இடுகைகள்

9/11 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வர்த்தக மையத் தாக்குதலை மையமாக கொண்ட திரைப்படங்கள்!

படம்
  யுனைடெட் 93 தீவிரவாதிகள் கடத்திய நான்காவது விமானத்தில் பயணித்த பயணிகள் பற்றியது. ஏறத்தாழ அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமான படம். இந்த விமானத்தையும் ஏதாவது கட்டிடத்தில் செலுத்தி வெடிக்க வைப்பதுதான் திட்டம். ஆனால் அதனை மக்கள் நெஞ்சுரத்தோடு போராடி முறியடித்தனர். பால் கிரீன்கிராஸ் என்பவரின் படம் இது.  வேர்ல்ட் டிரேட் சென்டர் அமெரிக்க தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் இரு வீரர்களைப் பற்றிய கதை இது. ஆலிவர் ஸ்டோன் படத்தை இயக்கியிருந்தார்.  ஜீரோ டார்க் தேர்டி அல்கொய்தா தலைவர் பின்லேடனை வேட்டையாடிய சம்பவத்தை தழுவிய படம் இது. 2012ஆம் ஆண்டு கேத்தரின் பிக்யிலோ எடுத்த திரைப்படம்.   

அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலின்போது பிரபலமாக இருந்த மனிதர்கள்!

படம்
  செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பங்கேற்று முக்கிய ஆளுமைகள் பற்றிய குறிப்பு இது.  மேற்படி அமெரிக்க தாக்குதல் நடந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. அதற்குப் பிறகு அமெரிக்க மத்திய கிழக்கு நாடுகளை குறிவைத்து தாக்கி ஜனநாயகத்தை மலர வைக்க முயன்றாக கூறியது. பெரும்பாலும் அனைத்து முயற்சிகளிலும் ஆயுதங்களை விற்பனை செய்தது தவிர வேறு எந்த நன்மைகளும் இடைக்கவில்லை.  ஜார் ஜ் டபிள்யூ புஷ் அமெரிக்காவில் வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடந்தபோது, இரண்டாம் வகுப்பு மாணவர்ளுக்கு ஆடுபற்றிய கதையை வாசித்துக்கொண்டிருந்தார். புளோரிடாவில் அவர் மாணவர்களுடன் இருந்தபோது தாக்குதல் செய்திகள் கூறப்பட்டன. அப்போது அவரின் முகம் வெளிறிப்போய் இருந்த புகைப்படம், இணையத்தில் வைரலானது. அப்போது தொடங்கிய முஸ்லீம்களை தீவிரவாதிகளாக பார்க்கும் பார்வை இன்றுவரை மாறவில்லை. ஆப்கானிஸ்தான் விவகாரத்தை இன்றுவரையும் பின்தொடர்வதாக கூறிவருகிறார்.  காண்டலிசா ரைஸ்  இப்போது ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் ஹூவர் அமைப்பில் இயக்குநராக உள்ளார். புஷ் ஆட்சியில் இருந்தபோது எ...