இடுகைகள்

சந்திப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வணிக சந்திப்பிற்கு உணவகங்களை தேர்ந்தெடுக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை என்னென்ன?

படம்
        இன்று வணிக ரீதியாக கூட்டாளிகளை, ஒப்பந்தக்காரர்களை விடுதியில் சந்திப்பது இயல்பாகிவிட்டது. சிலர் எழுத்தாளர்களுக்கென தனி கபே நடத்துகிறார்கள். காபி கடைகளில் இணைய வசதியைக்கூட வழங்குகிறார்கள். வெளிநாடுகளில் நேர்காணல்களை நடத்துகிறார்கள். இப்படியான சூழ்நிலையில் ஓரிடத்தில் முக்கியமான நபரை சந்திக்கச் செல்கிறீர்கள். அப்போது என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும். ஹோட்டல்களில் முன்பதிவு செய்துவிட்டு செல்வது நல்லது. உரிமையாக குறிப்பிட்ட மேசையைக் கேட்கலாம். அங்கே உட்கார்ந்து பேசிவிட்டு சாப்பிட்டுவிட்டு டிப்ஸ் கொடுத்துவிட்டு வரலாம். பதிவு  செய்யவில்லை என்றால் சந்திப்பை உகந்ததாக அமைய வாய்ப்பு குறைவு. ஹோட்டல்கள், உணவு, பணியாளர்களது நடத்தை பற்றிய மதிப்பீடுகளை இணையத்தில் பார்த்துவிட்டு வரலாம். சமீபத்திய விமர்சனங்களைக் கவனியுங்கள். ஓராண்டுக்கு முந்தையது வேண்டாம். குறைகள், புகார்களுக்கு எப்படி பதில் அளித்துள்ளார்கள் என பாருங்கள். நிறைய புகழ்பெற்ற உணவகங்கள் என பீற்றிக்கொள்பவர்கள் கூட குறைகளை, புகார்களை வாடிக்கையாளர் முன்வைத்தால் மௌனமாக அதை கடந்துசெல்வதை இணையத்தில் கமெண்டுகளைப் ப...

பன்னீர் சோடா வாங்கித்தரும் பாக்கியத்தை அருளிய எழுத்தாளர்! - கடிதங்கள் - கதிரவன்

படம்
              ஆண் வாரிசுதான் எல்லாமே ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா |? நேற்று குங்குமம் டாக்டர் இதழை பீடிஎஃப்பாக படித்தேன் . ஹோமியோபதி பற்றிய கட்டுரையைப் படித்தேன் . நின்றுபோன டாக்டர் இதழ் மீண்டும் தொடங்கப்பட்டு வருவது சந்தோஷமான விஷயம் . அறையில் வெப்பம் கூடிவருவதால் , மொட்டைமாடியில் சற்றுநேரம் இருந்துவிட்டு வந்தால்தான் தூங்கவே முடிகிறது . நாங்கள் ஜூன் மாத நாளிதழுக்கான வேலைகளைச் செய்யத் தொடங்கிவிட்டோம் . பாடத்திட்டம் சார்ந்து எழுதும் ஆட்களைக் கண்டுபிடித்து வேலை சொல்லி எழுதி வாங்குவது கடினமாக உள்ளது . என்னுடைய மடிக்கணினி சீராக இயங்குவதில்லை . லினக்ஸ் இயக்குமுறை என்பதால் அதில் நேரும் பிரச்னைகளை விளக்கிக் கூறவும் முடியவில்லை . எழுத்து வேலைகள் தேங்கிவிட்டன . இனி இந்த வேலைகளை க்ளவுட் முறையில்தான் செய்து சேமித்துக்கொள்ள வேண்டும் . அண்மையில் எனக்கு பள்ளிக்கால நண்பர் ஒருவர் போன் செய்து பேசினார் . அவருக்கு இரண்டாவதாகவும் பெண் பிள்ளை பிறந்திருக்கிறது . ஆதங்கமும் , கோபமுமாக பேசினார் . எனக்கு அவருக்கு எந்த முறையில் ஆறுதல் சொல்லு...