இடுகைகள்

நிலம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீண்டத்தகாத இனத்தவரின் பெண்களை விபச்சாரிகளாக்கிய மராட்டிய பேஷ்வாக்கள்!

  மராட்டியத்தில் புகழ்பெற்ற கலைகளாக தமாஷா, லாவணி ஆகிய கலைகள் உள்ளன. இந்த இரண்டு கலைகளும் பொழுதுபோக்கு கலைகளாக உள்ளன. ஆனால், சமூக கலாசார ரீதியாக முக்கியத்துவம் கொண்டதாக பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து வருகிறது. தலித்துகள், அதாவது தீண்டத்தகாவர்கள் தமாஷா, லாவணியை நடத்தி வருகிறார்கள். இதில் பாலுறவு, சாதி என இரண்டுமே நீக்கமற உண்டு. இதை தொடர்ச்சியாக நடத்தி வருவதில் மராட்டிய அரசியலுக்கும் முக்கியப் பங்குண்டு. மராட்டியத்தில் வாழும் கல்வியாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் தமாஷா, லாவணி ஆகிய கலைகள் பற்றி எழுதியிருக்கிறார்கள். அதில் ஈடுபடும் தலித் மக்கள்,  சாதி ரீதியான ஒடுக்குமுறை, பாலியல் வக்கிரம் பற்றி பெரிதாக கண்டுகொள்ளவில்லை. தமாஷாவில் பாடல், இசை, மைம், கவிதை ஆகியவை இடம்பெறுகிறது. அடிப்படையில் இதில் நாடகம், நகைச்சுவை என இரண்டுதான் இருக்கும். ஏறத்தாழ மேற்கு வங்காளத்தில் நடைபெறும் கூத்து போன்ற இயல்பைக் கொண்டது. இதில் பார்வையாளர்களாக மேல்சாதிக்காரர்கள், தலித்துகள் தீண்டத்தகாதவர்கள் இருக்கிறார்கள். தமாஷா ஆண் பார்வையாளர்களுக்கானது. எனவே, இதில் பங்கேற்கும் பெண்கள் அதற்கேற்ப, காமத்தை...

நிலம் எனும் நல்லாள்!

படம்
         நிலம் எனும் நல்லாள்  சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளாகியும் நிலக்கிழார்த்தனத்தை ஏன் கைவிடக்கூடாது?  அண்மையில், மத்திய கிழக்கு மும்பையில் வடாலாவில் உள்ள ஆறு ஏக்கர் நிலமானது விற்கப்பட்டது, வானியல் கணக்கு போல ஒரு பெரிய தொகைக்கு..... வடாலா வளர்ந்துவருகிற பகுதி என்றாலும் குறிப்பாக நவநாகரீக பகுதி என்று கூறிவிடமுடியாது. அதிர வைக்கும் தொகை சாத்தியமானது ப்ளோர் ஸ்பேஸ் இன்டக்ஸ்(FSI) பட்டியல் மூலகாரணம். நிலத்தின் சொந்தக்காரர் அந்த பகுதியின் நிலமதிப்புக்கு கூடுதலாக இருபது மடங்கு அதிக விலைக்கு நிலத்தை விற்றுள்ளார். ஆகஸ்ட் 2010, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் பல கூடுதல் படிகள், ஓய்வூதியம் தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட, அவர்களின் சம்பளம் ரூ. 10,000 லிருந்து மாதத்திற்கு ரூ. 50,000 எனும் அளவிலும், பல்வேறு படிகள் எனுமளவில் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டன. இந்திய எம்.பிகளுக்கு உலகளவிலுள்ள மற்ற பகுதிகளைக் காட்டிலும் குறைவான தொகையே வழங்கப்பட்டு வந்தது  (அ) திறமை தேவைப்படும் புத்திசாலித்தனம், தலைமைத்துவ தனித்துவம், குடிமைச்சேவை அதிகாரிகளின் சீரிய பணியினால் இவர்க...

நிலம், நீர், காடு நக்சலைட்டுகளுக்கு மட்டும் சொந்தமானதல்ல - விஜய் சர்மா, துணைமுதல்வர், சத்தீஸ்கர்

படம்
            நேர்காணல் விஜய் சர்மா, துணை முதல்வர், சத்தீஸ்கர் மாநிலம் பேச்சுவார்த்தை மூலம் நக்சலைட் பிரச்னைகளைத் தீர்க்கலாம் என்று கூறியிருக்கிறீர்கள். அந்த முயற்சி எந்த நிலையில் உள்ளது? எதிர்தரப்பிடமிருந்து எந்தவித பதிலும் வரவில்லை. அவர்கள் நேரடியாக சந்திக்க விரும்பவில்லை என்றால் வீடியோ அல்லது போன் அழைப்பு மூலம் பிரச்னைகளை விவாதிக்க நினைக்கிறேன். கூடுதலாக, சரணடைவது, மறுவாழ்வு ஆகிய திட்டங்கள் பற்றியும் பேச விரும்புகிறேன். இணையத்தில் க்யூஆர் கோட், கூகுள் ஃபார்ம்ஸ், மின்னஞ்சல் வழியாக சில எதிர்வினைகள் கிடைத்திருக்கின்றன. இவற்றை நக்சலைட்டுகள்தான் அனுப்பினார்களா என்று முழுமையாக கண்டறியமுடியவில்லை. குடிமை அமைப்புகள், மக்களிடமும் இதுபற்றி கருத்துக்களைக் கேட்டிருக்கிறோம். நக்சலைட்டுகள் தவிர்த்து, அவர்களது செயல்பாட்டால் வீடுகளை இழந்தவர்கள், காயமுற்றவர்கள், பெற்றோர்களை இழந்த குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னை சிக்கலானது, கவனமாக புரிந்துகொள்ள முயலவேண்டும். இதில், சரணடைந்த நக்சலைட்டுகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் எங்களது கடமையாக உள்ளது. கடந்த ஆண்...

பழங்குடிகளின் வாழ்வாதாரங்களை சட்டம் மூலமாக பறிக்கும் தரகு கும்பல்கள்!

படம்
உலக நாணய நிதியம், உலக வர்த்தக கழகம் ஆகிய அமைப்புகள் உலக நாடுகளில் உள்ள இயற்கை வளங்களை சுரண்டும் பெருநிறுவனங்களுக்கு தரகர்கள் போலவே செயல்படுகின்றன. இயற்கையை சுரண்டுவதோடு, பழங்குடிகளை வாழ்வாதார நிலத்திலிருந்து வெளியேற்றும் வகையில் சட்டங்களை திருத்த அரசுகளை வற்புறுத்துகின்றன. அப்படி சொல்லித்தான் நிதியுதவிகளை தாராளமாக தருகின்றன. நவ தாராளவாத நிறுவனங்களான இத்தகைய அமைப்புகளே இயற்கை அழிக்கும் ஆபத்தான சக்திகள். நவ தாராளவாத நிறுவனங்களோடு அமைப்புகளோடு போராடுவது எளிதல்ல. சமூக வலைத்தள ஆப்களை விலைக்கு வாங்கும் அரசுகள், அதன் வழியாக போராட்டம் பற்றி, போராட்டக்காரர்கள் பற்றிய மோசமான அவதூறுகளை பரப்புகின்றன. மக்களை சாதி, மதம், இனம் வாரியாக பிரிக்கின்றனர். பிறகு எளிதாக இயற்கை வளங்களை வேட்டையாடுகின்றனர். அரச பயங்கரவாதம் சட்டப்பூர்வமாக இயங்கத் தொடங்கிவிட்டது. சோசலிசவாதிகள், சூழலியலாளர்கள், சூழல் சோசலிசவாதிகள் பழங்குடிகளுக்கு ஆதரவாக நிற்பது அவசியம். அப்போதுதான், காடுகளை பறிக்க முயலும் கொள்ளையர்களை தடுத்து மக்களுக்கு உதவ முடியும். சுரங்கம், கச்சா எண்ணெய், உயிரி எரிபொருள் ஆகியவை இயற்கை வளங்களை சுரண்டி மாசுபடுத...

தெரிஞ்சுக்கோ - தவளைகள்

படம்
  alanajordan   தவளை பற்றிய தகவல்கள்- தெரிஞ்சுக்கோ   ஆஸ்திரேலியன் ஸ்ட்ரைப்டு ராக்கெட்   என்ற தவளை தனது உடல் நீளத்தை விட 50 மடங்கு தூரம் தாண்டும் இயல்புடையது. கிரேட் கிரெஸ்டட் நியூட் இன பெண் தவளை, ஒரே நேரத்தில் 600 முட்டைகளை ஈனுகிறது. ஆப்பிரிக்கன் கோலியாத் இன தவளை 3.3 கிலோ எடை கொண்டது. இதன் நீளம் 30 செ.மீ. இந்தியாவில் வாழும் பர்பிள் தவளை, 50 வாரங்கள் (ஓராண்டிற்கு 52 வாரங்கள்) நிலத்தின் கீழே பாதுகாப்பாக உறங்குகிறது.   மழை தொடங்கும் இரு வாரங்களுக்கு மட்டும் எழுந்து இனப்பெருக்கம் செய்யத் தொடங்குகிறது.   கோல்டன் பாய்சன் டர்ட் தவளையின் உடலிலுள்ள விஷத்தின் மூலம் 10 மனிதர்களைக் கொல்ல முடியும். சிறு விலங்குகளில் எனில் 20 ஆயிரம் எலிகளைக் கொல்லலாம். நீர்நில வாழ்விகளில் மொத்தம் 8300க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. -அவர் வேர்ல்ட் இன் நம்பர்ஸ்

மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகளால் ஏற்படும் சூழல் பாதிப்பு!

படம்
  மறுசுழற்சி செய்யப்படாத ஆடைகள் உலோகங்கள், வேதிப்பொருட்கள், சிமெண்ட் ஆகிய நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் முக்கிய பொருட்கள் கரிம எரிபொருட்களை சார்ந்தே இருக்கின்றன. இவற்றை உற்பத்தி செய்யும் செயல்முறையில் பெருமளவு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. 0.98 டன்   ஸ்டீலை உற்பத்தி செய்யும்போது 1.87 டன் கார்பன் டை ஆக்சைடு வாயு வெளியாகிறது. இப்படி வெளியாகும் வாயுவை குறைக்க முடியாது. ஏனெனில் ஸ்டீல், சிமெண்ட் என இரண்டுமே நகரங்களைக் கட்டமைப்பதில் முக்கியமானவை. இவற்றுக்கு மாற்று இன்றுவரை வெற்றிகரமாக அமையவில்லை. எனவே, காற்றில் வெளியாகும் கார்பன் என்பது மென்மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.   கனரக தொழில்துறைக்கு இப்போதைக்கு கையில் உள்ள மாற்று முறை ஸ்டீம் மீத்தேன் ரீஃபார்மிங் எனும் முறைதான். இதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. உலகளவில் கனரகத் தொழில்துறை 22 சதவீத கார்பன் டை ஆக்சைடு வெளியீட்டிற்கு காரணமாக உள்ளது. இதை மட்டுமே குறையாக கூற முடியாது. ஜவுளித்துறையிலும் அதிக சூழல் பாதிப்பு உள்ளது. ஆடைகளைப் பற்றிப் பார்ப்போம். இங்கிலாந்தில் விற்கப்படும் எண்பது சதவீத ஆடைகள் மறுசுழற்...

ஒரே சமயத்தில் சங்கிலித் தொடராக நடைபெறும் சூழல் பிரச்னைகள்!

படம்
இந்தியாவில் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட மிக் 21 விமானங்கள் எப்படி அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது, அப்படியான சூழலில் விமானியை குறை சொல்லி அரசு தப்பிக்குமோ சூழல் பிரச்னையும் இதேபோலத்தான் நேருகிறது. ஏழை மக்களின் உணவு உண்ணும் பழக்கத்தை குறை சொல்கிறார்கள். தொழிற்சாலைகள் செய்யும் பித்தலாட்டங்களை மறந்துவிடுகிறார்கள். எல்லாம் வாங்கும் இனாமிற்கான விசுவாசம் வேறொன்றுமில்லை.  கடலில் வெப்பநிலை உயரத் தொடங்கினால், உடனே பவளப் பாறைகள் அழியத் தொடங்குகின்றன. ஆண்டுதோறும் பவளப்பாறைகள் அழியும் அளவு கூடி வருவதால் விரைவில் அதன் பாதிப்பை உணரத் தொடங்குவோம் என சூழலியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.சூழல் பாதிப்பிற்கு மக்கள் இறைச்சி சாப்பிடுவதை குறைக்கவேண்டுமென சில பத்திரிகைகள் எழுதி வருவதை இப்படித்தான் பார்க்கவேண்டும். பல நாடுகள் நாங்கள் பொருளாதாரத்தில் முன்னேறிய பிறகு சூழல் பிரச்னைகளுக்கு தீர்வு காண்போம் என சூளுரைத்து பேசுகின்றன. காசுக்கு மண்டியிடும் ஊடகங்களும் அரசியல் தலைவர்களின் பேச்சை குழப்பமின்றி வெளியிட்டு விசுவாசம் காட்டுகின்றன. முன்னேறியபிறகு மனிதர்கள் பூமியில் உயிர்வாழ இருப்பார்களா என்பதே சூழல் போராட...

ஊரே மிரளும் கனி, பாலுவாக மாறுவதற்கு காரணமான மருத்துவக் காதலி! - பாலு - கருணாகரன்

படம்
  பாலு இயக்கம் கருணாகரன் இசை பவன், ஷிரியா சரண், சுனில், ஜெயசுதா, பிரம்மானந்தம்   டெல்லியில் நீங்க என்ன செஞ்சுட்டிருந்தீங்க என கேட்கும் டான் டைப் கதை. ஹைதராபாத்தில் பூக்கடை வைத்து ஹோட்டல்களுக்கு பூ விற்றுக்கொண்டிருக்கும் பாலுவைக் கொல்ல டெல்லியில் இருந்து வரும் மாஃபியா டான் கான் பாய் முயல்கிறார். அவரும், உள்ளூர் தாதா நாயுடம்மா என்பவரும் இணைந்து பாலுவை கொல்ல நினைக்கிறார்கள். ஏன் இந்த வன்மம், பழிவாங்க நினைக்கிறார்கள் என்பதே முக்கியக் கதை. அவன் வீட்டிலுள்ளவர்கள் யார் என்பதையும் இயக்குநர் நிதானமாக கூறுகிறார். படத்தின் காட்சிகளை மணிசர்மா இசையால் தாங்கியிருக்கிறார்.  கனி, பாலு என இரண்டு பாத்திரம் இரண்டிலும் பிஎஸ்பிகே கலக்கியிருக்கிறார். முதல் காட்சியில் சுனிலுடன் பண்டு பாத்திரங்களுடன் வரும்போதே வசீகரிக்கிறார். பிறகுதான், அங்குள்ள தாஸ் என்பவரின் அம்மா போட்டோவை கடையில் வைத்து தண்டல் வசூலிப்பதை தடுக்கிறான். அனைத்தையும் நுட்பமாக செய்து நாயுடம்மா குழுவை ஏமாற்றுகிறான். ஏமாற்றும் பணத்தை அங்குள்ள சந்தை ஆட்களுக்கே கொடுக்கிறான். அந்த சந்தைப்பகுதி யாருடையது, ஏன் அங்கு ரவுடிக்கள்...

அநீதிக்கு எதிராக விளிம்பு நிலை மக்களின் வயிற்றில் எரியும் நெருப்பு - படுகைத் தழல் - புலியூர் முருகேசன்

படம்
  படுகைத் தழல் புலியூர் முருகேசன் நாவல் படுகைத் தழல் நாவல் பரிசோதனை முயற்சியான பல்வேறு விஷயங்களை தீர்க்கமான தன்மையில் பேசுகிறது.  சமகாலத்தில் இருந்து சோழகாலம் வரை பயணிக்கும் நூல் அந்தந்த காலகட்டத்தில் எளிய மனிதர்கள் மீது அதிகாரம் எப்படி பாய்ந்து அவர்களது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்தது என விளக்கமாக பேசுகிறது.  கதையின் தொடக்கத்தில் கலியமூர்த்தி என்பவர் பற்றிய விவரங்கள் கூறப்படுகின்றன.அவருக்கு திருமணமாகவில்லை. அவருக்கு சில நாட்களாக அடிவயிற்றில் வலி உள்ளது. அதை சரிசெய்ய அவரது பெரியப்பா மகன் அவரை இரண்டு ரூபாய் மருத்துவரிடம் கூட்டிச்செல்கிறான். அவர் ஹோமியோபதி மருத்துவர். பல்வேறு சோதனைகளை செய்தவர், அடிவயிற்று வலிக்கு காரணம் வேறு எங்கோ உள்ளது என கலியமூர்த்தியை அவரது நினைவுகளின் வழியாக பேச வைக்கிறார்.  கதை தொடங்குகிறது. ராசன் எனும் புலையக்குடி ஆள் எப்படி வேளாளர், பிராமணர் உள்ளிட்ட மேல் சாதிகளால் வதைபட்டு தனது நிலத்தை இழந்து பசியால் அவர் மட்டுமல்ல அவரது ஒட்டுமொத்த குடும்பமே வதை பட்டு அழிகிறது. ஏறத்தாழ நாவல் முழுக்க வரும் எளிய விளிம்புநிலை மனிதர்கள் அனைவருமே இதேபோல மரணத்தை...

நிலங்களை மனிதர்களை அடையாளம் காணத்தொடங்கியது எப்போது?

படம்
  நிலங்கள், மலைகள் வரலாறு!  புவியியல் என்று சொல்லும்போது மீண்டும் பாடநூல்களை படிக்கும் வெறுப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால்தான் மேலேயுள்ள தலைப்பு. பேசப்போவது புவியியல் துறை சார்ந்துதான். பூமி உருவாகி, அதை மனிதர்கள் உணரத் தொடங்கியபோது தங்கள் சுற்றுப்புறத்தின் மீது கவனம் செலுத்த தொடங்கினர். காலையில் எழுந்து உணவு தேடினால்தான் பசியாற முடியும். இதில் நிலப்பரப்புகளை தெரிந்து என்னவாகப் போகிறது என உங்களுக்குள் கேள்வி எழுகிறதா? லாஜிக்கான கேள்விதான். ஆனால் அப்படி நிலப்பரப்புகளை அடையாளம் தெரிந்தால்தானே எங்கே என்ன கிடைக்கும், அதை எப்படி பெறுவது என திட்டமிட முடியும். கூடுதலாக எரிமலை அபாயம் வேறு மனிதர்களை மிரட்டியது. கூடவே மழை, புயல், ஆறு, ஓரிடத்திற்கு செல்வதற்கான சுருக்கமான வழி என நிறைய பிரச்னைகளை மனிதர்கள் எதிர்கொண்டனர். இதற்கான ஒரே வழி நிலப்பரப்புகளை அடையாளம் கண்டறிவதுதான். புவியியலை மனிதர்கள் புரிந்துகொள்வதில் வெற்றி அடைந்ததன் அடையாளம்தான், குடியேற்றம். மனிதர்கள் அன்று தொடங்கி இன்றுவரை நினைத்தே பார்க்கமுடியாத கடினமான சவால் நிறைந்த நிலப்பரப்புகளில் வாழ்ந்து வருகிறார்கள்.  தொன்ம...

கண்களைக் கவரும் வெப்ப நீரூற்று!

படம்
  ஆளை மயக்கும் வண்ணத்தில் வெப்ப நீரூற்று!  ஃபிளை கீசர்  ( Fly geyser ) அமெரிக்காவின் நெவடாவில் பிளாக் ராக் பாலைவனம் உள்ளது. அங்குதான் ஃபிளை கீசர் அமைந்துள்ளது. ஹூவாலாபெய் எனுமிடத்தில் உள்ள வெப்ப நீரூற்று இது. பூமியின் ஆழத்தில் ஏற்படும் வெப்பம் காரணமாக இந்த நீரூற்று உருவானது. மலைகளின் வினோதமான நிறம் நீரூற்றில் கலந்துள்ள கனிமம் மற்றும் சில தாவர இனங்கள் காரணமாக ஏற்படுகிறது. பாலைவனத்தில் முன்னர் ஏரி ஒன்று இருந்தது. தற்போது அது, வறண்ட ஏரிப்படுகையாக உள்ளது.  நீரூற்றின் உயரம் 3.7 மீட்டர் ஆகும். இதிலிருந்து சூடான நீர் பீய்ச்சி அடிப்பதை பல கி.மீ. தொலைவிலிருந்தும் பார்க்கலாம். 1916ஆம் ஆண்டு மனிதர்கள் விவசாய நீர்தேவைக்காக நிலத்தை துளையிட, அதிலிருந்துதான் வெப்ப நீரூற்று வெளியாகத் தொடங்கியது. பிறகு இதற்கு நூறு அடி தள்ளி மற்றொரு இடத்தில் ஆய்வு நிறுவனம், நிலத்தில் துளையிட்டது.  அதிலும் வெப்பமான நீர் கிடைத்தது. ஆனால் அவர்கள் நினைத்தளவு வெப்பம் கிடைக்கவில்லை. இதன் வழியாக உருவானதுதான்  ஃபிளை கீசர். இதற்கு அடுத்து இங்கு 2006இல் இயற்கையான உருவான நீரூற்றின் பெயர், வில் கீசர்....

எந்தெந்த பிளாஸ்டிக்குகளை எப்படி மறுசுழற்சி செய்வது?

படம்
  மறுசுழற்சி  பிளாஸ்டிக் பாலிமர்கள் நீளமான சங்கிலி பிணைப்புகளாலான மூலக்கூறுகளைக் கொண்டவை. கார்பன் அணுக்களால் இணைக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் பாட்டில்களின் கீழே என்ன வகையான பிளாஸ்டிக் என்று எண்களால் குறிப்பிடப்பட்டிருக்கும்.  பெட் (PET) - பாலி எத்திலீன் டெரா பைத்தலேட் (Polyethylene Teraphthalate) பாட்டில், உணவு ஜார்கள், உடை, கார்பெட்டுகள், ஷாம்பு, மௌத்வாஷ் பாட்டில்கள் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இவற்றை அடையாளப்படுத்தும் எண் 1. ஹெச்டிபிஇ (HDPE) - ஹை டென்சிட்டி பாலிஎத்திலீன் (High density polyethylene) சலவைத் திரவ பாட்டில்கள், நொறுக்குத்தீனி பெட்டிகள், பால் குடுவைகள், பொம்மைகள், வாளி, செடிவளர்க்கும் தொட்டிகள், குப்பைத்தொட்டிகள் இவற்றை எளிதாக மறுசுழற்சி செய்யலாம். இதன் அடையாள எண் 2. பிவிசி (PVC) - பாலிவினைல் குளோரைடு (Polyvinyl chloride) கடன் அட்டைகள், ஜன்னல், கதவு பிரேம்கள், குழாய்கள், செயற்கை தோல்.  இவற்றை மறுசுழற்சி செய்வது மிக கடினம். இதன் அடையாள எண் 3. எல்டிபிஇ (LDPE) - லோ டென்ஸிட்டி பாலி எத்திலீன் (Low Density Polyethylene) பேக்கேஜ் ஃபிலிம், பேக்குகள், பபிள...

தொழிலை அறிய அதை தொடங்கிவிடுங்கள் - கனிகா குப்தா ஷோரி, ஸ்கொயர் யார்ட்ஸ்

படம்
  கனிகா குப்தா ஷோரி  நிறுவனர், செயல்பாட்டு இயக்குநர் ஸ்கொயர் யார்ட்ஸ்  வார்ட்டன் வணிகப்பள்ளியில் படித்தவர் கனிகா. தற்போது ஸ்கொயர் யார்ட்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.  தனது தொழில் சாதனைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றவர் கனிகா. இளம் சாதனையாளர், வுமன் ஐகான், நாற்பது வயதுக்குள் உள்ள நாற்பது தொழிலதிபர்கள் என்ற பட்டியலிலும் இடம்பெற்று சாதித்திருக்கிறார். அவரிடம் பேசினோம்.  வணிகத்திற்குள் எப்படி உள்ளே வந்தீர்கள். உங்களால் ரியல் எஸ்டேட் வணிகத்தில் சாதிக்கமுடியும் என்று தோன்றியதா? குழந்தை பிறப்புக்குப் பிறகு நானும் எனது கணவரும் இணைந்து ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தோம். இத்துறையில் எந்த பாகுபாடுமின்றி வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனைகளை சொல்லும் நிறுவனங்களும் ஆட்களும் குறைவு.  இதற்காகவே நாங்கள் 2014இல் ஸ்கொயர் யார்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினோம். தொழிலை தொடங்கும் முன்னரே வரும் பல்வேறு சவால்களை சமாளிக்க முடியுமா என்று யோசித்தேன். தைரியம் வந்ததும் தொழிலைத் தொடங்கினேன். இவைதான் எனக்கு இப்போதும் தொழிலை வெற்றிகரமாக நடத்திச் செல்ல உதவுகிறது.  உ...

கங்கை ஆற்றால் நிலமிழந்த மக்கள் - கண்டுகொள்ளாத மாநில, மத்திய அரசுகள்!

படம்
கங்கை ஆற்றால் அரிக்கப்படும் நிலம்!  கடல், ஆறு ஆகியவற்றால் நிலப்பரப்பு அரிக்கப்பட்டு வருவது காலம்தோறும்  நடந்துவருகிறது. மேற்கு வங்கத்தின், மால்டா, முர்ஷிதாபாத், நாடியா ஆகிய மாவட்டங்களில் 400 சதுர கி.மீ. நிலப்பரப்பு அரிக்கப்பட்டுள்ளது. இதை மாநில அரசின் ஆய்வே, வெளிப்படுத்தியுள்ளது. கங்கை ஆறு மூலமாக நிலப்பரப்பு அரிக்கப்படுவது புதிதாக நடக்கவில்லை. அறுபது ஆண்டுகளாக நடந்த  மண் அரிப்பு, பெருமளவு நிலப்பரப்பை சிதைத்துள்ளது. மண் அரிப்பின் பாதிப்பால், பல லட்சம் மக்களின் வீடுகள் அழிந்துவிட்டன. இதோடு அவர்களின் விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஃபராக்கா தடுப்பணை மேற்கு வங்கத்தில் கட்டப்பட்டு இருந்தாலும் கூட கங்கையின் சீற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மால்டாவிலிருந்த மசூதி, பள்ளிக்கட்டடம் உள்ளிட்டவை கங்கை ஆற்று நீரால் சிதைந்தன. இப்படி நடந்த சம்பவத்திற்கு மத்திய, மாநில அரசு என இரண்டுமே எந்த உதவியையும் செய்யவில்லை. ”ஆண்டுக்கு 73 கோடியே 60 லட்சம் டன்கள் வண்டல் மண் கங்கை ஆற்றில் படிகிறது. அதனை புனரமைத்தாலே பாதிப்புகள் குறையும். இதில் 32 கோடியே 80 ல...

குஜராத்தில் சிறுபான்மையினரின் குரல்! - ஜிக்னேஷ் மேவானி

படம்
  மத்திய அரசின் தேசதுரோக குற்றச்சாட்டுக்காக குஜராத்தின் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அலைகழிக்கப்பட்டவதை அறிவீர்கள். ஜிக்னேஷ் பற்றி சில விஷயங்களைப் பார்ப்போம்.  அவனுக்கு புரட்சியில் ஆர்வமிருக்கிறது. எப்போதும் அதை துடிப்பாக பேசிக்கொண்டிருப்பான். நான் புரட்சி என்பது நடந்தால் 1947க்கு முன் நடந்திருக்கவேண்டும் என்று கூறுவேன். ஆனால் அவன் புரட்சி காரணமாக சிறைக்கு போவதற்கும் தயார் என்றுதான் கூறுவான் என்றார் ஜிக்னேஷ் மேவானியின் தந்தை நட்வார்பாய் பார்மர்.  பிரதமர் மோடி பற்றி ஒரே ஒரு ட்வீட் பதிவை எழுதியதற்காக எம்எல்ஏவான ஜிக்னேஷை காவல்துறை அலைக்கழித்தது. அதுவும் மாநிலம் விட்டு மாநிலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைது செய்வது கொலை, கொள்ளை குற்றங்கள் என்றே இதுவரை இருந்தது. பாஜக அரசின் கைங்கர்யத்தில் இது  அரசியல்வாதிகளுக்கும் மாறியுள்ளது. ட்வீட் குற்றம் மட்டும் சிறையில் அடைக்க பத்தாதோ என நினைத்த காவல்துறை பெண் காவலரைத் தாக்கினார் என மற்றொரு குற்றச்சாட்டையும் பதிவு செய்தது. ஆனால் நீதிமன்றத்தில், வழக்குப...

மாஃபியாவுக்கு எதிரான கோவை மனிதர்!

படம்
  கோவையிலுள்ள சௌரிபாளையத்தைச் சேர்ந்தவர், தியாகராஜன். 50 வயதாகும் இவர், சிட்டி முனிசிபல் கார்ப்பரேஷனுடன் இணைந்து நில ஆக்கிரமிப்பை எதிர்த்து செயல்பட்டு வருகிறார். ஆக்கிரமிப்பு நிலத்தில் கோவில், வீடு, நிறுவனம் என எது மாநகராட்சியால் அகற்றப்பட்டாலும் அதனை முழுமையாக ஏற்று சந்தோஷப்படும் ஆன்மா கோவையில் தியாகராஜனாகத்தான் இருக்க முடியும்.  ஆர்டிஐ தகவல்கள் மூலம் அரசு நிலங்களைக் கண்டுபிடித்து அதனை பிறர் ஆக்கிரமிக்காதபடி தடுத்து வருகிறார். அதனை வேலியிட செய்யுமளவு அக்கறை காட்டுகிறார். பெரும் சக்திகளின் எதிர்ப்புகளையும் மீறி  இந்த வேலையை கடந்த 16 ஆண்டுகளாக செய்துவருகிறார். இதுவரை 26 ஏக்கர்களுக்கு மேலான நிலங்களை மீட்டு அதற்கு சொந்தமானவர்களுக்கு கொடுத்திருக்கிறார். இதன் சந்தை மதிப்பு 300 கோடிக்கும் அதிகம். வீட்டுநலச்சங்கங்களுக்கு சொந்தமான நிலங்களை கூட தியாகராஜன் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டிருக்கிறார்.  கோவை மாநகராட்சியில் 50 ஆக்கிரமிப்புகளைக் கண்டுபிடித்து அதில் 40 இடங்களை மீட்டுக்கொடுத்துள்ளார். இதில் பத்து இடங்களில் சட்டரீதியான போராட்டங்கள் நடந்து வருகின்றன.  2004ஆம் ஆண்டு நில...

செடி, கொடிகளுக்கு காவி வண்ணம் பூசும் புதிய சட்டங்கள்! - லட்சத்தீவு மக்களுக்கான அடடே சட்டங்கள்!

படம்
                    லட்சத்தீவுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன . இதன்படி அதன் நிர்வாகி பிரபுல் கே படேல் பல்வேறு சட்டங்களை உடனே அமல்படுத்தியுள்ளார் . இதெல்லாம் எதற்கு என பார்த்தவுடனே படிக்கும் யாருக்கும் தெரிந்துவிடும் குடுமிகளை கொண்ட திட்டங்கள் அவை . .. தீவில் முறையான சான்றிதழ் இல்லாமல் யாரும் பசுக்களை கொன்று சமைத்து சாப்பிடக்கூடாது . மாட்டுக்கறியை விற்பதும் குற்றம் என அறிவிக்கப்படுகிறது . மீறினால் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதோடு , ஓராண்டிற்கு மேல் சிறைத்தண்டனையும் ஏற்பாடாகியிருக்கிறது . சுற்றுலாவுக்கு ஏற்ற இடமாக மாற்ற இந்த சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறதாம் . இதற்கு எதிராக உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள் . அவர்களின் அனுமதி பெறாமல் சட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது என கருத்து கூறியுள்ளனர் . இரண்டே குழந்தைதான் 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து திட்டப்படி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் யாரு்ம் பஞ்சாயத்து உறுப்பினராக முடியாது . இப்போ...