இடுகைகள்

மன்னர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீன மினி டிராமாக்களில் உள்ள கிளிஷேக்கள்!

  சீன மினி டிராமா சீனர்கள் ஏராளமான மினி டிராமாக்களை தயாரித்து தள்ளுகின்றனர். அவை பெரும்பாலும் டிடி1 இல் வரும் டெலிபிலிம் தரத்தில் உள்ளன. டிராமா தலைப்பை சீனமொழியில் எழுதிவிடுகிறார்கள். இதனால் நாடக தலைப்பை குறிப்பிட முடியவில்லை.  நிறைய வசனங்களை எழுதிவிடுகிறார்கள். அதை மானாவாரியாக பேசித் தள்ளுகிறார்கள்.  காமெடிக்கு நிகராக பல பெண்களை பெண்டாளும் ஆண் நாயகனாக இருக்கிறான்.  பெண் அரசியாக இருந்தாலும் அவளை நாயகன் காமக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறான். அவளை பெண் என்ற அடிப்படையில் பார்க்கிறான். மதிக்கிறான். அவளது அறிவுக்கு புத்திசாலித்தனத்திற்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை.  தொன்மை காலத்தில் நவீன அறிவியல் கருவிகள் வருவது போல ஏராளமான நாடகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படியான கதையில் எந்த லாஜிக்கும் கிடையாது. நீங்கள் ரிலாக்சாக காலை நீட்டிவிட்டு பார்க்கலாம். நல்லதே நடக்கும். நாயகனே ஜெயிப்பான்.  பெண் அரசன் அதாவது ஆண் என சொல்லி அரசாளுவாள். அதை நாம் ஒரே பார்வையில் அறிந்துகொள்ளும்போது அன்றைய கால அமைச்சர்கள் கண்டுபிடிக்க ஒன்றரை மணிநேரம் தேவைப்படுகிறது. பெண் திறமையாக இருந்து ஆ...

மனைவியை சாத்தானின் பிள்ளை என உலகமே சொல்ல, அவர்களை எதிர்த்து போராடும் நாயகன்!

படம்
  எவர் நைட் இரண்டாம் பாகம்  சீன தொடர்  முதல் பாகத்தில் இருந்த முக்கியமான நடிகர்களை மாற்றிவிட்டனர். அது முக்கியமான குறைபாடு. அதற்கடுத்து கதை எங்கே போகிறது. எதை நோக்கி நகர்கிறது என்றே தெரியாமல் செல்கிறது. முதல் பாகத்தில் நாயகன் நிங்க் சூவிற்கு பழிவாங்கும் லட்சியம் இருந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் அவரும் என்ன செய்வது என தெரியாமல் தடுமாறுகிறார். அவர் மனைவி சாங் சாங் சொர்க்கத்திற்கு சென்றுவிடுவதால், அவரை மீட்க வேண்டும் என நினைக்கிறார். ஆனால் அதற்கு என்ன செய்வது என தெரியவில்லை. அருகில் இருந்து உதவும் இங்க் பாண்ட் பெண்ணையும் காதலிக்கிறார். ஆனால் அதையும் வெளிப்படையாக கூறமுடியவில்லை. கூடவே நகரைக் காக்கும் வேலை வேறு இருக்கிறது. நகரைச் சுற்றி ஷிலிங் என்ற ஆன்மிக மூடநம்பிக்கை கொண்ட முட்டாள்கள் வேறு படையெடுத்து வருகிறார்கள். நாற்புறங்களிலும் எதிரிகள் சூழ்ந்துள்ள நிலையில் நிங்க் சூ எப்படி நகரைக் காக்கிறான், தனது மனைவியை மீட்க ஏதாவது செய்தானா என்பதை சலிக்க சலிக்க எரிச்சல் ஏற்படுத்தும் விதமாக காட்சி படுத்தியிருக்கிறார்கள். இதில் அடுத்த பாகம் வேறு வருகிறதாம். .... ஐயோடா சாமி.  இரண்ட...

தாய்லாந்தில் சீர்த்திருத்தங்களை செய்யத்துடிக்கும் இளம் அரசியல் தலைவர் - பிடா

படம்
    pita,move forward party       எங்களுக்கும் நேரம் வரும் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த மூவ் ஃபார்வேர்ட் கட்சித்தலைவர் பிடா லிம்ஜாரோன்ராட் மேலேயுள்ள தலைப்பைத்தான் தனக்குத்தானே இப்படித்தான் சொல்லிக்கொண்டே பிரசாரம் செய்து வருகிறார் . பிடா செல்வாக்கான பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் . இவரது மாமா பாடுங் , முன்னாள் பிரதமர் தக்‌ஷினின் உதவியாளராக வேலை செய்தவர் . பிடா பாங்காக்கின் தம்மாசாட் பல்கலைக்கழகத்தில் படித்தவர் பிறகு மேற்படிப்பை அமெரிக்காவில் ஹார்வர்டில் படித்தார் . பிறகு நாடு திரும்பி குடும்பத்தொழிலான வேளாண்மை சார்ந்த தொழிலில் இயங்கி வந்தவர் , இப்போது அரசியலில் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார் . தாய்லாந்து நாட்டில் ஜனநாயகத்தன்மையை ஏற்படுத்தவேண்டும் . பொருளாதார சீர்திருத்தங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தவேண்டும் என தீர்மானமாக பேசுபவரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அரசால் பிடுங்கப்பட்டது . அரசு அவைக்குள் வராதபடி தடுக்கப்பட்டிருக்கிறார் . ஆனால் அவர் மக்களை , ஆதரவாளர்களை சந்திப்பை அரசு தடுக்கமுடியவில்லை . அரசியல் எதிரிகள் ...

அற்புதமான விமானங்களை வடிவமைத்த ஜப்பானிய பொறியாளரின் கனவு - விண்ட் ரைசஸ் - anime

படம்
  விண்ட் ரைசஸ் அனிமேஷன்  ஜப்பான்  அடிப்படையில் தேசியவாதப் படம்தான். ஆனால் அதைத்தாண்டிய விமானங்களை கட்டமைக்கும் கனவு கொண்ட ஒருவனின் வாழ்க்கை தான் அனிமேஷன் படத்தை உயிரோட்டமாக்கியிருக்கிறது.  இந்த அனிமேஷன் படம், ஜெர்மனியில் உள்ளது போன்ற நவீனத்துவத்துடன் அதிவேகம் செல்லும் விமானங்களை கட்டமைக்கும் பொறியாளர் ஒருவரின் கதையைப் பேசுகிறது. சிறுவயதில் இருந்தே விமான பைலட்டாக மாறும் ஆசையுடன் ஜீரோ உள்ளான்,ஆனால் கண்பார்வை சற்று குறைவானதால், பொறியாளர் ஆகிறான். அப்போது உலகப்போர் காலகட்டம். எனவே, வேகமாக செல்லும் ஆயுதங்களை கொண்டு செல்லும் விமானங்களை தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது. அதைப் பயன்படுத்தி ஜீரோ தனது விமானத்தை எப்படி உருவாக்குகிறான் என்பதே படம்.  படம் நெடுக விண்ணில் பறக்கும்போது அல்லது வாகனத்தில் பைக்கில் போகும்போது நமது முகத்தில் காற்று அடிக்குமே, வேகமாக, மெதுவாக என பல்வேறு விதமாக.. .அப்படி காற்று வீசிக்கொண்டே இருக்கிறது. விமானத்தை உருவாக்குபவனான ஜீரோ, காற்றில் தனது கனவுகள் அலைபாய திட்டங்களை தீட்டுகிறான். பெரும்பாலானவை, எஞ்சின் கோளாறுகள், மோசமான எரிபொருள், ஜப்பானில் வீசும் க...

மன்னருக்கு எதிராக ஜனநாயகத்தை முன்னெடுக்கும் மக்களின் போராட்டம் !

    தாய்லாந்து போராட்டம் தாய்லாந்தில் பல்வேறு மாதங்களாக ஜனநாயகத்தை வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர் . அவரை்கள் பிரதமர் பிரயுத் சான் ஓச்சா பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர் . அண்மையில் உலக நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் தாய்லாந்து போராட்டம் அதிக கவனம் ஈர்த்து வருகிறது . பௌத்தர்கள் அதிகம் வாழும் நாடு தாய்லாந்து . 70 மில்லியன் (1 மில்லியன் -10 லட்சம் ) மக்கள் இம்மதம் தழுவியவர்கள் . 1932 முதல் அரசியலமைப்புச்சட்டம் இங்கு அமலில் இருக்கிறது . ஆனால் 1947 ஆம் ஆண்டு நடைபெற்ற கலகத்திற்கு பிறகு ராணுவத்தின் ஆட்சிதான் பெருமளவு அங்கு நடந்து வந்தது . 2001 ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் நிலையிலும் மாறுதல்கள் ஏற்பட்டன . அதுவரை பிரதமராக இருந்த பாபுலிச தலைவரான தக்‌ஷின் ஷின வத்ரா , ராணுவத்தினால் பதவியிலிருந்து விலக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார் . இந்த விவகாரம் நடந்த ஆண்டு 2006. இதுபோல ராணுவம் அங்கு நடந்துகொள்வது புதிதல்ல . 1976 ஆம் ஆண்டு அக் .6 அன்று தாய்லாந்திலுள்ள தம்மசத் என்ற பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்களின் ஜனநாயகப் போராட்டத்தை ராணுவம் கடுமையாக ஒடுக்க...

உலகிலேயே அதிக விலைமதிப்பு கொண்ட நாணயம்!

படம்
டாப் 5 கேள்விகள்  மிஸ்டர் ரோனி @ ஏன்?எதற்கு? எப்படி? காய்கறிகளை பழங்களை அப்படியே பச்சையாக சாப்பிடுவது நல்லதா? பண்ணைக் காய்கறிகள் என்பதன் அர்த்தம், அதில் மண் ஒட்டியிருக்க சாப்பிடுவது அல்ல. அம்முறையில் சில சத்துகள் உண்டுதான். ஆனால் சத்துகள் உடலால் செரிக்கப்பட அவை சமைக்கப்படுவது அவசியம். மேலும் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் நேரடியாக சாப்பிட்டால் உடலைத் தாக்கும் அபாயம் உள்ளது. மெட்ரிக் அளவீட்டை ஏற்காத நாடுகளும் உண்டா? ஏன் இல்லாமல்? அமெரிக்கா, மியான்மர், லைபீரியா ஆகிய நாடுகள் உலக மெட்ரிக் அளவீட்டை ஏற்கவில்லை. அமல்படுத்தவில்லை. ஜப்பான் மன்னருக்கு பெரும் அதிகாரம் உண்டா? இரண்டாம் உலகப்போர் தோல்வி வரை இருந்தது. அதற்குப் பிறகு மன்னர் என்பது மரியாதைக்குரிய அடையாளமாக மாறி விட்டது. பெரிய அதிகாரங்கள் ஏதுமில்லை. செவ்விந்தியர்கள் கத்துவது போல படங்களில் நாம் கேட்கும் ஒலி உண்மையானதா? சுத்த டுபாக்கூர். செரோக்கி மற்றும் அபாசே ஆகிய பழங்குடிகள் தமக்குள் போர் நேரும்போது சிலவகை ஒலிகளை தகவல் தொடர்புக்காக எழுப்புவார்கள். ஆனால் அது படத்தில் காட்டியுள்ளது போல் அல்ல. படத்தில் ஒரே மாத...