இடுகைகள்

நஞ்சு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தாவரத்தில் இருந்து பெறும் ஆபத்தான நஞ்சு எது?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி தாவரத்தில் இருந்து பெறும் ஆபத்தான நஞ்சு எது? கானியம் மெக்குலாடம் என்ற தாவரமே நஞ்சு என்ற வகையில் ஆபத்தானது. தென் அமெரிக்காவில் உள்ள லானா மரம், நஞ்சில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பழங்குடிகள் இதன் நஞ்சை, தங்களின் அம்புகளில் பயன்படுத்துகிறார்கள். தாவரங்கள், மரம், செடிகள் எதனால் முக்கியத்துவம் பெறுகின்றன? காகிதம், ஜவுளி, கட்டுமானம், உணவு ஆகியவற்றுக்கு மூலப்பொருட்களை மரங்களே தருகின்றன. சாக்லெட்டுகளை உருவாக்க கோக்கோ விதைகள் தேவை. குறிப்பாக தியாபுரோமா காகோவ் என்ற மர இனம் தேவைப்படுகிறது. ஃபாக்ஸ் குளோவ் என்ற தாவரத்தில் இருந்து இதய செயலிழப்புக்கான மருந்து பெறப்படுகிறது. காமெலியா சினென்சிஸ் என்பதை அறிவீர்களா, அதுதான் தினந்தோறும் பருகும் தேநீரில் பயன்படுத்தும் தேயிலை. மரக்கன்று இனப்பெருக்கத்தில் மாற்றத்தை உருவாக்கியவர் யார்? லூதர் பர்பேங்க் என்பவர், மரக்கன்றுகளை வீரியம் மிக்கதாக கலப்பு முறையில் உருவாக்கினார். பல்வேறு காய்கறி செடிகளை பார்த்து அடையாளம் கண்டு அதை கலப்பு முறைக்கு ஏற்றதாக மாற்றினார். இந்த வகையில் உருளைக்கிழங்கு, பிளம் ஆகிய செடிகள் உள்ளடங்கும்....

வெப்டூனிலுள்ள இரண்டு சுவாரசியமான காமிக்ஸ் கதைகள்.....

படம்
     அப்சொல்யூட் ரெய்ன் வெப்டூன்.காம் காமிக்ஸ் பழங்களை விற்கும் வணிகரின் மகன்தான் நாயகன். இஞ்சியோன் ஜியோக். தொடக்க காட்சியிலேயே பரபரப்பை பற்ற வைக்கிறார்கள். ஒரு வணிகரின் கைகளை வெட்டிவிட்டு, அவரின் சொத்துக்களை கொள்ளையிட்டு போனவனை, ஒழித்துக்கட்ட சில ஆட்களை அனுப்புகிறார்கள். நாயகனை கொல்ல கூலிக்கொலைகாரன் வருகிறான். அவன் பல்வேறு இடங்களில் விசாரிக்க, அதன் வழியாக கதை நகர்கிறது. அவன் பெண்களை விரும்பும் லோபி, எளியோருக்கு இரங்குபவன், சூதாடி, குடிகாரன் என நிறைய விஷயங்கள் சொல்லப்ப்படுகிறது. இறுதியாக நாயகன் தங்கியுள்ள இடத்திற்கு கூலி கொலைகாரன் செல்லும்போது, அவனை மூன்று வீரர்கள் தாக்கி கொல்கிறார்கள். அவர்கள் மூவருமே மாபெரும் வீரர்கள். அவர் எதற்கு நாயகனுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று யோசித்துக்கொண்டே கூலி கொலைகாரன் செத்துப்போகிறான். அடுத்து நாயகிக்கான அறிமுகம். வாள் இனக்குழுவின் தலைவராக இருப்பவரின் மகள், வாள் பயி்ற்சி செய்தாலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் முன்னேற முடியவில்லை. அவர்களது இனக்குழுவை விட வலிமையாக உள்ள இன்னொரு இனக்குழுவைச் சேர்ந்தவன். நாயகியை மணம் செய்துகொள்ள முயற்சிக்கிறான்...