடுகைகள்

தீண்டாமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர்களை வைத்து முஸ்லீம்களை படுகொலை செய்து வருகிறார்கள்!

படம்
  இந்து சாதி முறை அமைப்பு உலகிலேயே இந்தியா ஒரு சிக்கலான நாடு என வெளிநாட்டு தோழர்களுக்கு கூற விரும்புகிறேன். ஆரியர்கள்தான் இரண்டு உலகப்போருக்கு காரணம் என ஜெர்மன் நாட்டு தத்துவவாதிகளைக்கூட நம்ப வைத்து மோசடி செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் உள்ள கல்வியாளர்கள் கூட இந்துமதத்தின் மர்மங்களை கண்டறிய முடியவில்லை. வயது மூப்படையாத, இறக்காத ஒன்றாக இந்துமதம் இருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய மதம். இந்த சாதி அமைப்பு, நான்கு பிரிவுகளைக் கொண்டது. மேலிருந்து கீழ் எனும் பிரமிடு சாதி அடுக்குமுறை கொண்டது. மறுபிறவியை அடிப்படையாக கொண்டு ஒருவர் செய்த புண்ணியம் மேல்சாதியிலும் பாவம் கீழ்சாதியிலும் பிறக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள். இந்துமதத்தில் சர்வ சக்தியும் ஆற்றலும் கொண்டவர்களாக பார்ப்பான்கள் உள்ளனர். இவர்கள் சாதி அடுக்கில் முதலாக இடம்பெறுகிறார்கள். இவர்களே நாட்டை, கட்சிகளை, ஆட்சித்தலைவர்களைக் கூட கட்டுப்படுத்துகிறார்கள். இந்த மேலாதிக்க இந்துமதம் ஆரியர்களின் கண்டுபிடிப்பு. தனியாக ஒருவரை ஒடுக்குவதை விட அமைப்பு ரீதியாக என்றென்றைக்குமாக ஒடுக்கும் அற்புத ஆற்றலைக் கொண்டது. உலகின் எட்டாவது அதிசயம் எ...

இந்து என்பதன் அர்த்தம் அனைத்தையும் தனித்தனியாக பிரிப்பது!

படம்
    இந்து மத அதிசய கொள்கை - ஒற்றுமை அல்ல பிரிவினையை ஊக்குவிக்கிறது! வெளிநாட்டிலுள்ள தோழர்களுக்கு, இந்தியா ஏன் இப்படி இருக்கிறது என்று மனதில் கேள்வி எழலாம். எதனால் இப்படி வினோதமாக நடந்துகொள்கிறார்கள், எதனால் இந்த நாடு அழிந்துகொண்டே வருகிறது என பல்வேறு கேள்விகள் எழலாம். அதற்கு எல்லாம் இந்து மதத்தில் பதில் இருக்கிறது இந்து மனம் அப்படித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்துமதம் ஒற்றுமையை விட பிரிவினையை உருவாக்குகிறது. இந்து என்பதன் அர்த்தம், ஒன்றாக கலப்பது அல்ல, அனைத்தையும் தனியாக பிரிப்பது. அதன் முக்கியமான கொள்கையே பிரிப்பதுதான். பிரிவினைக்கு உதவுவதுதான் சாதி, தீண்டாமை ஆகியவை. பிரிவினையை தீவிரப்படுத்த தீண்டாமை உதவுகிறது. இந்த வகையில் பல்வேறு இனக்குழு மக்களையும் உள்ளுக்குள்ளேயே நாம் பிரித்து வைத்துவிட முடியும். இந்து இந்தியா என்பது ஒரே நாடு கிடையாது. அப்படி இருந்ததும் இல்லை. இனிமேலும் ஒரே நாடாக இருக்கவும் முடியாது. சாதி அல்லது அதன் துணைப்பிரிவு என்பது தனிப்பட்ட நாடாக மாறுகிறது. தேசியவாதிகளின் சிறை என்று கூட கூறலாம். மொழி மக்களை பிரிக்கிறது. இந்துக்கள், தீண்டத்தகாதவர்கள் கம்பி வேலியால் ...

இந்து மதத்தை முற்றாக அழித்தால்தான் தீண்டாமை ஒழியும்!

படம்
  இந்து மதத்தை முற்றாக அழித்தால்தான் தீண்டாமை ஒழியும்! தீண்டத்தகாதவர்களை ஆளும் வர்க்கம், அரசு, இடதுசாரிகள் தொடர்ச்சியாக கீழே இழுத்து தள்ளி வருகிறார்கள். இந்திய அரசியலமைப்புச்சட்டத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டிருக்கலாம், ஆனால், சாதிமுறை அப்படியேதான் உள்ளது. சாதிமுறை தொடரும்போது அதைப் பின்பற்றி தீண்டாமையும் அப்படியே அழியாமல் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆளும் வர்க்கம், இதை அறிந்தும் அதை அழிக்காமல் அப்படியே வளரவிட்டுவருகிறது. சாதிமுறை அழிவது என்றால் இந்துமதம் அழிவது என்றே அர்த்தமாகிறது. ஒரு இந்து, இந்தியாவைக் காக்க இந்துமதத்தை அழிக்க முன்வருவாரா? தீண்டாமையை அப்படியே வளரவிடுவதால், ஆளும் வர்க்கத்திற்கு நிறைய சமூக பொருளாதார பயன்கள் கிடைக்கின்றன. எல்லாவற்றையும் விட முக்கியமாக தீண்டத்தகாத மக்களின் வாக்குகளைப் பெற முடிகிறது. வட்டியில்லாத கடன்களை வழங்குவதைப் போல வாக்கு வங்கியாக மக்கள் இருக்கிறார்கள். தீண்டத்தகாதவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தாலும் அவர்கள் வறுமையில், பலவீனமானவர்களாக நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டவர்களாக, ஒருங்கிணைக்கப்படாதவர்களாக உள்ளனர். சாதி, துணைசாதி பிரிவுகள் என பலவும் அவர்களை ...

சாதி என்பது ஒருவகையான இந்து மனநல நோய்!

படம்
  இந்து பார்ப்பன கருத்தியல் என்பது, லாபத்தை அதிகரித்து மேல்சாதியினரை வைத்து சொத்துக்களை கட்டுப்படுத்தி தங்களது அந்தஸ்து, பிற சாதிகளுக்கு இடையிலான உறவைக் காப்பாற்றிக்கொள்வதாக இருக்கிறது. பார்ப்பன சமூகம், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டி, சமூகத்திலுள்ள பிற சாதி இளைஞர்களை தவறாக வழிநடத்தி தங்களது கருத்தியலை பாதுகாக்க போரிடுமாறு செய்கிறார்கள். இந்த வகையில் அவர்கள் மக்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள். கல்வி என்பது இந்தியாவுக்கு எந்த தீர்வையும் கொண்டு வராது. சாதி, தீண்டாமை என்பது இந்தியாவில் பரவலாக கடைபிடிக்கப்பட காரணமே படித்த மக்கள்தான். சாதி என்பது அவர்களின் மூளையில் உள்ளது. இது ஒருவகையான இந்து மனநல நோய். இந்து மதம் என்பது அமைப்பு என்பதையும் கடந்தது. இ்ங்கு வாழும் ஒவ்வொரு இந்துவும் சாதி, தீண்டாமையை கடைபிடிப்பதை தனது மதக்கடமையாக கருதுகிறான். இதில் பொருளாதார அமைப்பும் உண்டு. முதலாளி, தனது அடிமையை நன்றாக சோறு போட்டு, உடை உடுத்த வைத்து, தங்குவதற்கு இடம் கொடுத்து சந்தைமதிப்பு குறையாமல் பார்த்துக்கொள்வாரோ அதுபோலத்தான் இங்கும் நடைபெறுகிறது. தீண்டாமை என்பதைப் பொறு...

இந்தியர்களுக்கு உண்மையை விட சாதியே பெரிது!

படம்
 இந்தியாவின் ஆளும் வர்க்கத்தினராக உள்ள பத்து சதவீதம் பேர் மீதியுள்ள பெரும்பாலான மக்களை வறுமையிலும், நோயிலும், அவலத்திலும் உழலுமாறு மாற்றியுள்ளதை வெளிப்படுத்தும் கட்டாயம் நமக்குள்ளது. வெளியே உள்ள உலகம், இங்குள்ள மூன்றாயிரம் ஆண்டு தீண்டாமை என்ற பிரச்னையை பற்றி அறியமாட்டார்கள். இதுபற்றிய உண்மைகளை நீங்கள் அறிய நேர்ந்தால், உங்களுக்கு கண்ணீர் வரக்கூடும். தடுக்காமல், அதை இனிமேல் சிந்தலாம். இந்தியாவின் மீது இரக்கம் கொண்டுள்ள வெளிநாட்டினர், ஆராய்ச்சியாளர்கள் என பலரும் உள்ளனர். தொன்மை குடியேற்ற நாடு என பெருமை கொண்ட இந்தியா எப்படி உலக நாடுகளிடையே நோயாளியாக உள்ளது என அவர்களும் புரிந்துகொள்ள உதவும்.   இந்திய அதிகார வர்க்கத்தில் அரசு அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், கலாசார, மதவாத தலைவர்கள், சாமியார்கள், இந்துமத தலைவர்கள், நிதித்துறை நபர்கள், காந்தியின் அகிம்சையைப் போற்றுபவர்கள், உண்மை, சகிப்புத்தன்மை, நீதி, சுதந்திரம்,சமத்துவம் பற்றி பேசுபவர்கள் உள்ளடங்குவார்கள். நாடாளுமன்ற ஜனநாயகம் உலகிலேயே சரியாக இயங்குவது எந்த நாட்டில் என்றால் இந்தியாவை ச...

மதத்தைக் காப்பாற்றி தீண்டாமையை விலக்கிவிட முடியாது!

படம்
            பெரியார் ஆயிரம் தீண்டாமையை நிலைக்கச் செய்யும் மதத்தையும், அதற்கு ஆதரவளிக்கும் சாஸ்திரத்தையும் அதை ஏற்படுத்திய கடவுள்களையும் ஒழித்தால்தான் தீண்டாமை ஒழியும். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படும் கெடுதல் என்ன, தோஷமென்ன, எதுவுமில்லை. ஆனால் அது தோஷம் எனப்படுகிறது. ஒருவரையொருவர் ஏமாற்றி வாழ்வதற்கே இப்படிக் கூறப்படுகிறது. இதைவிட வேறு ரகசியமில்லை. மதத்தைக் காப்பாற்றிக்கொண்டு தீண்டாமையை விலக்கிவிடலாம் என்று முயற்சித்து ஏமாற்றமடையாதீர்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரி கட்டி அங்கே அவர்கள் குடியேறுவதை மாற்ற வேண்டும். தாழ்த்தப்பட்டவர்களுக்கென்று தனியாக சேரிகள் இருக்கக்கூடாது. காரியத்தில் உறுதியாக நிற்காமல் வாயளவில் தீண்டாமையை ஒழிப்பதாக பேசுவதான அயோக்கியத்தனத்தால் நாடு முன்னேற முடியாது. நன்றி பெரியார் ஆயிரம் வினா விடை நூல் தொகுப்பாசிரியர் கி வீரமணி திராவிட கழக வெளியீடு    https://in.pinterest.com/pin/215891375886010962/ https://in.pinterest.com/pin/510806782749306029/

அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்!

படம்
  அம்பேத்கரின் பாதை - பௌத்த மதத்தை தழுவும் தாழ்த்தப்பட்ட மக்கள்! இந்தியாவில் ஆண்டுதோறும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையிலான தாழ்த்தப்பட்ட மக்கள் பௌத்த மதத்தை தழுவுகிறார்கள் என குஜராத் மாநில பௌத்த அகாடமி செயலாளர் ரமேஷ் பேங்கர் கூறியுள்ளார். 1956ஆம் ஆண்டு, டாக்டர் பி ஆர் அம்பேத்கர், லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுடன் சேர்ந்து பௌத்த மதத்திற்கு மாறினார். சுதந்திர இந்தியாவில் நடந்த முக்கியமான கவனம் கொள்ளப்பட்ட மதமாற்ற நிகழ்ச்சி எனலாம்.  தற்போதைய நேபாளம்தான் சாக்கிய நாடு. அங்கு, இளவரசராக இருந்த சித்தார்த்தர் உலக உண்மைகளை கண்டறிந்து துறவு மேற்கொண்டார். அவர் ஞானம் பெற்று சீடர்களுக்கு நல்வழியை உபதேசிக்க தொடங்கிய பிறகு உருவானதுதான் பௌத்த மதம். கி மு ஐந்தாம் நூற்றாண்டில் பௌத்தம் உருவாகி வளரத் தொடங்கியது.  இந்த மதம், வேதகால இந்துமதத்திற்கு எதிரான கருத்துகளை, செயல்பாடுகளைக் கொண்டிருந்தது. சிராமணி இயக்கத்தின் விளைவாக தோன்றிய பௌத்த மதம், பிராமண சடங்கு, சமூக அமைப்பிற்கு எதிரானதாக இருந்தது என வரலாற்று வல்லுநர் எல்பி கோம்ஸ் குறிப்பிட்டார்.  சமண மதம், பௌத்தத்தை விட காலத்தே சற...

அய்யா வைகுண்டரின் சமூக சீர்திருத்த செயல்பாடு - மாட்டுச்சாண மூளைகளின் அவதூறு ஏன்?

படம்
  மத நல்லிணக்கத்தை உடைக்கும் மாட்டுச்சாண மூளைகள் மக்களின் மனதில் அன்பை விதைப்பதை விட வெறுப்பை வளர்ப்பது எளிது, அதிலும், உங்கள் வாழ்க்கை நாசமாக போனதற்கு காரணம், இந்த சாதிக்காரன், மதக்காரன் என்ற பழிபோட்டுவிட்டு எளிதாக அந்த சண்டையில் லாபம் பார்க்கலாம். காவிக்கட்சி ஆட்சியில் உள்ள இடங்களில் கலவரங்கள், புல்டோசர் நீதி, பலாத்காரம், மானபங்கம், தீண்டாமை இதெல்லாம் சகஜம். வேதகால இந்தியா, புதிய இந்தியாவாக மெதுவாக உருவாக்கப்பட்டு வருகிறது. குற்றங்கள் இருப்பது புதிதல்ல. ஏற்கெனவே இவையெல்லாம் சிறியளவில் அங்கு இருப்பவைதான். பிழைப்புவாதிகள், அதை தூண்டிவிட்டு தேர்தலில் வென்று வருகிறார்கள். காவிக்கட்சி, ஆட்சியில் இல்லாத இடங்களில் கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானது, பன்மைத்துவ சமூகத்தை, மதங்களை ஒற்றைத்தன்மை கொண்டதாக, ஒரே மதமாக மாற்றுவது. இதற்கு காவிக்கட்சி பல்வேறு ஆயுதங்களை பயன்படுத்துகிறது. அதில் ஒன்றுதான், ஆளுநர் என்பது.  அண்மையில் சமூக சீர்திருத்தவாதியான அய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்தநாள் விழாவில், அழியும் சனாதன தர்மத்தை காக்க மறுபிறப்பு எடுத்து...

இருளர்கள் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்கள் என்பதால், பொதுசமூகம் அவர்களை ஏற்றுக்கொள்கிறது! - ஸாய் ஒயிட்டேகர்

படம்
  எழுத்தாளர் ஸாய் ஒயிட்டேகர் டெர்மைட் ஃபிரை என்ற நாவலை ஸாய் ஒயிட்டேகர் எழுதியிருக்கிறார். சிறுமி, அவளின் குடும்பம் சார்ந்த கதையில் இருளர் இனத்தின் வாழ்க்கை, அவர்களின் பிரச்னைகள் பற்றி பேசியிருக்கிறார். இருளர்கள் பற்றி நமக்கு என்ன தெரியும்? பாம்புகளைப் பிடிப்பவர்கள், தேள்கள் வாழும் இடத்தில் குடிசைகளைக் கட்டி வாழ்பவர்கள். கரையான்களை வறுத்து சாப்பிடுபவர்கள். மருத்துவத் தாவரங்கள் பற்றி அகமும் புறமும் அறிந்தவர்கள். பறவைகளின் மொழியை அறிந்து பேசுபவர்கள், மாந்திரீகம் கற்றவர்கள். இவைதான். நூலில் நாம் அறியாத ஏராளமான தகவல்கள் உள்ளன. தமிழ்நாட்டின் கிழக்குத் தொடர்ச்சி மலையில் வாழும் இருளர் குடும்பத்தின் கதை, நாவலில் கூறப்படுகிறது. தேனீ என்ற சிறுமியின் குடும்பம் அங்கு, மூன்று தலைமுறையாக வாழ்ந்து வருகிறது. 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டம் வழியாக இருளர்கள் காட்டுக்குள் பாம்புகளை பிடித்து அதன் தோலை விற்பது தடை செய்யப்பட்டது. அவர்களின் முக்கிய வாழ்வாதாரம் தடைபட்டபிறகு, வாழ்க்கை எப்படி மாறியது என்பதை நாவல் மையமாக கொண்டுள்ளது. இருளர்கள் தங்கள் பொருட்களை பேருந்துகளில் கொண்டு ச...

கல்வியால் பெண்களை முன்னேற்றுவதே லட்சியம் - சுதா வர்க்கீஸ்

படம்
  தீண்டப்படாத சாதி பெண்களை முன்னேற்றும் கல்வி! கேரளத்தில்  வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர் சுதா. பள்ளிமாணவியாக இருந்த போது சுதா,  நாளிதழ் ஒன்றில் வெளியான புகைப்படத்தைப் பார்த்தார்.  பீகாரின் சாலையோரத்தில் உள்ள குடிசையின் புகைப்படம் அது.  ஏழை மக்களின் குடியிருப்பு என பார்க்கும் யாரும் புரிந்துகொள்ளலாம். அந்த நொடியில் பள்ளி மாணவியான சுதா தீர்மானித்தார். நான் ஏழை மக்களின் நிலையை மாற்றுவேன் என உறுதியெடுத்துக்கொண்டார். பெற்றோர் ஏற்காதபோதும், சமூகசேவையைச் செய்ய கன்னியாஸ்த்ரீ வாழ்க்கையை ஏற்றார். பிறகு, இப்பணியில் திருப்தி இல்லாமல், தனது பணியை விட்டுவிலகினார். நேராக பீகாருக்குச் சென்றார்.  சிறுவயதில், அவர் புகைப்படத்தில் பார்த்த குடிசை, முசாகர் (Musahar)எனும் மக்களுக்குச் சொந்தமானது.  தீண்டத்தகாதவர்களாக நடத்தப்பட்ட, முசாகர் மக்களின் குழந்தைகளுக்கு கல்வியறிவும் கிடைக்கவில்லை. இச்சமுதாய பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காகவே, 2005ஆம் ஆண்டு ‘பிரேர்னா ’(Prerna)என்ற பெயரில் தானே பள்ளியைத் தொடங்கினார்.   சுதாவின் கல்வி உதவிகளால், 5 ஆயிரம் பெண் குழந்தைகள் படித்...

திரைப்பட இயக்குநர் எடுக்கும் புனர்ஜென்ம அவதாரம்! ஷியாம் சிங்கா ராய் - தெலுங்கு

படம்
  ஷியாம் சிங்கா ராய் -தெலுங்கு ஷியாம் சிங்கா ராய் தெலுங்கு ராகுல் சாங்கிருத்தியன் சானு வர்க்கீஸ் மிக்கி ஜே மேயர்  நாளைய இயக்குநராகும் ஆசையில் உள்ளவர், வாசு. எப்படியோ தனது குறும்படத்திற்கு கீர்த்தி என்று வெளிநாடு சென்று படிக்கும் ஆசையில் உள்ள பெண்ணை சரிகட்டி நடிக்க வைத்துவிடுகிறார். பிறகு கிடைக்கும் திரைப்பட வாய்ப்பிலும் வெல்கிறார். அந்த  படத்தை இந்தி மொழியில் உருவாக்க முயலும்போது தான் பிரச்னை தொடங்குகிறது. வாசு மீது கொல்கத்தாவை சேர்ந்த எஸ்ஆர் பதிப்பகம் கதை திருட்டு என வழக்கு போடுகிறது.  உண்மையில் வாசு கதையை திருடினாரா இல்லையா என்பதுதான் படமே... படம் புனர்ஜென்மம், ஹிப்னோதெரபி என நிறைய விஷயங்களைப் பேசுகிறது. எல்லாவற்றையும் விட படத்தில் கவருவது கல்கத்தாவில் சீர்திருத்தக்காரராக வரும் ராய் தான். அவர் பேசும் விஷயங்கள் அக்காலத்திற்கு மட்டுமல்ல, இப்போதும் முக்கியமானதாக இருக்கிறது. இப்போதும் தொன்மை இந்தியாவை நோக்கி செல்வதால் இப்படிப்பட்ட ராய்கள் தேவைப்படலாம்.  படத்தின் கதை நவீன காலம் 2021, 1969 என இரண்டு காலகட்டமாக உள்ளது. அதற்கேற்ப படக்குழு உழைத்திருக்கிறார்கள்.  ப...

தலித் மாணவர்களுக்கான வசதிகளை செய்துகொடுக்காமல் அவர்களை அலைகழித்தனர்! - தீபா மோகனன், முனைவர் படிப்பு மாணவி

படம்
  தீபா மோகனன்   1035 × 1180     தீபா மோகனன் கேரளாவின் கோட்டயத்திலுள்ளது , காந்தி பல்கலைக்கழகம் . இங்கு பத்தாண்டுகளாக சாதி ரீதியான புற்க்கணிப்பு நடைபெற்றுள்ளது என உண்மையை வெளிக்கொண்டு வந்திருக்கிறார் தீபா மோகனன் . இவர் அங்கு பிஹெச்டி படிக்கும் மாணவி . பதினொரு நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அதில் பல்கலைக்கழக நிர்வாகத்தை பணிய வைத்திருக்கிறார் . தீபா மோகனன் 1600 × 961 பல்கலைக்கழகங்களில் உள்ள ஜாதி பிரச்னைகளை எப்படி தீர்ப்பது ? ஜாதி ரீதியான பிரச்னைகள் அனைவரும் வெளிப்படையாக பேச முன்வரவேண்டும் . நான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இதுவரை எட்டு புகார்களை அளித்துள்ளேன் . விசாரணையை தாமதம் செய்ய விசாரணைக் குழுக்களை அமைப்பார்கள் . அப்புறம் அது அப்படியே நின்றுவிடும் . இதில் சில புகார்களின் தாமதத்திற்கு நீதிமன்றமும் காரணமாக உள்ளது . பத்தாண்டுகளாக பல்கலைக்கழகத்தில் ஜாதி ரீதியான பிரச்னைகளை எதிர்த்து போராடி வருகிறேன் . அதனை நீர்த்துப்போகும் விஷயங்களை நிர்வாகத்தினர் செய்து கொண்டே இருந்தனர் . தீபா மோகனன் 1280 × 720 பாலியல் ரீதியான துன்புறுத்தல் பற்றிய புகார்களை எப்...

தலித்துகள் கழுதையில் ஏறி வந்தால் உயர்சாதியினர் சந்தோஷப்படுகிறார்கள்! - சந்திரா பான் பிரசாத்

படம்
    சந்திரா பான் பிரசாத் சந்திரா பான் பிரசாத் சமூக பொருளாதார செயல்பாட்டாளர், எழுத்தாளர். ஹாத்ராவில் தலித் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு வல்லுறவு செய்யப்பட்டு இறந்துள்ளார். தலித்துகள் சார்ந்து இதுபோல நடைபெறும் கொடுமைகள் இன்றுவரை குறையவில்லை. இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் ஒரு சமூக அவசரநிலை நிலவுகிறது. 1932ஆம் ஆண்டு பூனா ஒப்பந்தம் டாக்டர் அம்பேத்கர், காந்தி ஆகியோருக்கு இடையில் ஏற்பட்டது. இதன்பிறகு தலித்துகள் மெல்ல மையநீரோட்டத்திற்கு வந்தனர். பிறகு மெல்ல தலித்துகள் பிரச்னை மீது இரக்கம் கொள்ளத் தொடங்கினர். இப்போது அவ ர்கள் மீது வன்முறை நடத்தப்படுவது புதிய நாகரிகமாகிவிட்டது. 1970களில் இருந்த தீண்டாமை என்பது தலித்துகளை கொல்வதல்ல. வேட்டி அணியக்கூடாது, உயர்சாதிக்கார ர்கள் வந்தால் சைக்கிளில் வந்தால் கூட கீழே இறங்கி நடக்கவேண்டும், யாரையேனும் அவர்களது பெயர் சொல்லி கூப்பிட்டால் அவர்களை அடிப்பது ஆகியன அன்று நடந்தது. ஆனால்  இன்று ஹாத்ரா, லகிம்பூரில் நடப்பது போல கற்பழிக்கப்பட்டு கொடூரமாக சிதைக்கப்ட்டு கொல்லப்படவில்லை. ஆனால் அன்றும் கற்பழிப்புகள் நடந்தன. ஆனால் அவர்கள் யாரும் கொல்லப்...

அரசு எழுப்பும் தீண்டாமைச்சுவர்! - பணிகளில் காட்டப்படும் தீண்டாமை!

படம்
TNIE அரசு எழுப்பும் தீண்டாமைச்சுவர்!  கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. முகேஷ்குமார் தொடர்ந்த வழக்கில் உத்தர்காண்ட் அரசு, பட்டியலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டில் பதவி உயர்வு வழங்குவது அடிப்படை உரிமை கிடையாது என்று கூறியுள்ளது. அரசியலமைபச இந்த வழக்கு மட்டுமல்ல; இந்தியாவில் பல்வேறு பட்டியலினத்தவர்களுக்கு அரசு இதுபோன்ற அநீதியை இழைக்கிறது. இது எப்படி என்றால், ஆதி திராவிடர்கள் மற்றும் பட்டியலினத்தவர்கள் அரசு பதவியை வகிக்கிறார்கள். அவர்கள் பணி ஓய்வு வரை அவர்களுக்கான பதவி பயன்களை கொடுக்க மறுக்கிறார்கள் இதில் ஊதிய உயர்வு, போனஸ் தொகை போன்றவையும் உள்ளடங்கும். பணி ஓய்வு பெறும்போது, பதவி உயர்வு கடிதம், அதுவரை நிறுத்தியிருந்த ஊதிய தொகை ஆகியவற்றை அரசு வழங்கி மன உளைச்சலை உருவாக்கி வருகிறது. பஞ்சாபைச் சேர்ந்த பொதுநிர்வாகத்துறை ஊழியர் காஜல். இவருக்கு பணி ஓய்வு பெற்ற நாளில் பதவி உயர்வு கடிதம் கிடைத்துள்ளது. அதில் மூத்த பொறியியலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கான பணிநாட்கள் முடிந்துவிட்டன. அவர் வேலை செய்தது சூப்பரிடெண்டாக, ஆனா...

எந்த ரத்தம் உசத்தி?

படம்
மும்பையில் டாக்டர் பாயல் தத்வி, மூத்த மாணவிகளால் அவமானப்படுத்தப்பட்டு தற்கொலை செய்துகொண்ட செய்தி எப்போதும்போல அரசால் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. ஏனெனில் சாதிமுறையை ஆதரிக்கும் அரசு, அதனைப் பயன்படுத்தியே தேர்தலிலும் வென்று அதிகாரத்தைப் பிடித்திருக்கிறது. அரசு எப்படி இதில் மாணவர்களுக்கு உதவப்போகிறது? கல்லூரி வளாகத்தை அனைவருக்குமானதாக எப்படி மாற்றுவது என சுக்காதோ தோரட் கூறுகிறார். தீண்டாமை பாராட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அறிவித்து நோட்டீஸ் ஓட்டுவதோடு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த வேண்டும். பேசும் முறை, செயல்பாடுகள் ஆகியவற்றுக்கான நடத்தை நெறிமுறைகளை வகுக்கவேண்டும். புகார் தரும் எஸ்சி எஸ்டி மாணவர்களுக்கான விசாரணையில் ஆசிரியர்களும் ஆர்வம் காட்டி உதவ வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒதுக்கி வைக்க கூடாது. தீண்டாமையை தவறு என வலியுறுத்தும் பாடங்களை பள்ளிகளிலேயே  உருவாக்கி பயிற்றுவிக்க வேண்டும். உயர்கல்வி நிலையங்களில் மூத்த மாணவர்கள் உங்களின் பெயர்களை கவனிப்பார்கள். அதில் ஜாதி இருந்தால் அதிலேயே புரிந்துகொண்டு உங்களை அந்த ஜாதிக்கேற்றபடி தரத்தில் நடத்துவார்...