இடுகைகள்

ஆர்எஸ்எஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வருத்தமோ குற்ற உணர்ச்சியோ கொள்ளாத இந்துஸ்தானத்தின் புதிய விதிகள்!

படம்
  இந்தியா, இந்துஸ்தானாக மாறத் தொடங்கிவிட்டது. இனி என்னென்ன விஷயங்களை நாம் நாளிதழ்களில் பார்ப்போம். அல்லது பார்க்க கட்டாயப்படுத்தப்படுவோம் என்பதைப் பற்றிய கற்பனை இது. அதேசமயம் சில விஷயங்கள் நடந்துகொண்டும் இருக்கலாம்.  வானொலிகளில் ஆன்மிக பாடல்கள் முழுக்க இந்து கடவுள்களைப் பற்றியதாகவே இருக்கும். சிறுபான்மையினரான இஸ்லாமியர், கிறித்தவர் ஆகியோருக்கான பாடல்கள் ஒலிபரப்பப்படாது. மக்களிடம் வரிகளை வாங்கித்தானே அரசு ஒலிபரப்பு நிறுவனம் இயங்குகிறது என்று கூறினால், நீங்கள் பாகிஸ்தானுக்கு செல்லவேண்டியவர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவீர்கள்.  அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் அனைவரும் வெளிநாட்டு பொருட்களைப் பயன்படுத்தலாம். ஆனால், தேசத்தை முன்னேற்ற விரும்புவது மக்களின் தோளில்தான் உள்ளது. எனவே, அதிக விலை கொண்ட தரமற்ற உள்நாட்டு பொருட்களை மட்டுமேதான் வாங்கவேண்டும். பிடிக்கிறதோ இல்லையோ இனிமேல் அப்படித்தான். இதை சரிபார்க்க உறுதிப்படுத்த மதவாத கட்சியின் துணை அமைப்புகள் எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்குள் வருவார்கள். சோதனையிடுவார்கள்.  கூடுதலாக குளிர்பதனப்பெட்டி சோதனை தனி. சமையல் அறையில், இந்...

யார் இந்திய குடியுரிமை கொண்டவர் என தீர்மானிக்க முயலும் தேர்தல் ஆணையம்!

படம்
  யார் இந்திய குடியுரிமை  கொண்டவர் என தீர்மானிக்க முயலும் தேர்தல் ஆணையம்! பீகாரில் தேர்தல் ஆணையம் சீர்திருத்தப் பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டுள்ளது. எஸ்ஐஆர் எனும் பெயரில் யார் வாக்காளர்கள் என்பதை அகழாய்வு செய்து வருகிறது. இவர்களின் பணியில் பல லட்சம் ஏழை, பட்டியலின, புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பாசிச இயக்கத்தின் பின்புலத்தோடு இயங்கும் வலதுசாரி மதவாத கட்சிக்கு எதிர்ப்புகள் புதிதல்ல. முன்னரே குடியுரிமைச் சட்டம் என்பதைக் கொண்டு வந்து மக்களை இனம் பிரித்து கெட்டோ எனும் தனி இடத்தில் அடைக்க திட்டமிட்டனர். அவை சில மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.  தேர்தல் ஆணையம் சுயாட்சி தன்மையில் இயங்கக்கூடியது. ஆனால் இப்போது பாசிச இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி ஆபத்து ஏற்படுத்தும் சீர்திருத்தங்களை செய்யத்தொடங்கியுள்ளது. 1991-96 காலகட்டம் தேர்தல் ஆணையத்தின் சிறந்த பணிக்காலம் என்று கூறலாம். அப்போது அதன் தலைமை தேர்தல் அதிகாரியாக டிஎன் சேஷன் என்பவர் இருந்தார். சுயாட்சி, நேர்மை, பாகுபாடற்ற தன்மை வெளிப்படையாக தெரிந்தது. சேஷனுக்குப் பிறகு எம்எஸ்...

தலித் - உயிர் வாழும் பிணம் இலவச மின்னூல் வெளியீடு

படம்
\    நூலை இலவசமாக வாசிக்கலாம். தரவிறக்கி கொள்ளலாம். நூலை தமிழ் வாசிப்பு வலைதளங்கள், குறுஞ்செய்தி தளங்கள் தரவிறக்கி பதிவிட்டு பயன்படுத்துவது அவர்களது முழுப்பொறுப்பு. இதுதொடர்பாக வரும் புகார்களுக்கு கோமாளிமேடை குழு பொறுப்பல்ல.     https://www.academia.edu/129854276/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%AE_

சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி?

படம்
        சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி? இந்தியா, சீனாவுக்கு இடையில் பிரிட்டிஷார் வகுத்த எல்லைக்கோட்டை சீன பொதுவுடைமைக் கட்சியும், அரசும் ஏற்கவில்லை. 1949ஆம் ஆண்டு, சீனாவில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து மக்கள் சீன குடியரசு உருவாகிறது. அதை இந்திய அரசு அங்கீகரித்தது. சீன அரசுக்கு பிரிட்டிஷார், ஜப்பான் ஆகியோரின் தாக்குதலால் தங்களை வலுவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற வேட்கை உருவாகியிருந்தது. அதை சீனா, நவீன காலத்தில் பெருமளவு நிறைவேற்றிக்கொண்டுவிட்டது. சீனக்கனவு என அதை குறிப்பிடுகிறார்கள். 1962ஆம் ஆண்டு சீனா, எல்லையில் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெறுகிறது. இதன் விளைவாக முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றுகிறது. இது இந்தியாவின் மீது மாவோவின் போர் என அழைக்கப்படுகிறது. மார்க்சிய லெனினியவாதிகள் இதை எப்படி விளக்குவார்களோ தெரியவில்லை. இதற்குப் பிறகு, சீனாவின் அனைத்து செயல்பாடுகளும் சந்தேகத்திற்குரியவையாக மாறிவிட்டன. அல்லது அரசியல்வாதிகள் அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று கூறத்தொடங்கினர். குறிப்பாக, இந்து பேரினவாத கட்சி தலைவர்கள். சீனா, இந்தியாவை எல்லையில் தோ...

நூறு கிராம் முதுகெலும்பு!

படம்
        நூறு கிராம் முதுகெலும்பு! மல்யுத்த வீரருக்கு எதிராக பல கட்டுரைகள், விளக்கங்களை அம்பானி, அதானி வாங்கியுள்ள ஊடகங்கள், நாளிதழ்கள் முன்வைக்கின்றன. நாடாளுமன்றத்தில் மதவாத கட்சி எம்பிகள், இது விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர்களுக்கு ஒரு பாடம் என நக்கலாக பேசுகிறார்கள். மகளிர் ஆணையத்தில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த நடிகை, கடைசி சிரிப்பு எங்களுடையது என குறியீடாக பதிவொன்றை இடுகிறார். இந்திய ஆட்சித்தலைவர், மல்யுத்த வீரரின் வெற்றிக்கு பாராட்டவில்லை. தகுதிநீக்கத்திற்கு ஆறுதல் சொல்ல முதல் ஆளாக வந்துவிட்டார். எதிர்க்கட்சிகள் கேட்ட கேள்விக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர்,மல்யுத்த வீரருக்கு இதுவரை ஆன செலவுகளை எடுத்து படிக்கிறார். ஒரு நாடு தரம் தாழ்ந்த கீழ்த்தரமான ஆட்சியாளர்களால் எப்படிப்பட்ட வீழ்ச்சியை அடைகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு இவை.   என்ன எழுதினாலும் கேலி சித்திரக்கலைஞர் சந்தீப் அட்வார்யுவுக்கு நிகராக எதையும் சுருக்கமாக சொல்லிவிட முடியவில்லை. இதோ, மல்யுத்த வீரர் தனது ஓய்வை அறிவித்துவிட்டார். வலதுசாரி மதவாத சக்திகள் வென்றனர். இந்தியா தோற்றது.  

இந்தியாவுக்கு மாபெரும் களங்கம் ஏற்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டன்!

படம்
  இந்தியாவுக்கு மாபெரும் களங்கம் ஏற்படுத்திய ஆர்எஸ்எஸ் தொண்டன்!  அனைவரும் ஒற்றுமையாக இருங்கள், கூட்டாக சேர்ந்து பெரிய விஷயங்களை சாதிக்கலாம் என்று கூறுபவர்களை விட இந்தியாவில் பிரிவினைவாதிகள் கிராக்கி அதிகம். ரிசர்வ் வங்கி, நீதிமன்றம், தேர்தல் ஆணையம், காவல்துறை, உளவு அமைப்புகள் என அனைத்திலும் பாகுபாடு பார்க்கும் ஆட்களே அதிகமாக உள்ளனர்.  அதிலும் ஆர்எஸ்எஸ் தொண்டரான மோடியே பிரிவினைவாதிகளுக்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். அவரது ஆட்சியின் நிர்வாக செயலின்மை பற்றி பேசினால் உடனே ரூ.500 கோடி ராமர்கோவில், காசியில் செய்த வழிபாடு, உண்ணாநோன்பு இருந்து செய்த கோவில் தரிசனம், முந்தைய பிரதமர்கள் செய்த தவறு என பேசுவாரே ஒழிய பத்து ஆண்டுகளாக அதிகாரத்தில் இருந்து என்ன செய்தார். அவரது அமைச்சரவைக் குழு செய்த மக்களுக்கான நன்மை என எதையும் பேசமாட்டார். செய்த அனைத்துமே கலவரங்கள், படுகொலைகள், சிறுபான்மையினரின் சொத்துகளை அழித்ததுதான். பிறகு என்ன சொல்வது? முஸ்லீம்களை ஜென்ம எதிரியாக கருதும் பயங்கரவாத அமைப்பு ஆர்எஸ்எஸ். வெளியில் தன்னை கலாசார அமைப்பாக காட்டிக்கொண்டு கலவரம், பிரிவினை, மசூதிகளை இடிப்பது, சி...

இந்துத்துவா எனும் கருத்தியலை குறுகிய மனத்துடன் சுயநலனிற்கு பயன்படுத்துபவர்களைப் பற்றி விளக்கும் நூல்!

படம்
  நான் ஏன் இந்துவாக இருக்கிறேன் - சசி தரூர் கிழக்கு பதிப்பகம் 341 பக்கங்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் எழுதிய நூலை வலதுசாரி கருத்தியல் கொண்ட கிழக்கு பதிப்பகம் ஏன் வெளியிட்டுள்ளது என வாசகர்களுக்கு சந்தேகம் எழலாம். அதற்கான பதில் தலைப்பிலேயே உள்ளது.  இந்துமதம் எப்படிப்பட்டது, அதில் உள்ள தன்மைகள் என்ன, அதற்கு உழைத்த ஆதிசங்கரர்,ராமானுஜர் ஆகியோரின் பங்களிப்பு, சங்கரர் உருவாக்கிய மடங்கள், அதன் பணிகள், நிறுவன மதங்களுக்கும் இந்து மதத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என முதல் பகுதி விளக்குகிறது. இதற்குப்பிறகு சசி தரூர் விளக்குவது இந்துத்துவா என்ற கொள்கையை உருவாக்கிய சாவர்க்கர், அதை மேம்படுத்திய கோல்வால்கர், ஹெட்கேவர் ஆகியோர் எப்படி அதை குறுகிய நோக்கத்தில் பார்த்து மக்களின் மத நம்பிக்கையை சுயநலனிற்கு பயன்படுத்திக்கொண்டனர் என்பதை விளக்கியிருக்கிறார்.  இங்குதான் ஆர்எஸ்எஸ் என்ற தீவிரவாத அமைப்பின் செயல்பாடு உள்ளே வருகிறது. கலாசார தேசியம் என்ற பெயரில் நிறுவன மதங்கள் போலவே இந்து மதத்தை எந்தெந்த வழிகளில் மாற்ற முயல்கிறார்கள் தெளிவாக கோடிட்டு காட்டுகிறார் நூலாசிரியர். நூலை தொடக்கத்தி...

சரியான கட்சியை வழிநடத்திச் சென்ற சரியான மனிதர்தான் வாஜ்பாய் - எழுத்தாளர் அபிஷேக் சௌத்ரி

படம்
  வாஜ்பாய் பற்றிய நூல்   வாஜ்பாய் தி அசன்ட் ஆஃப் தி இந்து ரைட் 1924-1977 அபிஷேக் சௌத்ரி பிகாடர் இந்தியா விலை ரூ.899 வாஜ்பாய் பற்றிய புதிய சுயசரிதை நூல் வெளியாகியுள்ளது. இதில், பழமைவாதம், தாராளவாதம் ஆகிய இருவித கருத்தியல்களைக் கொண்ட காலத்தில் பிரதமராக இருந்த வாஜ்பாய் பற்றிய பல்வேறு கருத்துகளை விவாதித்திருக்கிறார்கள். காங்கிரசும், சங் பரிவாரும் ஒரே மாதிரியாக இணைந்து கருத்தியல் அளவில் செயல்பட்டு வந்திருக்கிறார்கள் என நூலாசிரியர் அபிஷேக் கூறுகிறார். அதைப்பற்றிய கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வாசிப்போம். “தவறான கட்சியில் இடம்பெற்ற சரியான மனிதர்” என வாஜ்பாயை கூறுகிறார்களே? அந்தக் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? இல்லை. சரியான கட்சியில் இருந்த   சரியான மனிதர் என்றுதான் அவரைக் கூறுவேன். அதுமட்டுமல்ல, அவர்தான் கட்சியை முன்னெடுத்துச் சென்றார். 1980ஆம் ஆண்டு ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தபோது தவறான கட்சியில் இருந்த சரியான மனிதர் என்ற சுலோகன் பிரபலமாக கூறப்பட்டு வந்தது. அந்த சுலோகன் கூறப்பட காரணம் என்ன? இங்கிலாந்தில் வெளியிடப்படும் எனது நூலின் தலைப்பு ...

காந்தியும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்குமான முரண்பாடு!

படம்
  வைரம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் . அறிவியல் அடிப்படையில் அது சிக்கலான கார்பன் அணுக்களைக் கொண்டது . பல்வேறு அழுத்தங்களைத் தாங்கி உருவாகிறது . அதனை பட்டை தீட்டும்போது வைரமாக மாறுகிறது . காந்தியும் கூட அப்படிப்பட்ட இயல்புகளைக் கொண்டவர்தான் . அவரும் வைரத்தை ஒத்தவர்தான் . காந்தியும் பல்வேறு வாழ்க்கைச் சூழல்களை சந்தித்து நெருக்கடியில்தான் சிறந்த மனிதராக தலைவராக மாறினார் . தனது கொள்கை , செயல்பாடுகள் , செயல்பாடுகளை செய்யும்போது நேர்ந்த தவறுகள் என அனைத்தையுமே நூலாக பதிவு செய்துள்ளார் . பழமையான இந்தியாவில் இருந்த பல்வேறு பிரச்னைகள் குறித்து காந்திக்கு கருத்துகள் இருந்தன . அவற்றை எதிர்தரப்பிடமும் , மக்களிடமும் முன்வைத்துக்கொண்டே இருந்தார் . இதற்காக இந்தியன் ஒப்பீனியன் , யங் இந்தியா , நவஜீவன் , ஹரிஜன் ஆகிய பத்திரிகைகளைப் பயன்படுத்திக்கொண்டார் . இதைத் தாண்டியும் அவர் உலகிற்கு கூறும் செய்தி என்ன என்று கேட்டபோது , என்னுடைய வாழ்க்கை தான் என்று பதில் சொன்னார் . பிரிவினைவாதத்தை பல்வேறு வடிவங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு செயல்படுத்தி வருகிறது . ஆனால் வெளிப்படையான செய்திகளில் பார்த்தால் , இந்த அமைப்ப...

காந்தியை குழிதோண்டி புதைக்க முயலும் இந்து தீவிரவாத அமைப்பும், அதன் அரசியல் அமைப்பும் !

படம்
          ஒருவர் நிஜத்தில் எப்படி இருக்கிறார் என்பதும் , தன்னை எப்படி வெளியே காட்டிக்கொள்கிறார் என்பதிலும் தான் வேறுபாடுகள் உள்ளன . ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லரைப் பார்த்திருப்பீர்கள் . அவரது செயல்களையும் அறிந்திருப்பீர்கள் . சிறிய உருவம் கொண்ட மனிதர்தான் லட்சக்கணக்கான யூத மக்களின் அழிவுக்கு காரணமானவர் . இதை ஊடகங்களின் வழியே எளிதாக அறிய முடியாது . அவர் வைத்திருந்த ஊடக பிரசாரகர்கள் குழந்தைளள் , மாணவிகளோடு இருக்கும் புகைப்படங்களைக் காட்டுவார்கள் . சைவ உணவுப்பழக்கம் கொண்டவர் . இசையை ரசிப்பவர் . குறையாததற்கு ஓவியர் வேறு . ஆனால் அவர் புகைப்படத்தின் பின்னாலுள்ள அசுர மனதை அறிந்தவர்கள் மிகச்சிலரே . இந்தியாவில் அப்படி அரசியல் களங்களில் வேறுபட்ட காரண காரியங்கள் நடக்கும் . புள்ளிகளை இணைத்துப் பார்த்தால் யோக்கியர்களின் முகத்திரை கிழிந்துவிடும் . காவிக்கட்சி ஒருமுறை காந்தி சங்கல்ப் யாத்ரா என்ற பேரணியை தொடங்கியது . அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி தொடங்கிய பேரணியில் சுத்தம் , உண்மை , சுய ராஜ்ஜியம் , அகிம்சை ஆகிய விஷயங்கள் முன்வைத்து பேசப்பட்டன . ஆனால்...

முஸ்லீம்களை முழுமையாக அரசு அமைப்பு மூலம் களையெடுத்தல்! - அசாமில் பரவும் மதவாதமும் வெறுப்பு அரசியலும்!

படம்
  அசாம் நெல்லி இனப்படுகொலை அசாமில் முஸ்லீம்களின் குடியிருப்பை செப்.23 அன்று அசாம் மாநில அரசு அகற்றியது. பலவந்தமாக செய்த இந்த நடவடிக்கையால் முஸ்லீம்களோடு வங்காள இந்துகளும் ஆயிரக்கணக்கில் வீடுகளை இழந்தனர். இங்கு கவனிக்கவேண்டியது அரசு, மேம்பாட்டுப் பணிகளுக்காக வீடுகளை இடித்து முஸ்லீம்களை நடுத்தெருவில் நிறுத்தவில்லை.  பூர்விக அசாம் மக்கள் முஸ்லீம்கள் ஆற்று ஓரத்தில் குடியிருக்கும் இடங்களில் விவசாயம் செய்வார்களாம். அதற்காக நிலங்களை அரசு அவர்களுக்கு அளிக்குமாம். இப்படி சொன்னாலும் அரசு நிலங்களை பூர்விக மக்களுக்கு அதாவது தகுதியுள்ளவர்களுக்கு அளிக்கும் வரையில் தனது கையில்தான் வைத்திருக்கும்.  அரசு 28 வயதான மைனல் ஹாக்கிக் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது காவல்துறை. இறந்து கிடக்கும் உடல் மீது புகைப்படக்கார ர் பிஜய் பனியா என்பவர் வெறியோடு குதிக்கும் காட்சி சமூக வலைத்தளத்தில் பலரும் பார்த்திருப்பார்கள். இப்படி அரசின் ஆதரவோடு மதவாத, இனவெறியை அங்கு பரப்பி வருகின்றனர். எதற்கு? மக்களை பிரித்தால்தானே தேர்தலில் ஜெயிக்கவேண்டும். அனைத்து மக்களுக்கும் பொதுவான எதிரியை உருவாக்கவேண்டும் என்க...

முஸ்லீம் மக்களை துரத்தவே அரசு இந்துத்துவ திட்டங்களை அமல்படுத்துகிறது! - அமான் வதூத், மனித உரிமைகள் வழக்குரைஞர்

படம்
  அமான் வதூத் மனித உரிமை வழக்குரைஞர் செப்.23 அன்று சிபாஜ்கரில் நடைபெற்ற மக்களின் குடியேற்றம் அகற்றல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? முதலில் நான் கூறவிரும்புவது, இப்போது அரசால் குடியிருப்புகள் அகற்றப்பட்ட முஸ்லீம் மக்கள் அனைவருமே பல்லாண்டுகளுக்கு முன்னரே இங்கு வந்தவர்கள். பலரும் 1970களிலிருந்து இங்கிருக்கிறார்கள். எனவே இதனை அரசு புதிய குடியேற்றம் என்று கூறமுடியாது. இவர்கள் ஆற்றுநீரின் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு பெர்பெடா, காம்ரூபா ஆகிய மாவட்டங்களிலிருந்து இங்கு வந்தவர்கள்.  ஆற்று வெள்ளம் காரணமாக தங்கள் வீடுகளையும் நிலங்களையும் இழந்தவர்கள் இங்கு வந்து தங்கினார்கள். பலரும் கூலி வேலைகளை செய்பவர்கள்தான். நிலமற்ற மக்கள்.  இங்கு தங்கியிருப்பவர்கள் பெரும்பாலும் ஆற்றையொட்டியுள்ள நிலங்களில் தங்கியிருந்தவர்கள்தான். பொதுவாக அசாம் மக்கள் ஆற்றையொட்டி தங்க மாட்டார்கள். இப்போது முஸ்லீம் மக்கள் உள்ள இடங்களை , அசாமின் பூர்விக மக்களுக்கு தருவதாக கூறியுள்ளது. இங்கு அவர்கள் விவசாயம் செய்வார்கள் என்று அரசு கூறுகிறது. விவசாயம் செய்ய எதற்கு ஆற்றுக்க்கு அருகில் உள்ள நிலங்களை தேர்ந்தெடுக்கிறார்கள்...