இடுகைகள்

அஞ்சலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

திரைப்பட பாடலாசிரியர், ஆன்மிக பாடல்களை இயற்றிய பூவை செங்குட்டுவனுக்கு அஞ்சலி

 திரைப்பட பாடலாசிரியர், ஆன்மிக பாடல்களை இயற்றிய பூவை செங்குட்டுவனுக்கு அஞ்சலி காங்கேயத்திற்கு அதிகாலையில் தனியார் பேருந்தைப் பிடித்து சென்றுகொண்டிருந்தேன். எப்போதும் துள்ளிசை பாடல்களைப் போடும் ஓட்டுநர், அன்று பொழுது விடியவில்லை என்று நினைத்தாரோ என்னவோ, பாடல்கள் ஆன்மிகத்தில் முழுகியிருந்தன. ஷண்முகா ஷண்முகா என புஷ்பவனம் குப்புசாமி குழுவினர் பாடிக்கொண்டிருந்தனர். அடுத்து பாடியவரும், முருகன் பாடலையே பாடினார். அப்போது என் மனதில் பல்வேறு எண்ணங்கள் அலையடித்துக் கொண்டிருந்தன. ஒருவரிடம் உதவி கோரிப்பெற சென்று கொண்டிருந்தேன். அங்கு உதவி கிடைக்கலாம். கிடைக்காமல் போகலாம். இரண்டாவதற்கே அதிக வாய்ப்புகள் உண்டு.  மனக்கலக்கமடைந்த நேரத்தில், திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் என்ற பாடல் தொடங்கியது. அப்பாடலைக் கேட்க கேட்க மனதிலுள்ள கலக்க எண்ணங்கள் குறைந்தது. அந்தப் பாடலின் வரிகளைக் கவனிக்க தொடங்கினான். முருகனுக்கு எண்ணற்ற மனக்கோயில்கள் உண்டு, அதில் அன்புக்கோ பஞ்சமில்லை என பெண் குரல் பாடியது. நிதானமாக குரலை உயர்த்தாமல் பாடியவிதம்தான் முக்கியமானது.  அந்தப் பாடலை எழுதியவர் இதை எப்படியான மனநிலை...

பத்திரிகையாளர்களின் பத்திரிகையாளர் - ஏ ஜி நூரானி - அஞ்சலிக் குறிப்பு

படம்
      அஞ்சலி ஏஜி நூரானி 1930-2024 காபூர் பாய் என அழைக்கப்படும் நூரானி, அரசியலமைப்பு சட்டத்தை அறிந்த கூர்மையான மனிதர்களில் ஒருவர். கல்வியாளர், வழக்குரைஞர், சுயசரிதையாளர், வரலாற்று அறிஞர், அரசியல் விமர்சகர், சிந்தனையாளர் என பல்வேறு தளங்களில் இயங்கி வந்தவர், அப்துல் காபூர் மஜீத் நூரானி. தனது தொண்ணூற்று மூன்று வயதில் ஆகஸ்ட் 29 ஆம் தேதி இயற்கை எய்தினார். முன்னாள் உச்சநீதிமன்ற வழக்குரைஞராக பணியாற்றிய நூரானி, சட்டம், அரசியல், வெளிநாட்டு உறவுகள் என பன்முகத்தன்மை கொண்ட தளங்களில் இயங்கி வந்தார். பாம்பே உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி செய்தார். எகனாமிக் அண்ட் பொலிட்டிகல் வீக்லி, தைனிக் பாஸ்கர், தி இந்து, பிரன்ட்லைன் ஆகிய நாளிதழ்களில் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். பிரன்ட்லைனில் காஷ்மீர் பற்றி நுட்பமான பல்வேறு தகவல்களோடு கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு காரணமாக அரசியல் சூழல்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். மனிதகுல வரலாற்றில் பத்து முக்கிய சம்பவங்களில் ஒன்று என இந்திய பாகிஸ்தான் பிரிவினையைக் குறிப்பிட்டார். குடிமகன்களின் உரிமை, பேச்சுரி...

மாநில பொருளாதார நலனுக்காக கனவு கண்ட லட்சியவாதித் தலைவர்! - புத்ததேவ் பட்டாச்சார்ஜி - அஞ்சலி

படம்
  அஞ்சலி புத்ததேவ் பட்டாச்சார்ஜி 1944-2024 மேற்கு வங்கத்தின் இடதுசாரிக்கட்சி, தனது முக்கியமான தலைவர்களில் ஒருவரான புத்ததேவை இழந்திருக்கிறது. அவருக்கு மனைவி மீரா, மகன் சுசேட்டன் ஆகியோர் உண்டு. மாநிலத்தில் இரண்டு முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று முதல்வராக பதவி வகித்தார். 2000-11 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வங்கத்தை தொழில்துறை சார்ந்த மாநிலமாக பல்வேறு முதலீடுகளை ஈர்க்கக் கூடியதாக மாற்ற கனவு கண்டார். ஆனால் அக்கனவு நிறைவேறவில்லை. புத்ததேவின் இறப்பு முக்கியமான காலகட்டத்தில் நடந்திருக்கிறது என்றே கூறவேண்டும். அவர் முதல்வராக பதவியேற்றது இருபத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு.... 1977 ஆம் ஆண்டு ஜோதிபாசு தலைமையின் கீழ் இடதுசாரி கட்சி தேர்தலில் பெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைத்தது. அன்றைய காலம் அரசியல் சிந்தனையாளர்களுக்கானது. பல்வேறு அரசியல் தத்துவவாதிகளின் கொள்கை, கோட்பாடுகள், மேற்கோள்கள், செயல்பாடுகள் என அரசியல்தளம் மாறியிருந்தது. இப்படியான சூழலில் வளர்ந்து வந்த புத்ததேவ் கவிதைகளை எழுதினார். புத்தக திருவிழாக்களுக்கு தொடர்ந்து சென்றுகொண்டிருந்தார். காப்ரியல் கார்சியா மார்கேஸ் நூல்களை மொழி...

வணிகத்தில் கிடைத்த பணத்தை ஏழைமக்களுக்கு செலவிட்ட மசாலா மகாராஜா!

படம்
                  அஞ்சலி மசாலா மகாராஜா மகாசாய் தரம்பால் குலாத்தி இவரது பெயரைச்சொல்வதை விட எம்டிஹெச் மசாலா கம்பெனி விளம்பரத்தில் வரும் பெரியவர் என்று சொல்லிவிடலாம் . 1933 ஆம் ஆண்டு தொடங்கி 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 3 வரை இவரது மசாலா நிறுவனத்தின் தீம் மாறவில்லை . ஆனால் விற்பனை புதிய மசாலா கம்பெனிகள் வந்தாலும் கூடிக்கொண்டேயிருக்கிறது . குலாத்தியின் குடும்பமே மசாலா தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது . இவருக்கு ஆறு மகள்கள் , ஒரு பையன் . பையன் வெளிநாடுகளில் வியாபாரங்களை ஏற்றுமதி செய்வதை பார்க்கிறார் . பெண்கள் உள்நாடுகளில் விநியோகத்தை கவனிக்கிறார்கள் . குலாத்தியின் தந்தை சுன்னி லால் பாகிஸ்தானின் சிலாய்கோரில் சிறிய மசாலா கடையைத் தொடங்கினார் . அந்த நிறுவனம்தான் இன்று 2 ஆயிரம் கோடி நிறுவனமாக வளர்ந்துள்ளது . தந்தையின் தொழிலுக்கு குலாத்தி விரும்பியெல்லாம் வரவில்லை . படிப்பை நிறுத்திவிட்டுத்தான் வந்தார் . மிளகாய்த்தூள் விற்பனை அப்போது சிறப்பாக நடந்து வந்தது . முதலில் குலாத்தி தொடங்கிய கடை மசாலாவுக்கானது அல்ல . தன்னுடைய முயற்சி...

புலனாய்வு கட்டுரைகளில் சாதனை படைத்த செய்தியாளர்! - சர் ஹரால்டு ஈவன்ஸ்

படம்
    சர் ஹரால்டு ஈவன்ஸ்   புலனாய்வு செய்தியாளர்! சர் ஹரால்டு ஈவன்ஸ், 92 வயதில் கடந்த புதன்கிழமை அன்று மறைந்தார். பிரிட்டிஷ் அமெரிக்க ஆசிரியரான இவர் இத்துறையில் 70 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். புலனாய்வு செய்தியாளர்,  வார இதழ் நிறுவனர், புத்தக வெளியீட்டாளர், ஆசிரியர் என அவரது தலைமுறை சார்ந்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். இங்கிலாந்தில் வெளிவரும் சண்டே டைம்ஸ் ஆசிரியராக ஈவன்ஸ் பணியாற்றினர். இவரும் இவரது தலைமையின் கீழ் அமைந்த குழுவும், மனித உரிமை மீறல்கள், அரசியல் ஊழல்கள் என பல்வேறு சமூக சீர்கேடுகளை அவலங்களை வெளியே கொண்டு வந்த பெருமை உடையவர்கள். தாலிடோமைட் எனும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு இழப்பீடு வேண்டி, ஈவன்ஸ் எழுதிய கட்டுரை பத்தாண்டுகளுக்குள் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தந்த்து. 14 ஆண்டுகள் சண்டே டைம்ஸில் பணியாற்றியர் பின்னாளில் டைம்ஸ்  பத்திரிகைக்கு மாறினார். ரூபர்ட் முர்டோக் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையை வாங்கியதுதான் காரணம். அவர் வாங்கியபிறகு ஈவன்ஸ் ஒரு ஆண்டுதான் அங்கு வேலை செய்தார். அதற்குப் பிறகு உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அ...

சத்தீஸ்கர் மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட அரச பயங்கரவாதத்தைக் கேள்வி கேட்ட சமூக செயல்பாட்டாளர்! - இலினா சென்

படம்
    சமூக செயல்பாட்டாளர் இலினா சென்         அஞ்சலி இலினா சென் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு பயங்கரவாதம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்ட மனித உரிமை மீறல்களை கேள்வி கேட்ட செயல்பாட்டாளர் இவர் . சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்லாண்டுகளை தங்கி வணிக சங்கங்களில் செயல்பட்டு வந்தார் . சமூக செயல்பாட்டாளர் , ஆசிரியர் எழுத்தாளர் என இவருக்கு பன்முகங்கள் உண்டு . அரசின் ஆதரவுப்படையாக சல்வா ஜூடும் என்ற படை அமைபப்பட்டு பழங்குடி மக்களை அச்சுறுத்தி வந்தது . இப்படை சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பை வாங்கிக்கொடுத்த சமூக செயல்பாட்டாளர்களில் இவர் முக்கியமானவர் . இவரது கணவர் டாக்டர் பினாயக் சென் மீது மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக அரசு வழக்கு பதிந்துள்ளது . இலினா சென் , இன்சைடு சத்தீஸ்கர் - எ பொலிட்டிகம் மெமோர் , சுக்வாசின் - தி மைக்ரன்ட் வுமன் ஆப் சத்தீஸ்கர் என்ற நூல்களை எழுதியுள்ளார் . இவர் கடந்த 9.8.2020 அன்று கோல்கட்டாவில் புற்றுநோயாடு போராடி மரணமடைந்தார் . இந்தியன் எக்ஸ்பிரஸ்