இடுகைகள்

அக்டோபர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

break!!!

படம்
 

சீனாவை வீழ்த்த இறக்குமதி வரியை உயர்த்தும் ஐரோப்பிய கமிஷன்

படம்
            சீனாவை வீழ்த்த இறக்குமதி வரியை உயர்த்தும் ஐரோப்பிய கமிஷன் வணிக ரீதியான போட்டியை, தொழில் சார்ந்து நிறுவனங்கள் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். போட்டியை சமாளிக்க ஆராய்ச்சி செய்யவேண்டும். கரிம எரிபொருள் வாகனமோ, மின் வாகனமோ புதுமைகளை புகுத்த வேண்டும். ஆனால், மக்களுக்கு குறைந்த விலையில் தரமாக கிடைக்கக்கூடிய சீன மின் வாகனங்களை ஐரோப்பிய கமிஷன் முப்பத்து மூன்று சதவீத வரியை விதித்து தடுக்க முயல்கிறது. குறிப்பாக அவர்களது இலக்கு, பைடு என்ற சீன மின் வாகன நிறுவனம்தான். இந்த நிறுவனம், மின்வாகனங்களை டெஸ்லாவை விட தரமாகவும் விலை குறைவாகவும் தயாரித்து ஐரோப்பிய நாடுகளுக்கு விற்று வருகிறது. இதைப் பயன்படுத்தி 2025ஆம் ஆண்டுக்கான கார்பன் வெளியீட்டு இலக்கைக் கூட ஐரோப்பிய கமிஷன் அடையமுடியும். பதிலாக, சீனாவின் மின்வாகன இறக்குமதிக்கு அதிக வரியை விதித்து அமெரிக்காவுடன் கைகோத்திருக்கிறது. இந்த வரி விதிப்பிற்கு சீன அரசு எதிர்ப்பு தெரிவித்து உலக வர்த்தக கழகத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சீனாவில் உள்நாட்டு நிறுவனங்களான பைடு, ஜீலி ஆகியவற்றோடு வெளிநாட்டு நிறுவனங்களான டெஸ்லா கூட மின் வ...

சிறிய விஷயங்களைச் செய்வதால் மாறும் வாழ்க்கை!

படம்
      12 டினி திங்க்ஸ் ஹெய்டி பார் சுயமுன்னேற்ற நூல் எழுத்தாளர் ஹெய்டி, இந்த நூலில் பனிரெண்டு விஷயங்களைக் குறிப்பிட்டு அதன் வழியாக மனித வாழ்க்கையில் ஏற்படும் ஆக்கப்பூர்வ மாற்றங்களை பட்டியலிட்டுள்ளார். வெளிப்படையாக சொன்னால், இவரது கட்டுரைகளை படித்து புரிந்துகொள்வதை விட நூல் நிறைவுற்றபிறகு, பின்புறமாக கொடுத்துள்ள சில அறிவுறுத்தல்களை படித்தாலே நமக்கு நிறைவான தெளிவு கிடைத்துவிடும். பனிரெண்டு விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போமா, இதில் இடம், வேலை, ஆன்மிகத்தன்மை, கிரியேட்டிவிட்டி, உணவு, நாகரிகம், இயற்கை, இனக்குழு, வீடு, உணர்வு, கற்றல், தகவல்தொடர்பு என பல அம்சங்கள் கூறப்பட்டு, அவை விளக்கப்படுகின்றன. இந்த விஷயங்களைப் படித்துமுடித்தபிறகு சில கேள்விகளை நூலாசிரியர் கேட்கிறார். அதற்கான பதில்களை வாசகர்கள் வழங்கவேண்டும். அதன் வழியாக தெளிவு கிடைக்கலாம். இதில் கூறப்படும் விஷயங்கள் முழுக்க புதுமையானவை அல்ல. ஆனால், நாம் மறந்துபோனவையாக அதிகம் உள்ளது. உணவை கவனம் கொடுத்து மணம், சுவையை அனுபவித்து உண்பது, உடற்பயிற்சி செய்வது, சில நாட்கள் எதையும் செய்யாமல் அமைதியாக சிந்தனைகளை குறைத்து இருப்பது, இ...

கலை எளிய மனிதர்களும் அணுகும் விதத்தில் இருக்கவேண்டும் - தேவோன் ரோட்ரிக்ஸ், டிக்டாக் ஓவியக்கலைஞர்

படம்
          புதுயுக தலைவர்கள் - தேவோன் ரோட்ரிக்ஸ் ஓவியக்கலைஞர் ஓவியத்தைக் கற்கும்போது, ரோட்ரிக்ஸ் கனவு செல்சா பகுதியிலுள்ள கலைக் கண்காட்சியகத்தில் அவரது ஓவியங்களை இடம்பெறச்செய்வது, ஆனால் அவருக்கு அதுபற்றிய தேடலில் கிடைத்த அனுபவம், மரபான ஓவியங்களை குறிப்பாக நீ வரைவதை அங்கு ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான். ரோட்ரிக்ஸ் வறுமையான நிலையில் வேறு இருந்தார். அவரது கனவு எளிதாக நிறைவேறாது என்று அவருக்கு தெரிந்தது. போர்ட்ரைடுகளை வரைந்துகொண்டிருந்தவர், காசு கொடுத்து அருங்காட்சியகம், கலைக்கண்காட்சிகளுக்கு போகக்கூட முடிந்ததில்லை. மன்ஹாட்டனிலுள்ள ஓவியப்பள்ளிக்கு மாறியவர், ஓவியங்கள் வரைவதை நிறுத்தவில்லை. கிடைத்த நேரத்தில் சுரங்கப்பாதை, ரயில்நிலையம், பேருந்து என அறிமுகமற்றவர்களை படமாக வரைந்துகொண்டிருந்தார். பெருந்தொற்று காலத்தில் நிறைய போர்ட்ரைடுகளை வரைந்தார். சீன ஆப்பான டிக்டாக்கில் தான் படம் வரைந்து அதை அறிமுகமற்றவர்களுக்கு வழங்குவதை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார். இப்படியான முதல் பதிவு, ஐந்து மில்லியன் பார்வைகளைப் பெற்றது. அடுத்து, நான் சந்திக்கும் மனிதர்களின் முகம் எப்ப...

மனைவி கருவுற்றதற்காக ஆணுறை நிறுவனத்தின் மீது ஒரு கோடி இழப்பீடு கேட்டு வழக்குத் தொடரும் கணவன்!

படம்
         ஜானக அய்தே கானக சுகாஸ், சங்கீர்த்தனா விபின், முரளிசர்மா, வெண்ணிலா கிஷோர் சிறிய பட்ஜெட் படம். கதை, அழுத்தமான திரைக்கதையை மட்டுமே நம்பி களமிறங்கியிருக்கிறார்கள். படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவருமே சிறப்பாக பங்களித்துள்ளனர். அமைப்பு ரீதியாகவே மேல், கீழ், பணக்காரன், ஏழை வர்க்க வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டுவிட்டோம். அதுதான் சிக்கலாக மாறி வறுமையிலுள்ள, மத்தியதர வர்க்க ஆட்களை வேட்டையாடுகிறது என படம் பேசியிருக்கிறது. படத்திற்கு பெரிய பலம், சுகாஸின் ஆத்மார்த்தமான நடிப்பும், அவரின் மனைவியாக நடித்துள்ள சங்கீர்த்தனாவின் சூழலுக்கு பொருத்தமான அழுத்தமான உள்ளடங்கிய பாத்திரமும்தான். சுகாஸ், மேஜிக் வாஷ் என்ற வாஷிங்மெஷின் கம்பெனியில் விற்பனை, பழுது பார்ப்பது ஆகிய வேலைகளை செய்யச் சேருகிறார். வார இறுதியில் பாருக்கு சென்று குடிக்கும்போது, அங்கு வெண்ணிலா கிஷோர் அறிமுகமாகிறார். கிஷோர் வக்கீல். சுகாஸ், வாஷிங்மெஷின் விற்பவர். இருவரும் தங்களது வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள், வாழ்க்கைச் செலவுகள்,பிள்ளைகள் கேட்கும் பொருட்களை வாங்கிக்கொடுப்பது, மனைவியுடனான உறவு என பல விஷயங்களையும் பகி...

ஒழுக்கம் நாணயம் உண்மை ஆகியவற்றை ஆராய்ச்சிப் படிப்பிலும் காதல் வாழ்க்கையிலும் நடைமுறைப்படுத்தும் இளைஞனின் போராட்டம்!

படம்
      மிஸ்டர் கிங் சரண்குமார் (சிவா), யாஷ்விகாநிஷ்கலா (உமா தேவி), ஊர்வி சிங்(வெண்ணிலா),முரளி சர்மா இசை மணி சர்மா இயக்கம் சசிதர் சாவாலி வாழ்க்கையில் நேர்மை முக்கியம். பொய்யான விஷயங்களே பேச மாட்டேன். செய்யவும் மாட்டேன் என அடம்பிடித்து வாழும் பிஹெச்டி மாணவர் சந்திக்கும் காதல், தொழில் பிரச்னைகளைப் பற்றிய படம். படத்தின் நாயகன் சரண், தனது கதையை சுனிலிடம் சொல்வதுபோல கதை தொடங்குகிறது. சிங்கிள் சிவா என்பதுதான் நாயகனின் பெயர். அவர் பகுதி நேரமாக ரேடியோ சிட்டியில் தொகுப்பாளராக வேலை செய்கிறார். மீதி நேரத்தில் முனைவர் படிப்புக்கான புராஜெக்டில் இருக்கிறார். இந்த நேரத்தில்தான் அவர் பெற்றோர் வீட்டை மாற்றுகிறார்கள். அப்போது சிவா, அருகிலுள்ள வீட்டுக்குச் செல்லும்போதுதான் அங்கு பெண் பார்க்க மாப்பிள்ளை வீடு வந்திருப்பது தெரிகிறது. அங்குதான் நாயகியை(யாஷ்விகா) சந்திக்கிறான். அந்த சந்திப்பு இருவருக்குமே தீப்பொறி போல அமைகிறது. யாஷ்விகா, அப்பாவின் பேச்சுக்கு அடங்கிய பெண். அப்பா முரளி சர்மாவோ, தான் எடுத்த முடிவுதான் இறுதி என மேலாதிக்கம் கொண்டவராக வலம்வருகிறார். அவருக்கும் அவரது அண்ணனுக்கும் சொத்து ...

இளைஞன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு திருமணம் செய்ய பெண் தேடினால்....

படம்
      மேரேஜ் வைப்ஸ் சபரீஷ், மகிமா director - harish வைரலி தமிழ் யூட்யூப் சேனல் ஒரு மணி நேரத்தில் பார்த்துவிடக்கூடிய சிறிய வெப் படம். முதல் காட்சியில் சபரி, தன்னுடைய நிறுவனத்தின் உரிமையாளரிடம் வேலையை விட்டு நின்றுகொள்வதாக கடிதம் கொடுக்கிறான். அந்த நேரத்தில் அவனுக்கு பெண் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வீட்டில் அம்மா மட்டும்தான் இருக்கிறார். அவருக்கு மகன் மீது பிரியம். சபரிக்கு பள்ளி, கல்லூரி, அலுவலகம் என சக்கரம் போல சுற்றும் கடிகார வாழ்க்கை போரடிக்கிறது. எனவே, அதில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்கிறான். பெண் பார்க்கும் சடங்கு எல்லா இடத்திலும் ஒன்றுபோல்தான். பையனது வேலை, சம்பளம், சொத்து என அனைத்தையும் கேட்கிறார்கள். இதில் சபரிக்கு வேலை இல்லை என்றதும் பெண் பார்க்கும் தரகர்கள் அனைவரும் போனை உடனே துண்டிக்கிறார்கள். அந்த நேரத்தில் ஒரு பெண் மட்டுமே அவனை சந்திக்க வருகிறாள். அவள்தான் மகிமா. உண்மையில் அவள் ஏன் சபரியை சந்திக்க விரும்பினாள் என்பதுதான் இறுதிக்காட்சி. தமடா மீடியாவின் யூட்யூப் சேனல்களில் ஒன்றுதான் வைரலி தமிழ். நடித்துள்ள நடிகர்கள் சபரி, மகிமா என இருவருமே சிறப்பாக நடித்த...

அறிவியலாளர்கள் ஆராய்ச்சி மூலம் அரசியல் களம் மாறும்! - ஜவகர்லால் நேரு உரை

படம்
இங்கு நான் வந்திருக்கிற சமயம், மனதளவில் சற்று வினோதமாக உணர்கிறேன். இதுபோன்ற உணவு எப்போதும் ஏற்பட்டதில்லை. இந்த இடத்தில், அறிவியல் சார்ந்த கற்றுக்கொள்ளல் தொடர்பான அழுத்தம் திடமாக உள்ளது. டாக்டர் பாபா, எனக்கு கூறியபடி என்னுடைய பகுதியை, அறிவியல் ஆராய்ச்சிக்கு செய்ய வந்திருக்கிறேன். அறிவியல் நிறுவனத்திற்கான அடித்தள தூண்களை அமைத்துக்கொடுப்பதே நாட்டிற்கான எனது பணி. அடிப்படையான அம்சம் என்றளவில் இதற்கு முக்கியத்துவம் உள்ளது. இந்திய அரசு சார்பாக, டாக்டர் பாபா, மாநாட்டு விருந்தினர்களாகிய உங்களை வரவேற்றுள்ளார். நாட்டு அரசின் உறுப்பினராக, இங்கு வருகை தந்துள்ளோர் அனைவரையும் வரவேற்க விரும்புகிறேன். குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் பணியாற்ற வந்திருக்கிற வெளிநாட்டு நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றியை கூறிக்கொள்கிறேன். இயற்கையைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொண்டால், உங்கள் ஆசைகளை எளிதாக நிறைவேற்றிக்கொள்ளலாம். நமது செயல்பாட்டை, எதிர்கால உலகிற்காக, அதன் நலனுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நான் எப்போதும் நிகழ்காலத்தில் வாழ்பவன். இதிலிருந்து வெளியே வரவேண்டுமெனில் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்க...

சீனாவில் இஸ்லாமிய தீவிரவாதம்

படம்
            சீனாவில் இஸ்லாமிய தீவிரவாதம் சீனாவுக்கு, இஸ்லாமிய தீவிரவாதம் என்பது பெரிய பிரச்னையாக இருந்தது. குறிப்பாக, ஷின்ஜியாங் என்ற பகுதியில் பெருமளவு உய்குர் இன முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு தாலிபன், பிற இஸ்லாமிய பிரிவினைக் குழுக்களோடு தொடர்பு இருக்கிறது என சீன அரசு சந்தேகப்பட்டது. தீவிரவாதம், பிரிவினைவாதம், வன்முறை ஆகியவற்றை அழிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பதைத் தொடங்கியது. இதில் ரஷ்யா, கசக்கஸ்தான், உஸ்பெகிஸ்தான்,தஜிகிஸ்தான் என பல நாடுகள் சேர்க்கப்பட்டன. தீவிரவாத எதிர்ப்பு முகமைக்கான தலைமை அலுவலகம் சீனாவில் அமைக்கப்பட்டது. பிராந்திய அலுவலகங்கள் உறுப்பினர் நாடுகளில் அமைந்தன. தொடக்க காலத்தில் இந்தியாவை இதில் இணைத்துக்கொள்ள சீனா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மூலம் ரஷ்யாவின் உறவைப் பெற்று மத்திய ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பெருக்கிக்கொள்ள நினைத்தது. ரஷ்யா, சீனாவின் அமைப்பில் இந்தியாவை உள்ளே கொண்டு வர நினைத்தது. அன்று பாகிஸ்தான், இரான், மங்கோலியா இலங்கை ஆகிய நாடுகளும் சீனாவுடன் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டின. நவீன க...

சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி?

படம்
        சீனா இந்தியாவுக்கு எதிரியானது எப்படி? இந்தியா, சீனாவுக்கு இடையில் பிரிட்டிஷார் வகுத்த எல்லைக்கோட்டை சீன பொதுவுடைமைக் கட்சியும், அரசும் ஏற்கவில்லை. 1949ஆம் ஆண்டு, சீனாவில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து மக்கள் சீன குடியரசு உருவாகிறது. அதை இந்திய அரசு அங்கீகரித்தது. சீன அரசுக்கு பிரிட்டிஷார், ஜப்பான் ஆகியோரின் தாக்குதலால் தங்களை வலுவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற வேட்கை உருவாகியிருந்தது. அதை சீனா, நவீன காலத்தில் பெருமளவு நிறைவேற்றிக்கொண்டுவிட்டது. சீனக்கனவு என அதை குறிப்பிடுகிறார்கள். 1962ஆம் ஆண்டு சீனா, எல்லையில் இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்து வெற்றி பெறுகிறது. இதன் விளைவாக முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றுகிறது. இது இந்தியாவின் மீது மாவோவின் போர் என அழைக்கப்படுகிறது. மார்க்சிய லெனினியவாதிகள் இதை எப்படி விளக்குவார்களோ தெரியவில்லை. இதற்குப் பிறகு, சீனாவின் அனைத்து செயல்பாடுகளும் சந்தேகத்திற்குரியவையாக மாறிவிட்டன. அல்லது அரசியல்வாதிகள் அதை அப்படித்தான் பார்க்கவேண்டும் என்று கூறத்தொடங்கினர். குறிப்பாக, இந்து பேரினவாத கட்சி தலைவர்கள். சீனா, இந்தியாவை எல்லையில் தோ...

உலகை மாற்றிவரும் நிறுவனங்கள் - பார்ச்சூன் ஆசியா

படம்
        உலகை மாற்றிவரும் நிறுவனங்கள் - பார்ச்சூன் ஆசியா இந்தியாவிற்குள் நுழைய எலன் மஸ்க் முயன்று வருகிறார். அவரின் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை குறைந்த விலைக்கு கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. அதையும் கெடுக்க, குஜராத்தி தொழிலதிபர்கள் தேசபக்தி ஆயுதத்தை கையில் எடுத்திருக்கிறார்கள். நான் முதலில் நானே முதலில் என பேராசை கொள்பவர்களை அரசும் ஆதரிப்பதால், இந்தியா முன்னேற்றமடைவது கடினம். ஆக்கப்பூர்வ செயற்கைக்கோள் வணிகத்தைப் பார்ப்போம். இன்று புவிவட்டப்பாதையில் பத்தாயிரம் செயற்கைக்கோள்கள் சிறப்பாக இயங்கி வருகின்றன. வானில் செயற்கை நட்சத்திரங்கள் போல மாறிவருபவை செயற்கைக்கோள்கள் என்றால் நம்மில் பலரும் நம்பமாட்டார்கள். உலகம் முழுக்க நடைபெறும் பசுமை இல்ல வாயுக்களின் கசிவைப் பற்றிய தகவல்களை சிஹெச்ஜிசாட் கண்டுபிடித்து வருகிறது. இந்த நிறுவனம், மான்ட்ரியலில் இயங்கி வருகிறது. 2016ஆம் ஆண்டு, செயற்கைக்கோள் நிறுவனம் முதல் செயற்கைகோளை விண்ணில் ஏவியது. இப்போதுவரை டஜன் கணக்கிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் இருந்து பூமியில் பசுமை இல்ல வாயுக்களின் கசிவைக் கண்டுபிடித்து தடுக்க உதவியுள்ளது. அரசு நிறுவனங்...

புதுயுக தலைவர்கள் - எதிர்காலத்திற்கு ஏற்ற கட்டுமானங்கள்

படம்
            next generation leaders -time அரைன் ஆப்ராமியன் கட்டுமானக் கலைஞர் லெபனான் நாட்டின் பெய்ரூட்டில் உள்ள கட்டுமானக் கலைஞர். ஆர்மேனிய இனத்தைச் சேர்ந்தவரான இவர், பெய்ரூட்டின் கிழக்குப்பகுதியில் தங்கி வாழ்ந்தபோது வீடுகள் குறுகியதாக இருந்தன. வசிக்கவே இடமில்லாதபோது விளையாட இடம் எங்கு கிடைக்கப்போகிறது? அரைன் குடும்பமாக தங்கியிருந்த இடத்தில், பூங்காக்களோ, விளையாட்டு மைதானமோ ஏதுமில்லை. இதுவே அவர் பின்னாளில் உருவாக்கிய கட்டுமானங்களில் திறந்தவெளிகள் அதிகம் இருப்பதற்கு காரணமாக இருக்கலாம். அரைனின் அம்மாவுக்கு அறிவியல் திரைப்படங்கள் என்றால் அந்தளவு இஷ்டமாம். எனவே, அனிமேஷன், எழுத்துகள், ஓவியங்கள் என பலவற்றிலிருந்து கட்டுமான கலைக்கான ஐடியாக்களை பிடித்து வருகிறார். அரைனின் கட்டுமானங்களில் உள்ள சிறப்பம்சம், அவை எதிர்காலத்திற்கான சிக்கல்களை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுவை என்பதுதான். ஒருமுறை சகாரா பாலைவனத்தில் அருகில் உள்ள குளம் ஒன்றில் உள்ள உப்பு, களிமண், கனிமங்கள் கொண்டே கட்டுமானம் ஒன்றை உருவாக்கித் தர கூறியிருக்கிறார்கள். அதையும் செய்து சாதித்திருக்கிறார். ஏற்கெனவ...

ஜனநாயகத்தை வளர்க்க, அரசு அமைப்புகள் சட்டத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தவேண்டும்!

படம்
      நேர்காணல் பொருளாதார ஆய்வாளர் டாரன் ஆஸ்மொக்லு சில நாடுகள் தோற்றுப்போகையில் சில நாடுகள் வளம் பெறுவது எப்படி? அனைத்து நாடுகளும் வெற்றிபெறுவதற்கு தேவையான பொருளாதார, சமூக காரணங்கள் உள்ளன.இவற்றை ஒருங்கிணைக்க தேர்ந்தெடுக்கும் அமைப்புகள் திறன் பெற்றவையாக இருக்கவேண்டும். இந்த அமைப்புகள் அரசியல் ரீதியாக, சமூகரீதியாக, பொருளாத ரீதியாக சிறப்பானவையாக இருத்தல் அவசியம். வெற்றிபெற்ற நாடுகளில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகள் அனைத்து மக்களுக்கும் சரியான வாய்ப்புகளை உரிமைகளை சமத்துவமாக பெறுவதற்கு ஏதுவாக இருக்கும். அரசு அமைப்புகளும் சிறப்பாக செயல்பட்டு வரும். இந்த அமைப்புகள் பலவீனமான மக்களுக்கு ஆதரவாகவும், அவர்களை பாதுகாக்கவும் முயலும். அதேசமயம் பெரு, பன்னாட்டு நிறுவனங்களை ஒழுங்குமுறைப்படுத்தும். கிளர்ச்சி, அதிகாரத்தை கேள்வி கேட்பது சில நாடுகளை வளப்படுத்தும் என பொருளாதார வரலாற்று அறிஞர் ஜோயல் மொக்யிர் கூறியிருக்கிறார். இக்கருத்தை ஏற்கிறீர்களா? ஒரு நாட்டின் வளர்ச்சியில் கிளர்ச்சி, அதிகாரத்தை கேள்வி கேட்பது முக்கியம் என்ற ஜோயலின் கருத்தை நான் ஏற்கிறேன். இந்த கிளர்ச்சிப் போராட்டம் என்பது சமந...

மிலிட்டிரி மாமனாரை வசீகரித்து டாக்டர் பெண்ணை கல்யாணம் செய்ய குண்டு மாப்பிள்ளை செய்யும் களேபர காரியங்கள்!

படம்
          வில்லேஜிலோ விநாயகுடு கிருஷ்ணா, சரண்யா மோகன், ராவ் ரமேஷ் தெலுங்கு தான் பார்க்கும் மாப்பிள்ளைதான் பெண்ணுக்கு சரியாக இருப்பாள் என அடம்பிடிக்கும் மிலிட்டரி அப்பா. அவரை சமாளித்து குண்டான காதலனை கணவராக ஏற்கச் செய்யும் மருத்துவராக உள்ள மகள். இந்த பாசம் எனும் கோட்டிங்கில் உள்ள மேலாதிக்க போட்டியில் யார் வென்றது, தோற்றது எந்த தரப்பு என்பதே கதை. தெலுங்கில் இதுபோல கதைகள் வருவது புதிதல்ல. மாமனாரின் ஒப்புதலைப் பெற மருமகன் பல டாஸ்க்குகளை செய்து நிரூபித்து காதலியைக் கைபிடிப்பது என்பது நிறைய படங்களில் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் அமைந்திருக்கிறது. வேறுபாடு ஒன்று உண்டு. அது நாயகனின் எடை. மன்னிக்கவும். நாயகனின் குண்டான உருவம். உருவக்கேலி சார்ந்த வசனங்களே படம் நெடுக நிறைந்திருக்கிறது. பங்குச்சந்தை விவரங்களில் புத்திசாலி, நன்றாக சமைப்பார், சமயோசித புத்தி, காதலி மீது மட்டுமல்ல பிறர் மீது காட்டும் அக்கறை என கார்த்திக் பாத்திரம், காதலியின் அப்பா, அவரது குடும்பத்தினரை விடவே பலமடங்கு மேலாக உள்ளது. ஆனாலும் படத்திலுள்ள பாத்திரங்கள் அனைவருமே கார்த்திக்கின் உடல் எட...

காதல் தோல்வியின் வலிக்கு பிற பெண்களைக் காதலிப்பதே மருந்து என காதல் வெறியில் அலையும் நாயகன்!

படம்
        மனு சரித்திரா தெலுங்கு சிவா, பிரியா, மேகா, இசை கோபி சுந்தர் காதலுக்கு மருந்து காதலே என பெண்களை காதலித்து கைவிடும் வினோதமானவனின் கதை. ஒருவரியில் நாயகனின் கதை கேட்க பரவாயில்லை என்றாலும் அதை படமாக்கிய விதம் நம்மை கடுமையாக சோதிக்கிறது. நாயகன் மனு, ஜெனிஃபர் என்ற பெண்ணை கல்லூரியில் பார்க்கிறான். காதலிக்கிறான். ஆனால், அந்த காதல், காதலியின் சகோதரர்களால் கைகூடாமல் போகிறது. அந்த காதல் தோல்வியில் விழுந்த நாயகன், திருமணமான காதலியை நினைத்து மது, போதைப்பொருள், சிகரெட் என பல்வேறு விஷயங்களுக்கு அடிமையாகிறான். அப்போது நெருங்கிய நண்பன் சொன்ன யோசனையின் பேரில் ஜெனிஃபரை கற்பனை செய்துகொண்டு பிற பெண்களை காதலிக்க தொடங்குகிறான். காதல் மட்டுமே பெண்கள் யாரேனும் கல்யாணம் என்று பேச்சு எடுத்தால் உடனே பிரேக்அப் சொல்லி கிளம்பிவிடுகிறான். காதல் என்றால், காதலியை படுக்கையில் வீழ்த்தி பயன்படுத்திக்கொள்வது நாயகன் மனுவுக்கு ஒத்துவராத ஒன்று. தொடுவது, முத்தம் கூட இல்லாத டி ராஜேந்தர் வகை பரிசுத்தமான நாசூக்கான காதல். அதேநேரம், காதலிகளுக்கு பரிசாக நகையோ, உணவோ வாங்கித்தருவதில் கஞ்சத்தனமும் காட்டுவதில்ல...