மஸ்டோடன் என்ற விலங்கு பற்றி அறிந்திருக்கிறீர்களா?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி டைனோசர்களின் வாழ்நாள் பற்றி கூறுங்களேன். டைனோசர்கள் குறைந்தது எழுபத்தைந்து தொடங்கி முந்நூறு ஆண்டுகள் வரை வாழும். நீண்ட ஆயுள் காலம் என்பதால் அதன் முதிர்ச்சி பெறும் நிலையும் மிக மெதுவாக நடைபெறும். மஸ்டோடன் என்ற விலங்கு பற்றி அறிந்திருக்கிறீர்களா? ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா, வட, தென் அமெரிக்காவில் வாழ்ந்த விலங்கு. மூன்று மீட்டர் நீள உயரத்தில் கம்பளி போன்ற அடர்த்தியான முடிகளைக் கொண்டது. முப்பத்து எட்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. ஒரு மில்லியன் ஆண்டுகள் வரை உயிர் பிழைத்திருந்தது. இதற்கு நேராக வளர்ந்த தந்தங்களும் உண்டு. டைனோசர்கள் அழிந்துபோனதற்கு காரணம் என்ன? அவை அழிந்து அறுபத்தைந்து மில்லியன் ஆண்டுகள் ஆகின்றன. காலநிலை மாற்றம், பிற உயிரினங்களோடு போட்டியிட முடியாத நிலை, முட்டைகளை பிற உயிரினங்கள் அழித்தது, இயற்கை பேரிடர் என நிறைய காரணங்கள் உள்ளன. இவை எல்லாமே ஊகங்கள்தான். எவையும் உறுதியானவை அல்ல. அழிவின் விளிம்பில் , அச்சுறுத்தல் நிலையில் என்று கூறப்படுவதற்கு என்ன பொருள்? அழிவின் விளிம்பில் உள்ளதை கவனிக்கவேண்டும். அந்த பட்டியலில் உள்ளதை ...