நீதிக்கு புல்டோசரே போதுமானது!
நீதிக்கு புல்டோசரே போதுமானது! கடந்த பத்தாண்டுகளில் வலதுசாரி மதவாத கட்சியான பாஜக ஆளும் மாநிலங்களில் மாறாத காட்சி ஒன்றைப் பார்த்திருப்போம். அதுதான் மஞ்சள் நிற புல்டோசர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் காட்சி. இதற்கு ஆக்கிரமிப்புகள் அல்லது நகரை அழகாக்குகிறோம் என உள்ளூர் நிர்வாகம், நீதிமன்றம், மாநில அரசு என அனைவருமே ஒன்றுபோல ஒரு காரணத்தைக் கூறுவார்கள். இந்த நடவடிக்கையில் முறையான ஜனநாயக நடவடிக்கைகள் ஏதும் கடைபிடிக்கப்படுவதில்லை. உதாரணமாக அறிவிப்பு நோட்டீஸ்களை வழங்குவது. குறிப்பாக சிறுபான்மையினரான முஸ்லீம், கிறிஸ்தவர்கள் வீடுகள் என்றால் புல்டோசர்களுக்கு கூட ஆவேசம் வந்துவிடுகிறது. இந்த ஆவேசம் எந்தளவு செல்கிறது என்றால், பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் கட்டிய வீடுகளைக் கூட விட்டுவைப்பதில்லை. எப்படி விடுவதாம்? அங்கு ஊடுருவல்காரர்களான, நாட்டின் சொத்துகளைத் திருடித் தின்னும் முஸ்லீம்கள் வாழ்கிறார்களே? கடந்த ஜூன் 19ஆம் தேதி, லக்னோவின் அக்பர் நகரில் மாநில அரசு 1800 கட்டுமானங்களை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து நொறுக்கித் தள்ளியது. இதில் 1,169 வீடுகளும், 101 வணிக கட்டு...